Wednesday, February 01, 2012

உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களின் இனிமையான நேர்காணல்



இந்த முறை கழுகின் பேட்டிக்காக நாம் சென்று அமர்ந்தது உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் வீட்டில்....

எப்போதும் இன்முகத்துடன் அன்பாக இருப்பது எப்படி என்று சங்கரலிங்கம் அண்ணனிடம் கண்டிப்பாக படித்துக் கொள்ளத்தான் வேண்டும். எமது செயல்பாடுகளுக்கு எப்போதும் மானசீக ஆதரவு கொண்ட சங்கரலிங்கம் அண்ணனிடம் ஒரு பேட்டி வேண்டும் என்று சொன்ன உடனேயே உற்சாகமாய் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

சங்கரலிங்கம் அண்ணனின் பேட்டி இதோ உங்களுக்காக...



1 )  நம்ம ஊர் மளிகைகளில் கிடைக்கும் பொருட்களில் எப்படி தர கட்டுப்பாடு சோதனை நடத்துகிறீர்கள்? (கிட்ட தட்ட பாதிக்கு மேற்பட்டவை branded கிடையாதே)

எந்தக் கடையென்றாலும், அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருளில் கலப்படம் இருப்பதாக சந்தேகித்தால், அதனை உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்ப உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

 அதனை அந்தந்த மாநிலத்திலுள்ள உணவு பகுப்பாய்வுக்கூடங்களில், தர பரிசோதனை செய்து, அறிக்கை அளிப்பார்கள். அதனடிப்படையில், அந்த உணவுப்பொருளை விற்றவர், விநியோகம் செய்தவர், தயாரித்தவர் என அனைவர் மீதும் வழக்குத் தொடரப்படும்.

அவை பிராண்டட் மற்றும் பாக்கட் பொருளாக இருந்து, அதற்குரிய ஆவணங்கள் கடைக்காரர் வசம் இருந்து,அதே நிலையில் விற்பனை செய்யப்பட்டால், அந்த பொருளின் தரத்திற்கு தயாரிப்பாளரே பொறுப்பாவார்.


2 ) நீங்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

வேறென்ன இருக்கும்! கலப்படம் செய்ய கடுகளவும் பயப்படாத கல்நெஞ்சக்காரர்கள், முதுகிற்கு பின்னாலிருந்து எரியும் கற்கள்தான்(மொட்டை பெட்டிசன்கள்). அப்படி வந்த பல கற்கள், பூமராங் ஆனதென்பதே ஆறுதல். மற்றபடி, பொதுமக்கள் ஊடகங்கள் வாயிலாக இங்கு நடத்தப்படும் ரெய்டுகளைப்பற்றியும், தொடரப்படும் வழக்குகள் குறித்தும் அறிந்து கொண்டு, நேரில் பார்க்கும்போது வாழ்த்துவது தேறுதல் அளித்து அடுத்த நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கும்.

3 ) அதிகமாக கலப்படம் செய்யப்படும் பொருட்கள் எவை ?  புகார் தர ஏதேனும் இணையதளம் உள்ளதா?

அன்றாடம் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில்தான் கலப்படமும் அதிகளவில் செய்யப்படும். (உ-ம்): பால், எண்ணெய், பருப்பு, சீனி, கடுகு, சுவீட்ஸ். இப்போது நடைபெறும் கலப்படங்கள் கண்ணிற்குத் தெரியாத ரசாயன கலப்படங்களே!


4 ) தர கட்டுபாட்டு வரையறைக்குள் பள்ளி கூட வாசல்களில் இருக்கும் கட்டில்கடைகள், கையேந்தி பவன்கள், டாஸ்மாக் பார்கள் வருமா ?

மனித உணவிற்காய் விற்கப்படும் உணவுப்பொருள்களுடன், பாட்டில்/பாக்கட் வாட்டர் தொடங்கி, பருகும் மதுபானம் வரை தரக்கட்டுப்பாடு வரையறைக்குள் வரும்.

