Saturday, September 24, 2011

யாருக்கு வெற்றி....? உள்ளாட்சித் தேர்தல் பற்றிய ஒரு அதிரடி பார்வை.


எட்டு முனைப் போட்டியாக பரிணமத்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் தற்போதைய தமிழகத்துக்குப்  புதியதுதான். சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு இது போன்ற அரசியல் களத்தினை தமிழக வாக்காளர்கள் சந்திப்பது சிறப்பான ஒரு விடயம் என்று நாம் கணித்தாலும் ஒரு குழப்பமான மனோநிலையை இது மக்கள் மனதில் விதைத்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.


ஒவ்வொரு கட்சிகளும் தத்தம் ஈகோவினை விட்டுக் கொடுக்க முடியாமல் தனித்தனியாக களம் காண மற்றொரு கட்சியைக் குறைக் கூறிக் கொண்டாலும், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மக்கள் எளிதில் புறம் தள்ள நிறைய காரணங்கள் இருக்கின்றன. தமது சாதியினர் அதிகமாக இருக்கும் இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளைக் கைக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கிறது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இதிலும் மிக சொற்ப பதவிகளே கிடைக்கும். 


இதற்கு காரணமாய் பட்டியலிட்டு பல விடயங்களை நாம் கூறினாலும், தான் தோன்றித் தனமான ஒரு கட்டுக் கோப்பில்லாத தமிழ்நாட்டுத்  தலைமையும், தமிழர் விரோதப் போக்கினை தொடர்ந்து கடைபிடித்து வரும் காங்கிரஸின் தேசிய தலைமையும் இரு மிக முக்கிய காரணங்கள். 


மேலும் ஈழப்போரில் காங்கிரஸின் கொடூர கை இருந்ததைத் தமிழர்கள் மறக்க இன்னும் வெகு காலம் பிடிக்கும் என்பதால் காங்கிரஸ் மொத்தமாக வாஸ் அவுட் ஆகும் சூழலே தற்போது மிகுந்திருக்கிறது. 


ம.தி.மு.கவைப் பொறுத்த வரையில், தனது பேச்சாற்றலையும், அரசியல் அனுபவத்தையும் வைத்து மிகப்பெரிய தொண்டர் பலத்தோடு திமுகவை உடைத்து வெளியேறிய திரு. வைகோ அவர்கள், தன்னை தற்காத்துக் கொள்ளும் ஒரு அரசியலைச் செய்யும் ஒரு ராஜ தந்திர யுத்தியாக அதிமுகவோடு தன்னை பிணைத்து வைத்திருந்ததே அவருக்கு மிகப்பெரிய சறுக்கலாய் கடந்த ஐந்து வருடத்தில் நடந்து முடிந்தது. 


ம.தி.மு.கவின் மிக முக்கிய புள்ளிகள் எல்லாம் அதிமுகவின் கீழ் வைகோ அடங்கி நடப்பதை கண்டு சகிக்க முடியாமலும், அரசியல் பொருளாதர காரணங்களுக்காக அப்போதைய ஆளும் கட்சியான திமுகவிடம் ஒவ்வொருவராக தஞ்சம் அடைய உதவியாக திரு. கருணாநிதியின் காய் நகர்த்தல்களும் உதவி செய்தன. ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரு. வைகோ அவர்கள் மெளனித்து ஸ்தம்பித்து நிற்குமளவிற்கு அதிமுகவின் ஆளுமை அவரை கட்டுப்படுத்தி வைத்திருந்ததும் உண்மையே..!


ஈழப்போரின் போது தமிழ் உணர்வினை வெளிப்படுத்தி நிஜமாகவே வைகோ முன்னெடுத்த அரசியல் திரு. சீமான் அவர்களின் அதிரடி அரசியல் பிரவேசத்தினால் மக்களால் கவனிக்கப்படாமல் போனது வைகோவிற்கும் மதிமுக என்னும் கட்சிக்கும் ஒரு அடையாளத்தை கொடுக்காமல் போனது வைகோவின் துரதிருஷ்டம்.


ஈழப்போரில் காங்கிரஸின் கைகள் விளையாடிய போதெல்லாம் அப்போதைய திமுக அரசு மெளனித்து இருந்ததும், ஸ்பெக்ட்ரம் போன்ற மிகப்பெரிய ஊழல்களில் திமுக அரசின் அமைச்சர்களும், திரு கருணாநிதி குடும்பத்தினரும் நேரடியாக ஈட்டுபட்டிருந்ததும், தனது கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் ஒரு பாஸிட்டிவான திருப்பத்தை கொடுக்கும் என்று நம்பி இருந்த வைகோ, தான் சகோதரி என்று வர்ணித்த அதிமுக தலைமை கண்டிப்பாய் தனக்கும் தன் கட்சிக்கும் நிறைய இடங்களை கொடுக்கும் என்று உண்மையிலேயே சட்ட சபைத் தேர்தலில் தமது கடும் உழைப்பைக் கொடுக்க காத்திருந்தார்...


ஆனால்.... செல்வி. ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளின் முடிவில் அதிமுக என்னும் கட்சியின் நலம் இருக்கிறதோ இல்லையோ, தான் என்ற ஒரு அகங்கார அரசியல் கண்டிப்பாய் இருக்கும் என்று மீண்டும் ஒரு முறை உறுதி செய்த செல்வி ஜெயலலிதா வைகோவிற்கு நிறைய இடங்கள் கொடுத்து, மதிமுக அதிக வெற்றிகள் பெற்றால் எதிர் காலத்தில் அது தனக்கே பெரும் தலைவலியாகும் என்ற் நினைத்து, வைகோவை ஓரம் கட்டி விட்டு, தேமுதிக என்னும் கட்சியை தனது வெற்றிக்கு பலி ஆடாய் ஆக்க நினைத்தார். 


தமிழகத்தின் சினிமா வசீகரம் ஒன்றும் இன்னமும் குறைந்திடவில்லை என்பதை எடுத்தியம்ப விஜகாந்த்க்கு கிடைத்த கடந்த தேர்தல் ஓட்டுக்களே கட்டியம் கூற பூரண கும்ப மரியாதையோடு சீட்டுக்களை தேமுதிகவிற்கு அதிமுக கொடுத்ததை கண்டு ஒரு சுத்த அரசியல்வாதியான வைகோ திடுக்கிட்டுதான் போனார் அந்த அதிர்ச்சியில்தான் சட்ட சபை தேர்தலை விட்டு ஒதுங்கியும் இருந்தார். 


இந்த சூழலை தனது கட்சிக்காக பயன் படுத்த நினைத்த விஜயகாந்தும் தனது கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள கூட்டணியை ஏற்றும் கொண்டாலும் அவருக்கு ஜெயலலிதா என்றாலே பிடிக்காது என்பதுதான் உண்மை.


ஜெயலலிதாவை நம்பி வீழ்ந்தது போதும் என்று தனித்த அரசியலை மீண்டும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னெடுத்துள்ள மதிமுகவிற்கு பஞ்சாயத்துக்கள், ஊராட்சிகள் மேலும் நகராட்சியில் கூட ஓரளவிற்கு கணிசமான வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம். வைகோ மீண்டும் நிமிர்ந்து உட்கார இந்த உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாய் அவருக்கு உதவும். இப்படி நிமிர்ந்து உட்கார விஜகாந்தும், காங்கிரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓட்டுக்களைப் பிரித்து கண்டிப்பாய் உதவத்தான் போகிறார்கள்.


தேமுதிகவும் தன்னுடைய தனித்தன்மையை விட்டு விடாமல் ஜெயலலிதாவிடம் பேச்சு வார்த்தை என்ற ஒன்றே முன் வைக்காமல் தனித்து  நிற்பதன் மூலம்  சில பல நகராட்சிகளை வெல்லப் போவதும் உறுதி என்றாலும் மதிமுக அளவிற்கு இவர்கள் வெற்றி இருக்காது என்பதை அறுதியிட்டே கூறலாம்.


சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற அதிமுக என்னும் கட்சி அந்த வெற்றி தங்களது செல்வாக்கினால் கிடைத்தது என்று இப்போது கணக்கு போட்டிருப்பதன் விளைவுதான் கூட்டணிக் கட்சிகளை மதியாமல் எட்டி உதைத்து தானே தனியாய் நிற்போம் என்ற உத்வேகம் என்பதைக் கருத்தில் கொண்டால், அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி....!!!!!(தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில்..)


மிகைப்பட்ட இடங்களில் வைகோ மற்றும் விஜயகாந்த் ஆதரவாளர்களின் ஓட்டுக்கள் பிரியப்போவதாலும்..., தன்னுடைய வலிமையினைப் பற்றி குறுகிய காலத்தில் ஒரு தவறான கணிப்புக்கு அதிமுக தலைமை வந்து விட்டதாலும் கூட்டணி இல்லாத அதிமுக உள்ளாட்சி தேர்தலில் குப்புறக் கவிழத்தான் போகிறது. சமீபத்தில் பரமக்குடியில் நிகழ்த்தப் பெற்ற துப்பாக்கிச் சூடு மக்கள் மத்தியில் ஒரு வித பயத்தையும் அதிமுகவுக்கு எதிரான ஒரு அதிர்வையும் மெலிதாய் ஏற்படுத்தியிருப்படுத்தியிருப்பதும் மறுக்க முடியாத உண்மையாய்தான் கொள்ள வேண்டும். இதன் விளைவுகளையும் அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் உடனடி பலனாக பெற்றுக் கொள்ளும்.


இனி....

சட்ட சபைத் தேர்தலில் அடிபட்டு, காங்கிரஸ் என்னும் அரக்கனால் இரத்தம் உறிஞ்சப்பட்டு, பல வித ஊழல்களுக்குள் அகப்பட்டு, குடும்ப அரசியலால் விழி பிதுங்கி நின்ற திமுக அரசு....தற்போது மெல்ல விழித்தெழ ஆரம்பித்திருக்கிறது.


ஈழப் படுகொலைகளையும் தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான காங்கிரஸின் குரூர நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை திமுக தலைமை சரியாக உணராத போதும், முழு விழிப்புணர்வோடு அடுத்த தலைமுறைக்கான அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்  ஸ்டாலின் போன்றவர்களின் வார்த்தைகளை அதன் தலைமை தற்போது கேட்க ஆரம்பித்திருக்கிறது என்பதன் விளைவே காங்கிரசுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்கப்பட்ட கல்தா.


உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் தான் என்ற ரீதியில் திமுக தலைமை இந்தக் கூட்டணியை உடைத்திருந்தாலும், இதே நிலைமை பாரளுமன்றத்தேர்தலிலும் தொடரத்தான் போகிறது. தமிழ் மக்களின் முன்பு தமிழர்கள் நலம் காணும் ஒரு கட்சியாய் தங்களை முன்னிலைப் படுத்தப்போகும் மாநில அரசியல்தான் தற்போதைய திமுகவின் கவனமாய்  மாறியிருக்கிறது. பேரறிவாளன், முருகன் சாந்தன் தூக்கு தண்டனை விடயத்தில் தமிழக  மக்களிடம் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய எழுச்சியையும், அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடுத்த சில சட்டப்பேரவை தீர்மானங்களையும் அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பினையும் ஆழமாக கவனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்....


மீண்டும் அண்ணா உச்சரித்த காங்கிரசைத் துரத்துவோம் என்ற ஒரு நிலைப்பாட்டினை விரைவிலேயே கோஷமாக்கத்தான் போகிறது. வரப்போகும் காலங்களில் தமிழர் சார்ந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் இன ரீதியாக முன்னெடுக்கப்போவதோடு ஈழப்பிரச்சினைக்கும் தன்னால் ஆன ஒரு உதவியை செயற்படுத்தி தன்னை தமிழக மக்களின் முன் நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் இருக்கிறது.


அழகிரி, கனிமொழி இன்ன பிற அத்தனை குடும்ப உறுப்பினர்களையும் ஆஃப் செய்து விட்டு, ஸ்டாலினின் ஆலோசனையோடு கழகம் நகரப்போகிறது என்பதுதான் திமுகவினருக்கு இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய உற்சாக டானிக்.


தற்போது நிகழும் எட்டு முனைப் போட்டியும், அதிமுகவின் கூட்டணி துரோகமும், காங்கிரசுக்கு கொடுத்த கல்தாவுமாய் சேர்ந்து வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தரத்தான் போகிறது. சட்டசபைத் தேர்தலில் தோற்றதாலேயே பலமெல்லாம் இழந்து விட்டதாக செல்வி ஜெயலலிதா கணித்திருப்பது அவரின் பலவீனமான அரசியல் அனுபவத்தின் வெளிப்பபாடு என்றுதான் சொல்ல வேண்டும்.


திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தற்போது பச்சாதாபமாய் மாறியிருப்பதும், காங்கிரஸ், தே.மு.தி.க, பாமக, மற்றும் மதிமுக கட்சிகளின் ஓட்டுக்கள் பிரிந்து திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு யார் உதவி இருக்கிறார்களோ இல்லையோ அதிமுக தலைமை இந்த உதவியைச் செய்து விட்டது என்றுதான் கூற வேண்டும்...!


நாளும் மாறும் அரசியல் களத்தில்....மக்களுக்கு அதனால் நன்மை விளைந்தால் சரிதான்....என்ற ஏக்கத்தோடு எமது உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அரசியல் பார்வையை நிறைவு செய்கிறோம்.


கழுகிற்காக

(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

75 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

லேபிள் அரசியலா இல்லை நகைச்சுவையா ???

குறை ஒன்றும் இல்லை !!! said...

///அழகிரி, கனிமொழி இன்ன பிற அத்தனை குடும்ப உறுப்பினர்களையும் ஆஃப் செய்து விட்டு, ஸ்டாலினின் ஆலோசனையோடு கழகம் நகரப்போகிறது என்பதுதான் திமுகவினருக்கு இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய உற்சாக டானிக்.//

ஹா ஹா ஹா!! மதுரை மேயர் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாச்சே அதுக்கு யார் காரணமாம !!

குறை ஒன்றும் இல்லை !!! said...

மீண்டும் அண்ணா உச்சரித்த //காங்கிரசைத் துரத்துவோம் என்ற ஒரு நிலைப்பாட்டினை விரைவிலேயே கோஷமாக்கத்தான் போகிறது. வரப்போகும் காலங்களில் தமிழர் சார்ந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் இன ரீதியாக முன்னெடுக்கப்போவதோடு ஈழப்பிரச்சினைக்கும் தன்னால் ஆன ஒரு உதவியை செயற்படுத்தி தன்னை தமிழக மக்களின் முன் நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் இருக்கிறது.//

க்ளாசிக் காமெடி சார் !!! ஆமா அப்புறம் ஏன் இன்னமும் மத்திய அமைச்சரவையில பங்கு எல்லாம்.. நீங்க சொன்னதெல்லாம் பாஜக கூட கூட்டு வச்ச அப்புறமா?

கே. ஆர்.விஜயன் said...

உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தரத்தான் போகிறது.//
உண்மையிலேயே நல்ல நகைச்சுவை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//தற்போது நிகழும் எட்டு முனைப் போட்டியும், அதிமுகவின் கூட்டணி துரோகமும், காங்கிரசுக்கு கொடுத்த கல்தாவுமாய் சேர்ந்து வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தரத்தான் போகிறது.//

இத திமுக காரங்களே நம்ப மாட்டாங்க !!! நீங்க வேற !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//திமுக மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு தற்போது பச்சாதாபமாய் மாறியிருப்பதும்//

இந்த மக்கள் எல்லாம் யார் சார் ? எங்க இருக்காங்க ? எத்தன பேர் கிட்ட கேட்டீங்க ? எந்த தரவ வச்சு இப்படி எழுதறீங்க /

# ரொம்ப நாளா கேட்க நினைச்ச டவுட் !!

கருணா said...

ராஜ்குமார் இவ்வளவு டென்சன் ஆகுறத பாத்தா சார் அதிமுக போல?

இம்சைஅரசன் பாபு.. said...

@குறை ஒன்றும் இல்லை ..

இது தி மு க சார்பு பதிவுகள் மட்டுமே வரும் .பழைய பதிவுகள் எல்லாம் பாருங்கள் ..

இவர்கள் புளுகினி செய்திகள் (சன் டி வி )மட்டுமே பார்த்து படித்து பதிவு இடுபவர்கள் ..ஹி ஹி ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

கருணா !!! ஆமா .. ஆனா இந்த பதிவு எழுதின ஆளுக மாதிறி திமுக சார்ந்த நடுநிலையாளர் இல்லை !!!

கருணா said...

இங்கே கருத்து சொல்லி இருக்க இம்சை சார், ராஸ்குமார் சார் எல்லாம் நடுநிலைவாதிள்ங்கோ

குறை ஒன்றும் இல்லை !!! said...

கருணா!! நாங்க அதிமுக தான் !!!

கருணா said...

இம்சை @ நீங்க ஒலக அரசியல் பாத்து விமர்ச்சிப்பவரா

ஏய்யா ஒரு கருத்து கணிப்பு சொன்னா இம்புட்டு கோவம் ஹி ஹி ஹி இதுக்கு பேருதா கட்சி விசுவாசமா?

கருணா said...

ராஸ்குமார் @ அட இப்புடி ஒரு பதிவ பாத்து அதிமுக காரங்களுக்கு கோவம் வராம யாருக்கு வரும்

சாமி எலக்சன் முடியிற வரைக்கும் வெயிடிங்குங்கோ

இம்சைஅரசன் பாபு.. said...

ஆமா உலக அரசியல் தான் ..உலகமே காரி துப்புற அளவு தமிழன் மானம் கப்பலேற்றிய ..கலிங்கர் வாழ்க ...போதுமா கருணா ..

ஜால்ர போட்டு போட்டு ..ஒரு மனுசன கட்ச்சி நடத்த விட மாடீங்க போல ..

உலக மகா யோகியர் அழகிரி ..அவரு பாராளுமன்ற த்துல கேள்வி மேல கேட்டு மக்களுக்கு எல்லாம் செய்து கிளிச்சிட்டறு

உலக கவிதாயினி ..திகார் ஜெயில்ல களி தின்னு கவிதை எழுதுது

குறை ஒன்றும் இல்லை !!! said...

கருணா கோவம் எல்லாம் இல்லே !! ஒரு சந்தோசம்.. ஏன்னா இதே மாதிறி நிறைய பதிவ சட்ட மன்ற எலக்சனுக்கு முன்னால படிச்சி இப்ப அத அப்பப்ப பார்த்து சிரிச்சிக்கிறொம் !!

என் கேள்வி என்னான்னா ? இந்த பதிவ ஒரு திமுக சார்ந்த பிளாக்ல வந்து இருந்தா கண்டுக்க மாட்டோம் ஆனா நடுநிலை போர்வையில வந்ததால தான் !!!

ஹீம்ம்ம்ம்.. கழுகு பேர் தான் ஆனா உயர உயர பறந்தாலும் ஊர் குருவி ஊர் குருவி தான் !!!

கருணா said...

ராஸ்குமார் @ சட்டசபை தேர்தலின் வியூகம் வேறு இந்த தேர்தல் கூட்டணி வியூகம் வேறுன்னு தெரியாதா சார் உங்களுக்கு

ஏன் சார் சீரியசா நீங்க கடும் அதிமுக கார்தான் சார். அதிமுக செயிக்கணும்னு உங்களுக்காக வேண்டிக்கிறதா பரிதாபப்படுறதான்னுதான் தெரியலை.

கழுகு குருவியா சரி சார் அடுத்த தடவை அம்மாவுக்கு ஆதரவா எழுதுனா சிங்கம்னு சொல்லுவீங்கதானே?

கருணா said...

இமுசை @

காமெக்காரன்யா நீரு

கனிமொலியவும் ராசவையும் வுட்டா நீங்க வேற ஒன்ணுமே பேசுறது இல்ல. டங்ஸ்டன் ஆகாத இமுசை ரிலாக்சு

குறை ஒன்றும் இல்லை !!! said...

கருணா !! உள்ளாட்சி தேர்தலில் எல்லாம் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் கூடவா தெரியாது ? போன தடவ நடந்த தேர்தல மறந்துட்டீங்க போல ...

நீங்க யாருக்கும் ஆதரவா/எதிரா எழுதினாலும் லாஜிக்கா எழுதுங்கண்ணு தான் சொல்றேன்.

நான் மேல சுட்டி காட்டி இருக்கும் கருத்துக்களே உங்களுக்கு சொல்லும் இது எப்படி ஒன் சைடா எழுதி இருக்காங்கண்ணு !!

இம்சைஅரசன் பாபு.. said...

//கழுகு குருவியா சரி சார் அடுத்த தடவை அம்மாவுக்கு ஆதரவா எழுதுனா சிங்கம்னு சொல்லுவீங்கதானே?//

எங்க சார் எழுதிருங்க பார்ப்போம் ...உங்க வலை தளத்துல

கருணா said...

//உள்ளாட்சி தேர்தலில் எல்லாம் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் கூடவா தெரியாது ? போன தடவ நடந்த தேர்தல மறந்துட்டீங்க போல ... //

ராசுகுமாரு @ இதானம்ல உங்க அரசியல் நாலெச்சு, அது என்னது செவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டன்ற மாதிரி, உள்ளாட்சித் தேர்தல்ல ஆளுங்கட்சிதான் செயிக்கணும்னு எதுவும் ஜட்டமா?

அதவிடுங்க ராசுகுமாரு அம்மவோட நடவடிக்கை கூட்டணி கட்சிகளோட எப்புடி? ரெம்ப நல்லா இருக்குல்ல அதையும் பேசுங்க ராசுகுமாரு.

கருணா said...

இமுசை @

உங்க்ளுக்கு எழுத படிக்க தெரியும்ல? பழைய பதிவுகள எடுத்து படிச்சு பாருங்க.

நடுநிலைன்னா நடுவுல நிக்கிறது இல்ல இமுசை சரி தப்புனு ஏதாச்சும் ஒண்ண சொல்லுறது. நீரு அதிமுக உம்ம கிட்ட என்ன நாயத்த பாக்க முடியும்ங்கிறேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

சவுக்கு, தமிழ் லீடர்,விறுவிறுப்பு தான் உங்க தளத்துக்கு இன்ஸ்பிரேசனா இருந்தா அவங்க கிட்ட நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..

அவங்க யார எதிர்த்து/ ஆதரிச்சு எழுதினாலும் அதுல ஆதாரமும், லாஜிக்கும் இருக்கும்.. அவ்வளவு ஈசியா மறுக்க முடியாது ஆனா இங்க பாருங்க !! முதல் 5 கமேண்ட்ஸ்ல எப்படி ஒரு சைடா பேசி இருக்கார்னு .. அவர் சொன்ன கருத்துக்களுக்கு நீங்களும் சப்போர்ட்டா ??

இம்சைஅரசன் பாபு.. said...

//கனிமொலியவும் ராசவையும் வுட்டா நீங்க வேற ஒன்ணுமே பேசுறது இல்ல. டங்ஸ்டன் ஆகாத இமுசை ரிலாக்சு//

இவங்கள விட்டா வேறு யாரு சார் இருக்கா கட்ச்சில ..?

அழகிரி ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் திருடன் ..
கொள்கை பரப்பு செயலாளர் திகார்ல கொள்கைய பரப்புறாங்க
கனிமொழி கவிதாயினி ..
ஸ்டாலின் -லண்டன் வாழ் தமிழர் ..
தயாநிதி மாறன திகார்ல ரூம் இல்லை அதான் வைடிங் ..
இன்னும் பிற ...பொன்முடி ,நேரு ..வீர பாண்டி ஆறுமுகம் ,

பொங்கலூர் பழனிச்சாமி தலைமறைவாக உள்ள தேட படும் குற்றவாளி ...

வேற யார் இருக்கா பாஸ் ....சொல்லுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

// நீரு அதிமுக உம்ம கிட்ட என்ன நாயத்த பாக்க முடியும்ங்கிறேன்//

அதே தான் நானும் சொல்லுறேன் இந்த வலைத்தளம் தி மு க ஜால்ரா ன்னு ..நானும் உங்க கிட்ட என்ன நாயத்த பாக்க முடியும்ங்கிறேன்

கருணா said...

வைகோ நிறைய சீட்டு வாங்குவாருன்னு எழுதி இருக்காங்க

ஒடனே மதிமுக ஜப்போர்ட்டுன்னு சொல்லுவீங்க போலயே! ஹி ஹி ஹி கரை வேட்டிய கழட்ட்ப்போட்டு வாரும் அப்ப தெரியும் நிசம்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ராசுகுமாரு @ இதானம்ல உங்க அரசியல் நாலெச்சு, அது என்னது செவப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டன்ற மாதிரி, உள்ளாட்சித் தேர்தல்ல ஆளுங்கட்சிதான் செயிக்கணும்னு எதுவும் ஜட்டமா?//

ரைட்டு !! நான் சொல்ல வந்தத நீங்க சரியா எடுத்துக்கல !! யார் ஆளுங்கட்சியா இருந்தாலும் அவங்க தான் பெரும்பாலும் ஜெயிக்க முடியும் .. அதிமுக, திமுக இப்படி எந்த கட்சியா இருந்தாலும்.. காரணம் இது முழுக்க முழுக்க அரசாங்கத்தால நடத்தப் படும் தேர்தல்.. லோக்கல் எலக்சன் கமிசனர், லோக்கல் போலீஸ் இப்படி எல்லாமே ஆளுங்கட்சிக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க !!

கருணா said...

இங்கே கருத்து சொல்லி இருக்கும் அத்தனை பேரும் பழுத்த நடுநிலை வாதிகளா

ராசுகுமாரு? ஒங்ககிட்ட கத்திகிட சொல்லுதிய? ஏன் கழுகு நல்லா பறக்கறது பிடிக்கலியாங்காணும்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஏன் கழுகு நல்லா பறக்கறது பிடிக்கலியாங்காணும்//

LOL :))))))))))))))))

Plz carry on ..Fly high !!!

கருணா said...

இமுசை @ அதிமுக காரங்களுக்கு திமுக ஜப்போர்டு, திமுக காரங்களுக்கு அதிமுக ஜப்போர்ட்டு, ரெண்டு கட்சிக்கும் சேத்து மதிமுக ஜப்போர்ட்டு

பின்னி எடுக்குறேள் போங்கோ! கழுகு ஜப்போர்ட்டுன்னு இமுசை அண்ணன் சொல்லியிருக்காங்க கழுகு உறுப்பினர்கள்ல ஒருத்தனா இமுசை சொன்னதை வன்மையா கண்டிக்கிறேன்

அப்பவெ கேட்டேன் இமுசை உமக்கு எழுத படிக்கத் தெரியுமான்னு? இப்ப தெரியாதுன்னு நினைச்சுகிடுதேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

//நாயத்த பாக்க முடியும்ங்கிறேன்//
யேஅப்பா ..என்னா ஹைட் ..என்ன ஹைடு ...செட்டு வேகத்துல பறக்குதுப்பா ...செம ஸ்பீடு ...நான் குருவிய சொன்னேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

/இங்கே கருத்து சொல்லி இருக்கும் அத்தனை பேரும் பழுத்த நடுநிலை வாதிகளா//

மொத்தமே மூணு பேர் தான் இங்க பேசி இருக்கோம்.. அதுல ரெண்டு பேர் அதிமுக, இன்னொருத்தர் நீங்க !!! அப்புறம் வேற யார சொல்றீங்க ?

ஸ்ஸ்ஸோ..முடியல.. போய் பெரியவங்கள கூட்டி வாங்க !!!

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்பவெ கேட்டேன் இமுசை உமக்கு எழுத படிக்கத் தெரியுமான்னு? இப்ப தெரியாதுன்னு நினைச்சுகிடுதேன்.//

கண்டு பிடிச்சிட்டாறு ..FBI .

இம்சைஅரசன் பாபு.. said...

@குறை ஒன்றும் இல்லை ..

அதுவும் வலை தளத்தோட ஒரு ஆளா தான் இருக்கும் ...ப்ரோபைல் பாருங்க புரியும் ..

கருணா said...

ராசு குமார் @

ஹி ஹி விடும்வோய் அம்மா ஜெயிக்கணும்னு வேண்டிக்கிடுதேன்.

கருணா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரெண்டு பழுத்த ரத்தத்தின் இரத்தங்கள் கிட்ட பேசி என் டைம் வேஸ்டாப் போச்சே

வேலை கடக்கு ஓய் அப்புறமா வர்றேன், டக்ஸ்ட்டன் ஆகாம இரும் ஓய் ! கோப்பி குடிக்க போறேன் டாட்டா!

ராசுகுமாரையும் இமுசையையும் ஆண்டவர் மறக்காமல் காப்பாற்றுவாரக.

குறை ஒன்றும் இல்லை !!! said...

கருணா !!! வேற வழியில்ல அப்புறம் ஜெயிச்சப்புறம் நான் வேண்டி தான் ஜெயிச்சாங்கண்ணு சொல்லணும் இல்ல !!

இந்த எலக்சன் ரிசல்ட் வந்தப்புறம் இங்கே வரேன் !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ரெண்டு பழுத்த ரத்தத்தின் இரத்தங்கள் கிட்ட பேசி என் டைம் வேஸ்டாப் போச்சே//

அத தான் நான் முதல்லியே சொல்லி இருக்கேனே !!!

அதனால தான் போய் பெரியவங்கள கூட்டிட்டு வரச்சொன்னேன் !!

Anonymous said...

அழகிரி, கனிமொழி இன்ன பிற அத்தனை குடும்ப உறுப்பினர்களையும் ஆஃப் செய்து விட்டு, ஸ்டாலினின் ஆலோசனையோடு கழகம் நகரப்போகிறது என்பதுதான் திமுகவினருக்கு இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய உற்சாக டானிக்//

இப்படி இருந்தா நல்லா இருக்கும்... க்ரேட் எக்ஸ்பெக்டேசன் இருக்கு.....
ஸ்டாலின் அவர்கள் தலைமைனா ஓக்கே தான். நல்லது.

By
மகேஷ்வரி.

Anonymous said...

கழுகு உறுப்பினர், கழுகு கட்டுரைகளின் வாசகி என்ற முறையில் எமது புரிதல்களையும் இங்கே பதிய விரும்புகிறேன். கழுகு சரியைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் சொல்லிக் கொண்டே இருப்பதே கழுகின் வெற்றியின் அடையாளம். தவறைத் தவறென்று சொல்லும் போது, தவறு செய்பவருக்கு கண்டிப்பாக நறுக்கென்று தலையில் குட்டியது போல் தான் இருக்கும். கழுகின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

By
மகேஷ்வரி.

நிகழ்காலத்தில்... said...

அரசியல் என்பது எப்படி வேண்டுமானாலும் யூகம் என்ற அடிப்படையில் பேசிக்கொண்டே இருக்கலாம்.

சென்ற முறை திமுக எதிர்கட்சி அந்தஸ்தைகூட பெறமுடியாமல் போகும் என யாருமே கணிக்கவில்லை.

பண்ருட்டியார் கூட தனது கட்சிக்கான கருத்தாக உயர்வாக சொன்னது பொருந்தி விட்டதே தவிர அவரோ, ஜெ வோ இப்படி வெற்றி பெருவோம் என நினைக்கவில்லை.

அதைப்போல் கழுகுவின் கணிப்பு ஓட்டுகள் சிதறுவதால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உண்டு எனச் சொல்வது ஏற்புடையதுதான்.

மக்கள் ஜெ மூன்று மாத ஆட்சியைப் பார்த்துவிட்டார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் நிற்பவரின் தகுதிப்பேற்ப வெற்றி வாய்ப்பு கிட்டும் என்ற அடிப்படையிலும் தேமுதிக ஓட்டுகள் பிரிந்தது பலவீனமாகவே கருதுவதால் இந்த கணிப்பு.,

பொறுத்துக்கொள்வோம் நண்பர்களே முடிவு வரும்வரை., எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாம் உழைத்தே ஆக வேண்டும்:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கழுகு சரியைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் சொல்லிக் கொண்டே இருப்பதே கழுகின் வெற்றியின் அடையாளம்.//

இப்படியே போனால் பொதுவாக படிப்பவர்களால் நிராகரிக்கப்படும்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//மக்கள் ஜெ மூன்று மாத ஆட்சியைப் பார்த்துவிட்டார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் நிற்பவரின் தகுதிப்பேற்ப வெற்றி வாய்ப்பு கிட்டும் என்ற அடிப்படையிலும் தேமுதிக ஓட்டுகள் பிரிந்தது பலவீனமாகவே கருதுவதால் இந்த கணிப்பு.,//

சென்ற முறை கடுமையான மின் வெட்டில், இதை விடவும் கெட்ட பெயருடன் ஆளுங்கட்சி சந்தித்த பல தேர்தல்களில் வென்ற வரலாறு மறந்து விட்டது போலும் !!

Anonymous said...

பொறுத்துக்கொள்வோம் நண்பர்களே முடிவு வரும்வரை., எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாம் உழைத்தே ஆக வேண்டும்:)

கரெக்ட்டா சொன்னீங்க சிவா!!!
:-)

By
மகேஷ்வரி

Anonymous said...

இப்படியே போனால் பொதுவாக படிப்பவர்களால் நிராகரிக்கப்படும்..//

அப்படியா... இதே வாக்கியத்தில் உள்ள *பொதுவாக* என்ற அந்த வார்த்தையிலேயே ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருக்கின்றது. ஸோ நோ ப்ராப்ளம்.

ஒரு சார்பு உடையவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது போலத் தோன்ற வாய்ப்பிருக்கின்றது. அதைத் தவறெனக் கூற முடியாது. அவரவர் கோட்பாடுகளும் கொள்கைகளும் அவரவர்க்கு.


By
மகேஷ்வரி

கொக்கரக்கோ..!!! said...

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது தான். ஆனால் கழுகு, அதாவது பருந்து பறக்கின்ற உயரத்திற்கு இந்த "ஊர்க்குருவி" பறக்கிறது என்பதை ஒத்துக்கொண்ட கழுகின் நலன் விரும்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!

அடுத்து, கழுகு தோழர்களே, நீங்கள் பெருமையுடன் உற்சாகமடைய வேண்டிய தருணம் இது. ஏனெனில்....

ஆரம்பத்தில் இது பறக்குமா? என்றார்கள். பறந்தோம்!!

அடுத்ததாக உயரப்பறக்குமா? என்றார்கள்.. உயரப் பறந்தோம்!!

இப்பொழுது உயரப்பறந்தால் கழுகு ஆகிவிடுவீர்களா? என்கிறார்கள்...

நிச்சயம் "தங்கக் கழுகாக" ஜொளிப்போம் தோழர்களே!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

மகேஸ்வரி மேடம் !! நான் சொல்ல வந்தது அதிமுக பத்தி எழுதினா நான் ஆதரவாகவும், திமுக எதிராகவும் மாறி மாறி தான் கருத்துகள சொல்லுவோம்.. ஆனா இப்படியே போனா நடுநிலைன்னு இல்லாம திமுக ஆதரவாக முடியும் !!! அப்படி தான் இப்பவும் இருக்கு கிட்டத்தட்ட !!!

கழுகு said...

அன்பின் நண்பர்கள்,

உள்ளாட்சித் தேர்தல் மட்டும் என்றில்லை, வரப்போகும் பாரளுமன்றத்தேர்தல் இன்னும் வரப்போகிற எல்லா தேர்தல்களிலும் ஏதோ ஒரு கட்சி வெற்றிப் பெறப் போகிறது என்று அனுமானித்துதான் ஆகவேண்டும்.

இப்படி அனுமானிக்கையில் ஏதோ ஒரு கட்சியை சுட்டிக் காட்டி விடுதால் அப்படி எழுதிய தளமோ, அல்லது ஆட்களோ அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று கணிப்பது முற்றிலும் தவறு!

தற்போதைய அரசியல் சூழலில் கட்சிகள் எல்லாம் கூறு பட்டு நிற்கும் போது வாக்குகள் பிரிந்து அதனால் திமுக வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் மிகுதியாக இருக்கின்றன என்பதே நமது பார்வை.

இங்கே திமுக நல்ல கட்சி என்றோ அதிமுக கெட்ட கட்சி என்றோ அல்லது இதற்கு உல்டாவாகவோ கருதிக் கொள்வது ஒவ்வொருவரும் எந்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்களோ அதைப் பொறுத்து மாறுபடும்.

தற்போதுள்ள வியூகத்தின் கணக்கு இது... ! இது தப்பலாம், தப்பாமலும் போகலாம் ஆனால் கணக்கு இதுதான். கடைசி நேர மாறுதல்களும், நிகழ்வுகளும் எப்போதும் முடிவுகளை மாற்றும்.

ஒரு கருத்துக் கணிப்பினை உள்வாங்கிக் கொள்ளுங்கள், உங்களது ஊகத்தையும் பகிருங்கள் அதில் எவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று யாமும் வாசகர்களும் படித்து தெரிந்து கொள்ளட்டும்.

இதை வைத்து கழுகிற்கு அரசியல் சாயம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாக கண்டித்து மறுக்கிறோம்.

கழுகு நடுநிலையானது...!

எந்தக் கட்சியையும் சாராதது....! எங்கே நல்லது இருக்கிறதோ அதை தேடி எடுத்துக் கொள்ளும் இறுக்கமில்லாத கொள்கை உடையது.

கழுகிற்கு அரசியல் கட்சிகளைப் பற்றிய கவலையை விட அதை விளங்கிக் கொள்ளும் மக்களை பற்றிதான் கவலை.

THE APPEARANCE OF THING CHANGES ACCORDING TO THE EMOTIONS AND THUS WE SEE MAGIC AND BEAUTY IN THEM, WHILE THE MAGIC AND BEAUTY ARE REALLY IN OURSELVES.

- K. GIBRN


நன்றிகள்...!

Anonymous said...

மகேஸ்வரி மேடம் !! நான் சொல்ல வந்தது அதிமுக பத்தி எழுதினா நான் ஆதரவாகவும், திமுக எதிராகவும் மாறி மாறி தான் கருத்துகள சொல்லுவோம்..//

கட்டுரை பற்றியதான உங்கள் எதிர்க் கருத்துக்களையும், உங்கள் கொள்கையையும், கழுகு பற்றியதான உங்கள் புரிதல்களையும் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் ராஜ்குமார்.

Kazhuhu always welcome your GENUINE thoughts on our posts.

whenever you have time keep in touch with kazhuhu.

Thx Raj.

By
மகேஷ்வரி

வெளங்காதவன் said...

தேவா அண்ணா- காமெடிக்கு நன்றி...

#அண்ணே, எங்களுக்கு வெவரம் பத்தாதுன்னே.... டெல்லிக்கு ஈழத்துக்காக போகாதவரு, கனியின் ஈரத்துக்காகப் போனதையே மறந்திருவோம்....
ராசா அம்பிய மறந்திடுவோம்....

கண்டிப்பா, அந்தத் தலீவர் கட்சியைத்தான் கெலிக்கவைப்போம்...

- வெகுசனத்தின் சார்பில்,
வெளங்காதவன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

கழுகு !!! உங்கள் பின்னூட்டம் இந்த பதிவை படித்த பின்னரே எழுதி இருப்பீர்கள் என நம்புகிறேன்!!

உங்க நடுநிலைமை தத்துவம் என்னை வியக்க வைக்கிறத்து!!!

திமுக ஆதரவு பதிவர் நடுநிலையாக எழுதி இருப்பார் என்று நம்புகிறீர்கள் பாருங்க.. நீங்க பச்ச மண்ணுண்ணே !!

உங்க தளம் நடுநிலையானதுன்னா எந்த கட்சிய சார்ந்தவர்களையும் எழுத விடாதீங்க.. யாரா இருந்தாலும், எந்த கட்சியா இருந்தாலும் அவர்கள் திணிப்பு தான் வரும்.. இது நிதர்சணம் மற்றும் அவர்கள் தப்பு எதுவும் இல்லை..

நான் சில பின்னூட்டங்களை முதலில் போட்டு இருக்கேன் ஆனா அதுக்கு யாரும் பதில் சொல்லல.. எழுதினவர் உட்பட :))

நல்லா இருக்கு உங்க நடுநிலைமை..

dheva said...

அன்பின் ராஜ்குமார் @

கட்டுரை எழுதிய என்னை கேட்காமலேயே திமுகவில் இணைத்து விட்டீர்கள் .ஹா ஹா ஹா உங்களது கணிப்புத் திறனுக்கு எனது வாழ்த்துக்கள்.

கீழே உள்ள சுட்டியை க்ளிக்கி தங்களின் அனுமானம் சரியா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு விஜகாந்தோடு கூட்டணி என்று அதிமுக அறிவித்த பின்பு எழுதியது.

கருத்து சுதந்திரம் இருக்கும் ஒரு தேசத்தில் கணக்கீடுகளை வைத்து ஒரு கட்சி வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்று எழுதியதே குற்றம் என்று பாய்ந்து வரும் நண்பர்களையும் புன்னைகையோடு எதிர் கொண்டு வாழச் சொல்லித்தான் காலம் எமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

http://maruthupaandi.blogspot.com/2011/03/blog-post_6173.html

நன்றிகள் ராஜ்குமார்....! வாழ்க வளமுடன்...!

குறை ஒன்றும் இல்லை !!! said...

@தேவா சார்.. அப்ப என் பின்னூட்டங்களுக்கும் பதில சொல்லி இருந்திருக்கலாமே..

நான் ஆதாரமில்லாம சொல்லலியே !!

புலவர் சா இராமாநுசம் said...

கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை
இன்னும் ஒரு மாதம்!
இதற்குரிய பதிலை சொல்லும்

புலவர் சா இராமாநுசம்

ராஜரத்தினம் said...

எனக்கு ராஜ்குமார்னு பேரை கேட்டாலே மதுரையிலிருந்து அறிவிலினு ஒரு அல்லகை.. ஸ்ஸ் அப்பா சாமி அது மாதிரி கருணாநிதியே எழுதமாட்டர்யா? அப்படி எழுதும், எனக்கு அதன் ஞாபகம்தான் வருது, நீங்கள் அதுவாக இல்லாமல் அவராக இருக்க வேண்டும்,

குறை ஒன்றும் இல்லை !!! said...

http://viruvirupu.com/2011/09/24/8908/

இத படிச்சி பாருங்க சார் !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ராச ரத்தினம் !!! நான் அந்த ராஜ்குமார் இல்லை !! குறை ஒன்றும் இல்லைன்னு ஒரு பதிவ எழுதீட்டு இருந்தேன் !!

குறை ஒன்றும் இல்லை !!! said...

டெஸ்ட் !!

dheva said...

காத்திருக்கிறோம்...!

இந்த பதிவு சம்பந்தமான விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்பதற்காக..

குறை ஒன்றும் இல்லை !!! said...

Im Here Mr. Deva....

I am still waiting for your Answers !!!

dheva said...

ராஜ் @ நிறைய கமெண்ட் போட்டு இருக்கீங்க ....!

அடிப்படையா சில கேள்விகள் கேக்க முடியுமா? இஃப் யு டோண்ட் மைண்ட் ஒன்ஸ் எகெய்ன்?

குறை ஒன்றும் இல்லை !!! said...

Please Go ahead.. Sorry to type in English !!!

dheva said...
This comment has been removed by the author.
dheva said...

Raj @ also note that we are in office...in case the answer delays dont come to conclusion that we skipped...

We will answer you each and every claims..!

Hope u will have an understanding...!

குறை ஒன்றும் இல்லை !!! said...

Sure.. Thanks..

I need a simple answer.. Please consider my comments 2,3 and 4 then justify how do you still claim its a neutral post..

சௌந்தர் said...

@Raj நீங்க கேள்வி கேளுங்க ஏதாவது கேள்வி விட்டு போய் இருந்தாள் அதை குறியிட்டு மீண்டும் காட்டுங்கள்...

கேள்வி கேளுங்க :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

Soundar if you want to make fun here Im ready but dont want to do it here !!! I believe this Team has some reputation !!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

Deva Sir !!! Take your own time and come back.. Have a nice day ahead !!!

dheva said...

ராஜ்@

2) மதுரை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஆனது யாரால் என்று எங்களுத் தெரியாது. யார் காரணம் என்று உங்களுத் தெரிந்தால் ஆதரப்பூர்வமாக இங்கே தெரிவியுங்கள். யாரேனும் திமுகவினர் இதற்கு தெளிவான பதில் அளிக்கலாம்.

3) மத்திய அமைச்சரவையில் கூட்டு என்பது தற்போது உள்ள உறவை உடனடியாக முழுதும் விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் ஏற்கனவே உள்ளே இருக்கும் தங்கள் கட்சியினரை வெளியே விடுவதில் பிரச்சினைகள் வரும் என்றும் மேலும் முழு வீச்சில் வெளியேறினால் காங்கிரசின் தேசிய அரசியல் மூலமாக தாங்கள் பழிவாங்கப்படுவோம் என்பதாலும்....

முள்ளில் இட்ட சேலையை மெதுவாக எடுப்பது போன்ற அகப்பட்ட ஒரு சாத்தானிடம் இருந்து மெல்ல மெல்ல வெளியே வர முயல்வதாக கணிக்கிறோம். ஏதேதோ ஊழல்களில் சிக்கி இருந்ததால்தான் மத்திய அரசுக்கு முழு எதிர்ப்பை ஈழப் போரட்ட சமயத்தில் காட்டவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

4) திமுகவினர் நம்பால் இருக்கலாம் அல்லது நம்பலாம் அதைப் பற்றிய அல்லது அவர்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை நாம் கணிக்கவில்லை தோழர்...

அ) கூட்டணிக்கட்சிகள் பிரிந்து இருப்பதாலும், காங்கிரசுக்கு எதிரான ஓட்டுக்கள் முன்பு மொத்தமாய் அதிமுகவினருக்கு கிடைத்தது போல கிடைக்காது அதே நேரத்தில் எல்லா கட்சியினருக்கும் அது சிதறி கிடைக்கும், திமுக காங்கிரசை விட்டு வெளியே வந்திருக்கும் இந்த நேரத்தில் திமுகவினரில் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கூட்டணி பிடிக்காமல் வேறு வேறு கட்சியினருக்கு அதிருப்தியில் வாக்களித்திருப்பனர் தானே...அவர்களின் வாக்கும் காங்கிரசுக்கு எதிரான வாக்கும், துப்பாக்கிச் சூட்டினால் அதிர்ப்தி அடைந்திருக்கும் பொது மக்கள் + ஒரு சமூகப்பிரிவினரின் வாக்குகளும் திமுகவிற்கு செல்லவும் செய்யும்.

திமுக வெல்ல வேண்டும் என்பது எமது ஆசையில்லை ஆனால் இந்த சூழல் திமுகவிற்கு கை கொடுக்கும் வாய்ப்பிருக்கிறது.

இதுதான் நமது கணிப்பு...!

dheva said...

எந்த ஒரு தேர்தலிலும் கணிப்பு என்று வரும் போது ஏதோ ஒரு கட்சி வெல்லும் என்றுதான் கூற முடியும்...

ஒருவேளை அதிமுக வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்று கணித்தால் கூட அதுவும் ஒரு சாராரால் அதிமுகவிற்கு சப்போர்ட் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஒரு தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று சமகால அரசியல், கூட்டணிகள், என்று வைத்து பார்த்து ஏதோ ஒரு கட்சியை கணித்துதான் ஆக வேன்டும்.

அப்படியான கணிப்பில் திமுகவை சுட்டிக் காட்ட வேண்டிய இடத்தில் வந்ததால் இது திமுக ஆதரவு வலைப்பூவோ அல்லது பதிவோ அல்ல...!

பாரளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் பல்வேறு அனுமானங்கள் நிகழ்வுகளை வைத்து காங்கிரஸ் வெல்லும் என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்...

நீங்கள் அப்போது ஈழத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர் என்று சொல்ல முடியுமா?

நமது விருப்பங்கள் என்பது தனி... என்ன நிகழும் என்று பார்ப்பது தனி...!

குறை ஒன்றும் இல்லை !!! said...

Deva Sir!! thats wht gave reference viruvirupu.com.... and ofcourse every political viewer knows it how DMK is suffered by families..

Any how .. Thanks for your response...

This would be my final comment here..

Have a high fly !!!

dheva said...

நன்றி ராஜ்குமார்!!!

நாம் இப்படி கணித்திருக்கிறோம். கணிப்புக்கள் எல்லாம் அப்படியே நிகழ்ந்து விடும் என்று அடம்பிடித்துக் கொண்டு நாங்கள் நின்றால் நாங்கள் சிறுபிள்ளைகள்...

நடக்கலாம்..நடக்காமலும் போகலாம்..! நடந்தால்.. எமது மூளைகள் சரியான திசையில் சிந்திக்கின்றன என்று ஒரு சரிபார்த்தலை நிறைவு செய்த திருப்தியோடு அடுத்த இலக்கிற்கு பறக்க ஆரம்பிப்போம்...!

ஒரு வேளை நிகழவில்லை எனில்... இன்னும் எமக்கு கூடுதல் தெளிவும் அனுபவமும், புரிதலும் தேவை என்று இந்த அனுபவத்தை பாடமாகக் கொள்ளும் அதே நேரத்தில் அசாகயமாக அதிமுக வென்றிறிந்தால்.. எமது மனமார்ந்த வாழ்த்துக்களோடு மக்கள் மத்தியில் ஆத்மார்த்தமான இடம் அவர்களுக்கு எப்போதும் இருகிறது என்று மகிழ்வோம்...!

அவ்வளவே....ஏனென்றால் நாம் எந்த ஒரு கட்டமைப்பிலும் இல்லை, இங்கே வெற்றிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கவோ அல்லது வேதனையோடு தலைகுனியவோ..!

எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றே ஒன்று....

கழுகு எப்போதும் ஒரு விழிப்புணர்வு வேங்கை... அது சீரிய நல்நோக்கம் கொண்டது. சூழல்களால் ஏதேதோ எண்ணங்களை அது விதைக்கலாம்.. ஆனால் அதற்கு அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் விட....

மக்களின் பார்வைகளைப் பற்றித்தான் கவலை...! எம்மால் ஒரு துரும்பை எடுத்து போட முடியும் என்று இறைவன் பணித்திருக்கிறான் என்ற அளவில் இயன்ற வரை தெளிவுகளைக் கைக்கூட்டி எந்த ஒரு காழ்ப்புணர்ச்சிகளுமின்றி சிறகடிக்க விரும்புகிறோம்.

எப்போதும் கழுகு தளம் உங்களின் மேலான கருத்துக்களுக்கு காத்திருக்கிறது. மனிதர்களை, மனித மனங்களை காயப்படுத்துவது என்பது எப்போதும் சரியான ஒரு விடயமல்ல...

வாழ்த்துக்கள்...ராஜ்...! மீ டூ... கெட் டவுன் ஹியர்....! யூ டூ ஹேவ் ஃபென்டாஸ்டிங் டே....!

தமிழ் அமுதன் said...

அதிமுகவுடன் சேராமல் மதிமுகவும்,தேமுதிகவும் தனித்து நிற்பதால் திமுகவுக்கு சாதகமாக அமையும் என்ற கழுகின் கணிப்பு தவறில்லை...! ஆனால்..!

திமுக ஆட்சியில் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி குறைந்தததாக தெரியவில்லை..! சுடச்சுட முடிவெடுக்கும் அம்மா மீது மக்கள் ஆதரவு சற்று அதிகரித்து இருப்பதை போலதான் தோன்றுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக வெல்லவே வாய்ப்பு தெரிகிறது ..!

dheva said...

நன்றி அமுதன்...!

உங்கள் பார்வையையும் வரவேற்கிறேன்...!

Anonymous said...

திமுக‌ வுக்கும் ச‌ரி அதிமுக‌ வுக்கும் ச‌ரி எப்பொழுதும் ஒரே க‌ட்சிக்கு சில‌ர் ஓட்டு போடுவார்க‌ள். ஆனால் சில‌ர் இதுவா அதுவா என்று எந்த‌ க‌ட்சியையும் சாராம‌ல் இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளை வைத்தே தேர்த‌ல் முடிவு மாறும்.

சென்ற‌ தேர்த‌லில் இந்த‌ இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அதிமுக‌ மீது உள்ள‌ ந‌ம்பிக்கையில் போட்ட‌ ஓட்டை விட‌ திமுக‌ எப்ப‌டியும் வ‌ந்து விட‌க்கூடாதுன்னு போட்ட‌ ஓட்டு தான் த‌னிப்பெரும்பான்மையை கொடுத்தது. அதாவ‌து வேற சாய்ஸ் இல்லாம‌ இருந்த‌து. அந்த‌ வ‌கையில் பார்க்கும் போது க‌ழுகின் க‌ணிப்பு ச‌ரிதான். தேமுதிக‌, ம‌திமுக‌ வுக்கும் வாய்ப்பு உள்ள‌து.

திமுக‌வின் ப‌ல‌வீன‌ம் எல்லாம் அதிமுக‌வுக்கு ப‌ல‌ம் தான்.

திமுக‌ = குடும்ப‌ அர‌சிய‌ல், அதிமுக‌ = குடும்ப‌ ஆதிக்க‌ம் ஒன்றும் இல்லை,

திமுக‌ = அழ‌கிரியை மைய‌மாக‌ வைத்து ர‌வுடிக‌ள் வ‌ள‌ர்ந்து ம‌க்க‌ளை அச்சுறுத்திய‌து, அதிமுக‌ = அவ‌ர்க‌ளை கைது செய்த‌து.

===========================================================
அதிமுக‌வின் த‌வ‌றுக‌ள் திமுக‌வுக்கு ப‌ல‌ம்.

1, திமுக‌ வின் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ள் எல்லாத்தையும் தேடி தேடி அழிச்ச‌து. ( அது ம‌க்க‌ளை பாதிக்கும் என்ப‌தை உண‌ராம‌ல் செய்த‌து தான் த‌வ‌று)


ஆனாலும் க‌ட்சி நிறுத்தும் வேட்பாள‌ரைப் பொறுத்தும் முடிவு மாறும்.

இதுவ‌ரை 2 பெரும் க‌ட்சிக‌ளின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌த்தை ம‌ட்டும் தான் பார்த்து இருக்கிறோம். இந்த‌ தேர்த‌லில் தான் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளின் ப‌ல‌ம் ப‌ற்றி தெரியும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

:)))))))))படிச்சி சிரிச்சிட்டே இருக்கேன் :)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes