
அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் ஒராயிரம் நிகழ்வுகளில் சரி தவறு என்று தெரியாமலேயே.. நாமும் ஒரு சில விசயங்களில் நமது பங்களிப்பை செலுத்தி விடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு விசயம்தான் பாலீத்தீன் பைகளின் பயன்பாடு. ஏனொ புரியவில்லை இது ஒரு நாகரீகம் என்று மக்கள் மனதில் எப்படி பதிந்தது? நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பாலீத்தீனும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அரக்கன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பாலித்தீன் பைகள் மண்ணுக்குள் புகுந்து பூமித்தாயின் சுவாசத்தை நிறுத்தும் எமன் என்பது தெரியாமலேயே....சட்னி, சாம்பார் வாங்குவதில் இருந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் வாங்குவது வரை பாலித்தீனின் உபோயகம். ஒன்று இதன் அபாயம் யாருக்கும் தெரியவில்லை இரண்டு தெரிந்தவர்கள் சொல்லமுயல்வது இல்லை மூன்று எனக்குத்தான் ஒன்றூம் இப்போது ஆகவில்லையே என்ற அலட்சியம்?
எல்லாவற்றுக்கும்...