5 ) மாநில அரசின் கீழ் இயங்கும் துறைக்கு  மத்திய அரசைச் சேர்ந்த ரயில்களில் விற்கப்படும் உணவுவகைகளையும் சோதிக்கும் அதிகாரம் உள்ளதா..?!

உணவு பாதுகாப்பு சட்டம்,2006 என்பது மத்திய அரசின் சட்டம். அது இந்தியா முழுவதும் அமலாகியுள்ளது.   அதில் பணிபுரியும் அலுவலர்கள் மட்டுமே மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ளனர். 

 ஆனால், ரயில் நிலைய வளாகத்தில் மேற்கண்ட சட்டத்தை அமல்படுத்த,  ரயில்வே துறைக்கென தனியாகஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருக்கின்றனர்.

6) சமீபத்தில் ரயில்வேயில் விற்கப்படும் டீ பற்றி பேஸ்புக்கில் காண முடிந்தது அதில் IRCTC ஊழியர் ஒருவர் தேனீருக்கு தேவையான நீரை கழிவறை யிலிருந்து பிடிப்பதாகவும் , குளிக்க பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி டீ சூடு பண்ணுவதையும் காட்டபட்டிருந்தது , உண்மையா ? (படம் இணைத்துள்ளோம்)
              
சில அனுமதியற்ற வியாபாரிகள், ரயில் நிலையங்கள் அருகில் உள்ள கட்டண் கழிப்பிடங்களில் தண்ணீர் பிடித்து டீ தயாரிப்பது உண்மைதான். அப்படிப்பட்ட நபர்களை நெல்லையில் விரட்டியடித்த சம்பவங்களும் உண்டு. வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதை நான் பார்த்ததில்லை. மற்றபடி, அனுமதி/ உரிமம் பெற்ற வியாபாரிகள் ஸ்டால்களிலும், பேண்ட்ரி கார்(PANTRY CAR)களிலும் மட்டுமே தயாரிப்பர்.

எனினும், முறைதவறிய தயாரிப்புகள் ரயில் நிலைய வளாகத்திலோ, ரயிலிலோ நடந்தால், ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.


7) மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் உள்ள குறைகளை கேள்வி கேட்கவோ,தண்டிக்கவோ மாநில அரசின் கீழ் இயங்கும் தரநிர்வாகத்துறைக்கு அதிகாரம் உள்ளதா..?!

உணவு தயாரிக்க வந்து விட்டால், அனைத்து இடங்களுக்கும் மத்திய அரசின் இந்தச்சட்டம் பொருந்தும். உணவு பாதுகாப்பு சட்டத்தில், அரசு மருத்துவமனை, அரசு விடுதிகள், இலவச உணவளிக்குமிடங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


8) முன்பெல்லாம் அக்மார்க் பற்றிய அரசு விளம்பரம் அடிக்கடி வரும். இப்போது என்ன ஆயிற்று? இப்போது கடைபிடிக்கப்படும் முறை என்ன?(எந்த முத்திரை தரத்துக்கு?)

விவசாயம் சார்ந்த விளைபொருள்களுக்கு, அவை விதிகளுக்கிணங்க தரமாக இருந்தால்,  ‘அக்மார்க்’ தர முத்திரை வழங்கப்படுகிறது. அது இன்றும் தொடர்கிறது.


9) உணவுப்பொருட்களில் குத்தப்படும் தர முத்திரையின் உண்மைத்தன்மையை அறிவது எப்படி..?!

அந்தந்த துறையின் வலைததளங்களில்(WEBSITE), எந்தெந்த பொருள்களுக்கு தர முத்திரை வழங்கப்பட்டுள்ளதென்ற விபரம் வெளியிடப்படுகிறது. (உ.ம்) நாம் அருந்தும் குடிநீர் பாக்கட் / பாட்டில் மீது ‘ISI'  தர முத்திரை இருக்கும். அதனை, இங்கு சென்று சரிபார்க்கலாம். குறைகளிலிருந்தாலும், அந்த தளத்திலேயே, புகாரும் பதிவு செய்யலாம்.


10)  தரக்குறைவான பொருட்களை விற்பவர்களுக்கு தண்டனை என்ன..?!

குற்றத்தின் தன்மைக்கேற்ப,ஆறு மாத சிறைத்தண்டனையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும். அபராதம் என்று பார்த்தால், ஐம்பதாயிரத்தில் தொடங்கி பத்து லட்சம் வரை விதிக்க முடியும்.

11) தடை செய்யப் பட வேண்டிய உணவுப் பொருட்கள் என்று நீங்கள் கருதுவது ?

 மெல்லும் புகையிலை சார்ந்த உணவு வகைகள்.

12) உணவு கலப்படம் விசயத்தில் மக்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்னவாக இருக்க வேண்டும்?

விழிப்புணர்வு மிக முக்கியம். குறைகள்/தவறுகள் கண்டால், உரிய இடத்தில் முறையிடுதல் அவசியம். கலப்படம் என்று கருதினால், ஒவ்வொரு நுகர்வோருக்கும் அதனை பில்லுடன் வாங்கி, மாதிரியாக பரிசோதனைக்கு அனுப்ப சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.


13) ஒரு உணவகம் அல்லது ஒரு உணவு சம்பந்தப் பட்ட பொருள் தயாரிப்பு நிறுவனம் தொடங்க எங்கெல்லாம் அனுமதி பெற வேண்டும்? எவையெல்லாம் இதற்கு கட்டாயமாக பின்பற்றப் படவேண்டும்?

உணவுப்பொருள் தயாரிக்க/விநியோகிக்க/விற்க, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறையிடம் மட்டும் உரிமம் பெற்றால் போதும். அதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளும் அந்த சட்டத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அவையனைத்தையும் இங்கு சொல்வதென்றால், அதற்கு மட்டுமே, இன்னும் இரண்டு,மூன்று பதிவுகள் தேவைப்படும்.

05.08.2011 முதல் உணவு பாதுகாப்பு சட்டம்,2006 அமலுக்கு வந்துள்ளதால், உணவு சம்பந்தமான அனைத்து பிற சட்டங்களையும் உள்ளடக்குகிறது.( It overrides all other food related laws). FPO, MMPO, என்று அதன் பட்டியல் நீளும்.


14) சிறிய நிறுவனம்/நபர் என்றால் நேரடியாக நீங்கள் வழக்குப் பதிவு செய்து தண்டனை வாங்கித் தருவீர்கள். பெரிய நிறுவனம் என்று வரும் போது அது அவ்வளவு எளிதில்லையே? உயர் அதிகாரிகள் அதை விட்டு விடச் சொன்னால் என்ன செய்வீர்கள்? என்ன செய்ய வேண்டும்? அனுபவம் உள்ளதா? 

தவறு செய்தால், சிறிய/ பெரிய நிறுவனம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் தொடர்ந்துள்ள பல வழக்குகளில்,  பெரிய நிறுவங்களும் தப்பவில்லை.
 இங்குள்ள ஒரு பெரிய உணவகத்தில் உணவு மாதிரி எடுக்கச்சென்றபோது, அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. நான் அங்கு உணவு மாதிரி எடுத்துக்கொண்டிருக்கும்போதே, அதில் கண்டிப்பாய் கலப்படம் இருக்குமென்பதை அறிந்த அதன் அதிபர், என்னை நிறுத்தச்சொல்லிப்பார்த்தார். பயனில்லை. எனது உயர் அதிகாரியை தொடர்பு கொண்டார். அவர் எனது செல்லில் வரவே, அதனை சுவிட்ச் ஆஃப் செய்தேன். அந்த நிறுவனத்தின் தொலைபேசியில்(லேண்ட்லைனில்),  என் உயர் அதிகாரி, தொடர்பு கொண்டார். 
நான் உணவு மாதிரி எடுத்துக்கொண்டிருப்பதால், முடித்துவிட்டு வந்து பேசுகிறேன் என்று 
சொல்லிவிட்டேன். அவரது உதவியாளரை நேரில் அனுப்பி, அவரது செல்லில் என்னைத்தொடர்பு கொண்டு, அந்த உணவு மாதிரி பாட்டிலையே உடைத்துவிட சொன்னார். அதற்குள், நான் முக்கால்வாசி வேலையை முடித்துவிட்டேன். நான் அவரிடம், ”சார், பாட்டில் சீல் வைத்துவிட்டேன். நீங்கள் என்னிடம் பாட்டிலைப் பெற்றுக்கொண்டதாக ரசீது அளித்துவிட்டு, அதனை உடைத்துவிடுங்கள் என்றேன். ஆடிப்போய்விட்டார்.( ஏனெனில், உணவு மாதிரியினை எடுத்தவுடன், பகுப்பாய்விற்கு அனுப்ப மட்டுமே அதிகாரமுள்ளது) பாட்டிலை உடைத்தால், வேலை காலி!!!) அப்புறமென்ன, கதம் கதம்தான். கலப்படம் என்று அறிக்கை வந்தது. வழக்கு தொடர்ந்தேன். சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
  
கழுகிற்காக
பேட்டி வடிவமைப்பு - பலே பிரபு


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 

35 comments:

நாய் நக்ஸ் said...

அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய...பதிவு...
வாழ்த்துக்கள்...பிரபு...

Anonymous said...

வயதில் சிறியவர்களையும் சார் என்று அழைக்கும் பண்பாளர் நமது சங்கரலிங்கம் அவர்கள். பேட்டிக்கு நன்றி.

உணவு உலகம் said...

சிவா, ஏன் இந்த வெளம்பரம்!

கூடல் பாலா said...

அதிரடி ஆபீசர்தான் ...அவரது சேவைக்கு வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

சங்கரலிங்கம் சார் பாராட்டுக்கள் பல.கழுகு பேட்டி சூப்பர்.பொதுவாக எங்களுக்கு வரும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் தம்பி நன்றியும் வாழ்த்துக்களும்.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

NAAI-NAKKS கூறியது...
அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய...பதிவு...
வாழ்த்துக்கள்...பிரபு..//

அண்ணே நம்ம தம்பிண்ணே....சும்மாவா...?

MANO நாஞ்சில் மனோ said...

NAAI-NAKKS கூறியது...
அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய...பதிவு...
வாழ்த்துக்கள்...பிரபு..//

அண்ணே நம்ம தம்பிண்ணே....சும்மாவா...?

MANO நாஞ்சில் மனோ said...

சிவகுமார் ! கூறியது...
வயதில் சிறியவர்களையும் சார் என்று அழைக்கும் பண்பாளர் நமது சங்கரலிங்கம் அவர்கள். பேட்டிக்கு நன்றி.//

அதான்யா என் உயிரில் கலந்துட்டார்...!

MANO நாஞ்சில் மனோ said...

உத்தரவாதமா இருக்குறதுல என் நண்பர் கெட்டிகாரர்ய்யா, இம்சை அரசன்கிட்டே கேட்டு பாருங்க ஆபீசரை பற்றி சொல்லுவான், ஏன்னா என் தம்பி இருக்குறது கோவில்பட்டியில....ஆபீசர் பற்றி எல்லாம் தெரிஞ்சவன் அவன் என் தம்பி.....

MANO நாஞ்சில் மனோ said...

FOOD NELLAI கூறியது...
சிவா, ஏன் இந்த வெளம்பரம்!//

ஆபீசர் மெட்ராஸ்பவன் [ஹோட்டல்] அதான் வெளம்பரம் ஹா ஹா ஹா ஹா என்னை அடிக்க வரப்பொராறு [எலேய் தம்பி பிச்சி புடுவேன் ஹி ஹி]]

MANO நாஞ்சில் மனோ said...

koodal bala கூறியது...
அதிரடி ஆபீசர்தான் ...அவரது சேவைக்கு வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கள் மட்டும் இல்லைப்பா நன்றி சொல்லவும் கடமை பட்டுருக்கோம் இல்லையா மக்கா...?

