Tuesday, September 28, 2010

கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்......

சந்தோசமான மனிதர்கள் எல்லாவற்றையும் சந்தோசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள், ஆமாம் தோழர்களே துக்கத்தை கூட அவர்கள் எதிர்க் கொள்ளும் விதம் மிக இயல்பானததாகத்தானிருக்கும். சிரிக்க தெரிந்த மனிதன் மகிழ்ச்சியானவன்... அந்த சிரிப்பு புரிதலிலும்...ஆழ் மனதிலும் இருந்து வரவேண்டும்...அல்லவா? கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே. ஆனால்.. சிரிக்க தெரிந்த மனிதனுக்கு எல்லாமே. வசப்படும்... ! போகிற போக்கில் தம்பி ஜீவன் பென்னியிடம் இது பற்றி பேசிவிட்டு சென்றோம்...கண நேரத்தில் அவர் கட்டுரையாக்கி கொடுத்தார்...ஆமாம்.. சந்தோசமாக படியுங்கள்...சந்தோசம்.. உங்களின் உணர்வுகளை கூர்மையாக்கும்.... இது சுலபமானதா இல்லையா?? சுலபமானது என்றால் நான் ஏன் இதை எழுதவேண்டும்? கடினமானது என்றால் அதையும் ஏன் எழுத வேண்டும்? மழலையின் சிரிப்பில் கள்ளச்சிரிப்பென்று...

Saturday, September 25, 2010

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்

நமது மண்ணுக்கென்று சில வாசம் இருக்கிறதே... ! தமிழனுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதே..... இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர....அவை எல்லாம் என்ன என்று எண்ணி கூட பார்க்க முடியாத அளவிற்கு.. மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரம்பரியங்களைத் தின்று கொண்டிருக்கிறது.தமிழ் நாட்டில் பூர்வாங்க கலைகள் எல்லாம் அழியும் நிலையில் இருக்கும் நேரத்தில் அது பற்றிய ஒரு விழிப்புணர்வை நமது சமகால தலை முறையினருக்கு எடுத்தியம்ப வேண்டி.... நாம் ஒரு கட்டுரை கேட்டிருந்தோம் தோழி ஜிஜியிடம்......! அவரின் ஆக்கம் இதோ...உங்களுக்காக... இன்றைய தலைமுறையில், நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி பலருக்குத் தெரியவில்லை. பலர் பார்த்ததுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை. எனவே நம்து தமிழகத்தின் சொத்தான அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். தமிழகத்தில் இசை, நடனம்,கூத்து போன்ற பல்வேறு கலைகள் செவ்வியல்...

Wednesday, September 22, 2010

விசால அறிவுகளை நோக்கி....!

ஆழ்ந்த மெளனங்களுக்குப் பின்னால் இருக்கும் கவனிப்புகளை அனுபவங்களாக்கி கொண்டிருக்கிறோம். கால சுழற்சியில் ஏற்படும் மன மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களின் ஓட்டங்களும், திட்டங்களும் திசைமாறிச் செல்வதை கவனிக்க முடிகிறது. மிகைப்பட்ட மனிதர்கள் பொதுபுத்தியின் பின் நடந்து கொண்டும், சத்தியத்தின் வேர்களைப் பற்றிய விழிப்புணர்வு இன்றியும் இருப்பதாகவே படுகிறது. விளம்பரங்களும் அதனால் வரும் புகழ்களும் மனிதர்களின் மனதை கவ்விப் பிடித்து அதன் போக்குகளில் ஏதாவது செய்து தம்மை தக்க வைத்துக்க் கொள்ள போராடும் முயற்சிகளையும் அறியப் பெற முடிகிறது. அரசியலும் சினிமாவும் தமிழனின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து இருக்கும் அதே வேளையில் அது பற்றிய விழிப்புணர்வுகள் சீர்கேட்டை உண்டு பண்ணுபவர்களாலலேயே பரப்பப்படுவது அந்த பரப்பலில் கிடைக்கும் பரபரப்புகளில் தங்களில் அரிதாரமுகங்களை வெளிக்...

Tuesday, September 14, 2010

மனிதர்கள் ஒரு மருத்துவ பார்வை...!

பொது பிரச்சினைகள் தாண்டி உடல் நலம் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே குறைவுதான். தோழி ஜெஸ்வந்தி அனுப்பிய இந்த கட்டுரை மருத்துவ அறிவியல் ரீதியாக எப்படிப் பட்ட மாற்றங்கள் ஆண் மற்றும் பெண் பாலாருக்கு இருக்கிறது மேலும் அது எப்படி ஆயுளை நிச்சயிக்கிறது, அதற்கான புறக்காரணிகள் என்ன? என்று தெளிவாக தெரிவிக்கிறது.... அறிவு பெருக்கம் விழிப்புணர்வின் உச்சம்...வாருங்கள் ஜெஸ்வந்தியின் கட்டுரைக்குள் செல்வோம்...! ஆண்களைவிடப் பெண்கள் அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் .. '' நீங்கள் இல்லையென்றால் என்னால் இதிலிருந்து மீள முடியாது '' உயிர்காக்கும் இயந்திரத்துடன் பொருத்தப் பட்டு அந்தக் கட்டிலில் கிடக்கும் பெண், தன் கணவரிடம் முனகுகிறாள். '' உன்னால் முடியும் . நம்பு'' அருகிலிருந்து தைரியம் தருகிறார் அவள் கணவர். ஆனால் மனைவியைத் தைரியப் படுத்திய அந்த...

Thursday, September 09, 2010

கழுகின் பயணத்தில்....!

தினவெடுத்த தோள்கள்...ரெளத்தரம் பழகி நினைவுகள், புலியின் பாய்ச்சல், சிறுத்தையின் வேகம், சிங்கத்தின் கம்பீரம்....தெளிவான சிந்தனை கொண்டு தேசத்தின் இளைஞர்களும் வளர்ந்து வரும் சிறுவர்களும் நடை பயில ஒரு தவிர்க்க முடியாத கருத்துக்களின் களமாய் கழுகு மாறும்...என்று? இன்றா? நாளையா...இல்லை...அடுத்த மாதமா?கவலையில்லை... செதுக்கும் சிற்பங்களின் செம்மை வெளிப்படுவது சிலையின் முழுமையில்...அதுவரை காத்திருத்தல், கவனித்தல், என்ற இரண்டுமே ஆயுதம்...இன்னும் 10 வருடம் இல்லை 20 வருடம் இல்லை இந்த தலைமுறை தாண்டி அடுத்த தலைமுறை தெளிவாய் சிந்திக்கும்.....! கழுகுக்கு எப்போதும் சமகால அரசியலிலும், சுற்றி நடக்கும் அட்டூழியங்களிலும்...அதிக கவனம் இல்லை என்றுதான் சொல்வேன்...!கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறதா.... எல்லா பிரச்சினைகளையும் விமர்ச்சிக்க..குரல் கொடுக்க..ஒராயிரம் ஊடகங்கள்...

Tuesday, September 07, 2010

தேனம்மையுடன் ஒரு நேர்முகம்....

கழுகு கொஞ்சம் லேட்டாக வந்ததற்கு முதலில் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே சொன்னது... எல்லா நேரமும் ஃப்ரியா இருக்க முடியுமா? சில நேரங்களில் வேலைப்பளு அதிகம் சலித்துக் கொண்டது கழுகு அதன் பிண்ணனியில் உண்மை அதிகம்... ஜில்லென்று பருகிய குளிர்பானத்துக்கு பிறகு... சும்மா உக்காந்துகிட்டு இருக்காம... சும்மா ஜம்முனு பேட்டியை போடுங்க.. சும்மா கலக்கலா இருக்கும் பாருங்க.. பேட்டியை வாங்கி சும்மா பார்த்தோம்............. கவிதைகளிலும் கருத்துக்களிலும் தெளிவான பார்வை கொண்ட...தேனம்மை லெக்ஷ்மணன் .. தன்னுள் பரவியிருக்கும் கருத்துக்களை ஒரு மகிழ்ச்சியின் செய்தியாய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்...! எல்லோரையும் குறைவில்லாமால் நேசிக்கும் தேனம்மையின் கவிதைகள் எல்லாம் எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பவை. புதியாய் வந்து எழுதுபவர்கள் கண்டிப்பாய்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes