
"எமக்கு தினவெடுத்த தோள்கள் இருக்கின்றன.....! எமது உச்சரிப்புகளின் தடிமன் மிகப் பெரியது.....எமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வோம்....எம்மை கேட்பதற்கும் விமர்சிக்கவும் அல்லது மாற்றுக் கருத்துக்கள் கூறவும் மானுடர் வந்தால்....வசை பாட எம்மிடம் மொழியும் அதை எடுத்துக் கொடுக்க மூளைகளும் இருக்கின்றன.....!
எங்களின் அறிவுகள் வேறு விதம் அதாவது இனம் நிறம் பற்றிப் பேசிக்கொண்டே அப்படி எல்லாமொன்றும் இல்லை என்று கூறிக் கொண்டே......அறிவில் சிறந்தவர் நாங்கள் எமக்கு மட்டும் மூளைகளும் உமக்கு எல்லாம் களிமண்ணும் வைத்து படைத்திருக்கிறான் இறைவன் என்று எண்னக்கூடிய திண்ணமும் எதேச்சதிகாரமும்..... எமது கருத்துக்கள் உறுதியானவை எதிர்த்து பேசினால் மூன்றாம் தர வார்த்தைகள் வந்து விழும் ஜாக்கிரதை......என்று மறைமுகமாய் எச்சரிக்கும் சர்வாதிகாரமும் எம்மிடம் உண்டு.....!" ...