MANO நாஞ்சில் மனோ said...

யுத்தம் யுத்தம்னு சொன்னியேடா ராஸ்கல் [விக்கி] வாறியாடா என் கூடமொத....? வேண்ணா சிபியையும் கூட்டிட்டு வா அண்ணன் காத்து இருக்கேன் [சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]] டிஸ்கி : மெசேஜ் மேல மெசேஜ் அனுப்பிகிட்டு இருக்கான் ஒருத்தன் ஹா ஹா ஹா ஹா மறுபடியும் சொல்றேன் என் உயிர் நண்பர்கள் [நண்பி, தங்கச்சிங்க]விஷயத்தில் நான் ஒரு சுயநலவாதி எழுதி வச்சிக்கோங்க......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ஆபீசர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு ஒரு சந்தேகம், நாம் வாங்கும் உணவுப் பொருளை,குறிப்பாக பேக்கிங்கில் வரும் உணவுப் பொருட்களை வாங்கிய பின் அதை திறந்து சாப்பிட்டுப்பார்க்கும் போதுதான் சந்தேகம் வருகிறது, அதை அப்படியே பரிசோதனைக்கு அனுப்ப முடியுமா?

உணவு உலகம் said...

வந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ கூறியது...
யுத்தம் யுத்தம்னு சொன்னியேடா ராஸ்கல் [விக்கி] வாறியாடா என் கூடமொத....? வேண்ணா சிபியையும் கூட்டிட்டு வா அண்ணன் காத்து இருக்கேன் [சிபி கண்ணாடி மேல சத்தியமா உள்குத்து இல்லை]] டிஸ்கி : மெசேஜ் மேல மெசேஜ் அனுப்பிகிட்டு இருக்கான் ஒருத்தன் ஹா ஹா ஹா ஹா மறுபடியும் சொல்றேன் என் உயிர் நண்பர்கள் [நண்பி, தங்கச்சிங்க]விஷயத்தில் நான் ஒரு சுயநலவாதி எழுதி வச்சிக்கோங்க......!//
வாங்க மனோ, எங்களைப்பொறுத்தவரை அது பொதுநலம்தான்யா!

Kousalya Raj said...

//அப்புறமென்ன, கதம் கதம்தான். கலப்படம் என்று அறிக்கை வந்தது. வழக்கு தொடர்ந்தேன். சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.//

மிக இயல்பாக சொன்னவிதம் அருமை. அண்ணா உங்களின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இது ஒரு சாம்பிள்தான் !! இது போன்றவைகள் இன்னும் தொடர என் வாழ்த்துக்கள்.

எழும் சந்தேகங்கள் அனைத்தையும் கேள்வியாக்கி பதில் வாங்கிய பிரபுவிற்கு என் பாராட்டுகள்.

இப்படி ஒரு நல்ல விழிப்புணர்வு பேட்டியை வெளியிட்ட கழுகுக்கு என் நன்றிகள்.

உணவு உலகம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எனக்கு ஒரு சந்தேகம், நாம் வாங்கும் உணவுப் பொருளை,குறிப்பாக பேக்கிங்கில் வரும் உணவுப் பொருட்களை வாங்கிய பின் அதை திறந்து சாப்பிட்டுப்பார்க்கும் போதுதான் சந்தேகம் வருகிறது, அதை அப்படியே பரிசோதனைக்கு அனுப்ப முடியுமா?//
நல்ல கேள்வி சார்.
நாங்க பகுப்பாய்விற்காக உணவு மாதிரி எடுக்கும்போதும், திறந்து வைத்த டின்னில் இருந்து எண்ணெய் மாதிரி எடுத்தால், சீல்ட் டின்னை திறந்து அதிலிருந்தும் ஒரு உணவு மாதிரி எடுத்து அனுப்பவேண்டும். அத்னால்:
1. எந்த உணவு பொருள் வாங்கினாலும்,பில் கேட்டு பெறவேண்டும்.
2.ஒரு உணவுப்பொருள் பாக்கட்டை உடைத்தபின், கலப்படம்/கெட்டுப்பொனதென சந்தேகம் வந்தால், அதே பாட்ச் எண் உள்ள உடைக்காத பாக்கட்டையும் சேர்த்து பகுப்பாய்விற்கு உட்படுத்தவேண்டும்(பிராக்டிக்கலா கொஞ்சம் சிரமம்தான்). நன்றி.

உணவு உலகம் said...

// Kousalya கூறியது...
//அப்புறமென்ன, கதம் கதம்தான். கலப்படம் என்று அறிக்கை வந்தது. வழக்கு தொடர்ந்தேன். சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மிக இயல்பாக சொன்னவிதம் அருமை. அண்ணா உங்களின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இது ஒரு சாம்பிள்தான் !!//
ஆமாம் தங்கையே, உணவு மாதிரி எடுப்பதை நாங்க ”சாம்பிள்” என்றுதான் குறிப்பிடுவோம்.:)) நன்றி.

Kousalya Raj said...

@அண்ணா

//ஆமாம் தங்கையே, உணவு மாதிரி எடுப்பதை நாங்க ”சாம்பிள்” என்றுதான் குறிப்பிடுவோம்.:))//

பேச்சிலும் அதிரடியா ?!! :))

cheena (சீனா) said...

நல்லதொரு நேர்காணல் - பல தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் சங்கரலிங்கம் மற்றும் பிரபு - நட்புடன் சீனா

Rathnavel Natarajan said...

அவசியமான நேர்காணல்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.

virutcham said...

ஆவின் பாலில் டிட்டர்ஜென்ட் கலப்பதாக இணையத்தில் படித்தேன். உண்மையா?

உணவு உலகம் said...

// virutcham கூறியது...
ஆவின் பாலில் டிட்டர்ஜென்ட் கலப்பதாக இணையத்தில் படித்தேன். உண்மையா?//
உண்மையல்ல.

ரஹீம் கஸ்ஸாலி said...

pala santhekankalukku mika thelivaaka pathil solliyullaar namathu officer.

Chitra said...

மிகவும் தேவையான விழிப்புணர்வு தரும் பேட்டி. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

Unknown said...

கேள்வி பதில் பல விஷயங்களை உணர்த்தியது...அண்ணன் சங்கரலிங்கதிட்கும், பேட்டி எடுத்த பலே பிரபு மற்றும் கழுகுக்கும் நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

கல்நெஞ்சக்காரர்கள், முதுகிற்கு பின்னாலிருந்து எரியும் கற்கள்தான்(மொட்டை பெட்டிசன்கள்). அப்படி வந்த பல கற்கள், பூமராங் ஆனதென்பதே ஆறுதல்/

ஆறுதலும் தேறுதலும் தந்த பேட்டி..

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வைகை said...

நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.. நன்றி!
இன்னும் ஒரு சந்தேகம்.. நெடுஞ்ச்சாலைகளில் உள்ள மோட்டல்கள் எனப்படும் உணவகங்களில் உள்ள உணவுகளின் தரத்தை பற்றி அனைவருக்குமே தெரியும்.. சாதாரண தண்ணீரை பிடித்து அதன் மூடியை கம் போட்டு ஒட்டியிருப்பார்கள், பாக்கெட் தண்ணீர் சொல்லவே வேண்டாம், உணவுகளின் தரமும் அப்பிடித்தான்... இதற்க்கு ஏன் இன்னும் ஒரு விடிவு வர வில்லை? அல்லது அவர்களை கட்டுப்படுத்த முடியாதா? சில பேரிடம் சொன்னால் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள், பயண அவசரத்தில் இருக்கும் ஒரு பயணி எப்படி இதைப்பற்றி புகார் அளிக்க முடியும்? எங்கு கொடுப்பது என்று தெரிந்துகொள்ளவே ஒரு நாள் ஆகிவிடும்.. இதற்க்கு தீர்வு என்ன?

சாந்தி மாரியப்பன் said...

மக்களோட ஆரோக்கியத்தோட விளையாடும் கலப்படத்தை ஒழிப்பதில் முன்னிற்கும் உங்கள் சேவைக்குப் பாராட்டுகள்.

உணவு உலகம் said...

// வைகை கூறியது...
நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன்.. நன்றி!
இன்னும் ஒரு சந்தேகம்.. நெடுஞ்ச்சாலைகளில் உள்ள மோட்டல்கள் எனப்படும் உணவகங்களில் உள்ள உணவுகளின் தரத்தை பற்றி அனைவருக்குமே தெரியும்.. சாதாரண தண்ணீரை பிடித்து அதன் மூடியை கம் போட்டு ஒட்டியிருப்பார்கள், பாக்கெட் தண்ணீர் சொல்லவே வேண்டாம், உணவுகளின் தரமும் அப்பிடித்தான்... இதற்க்கு ஏன் இன்னும் ஒரு விடிவு வர வில்லை? அல்லது அவர்களை கட்டுப்படுத்த முடியாதா? சில பேரிடம் சொன்னால் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள், பயண அவசரத்தில் இருக்கும் ஒரு பயணி எப்படி இதைப்பற்றி புகார் அளிக்க முடியும்? எங்கு கொடுப்பது என்று தெரிந்துகொள்ளவே ஒரு நாள் ஆகிவிடும்.. இதற்க்கு தீர்வு என்ன?//
பயண அவசரத்தில் இருப்போருக்கு மரண அவஸ்தை தருபவை இந்த மோட்டல்கள்.
தற்போது 05.08.2011ல் அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு நியமன அலுவலர்(DESIGNATED OFFICER)நியமிக்கப்பட்டுள்ளார். நீங்கள் உணவருந்தும் உணவகம் உள்ள மாவட்டத்தின் நியமன அலுவலருக்கு, இது பற்றிய புகாரை எழுத்து மூலம் அளிக்கலாம்.
இந்திய அளவில்: http://fssai.gov.in/Feedback.aspx
தமிழகத்தில்:
commrfssa@gmail.com

என்ற இணையதளம்/மின்னஞ்சலில் புகாரைப் பதிவு செய்யலாம். நன்றி.

வைகை said...

FOOD NELLAI கூறியது...

பயண அவசரத்தில் இருப்போருக்கு மரண அவஸ்தை தருபவை இந்த மோட்டல்கள்.
தற்போது 05.08.2011ல் அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம்,2006ன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு நியமன அலுவலர்(DESIGNATED OFFICER)நியமிக்கப்பட்டுள்ளார். நீங்கள் உணவருந்தும் உணவகம் உள்ள மாவட்டத்தின் நியமன அலுவலருக்கு, இது பற்றிய புகாரை எழுத்து மூலம் அளிக்கலாம்.
இந்திய அளவில்: http://fssai.gov.in/Feedback.aspx
தமிழகத்தில்:
commrfssa@gmail.com

என்ற இணையதளம்/மின்னஞ்சலில் புகாரைப் பதிவு செய்யலாம். நன்றி.///

தகவலுக்கு நன்றி சார் :-)

சக்தி கல்வி மையம் said...

பல பயனுள்ள தகவல்கள் ஆபிசர்..

கழுகுவிற்கு நன்றிகள்...

Unknown said...

அருமையான கேள்விகள் அசத்தலான பயனுள்ள கேள்விகள் நன்றி பலே பிரபு மற்றும் சங்கரலிங்கம் ஐயா இருவருக்கும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes