
கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என்னும் பெருங்கப்பலை செலுத்திக் கொண்டிருக்கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களில் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர்சித்து வந்த அத்தனை பேரையும் இந்த செய்தி தேளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பதும் உண்மைதான்.
தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின் அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் இல்லாத அழகிரி செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமையையும் தமிழக அரசியலில் செலுத்தி...