Friday, July 30, 2010

பாலித்தீன் அபாயம்.....கழுகு கண்ணோட்டம்!




அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் ஒராயிரம் நிகழ்வுகளில் சரி தவறு என்று தெரியாமலேயே.. நாமும் ஒரு சில விசயங்களில் நமது பங்களிப்பை செலுத்தி விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு விசயம்தான் பாலீத்தீன் பைகளின் பயன்பாடு. ஏனொ புரியவில்லை இது ஒரு நாகரீகம் என்று மக்கள் மனதில் எப்படி பதிந்தது?
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பாலீத்தீனும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அரக்கன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பாலித்தீன் பைகள் மண்ணுக்குள் புகுந்து பூமித்தாயின் சுவாசத்தை நிறுத்தும் எமன் என்பது தெரியாமலேயே....சட்னி, சாம்பார் வாங்குவதில் இருந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வாங்குவது வரை பாலித்தீனின் உபோயகம். ஒன்று இதன் அபாயம் யாருக்கும் தெரியவில்லை இரண்டு தெரிந்தவர்கள் சொல்லமுயல்வது இல்லை மூன்று எனக்குத்தான் ஒன்றூம் இப்போது ஆகவில்லையே என்ற அலட்சியம்?


எல்லாவற்றுக்கும் நாம் துணிப்பைகளையே பயன்படுத்தியது மறந்து போய்விட்டதா தோழர்களே.....? பாலித்தீன்....அழிக்க் முடியாத அசுரன்....இந்த பூமிக்குள் நீர் செல்லமுடியமலும் உள்ளிருந்து வெளியே வரமுடியாமலும் நடுவிலேயே நிறுத்தி வைக்கும் அபாயம் தெரியுமா? அடுத்த முறை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும்போது பாலித்தீன் பைதான் கொடுப்பார்கள்......கவனமய் கருத்தில் கொள்ளுங்கள்..... இப்படியே போனல்...பூமியின் எலும்புக்கூட்டைத்தான் நம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்வோம்.....
நமது பிள்ளைகள்.....பேரப்பிள்ளைகள்.....எல்லாம் செழிப்பாய் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தால்....பாலித்தீன் பைகளை நிராகரியுங்கள்.....!
தம்பி கோமாளி செல்வாவிடம் இது பற்றி சொன்ன போது துடி துடித்துப் போய் அவரின் உணர்வை பங்களிப்பாக்கி கொடுத்த கட்டுரை இதோ...


காட்சி விளக்கம்:

இன்றைய காலகட்டங்களில் கண்ணாடிப் பைகள் என்பது நம் வாழ்வின் ஓர் அங்கமாகிப்போனது. அதன் ஆபத்து தெரியாமலே நாம் அதனை காசு கொடுத்து வாங்கிகொண்டிருக்கிறோம் இந்த கண்ணாடிப் பைகள் மண்ணில் மக்கிப் போவதில்லை என்பதே நமது ஐயத்திற்கு காரணமாக இருக்கின்றது. இதனால் மண் வளம் பெரிதும் பாதிப்படைகிறது. சாக்கடைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு இக்காகிதப்பைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. மேலும் இவைகளால் மழை நீர் பூமிக்குள் செல்வது பெரிதும் தடுக்கப்படுகிறது. இவைகளை கால்நடைகள் விழுங்கிவிடுவதால் நாளடைவில் அவைகள் இறந்துவிடுகின்றன. நிச்சயம் இம்மாசுக்கேட்டினைத் தவிர்க்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


உங்கள் பகுதிகளில் இது போன்ற பல சுற்றுச்சூழல் மாசுபாடுகள் இருக்கலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியினைத் தேர்வு செய்து அந்தப் பகுதியில் கொட்டப்படும் கன்னாடிப்பைகளின் அளவினை மாதம் ஒரு முறை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஓராண்டு கழித்துப் பார்த்தால் அதற்குள் எத்துனை மக்காத குப்பைகள் கலந்து சுகாதாரக் கேட்டினை விளைவித்திருக்கிறது என்பது உங்களுக்கு கண்கூடாகத்தெரியும்.




இக்காகிதப்பைகளை தெருவிலும் சாக்கடைகளிலும் வீசாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் அல்லது இக்கண்ணாடிப்பைகளை உபயோகிக்காமல் இருக்க வேண்டும்.
இக்காகிதப்பைகளை உபயோகிக்காமல் விடுவதை விட இதற்க்கான மாற்றுப்பொருள் ஒன்றினை கண்டுபிடிப்பதே சிறந்ததாக இருக்க முடியும்.

கழுகிற்காக
செல்வா -

(கழுகு இன்னும் உயர பறக்கும்)

Thursday, July 29, 2010

எதார்த்த உலகில் கழுகு!





கூகில் இலவச வலைப்பக்கங்களை வழங்குகிறது. ஏதோ வந்தோம் எழுதி விட்டுப் போவோம் என்ற எண்ணம் தாண்டி ஏதாவது பயனுள்ள வகையில் இந்த வலைப்பூவினை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணிதான் கழுகினைப் பறக்கவிட்டோம். கழுகின் செயல்பாடுகள் குளிர் சாதன அறைக்குள் இருந்து கொண்டு வெளி மனிதர்களை குற்றம் சொல்லும் அளவில் வாய்ச்சொல்லில் வீரர் என்ற அளவில் இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாய்த்தான் இருக்கிறோம்.

வலையுலகம் என்ற மாயை தாண்டி எதார்த்த மனிதர்களின் வாழ்க்கைப்பக்கங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்க முயன்றோம். அன்றாடம் நாம் செல்லும் வழிகளில் கையேந்தி முகங்களில் வறுமையைத் தேக்கி வைத்து கசங்கிய உடையுடன் நம்மிடம் கையேந்துகிறார்களே நமது மனிதர்கள் யார் இவர்கள்.

உயர், நடுத்தர மற்றும் கீழ் நிலை மக்களையும் கடந்து அதற்கும் கீழே வாழ்வாதாரங்கள் இல்லாமல் தெருவோரம் முடங்கிக்கிடக்கிறார்களே மக்கள்....இவர்களும் மானுடர்களே...! இவர்களின் ஆசை என்னாவாயிருக்கும், லட்சியம் என்னவாயிருக்கும், அன்றாட கனவுகள் என்னவாயிருக்கும்....இப்படி பலதரப்பட்ட கேள்விகள் நம் அனைவரையும் உலுக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.....

கல்லும், முள்ளும், தூசும் வெயிலும் நிறைந்த நமது பயணங்கள் சொல்லுமா? இதற்கான விடையை....என்ற எண்ணத்தோடு தம்பி விஜயிடம் பகிர்ந்த எண்ணவடிவம் செயல்வடிவாமானது...அதை வரிவடிவமாக்கி இதோ..உங்களுக்காக...

காட்சி விளக்கம்:

மாலை நேரம் ,எனது கைகடிகாரத்தின் முள் ஐந்தை தொட்டதும், எனக்கான கடமையும், என்னுள் ஓங்கி இருந்த ஆர்வமும், இதுவரை எழுத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற நான், முதன்முறையாய் செயலில் இறங்க போகிறேன் என்ற துடிப்பும் என்னை அவசரப்படுத்தியது, எனது புகைப்படம் எடுக்கும் வசதியுள்ள கைப்பேசியை எடுத்துகொண்டு கிளம்ப ஆரம்பித்தேன்,மதுவிலும், புகையிலும் தான் சந்தோசம் நிரம்பிக்கிடக்கிறது என்று, தன்னை மாய்க்க போராடும் நச்சுகளிடம் சிறுது சிறிதாய் தோற்று போவதுதெரியாமல் வாழும் எனது அறை நண்பனை கடந்து .

நடக்க ஆரம்பித்தேன் சைதாபேட்டை ரயில் நிலையத்தை நோக்கி, ஆம் இதுதான் நான் முதன் முறையாய் செயலில் இறங்கும் களம், வழியெங்கும் புது எதிர்பார்ப்புடன், சிந்தனைகளை என்னுள் திரும்ப திரும்ப சுற்ற வைத்துகொண்டு நடந்துகொண்டு இருக்கிறேன், எனது கால்கள் கனத்த அந்த நொடியில் களத்தை அடைந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். ஆம் இது தான் நான் நான் தினந்தோறும் அலுவலகம் செல்லும் , இயற்கையால் சீரழிக்கப்பட்ட, தன் அங்கங்கள் தவறான முறையிலும், குறைவான அறை குறை படைப்பில் வாழும் மனிதர்களை மனிதமற்று கடந்து செல்லும் ரயில் நிலையம்,

ஆம் அவர்களை சந்திக்க தான் இவ்வளவு வேகமாய் செல்கிறேன், அவர்கள் அமரும், உறங்கும், சாப்பிடும் அனைத்தும், நாம் ஒரு நிமிடம் கடந்துசெல்லவே மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சுகாதார(சுகாதாரமற்ற ) கழிப்பிடம்,அதன் அருகே தான் அவர்கள் வாழ்க்கை பயணம், ஏறக்குறைய 15 மனித உயிர்கள் தன் வாழ்கையை பயணிக்கிறார்கள்,அவர்களில் 10 க்கும் மேற்பட்டோர் இயற்கையால், கண்கள் கொடுக்க மறக்க பட்டவர்கள், 3 க்கும் மேற்பட்டோர் இயற்கையால்,சரியான , நடக்க முடிந்த தேகம் கொடுக்க மறக்க பட்டவர்கள்.இவர்களை தான் தினமும் கடந்து சென்றேன் மனிதமற்று, அவர்களுக்காய் ஒன்றும் செய்யாதவரை நானும் மனிதமற்றவன் தானே,

எப்படி வாழ்கிறார்கள், எப்படி கஷ்டபடுகிறார்கள், எவற்றை எதிர்பார்க்கிறார்கள், அரசாங்கம் இவர்களுக்காய் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளை அவர்களிடம் தொடுக்க கிளம்பிவிட்டேன், களத்தை அடைந்தும் விட்டேன், குறைந்தது ஒரு 10 பேர் வழக்கமான சுகாதாரமற்ற கழிப்பறை அருகே தான் அமர்ந்து இருந்தார்கள், எதையோ சுவாரஸ்யமாய் ,காதுகளால் கவனித்துகொண்டு இருந்தார்கள்.

அவர்களுக்கு அருகே நெருங்க ஆரம்பித்தேன், ஏதோ ஒன்று என்னை கனக்க செய்தது, முதல் முறை முகம் தெரியா மனிதர்களிடம் பேச போகிறேன் , அதுமட்டும் இல்லாது ,அலுவல வேலைக்காய் அவசரத்தில் அவர்களை கடந்து சென்றபொழுது தெரியாத வலி, இன்று நிதானமாய் அவர்களை நெருங்க நெருங்க, கலங்கிய என் கண்களில் இருந்து புரிந்தது, வார்த்தை பேச முடியுமா என்று கேட்க ஆரம்பித்தது கலங்கிய என் கண்கள், ஒருத்தரின் கண்களை மட்டும் தான் பார்த்து பேச முடியும் என்னால், அங்கு இருந்த ஒருவர் மட்டுமே கண்கள் ஊனமாகமல் என்னை கவனித்துகொண்டு இருந்தார்.மற்றவர்கள் தங்கள் காதுகளால் வானொலியில் எதோ ஒரு தொடர் நாடகத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்

நானும் அவர்களுடன் அமைதியாய் அமர்ந்தேன் அவர்கள் அருகே, என்ன வேண்டும் என்ற தோரணையாய் என்னை பார்த்தார், நானும் பேச ஆரம்பித்தேன் .

"அய்யா நான் விஜய், சொந்த ஊரு நாமக்கல், சென்னைல தான் வேலை பார்க்கிறேன், உங்களை தினமும் கடந்து போகிறேன் மனிதமற்று, இன்று உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது,அதுமட்டும் இல்லாமல் உங்களை போன்றோரின் கஷ்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்,முதலில் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லுங்கள், உங்கள் கஷ்டங்கள் என்ன?, இந்த அரசாங்கமும், இந்த மக்களும் உங்களுக்கு என்ன (உதவி) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்", என்ற கேள்விகளை முன் வைத்தேன்..

சிறிது நேரம் என்னை உற்று நோக்கியவர் கூறிய பதில், நான் சிறிதும் எதிர்பார்க்காதது, ஏன் நீங்களும் கூட தான் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்,

"யார் சொன்னது நாங்க எல்லாம் கஷ்டபடுகிறோம் என்று, நாங்க யாரு கஷ்டப்படுல" என்று கூறினார்,

கன்னத்தில் பளார் என்று அறைந்தது போன்று உணர்ந்தேன், வார்த்தை பேச முடியவில்லை , இருந்தும் கேள்விகளை தொடர்ந்தேன், ஆனாலும் அனைத்து கேளிவிகளுக்கும் அவரிடம் இருந்து வந்த ஒரே பதில் , நான் மேலே கூறியது தான், இப்பொழுது கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன் , குறைந்தது 30 நிமிடத்துளிகளாவது அவர்களின் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது, அவ்வாறே 30 நிமிடத்துளிகள் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து இருந்தேன், ஒரு புறம் சந்தோசம் மனதுக்குள் பூத்தது, அவர்களும் சந்தோசமாய் தான் இருக்கிறார்கள் என்று, மறுபுறம் இவர்கள் விரக்தியில் பேசுகிறார்களா என்று சந்தேகத்தை எழுப்பியது ?

அழகாய் முகப்பூச்சுகளை போட்டுகொண்டு அழகானதாய் , கையில் மிக பெரிய கேமெரா க்களை சுமந்து வந்து கேள்விகளையும், கஷ்டங்களையும் ஒளிப்பதிவு செய்யும் மீடியாக்கள் தான் இவர்கள் குறையை தீர்த்து வைக்கும் என நம்புகிறார்களா?, குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்யும் இவர்கள் என்ன கிழித்துவிட போகிறார்கள் என்ற எண்ணமோ என 1000 கேள்விகள் என்னுள்.
இதற்கான பதிலை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்,

அவர்களை படம் எடுக்க வேண்டும் என்ற கனவு கண்ணெதிரே உடைந்துவிட்டது, சரி வருகிறேன் ஐயா, அம்மா என்று சொல்லிவிட்டு கனத்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட்டேன், இத்தோடு முடியவில்லை என் பயணம்,

இங்கே எமக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கும்வரை எமது சிறகுகள் விரித்து விண்ணில் வட்டமிட்டு எமது தேடலை தொடர்வோம்......


கழுகிற்காக
விஜய்




Wednesday, July 28, 2010

மனிதர்களும், மூடநம்பிக்கையும்!


கால காலமாக வேரூன்றி இருக்கும் ஒரு நச்சு விதைதான் மூட நம்பிக்கைகள். மூட நம்பிக்கைகளைக் கைக்கொண்டு மனிதர்கள் ஒரு ஆட்டோ சஜசன் என்று சொல்லக்கூடிய ஒரு தானியங்கி கருத்கு பதிவினை காலம் காலமாக மனதில் தேக்கிவைத்து அதன் படி செய்தால்தான் தங்களின் மனது நிறைவுறும் என்று ஒரு சைக்கோத்தனமான செய்கைகளை முன்னிலைப்படுத்தி செயப்பட்டும் வருகின்றனர்.
பரீட்சையில் பாஸ் பண்ன வேண்டுமானல் மனோதைரியமும் கடின உழைப்பும், விடா முயற்சியும் பாடங்களை நினைவில் இருந்த அமைதியான சூழ் நிலையும் தான் தேவை என்று அழுத்தமாக போதிக்காததால் ஏராளமான தேங்காய்கள் தெருவோரம் உடைக்கப்படுகின்றன.

இதோ நமது தோழர் வால்பையன் மனிதர்களும் மூட நம்பிக்கைகளும் பற்றி என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்.....




பிறந்த குழந்தைக்கு மூடநம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் தமிழ்நாடு என்றால் நம்ப போறிங்களா என்ன!?, கேட்டு பாருங்கள் வீட்டில் குழந்தைக்கு சேனை வைப்பது என்றால் என்னான்னு, பிறந்த குழந்தைக்கு பெருசுகள் கூடி சர்க்கரை தண்ணீர் கொடுப்பது தான் சேனை வைப்பது என்பார்கள், டாக்டர்கள் கொடுக்கக்கூடாது என்றாலும் கேட்பதில்லை, குழந்தை அழும்போது நர்ஸ் வந்து கவுத்திபோட்டு முதுகில் நாலு தட்டு தட்டிவிட்டு போவார்கள்!, சரி சேனை ஏன் கொடுக்குறாங்க தெரியுமா?, சேனை வைப்பவர்களின் குணம் குழந்தைக்கும் வருமாம்! டி.என்.ஏ, குரோம்சோம்கள் எல்லாம் தூக்கி போட்டு அறிவியலை அட்டாரியில் அடகு வைத்து ஆண்டாண்டு காலமாய் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் பெருமைகுறிய சமூகம் நமது சமூகம் தான்!


சரிப்பா, அறிவியல் உனக்கு தெரியும், எனக்கு தெரியும். வயசானவங்களுக்கு எப்படி தெரியும், அதெல்லாம் காலம் காலமா செஞ்சுகிட்டு இருக்குறது தானே என்பவர்களுக்கு மூடநம்பிக்கையின் வளர்ச்சி பற்றி ஒரு குட்டிகதை சொல்றேன்!


பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்தது, குரு சீடர்களிடன் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா!? அங்கே தான் இருக்கு கதையே, ஒருநாள் அந்த பூனை செந்துவிட்டது, விடுவார்களா சீடர்கள், ஒருபூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள்!


ஏன் செய்யுறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது, மேலை நாடுகளில் இருக்கும் பயமுறுத்தும் எண்களை விட மூணாம் நம்பர் அனைவரிடத்திலும் எதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியது, எதாவது ஒரு வகையில் செயலை மூன்று தடவை செய்வார்கள், அதற்கு உளவியலில் ஒரு பெயர் கூட இருக்கிறது, கிட்டதட்ட மூடநம்பிக்கை ஜீன்களோடு கலந்துவிட்டது என ஒரு உளவியல் மருத்துவர் என்னிடம் சொல்லி வருத்தபட்ட காரணம் இது!

”கேள் என்பது மந்திரம்” என ஒரு அறிவியல் அறிஞர் சொல்லியிருக்கிறார்!, கேள்வி கேள் என்பது அறிவு கதவை திறக்கு சாவி என்பதை தான் சுருக்க சொல்லியிருக்கிறார்!, எல்லாரும் செய்யுறாங்க, அதனல நானும் கேள்வி கேட்க செய்யுறேன் என்று சொல்வது மனிதனின் வேலை இல்லை, இயந்திரத்தின் வேலை. ஒரு மனிதனாக நமது செயலின் விளைவுகளையும்,தன்மையும் அறிவது நமது கடமை. வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் கேள்விகளுக்கு ஆதாரம் கேட்கக்கூட தயங்கக்கூடாது!, இது வரை இருந்த மூட நம்பிக்கைகளை நம் தலைமுறையோடு குழி தோண்டி புதைப்போம்!
கழுகிற்காக


வால் பையன்



(கழுகு இன்னும்.... உயரபறக்கும்)

Tuesday, July 27, 2010

உயரப் பறக்கையில்.......


மெல்ல சிறகு விரித்து....வலை வானில் வலம் வரத் தொடங்கியிருக்கிறோம். பதிவர்களின் பேட்டிகளும், கருத்துக் கணிப்புகளும், பதிவர்களிடம் இருந்து ஆரோக்கியமான விழிப்புணர்வு பதிவுகளும், அந்த அந்த வாரங்களில் வந்த விழிப்புணர்வு பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்துக் கொண்டும் ஒரு சிறு வட்டமிட்டு கொண்டிருக்கிறோம்.
வலைப்பதிவர்களின் பேட்டிகளில் பல அவர்களின் பிரத்தியோக பாணியில் அமைந்து கல கலப்பாய்.... இன்னும் மிகைப்பட்ட வாசகர்களை கழுகிற்குள் கொண்டு வந்து கழுகின் நோக்கத்தை உணர வைக்கும் ஒரு மையப்புள்ளியாய்...அட்டகாசமான ஒரு வசீகராமாய் இருப்பதாக நண்பர்கள் மூலம் அறியப்பெறுகிறோம். பொழுது போக்காக ஒரு சில விசயங்களைக் கொண்டு நமது நகர்த்தலை தொடங்கியிருக்கும் நமது மையக்கருத்து...மக்களின் விழிப்புணர்வை தூண்டுவதுதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே....ஆடாலாம்...பாடலாம்....ஆனால்...
" நாம பாடுற பாட்டும், ஆடுற கூத்தும் ஒரு படிப்பினை உண்டாக்கணும்"

என்ற கவிஞரின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் மக்கள் பயனுறும் வகையில் நிறைய செயல்கள் நிகழ்த்த வேண்டியது இன்றியமையாதது என்பதை கழுகு உணர்ந்தே இருக்கிறது. பசியோடு இருக்கும் மக்களுக்கு தெருத்தெருவாய்...போய் உணவளிக்காவிட்டால் கூட பரவாயில்லை...பசிக்கும் உணவளிக்கும் அமைப்புகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம் மேலும் பசியாய் இருப்பவர்களை உதவிசெய்வதற்கென்றே இருக்கின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்க்கு அறிமுகப்படுத்துவோம்.
குறைந்த பட்சம் எழுத படிக்க தெரியாத மக்களில் யாரேனும் ஒருவருக்கு நமது ஆயுளுக்குள் எழுத்து அறிவிப்போம்.....! மிகப்பெரிய லட்சியங்களை கைக் கொண்டு....பெருமை பேசுவதை விட.. சிறிய சிறிய செயல்களை நம்மால் இயன்ற அளவு செய்வோம்...! விளம்பரம் தேவையில்லை ஒரு தலைவனும் தேவையில்லை.. நமது மனசாட்சி ஒரு மிகப் பெரிய தலைவன்.
நமது திருப்தி மிகப்பெரிய திருப்தி....! இப்படி செய்யப்பெறும் சிறு சிறு தனித்தனி உதவிகள் எல்லாம் மொத்தமாய் ஒரு நல்ல சமுதாயத்தை சமைக்கும். மேலே உள்ள முட்களை வெட்டினால்...வேர்கள் மீண்டும் துளிர்க்கும்...என்பது நாம் அறியாதது அல்ல....! பிரச்சினைகளின் மூலம் அறியாமை...! அந்த அறியாமை அகற்றும் முயற்சியான் நாம் கைக்கொண்டிருப்பது....
எமது குறிக்கோள்....ஒரு மிகப்பெரிய சாதனைகள் அல்ல.. மாறாக சுற்றியுள்ள நமது கண்ணுக்குத் தெரிந்த குப்பை கூளங்களை குப்பைத்தொட்டியில் எறியும் அளவிற்கு சாதாரண முயற்சி.....இடம் சுத்தமாகும் என்று உத்தரவாதம் கொடுப்பதற்கில்லை...ஆனால் இயன்ற அளவு குப்பைகள் அகற்றுவோம்....அதன் விளைவு என்னவாயிருக்கும் நீங்களே யூகியுங்கள்...!
வாழ்வது...ஒரு சில கணங்களாக வேண்டுமானால் இருக்கட்டும்....ஆனால்...அந்த கணத்திலும் ஒளி கொடுத்து மடியும்...தீக்குச்சியாய் நாம் இருப்போம்.....
கழுகு கூட ஒரு தீக்குச்சிதான்...! வெல்வதற்கு.....எவ்வளவோ இருக்கிறது.....எல்லையில்லா வானம் நோக்கி சிறகு விரிப்போம்...வாருங்கள் தோழர்களே...!

(கழுகு இன்னும்.... உயரபறக்கும்)

Monday, July 26, 2010

சித்ராவின் பிரத்தியோக பேட்டி....கழுகிற்காக!



பதிவர் பேட்டி என்றாலே கழுகிற்கு ஒரே சந்தோசம்தான்....! இந்த வார பதிவர் பேட்டிக்காக நமது சிறகு வலிக்க நெடுந்தொலைவு கடல் கடந்து செல்ல வேண்டியதாகிவிட்டது. ஆமாம்.....அமெரிக்க திரு நாட்டில் வாசம் செய்து கொண்டிருக்கும் தோழி சித்ரா வீட்டுக்குள் சென்றோம்.....! இது ஒரு விடுமுறை காலம் என்பதால் தோழி குடும்பத்தாருடன் கொஞ்சம் பிசியாகவே இருந்தார்....இருந்தாலும் கோடணு கோடி வாசகர்கள் நம் கண் முன் நிற்க.... நமது நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு தோழியை தொந்தரவு செய்து அடம் பிடித்து பதில்களை வாங்கினோம்.
" சித்ரா....."
கடவுளால் இவர் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார் அதனால்தான் இவரின் பதிவுகள் படிக்கும் அத்தனை பேரையும் ஒருவித சந்தோசக்கடலில் திக்குமுக்காட செய்துவிடுகிறார். இவரின் வாசகர் பலம் என்னவென்று நாங்கள் சொல்லித் தெரியவேண்டம்....! மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் எதிர்கொள்ளுதல், எல்லா பதிவர்களின் பதிவுகளுக்கும் ஊக்கமளித்தல்....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...இவருடைய பிரத்தியோகமான ஸ்டைலில் நமக்கு கொடுத்த பேட்டியில் நாமும் திக்கு முக்காடிப் போனோம்....அவ்வளவு ஜாலியான ஒரு பேட்டி......இதோ உங்களுக்காக....
டண்டணக்கா...டண்டணக்கா...டையிங் (இது சித்ரா...ஸ்டைல்....)
1) எழுத வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

சும்மா நண்பர்களுடன் அடிக்கும் "வெட்டி பேச்சு" குறிப்புகளை document செய்து வைத்து விட்டால் - பிற்காலத்து சந்ததியினரும் படித்து, தங்கள் அறிவை வளர்த்து கொள்வார்களே என்று தான்.....
அந்த காலத்துக்கு - கல்வெட்டு.
இந்த காலத்துக்கு - ப்லாக்ஸ்பாட்டு!




2) நீங்கள் எல்லா பொறுப்புகளுக்கும் இடையே எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

இருங்க...... என் secretary யை கேட்டு சொல்கிறேன்.


3) உங்கள் பதிவுலக ஈடுபாடு பற்றி...உங்கள் கணவரின் அபிப்ராயம் என்ன?

யான் பெற்ற "வெட்டி பேச்சு இம்சை" - பெறுக இவ்வையகம் !




4) அமெரிக்காவில் உள்ளது நம் நாட்டில் இல்லாதது என்ன?

இன்றைய நிலவரப்படி, நான்தான்......




5) ஒரு பதிவு நீங்கள் போட்டால் 60 பின்னூட்டங்கள் வருவதின் ரகசியம் என்ன?

இதுல என்ன ரகசியம் இருக்குது? ....... ஊரார் ப்லாக்கை பின்னூட்டி வளர்த்தால், தன் ப்லாக்கில் பின்னூட்டம் தானே வளரும்.




6) புதிய பதிவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஒரு விசயம்?

வளர்க வளமுடன்!





7) சமீபத்தில் நீங்கள் பார்த்து வியந்த விசயம்?
எப்பொழுதும், நான் தட்டுனா போண்டா மாதிரி வருகிற வடை - சமீபத்தில், வடை மாதிரியே வந்துட்டுது...... இன்னும் ஆச்சர்யப் பட்டுக்கிட்டு இருக்கேன்......



8) சூப்பர் ஸ்டார் உங்களின் அபிமான நட்சத்திரம் ஆனது எப்படி?
நேரில் வந்து, ஐஸ்-கிரீம் வாங்கி கொடுத்து, என்னிடம் கேட்டு கொண்டதால்...... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....



9) நமது சமுதாயத்திற்கு எது அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

அவசியம் இல்லாததை, அவசரமா அகற்றி விட வேண்டியது அவசியம்.



10) புதிய பெண் பதிவர்களுக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?



புதிய ஆண் பதிவர்களுக்கு என்ன ஆலோசனை உண்டோ, அதேதான்....






11) பதிவு எழுதுவதால் பெண்களுக்கு எதாவது ஆபத்து உள்ளதா?



பதிவு எழுதுவதால், ஆண்களுக்கு உள்ள அத்தனை ஆபத்துக்களில், ரெண்டுதான் குறைவாக உள்ளன.




12) தேர்வில் பள்ளி மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் இருக்கிறது. ஆனால் கல்லுரி படிப்பு, வேலைக்கு செல்லும் பெண்கள் சதவிகிதம் மிகவும் குறைவாக இருகிறதே இதற்கு யார் காரணம்?

நிச்சயம் நானும் என் வீட்டுக்காரரும் காரணம் இல்லை. எங்க பின் தெருவில இருக்கிற - அந்த மஞ்சள் நிற வீட்டில் இருக்கிற - தாடி வைத்த - வெளுத்து போன டி -ஷர்ட் போட்டுக்கிட்டு - எப்பொழுதும் பச்சை நிற cap போட்டு இருக்கும் அமெரிக்கன், காரணம் ஆக இருக்கலாம். எதற்கும் கேட்டு சொல்கிறேன்.










(கழுகு இன்னும் உயர பறக்கும்)



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes