
அடுத்தடுத்து பள்ளியில் விபத்து, உயிரிழப்பு, என மாணவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லாமலிருக்கிறது. என் வீட்டருகிலிருக்கும் பள்ளியில் சக மாணவர் தாக்கியதில் மாணவன் ஒருவன் அதே இடத்திலே உயிரிழந்தான். ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்து மரணம், இப்பொழுது மாணவி ஒருவர் பஸ்லிருந்து தவறி விழுந்துள்ளார். இப்படி அடிக்கடி மாணவர்கள் உயிர் இழப்புக்கு காரணம் பள்ளி நிர்வாகமா அல்லது மாணவர்களின் செயலா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையற்றது.
பள்ளியில் நிகழும் மரணங்களுக்கு பள்ளியே பொறுப்பு எனது வீட்டருகிலிருக்கும் பள்ளி மிகவும் பிரபலமானது. K.Cசங்கரலிங்கம் (KCS) என்றால் அனைவரும் அறிந்திருப்பார்கள், மைதானத்தில் சக மாணவன் தாக்கியதில் அந்த இடத்திலேயே மாணவன் உயிர் இழந்தார். ஆனால் மாணவன் மயக்க நிலையில் இருக்கிறானென்று ...