
மக்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருக்கும் ஒரு சுற்றுப் புற சூழலில் தமிழத்தின் மிக முக்கிய பிரச்சினையாக சட்டென்ற மழைக்காளான்கள் போல ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கி இருந்த துணிகர கொள்ளைச் செயல்கள் தமிழக மக்களை திடுக்கிடத்தான் செய்தன. விலைவாசி ஏற்றம், மற்றும் கடுமையான மின்வெட்டு , இன்னபிற பிரச்சினைகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வாழும் சூழலும் மக்களைத் தொற்றிக் கொள்ள ஒரு அசாதரண நிலைக்கு சட்டென்று தமிழகம் தள்ளப்பட்டது.
இப்படியான ஒரு சூழலில் அரங்கேறியதுதான் வேளச் சேரியில் நடந்த என்கவுண்டர் என்று காவல்துறையால் வர்ணிக்கப்படும் 5 கொலைகள். பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் இருப்பிடத்தை காவல் துறை புலனறிந்து, நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் தங்கிருந்த வீட்டினைச் சுற்றி வளைத்து அவர்களைச் சரணடையச் சொல்லியதாகவும்,...