Thursday, July 15, 2010

கழுகு - ஒரு அறிமுகம்!



எத்தனையோ இயக்கங்கள், கட்சிகள் விதவிதமாய் தொண்டர்கள் என தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் பந்தப்பட்ட நாட்களில் அநீதிக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிப்பதும் அதன் பின் ஒலித்த குரலின் குரல்வளைகள் அழுந்த நெரிக்கப்படுவதும் வழமையாகிப் போன ஒரு தேசத்தின் தென் கோடி மூலையில் இருந்து கொண்டு புரட்சியாய் யாம் சிந்தித்து நிகழப் போவது என்ன? என்ற சராசரிச் சிந்தனையோடு நகர்ந்து விட விருப்பமின்றி நவீன யுகத்தின் ஒப்பற்ற விதிமுறைகளும் விளக்கும் விசயங்களும் ஏறாத்தாழ மிகைப்பட்ட மக்களிடம் போய்ச் சேரும் தவிர்க்க முடியாத இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற ஊடகமான வலைப்பூக்களை மெல்ல எரியவிடுவோம் என்று சிந்தித்ததின் விளைவு...

கழுகு.....

தன்னம்பிக்கையின் வடிவான தம்பி செளந்தர் இருப்பது வடசென்னையின் நெரிசல் மிகுந்த திருவொற்றியூர், எரியும் அக்னியாய் தன்னின் கருத்துக்களை சுடரென எரியவிடும் தம்பி விஜய் இருப்பது மற்றுமொரு மக்கள் நெருக்கமான சென்னை தி. நகராய் இருந்தாலும் இவரின் சொந்த ஊர் நாமக்கல். ஏதோ ஒரு தருணத்தில் ஒத்த கருத்துக்கள் எம்மை ஒன்று சேர்க்க....ஏதாவது செய்ய வேண்டும் என்ற எங்களின் தாகம் சிறு பொறியாய் இருந்தது..... ஆனால் மிரட்டும் பெருங்கடலாய்... குப்பைகள். சத்தியமாய் யாம் புறத்திருக்கும் குப்பைகள் பற்றி பேசவில்லை.


மனிதனின் அகத்தில் இருக்கும் குப்பைகள்...பற்ற வைத்து பற்ற வைத்து எரித்தே விடுவோம்....என்ற திண்ணம் எமக்கு ஏற்பட்டதற்கும் ஒரு காரணம் உண்டு....! அது எம் இயல்பு.... நெருப்பில் எரிபடாதவொன்று தனித்தில்லை இந்த ஜகத்தில்....

எண்ண அக்னிகளை பரவவிடுவோம் ....யாம், இல்லையெனினும்..., மண்ணில் மரித்தொழிந்த பொழுதினிலும் எம்மின் வேட்கைகளை தலைமுறைகள் தாண்டி பயணிக்கச் செய்வோம் என்ற உறுதியுடன், உலகின் எந்த மூலையில் ஏகாத்திபத்தியம் இருந்தாலும் சென்றழிப்பேன் என்ற உறுதி கொண்டிருந்த சேகுவேரா ஏற்றி வைத்த நெருப்பு எம்முள்ளும் சுடர்விட்டு எரிய....அந்த மாமனிதனின் எண்ணங்கள் காற்றில் தவழ்ந்து எம்மின் மூளைகளுக்குள் நெருப்பூட்டியது போல இனி ஒரு விதி செய்வோம் அதை எந் நாளும் காப்போம் என்ற உறுதியோடு.....

போர்பரணி பூண்டு...வலைப்பபூ என்ற வல்லிய ஆயுதம் ஏந்தப் போகிறோம்...! இங்கே...மனிதர்கள் இல்லை போரிட...மாறகா எமது எழுத்துக்கள் மூலமாக கருத்துக்கள் போரிடும்... எம்மோடு கை கோர்க்கும் புதியதோரு உலகம் செய்ய விரும்பும் எம் சக தோழர், தோழிகளின் அக்னி அம்புகள் போரிடும்...! ஆமாம் கடைசி வரை உக்ரம் தீராத போர்...எமது மூளைகள் வீழும் பட்சத்தில் கோடாணு கோடி தம்பிகளின் தங்கைகளின் சகோதரர்களின் மூளைகள் பாய்ச்சும் தன் கருத்து கதிரிவீச்சுக்களை......

கழுகு....

வலைப்பூவின் மிகப்பெரிய எழுத்து விற்பன்னர்களை பேட்டி காணும், வளர்ந்து வரும் எழுத்துச் சிற்பிகளை அடையாளப்படுத்தும், விவாதப் பொருட்களை மேடையேற்றி கருத்துப் போர் புரியும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளை ஈனும்... இன்னும் என்னவெல்லாம் எம் மக்களுக்கு பயன் தருமோ அதுவெல்லாம் செய்யும்.


யார் செய்யப்போவது? நாம் தான்....கருத்துக்களோடு கை கோர்க்கப்போவது நாம்தான்......!

இது ஒரு சிறு அறிமுகம்தான்...


காத்திருங்கள் கழுகின் அடுத்த அதிரடி பதிவர் பேட்டிக்காக......


(கழுகு இன்னும்....உயரப்பறக்கும்)





24 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

கழுகு இன்னும்....உயரப்பறக்க....

வாழ்த்துக்கள்.

எல் கே said...

kalakunga boss

ஜீவன்பென்னி said...

அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கப்போறீங்க, கழுகின் துனையுடன் வேட்டையும் தொடங்கட்டும். துனைநிற்போம். வாழ்த்துக்கள்

கழுகு said...

கழுகுடன் இணைய உங்கள் பதிவு சுட்டியை எங்களுக்கு kazhuhu@gmail.com இந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்....!

க ரா said...

நல்ல ஆரம்பம். தொடர்ந்து கலக்குங்க.

Kousalya Raj said...

உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்... ! பணி தொடரட்டும்....!!

Jeyamaran said...

*/காத்திருங்கள் கழுகின் அடுத்த அதிரடி பதிவர் பேட்டிக்காக......


(கழுகு இன்னும்....உயரப்பறக்கும்)/*
ok

SShathiesh-சதீஷ். said...

உங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஒரு குறுகிய வட்டத்தொடு நிற்காமல் களுக்கு உலகம் எங்கும் பறக்கவேண்டும் அதன் பார்வை தெளிவாக சரியாக எல்லா இடத்திலும் இருக்க வேண்டும் என ஒரு வாசகனாய் வாழ்த்தி வேண்டுகின்றேன்

Prathap Kumar S. said...

அடடே... எனனாது இது...சூப்பர்....
வாழ்த்துக்கள் தேவா மாம்ஸ், சௌந்தர் சித்தப்பு, விஜய் தல

ஜில்தண்ணி said...

ம்ம்ம் கழுகு பதிவுலகை வட்டமிட்டு உயரப் பறக்க வாழ்த்துக்கள் :)

கலக்குங்க :)

School of Energy Sciences, MKU said...

கழுகு வந்துருச்சாயா? இவ்வளவு நாள் ஆளக் காணோமேனு பார்த்தேன். இப்போ புது பொலிவோடு வந்திருக்கு. உயர உயர பறக்க என் வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

School of Energy Sciences, MKU said...

பின் குறிப்பு, ஒழுங்கா பறக்காவிட்டால் சிறகொடிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஜெயந்தி said...

வாழ்த்துக்கள்!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தொடர்க உங்களின் பணி...

http://rkguru.blogspot.com/ said...

உங்கள் எழுத்து பணி நன்கு தொடரட்டும்........வாழ்த்துகள்

Anonymous said...

அதிரடி சரவெடியா இருக்கு

111 said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

valthukkal na............

ரோஸ்விக் said...

இது இது இதுதான்யா இன்னைக்கு நம்ம நாட்டுக்கு வேணும். பட்டைய கெளப்புங்க. பலருக்கு பீதி வரட்டும். அனைவருக்கும் நீதி(தீ) பரவட்டும்.
வாழ்த்துக்கள் நண்பர்களே!

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள், நிச்சயம் தங்களின் எண்ணம்
நிறைவேறும்.

Unknown said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

தருமி said...

அக்கினிக் குஞ்சு ..

வளர, எரிக்க வாழ்த்துகள்.

Valar (வளர்மதி) said...

கழுகு உயரப்பறக்க நாமும் உடன் பறந்து வருவோம்.!!!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes