Tuesday, September 28, 2010

கொஞ்சம் புன்னகை செய்யுங்கள்......சந்தோசமான மனிதர்கள் எல்லாவற்றையும் சந்தோசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள், ஆமாம் தோழர்களே துக்கத்தை கூட அவர்கள் எதிர்க் கொள்ளும் விதம் மிக இயல்பானததாகத்தானிருக்கும். சிரிக்க தெரிந்த மனிதன் மகிழ்ச்சியானவன்... அந்த சிரிப்பு புரிதலிலும்...ஆழ் மனதிலும் இருந்து வரவேண்டும்...அல்லவா? கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே.


ஆனால்.. சிரிக்க தெரிந்த மனிதனுக்கு எல்லாமே. வசப்படும்... ! போகிற போக்கில் தம்பி ஜீவன் பென்னியிடம் இது பற்றி பேசிவிட்டு சென்றோம்...கண நேரத்தில் அவர் கட்டுரையாக்கி கொடுத்தார்...ஆமாம்.. சந்தோசமாக படியுங்கள்...சந்தோசம்.. உங்களின் உணர்வுகளை கூர்மையாக்கும்....

இது சுலபமானதா இல்லையா??
சுலபமானது என்றால் நான் ஏன் இதை எழுதவேண்டும்?
கடினமானது என்றால் அதையும் ஏன் எழுத வேண்டும்?
மழலையின் சிரிப்பில் கள்ளச்சிரிப்பென்று ஏதேனும் உண்டோ!!!
மழலைதானே வளர்ந்து மனிதனாகிறது.....
கள்ளச்சிரிப்பிலே மனிதன் மூன்றாம் திணைப்பொருளாகிறான்...

சிரிக்காமலேயே ஒருவனால் வாழத்தான் முடியுமா!!!!
இல்லை இல்லையில்லை நான் சிரித்ததே இல்லை என்று சொல்லத்தான் முடியுமா.... யாராகிலும் அவ்வாறு கூறும் பட்சத்தில
இந்த உலகமே அதனைப்பார்த்து கைகொட்டிச்சிரிக்கும்


எழுதலாம் என்று யோசிக்கும்போதே கொஞ்சம் புன்னனை செய்யுங்கள் என்ற வார்த்தை நினைத்த அடுத்த நொடியினில் தோன்றியது.
தோன்றியதன் காரணங்களை நான் ஆரயப்போவதில்லை.
எதையாவது எழுதிவிட்டு தலைப்பை தேடுவேன் இன்று தலைப்பே முதலில் வந்துவிட்டது


இரண்டுமே ஒன்றுதான் இது துணிக்கடையில் துணி எடுப்பது போன்றதுதானே. இதற்கோ அல்லது அதற்கோ மொத்தத்தில் இரண்டுக்கும் பொருந்தக்கூடிய அல்லது தொடர்பான ஒன்றினைத் தேர்வு செய்ய வேண்டும்.
புன்னகை செய்வது அது போன்றதாகவே எனக்குப்படுகிறது. அதையே இந்த மனித முகத்திற்கும் பொருத்திப்பார்க்கின்றேன். எது பொருத்தமாக இருக்கின்றது அல்லது அதிக பட்ச நிறைவை எது தருகின்றது


என் வீட்டில் என் தாயருடன் சண்டையிட்டுக்கொண்டு புகைப்படம் எடுக்கச்சென்று அங்கு சிரிக்கச் சொல்லச்சொல்ல நான் என் தாய் மீது இருந்தக் கோபத்தில் முகத்தை உர்ர்ர் என்று வைத்துக்கொண்டு உட்கார அவரும் அதை எடுத்து விட்டார். பள்ளிக்குச்செல்ல இலவச பேருந்து பயணச்சீட்டில் ஒட்டுவதற்காக எடுக்கப்பட்டது. இன்று வரையிலும் அந்தப்புகைப்படம்


எடுக்கப்பட்டச் சூழ்நிலை எனக்கு மறக்கவில்லை. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. அது ஒரு பசுமையான நினைவாகவே என்னுள் பதிந்திருக்கின்றது. அது அழகான ஒன்றாக தெரிவதற்கான காரணம் அதில் கள்ளமில்லை என்பதால்தான்


அந்தப் புகைப்படத்தினைப் பார்த்து என்னை கேள்விக் கேட்காதவர்களே இல்லை. எல்லோருக்கும் ஏதாவது ஒரு பதிலினைச் சொல்லிவைப்பேன் அப்போது. பேருந்தில் நடத்துனர் பார்க்கும் பார்வையில் கூட ஏன் என்ற கேள்வி ஒளிந்திருக்கும். அந்த சிறு வயதில் நான் செய்த ஒரு செயலால் என் இளம் வயது முகம் எத்தனை கோரமாக இருந்திருக்க வேண்டும். இன்றும் கூட எனக்குக்கோபம் வரும் சமயங்களில் அதே புகைப்படம் என் மனதில் தோன்றி மறையும். அடுத்த சில மணி நேரங்களில் என் கோபம் குறைந்து மனம் சாந்தமடையும் மனம் சாந்தமானால் முகமும் சாந்தமடையும் தானே.
இது எல்லா இடத்திலும் பொருந்திப்போகாது, கோபம் கொள்ளவேண்டிய இடத்தில் கோபம் கொள்ள வேண்டும், அது கள்ளமில்லாக் கோபமாக இருக்கும் பட்சத்தில் கன நேரத்தில் மறைந்துவிடும். அது வன்மமும் கொள்ளாது. வன்மத்தின் உச்சம் யாருக்கும் தெரியாது. உங்கள் கோபத்திலோ இல்லை புன்னகையிலோ வன்மம் கலக்காது பார்த்துக்கொள்ளுங்கள்.
கொஞ்சம் புன்னகை செய்யுங்கள், மனதிலிருந்து.....

கழுகிற்காக
ஜீவன்பென்னி

(கழுகு இன்னும ....உயர பறக்கும்)

13 comments:

அன்பரசன் said...

நல்லதொரு பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hahaa hi hee hu hoo he heey hai ho hO how

ஜெய்லானி said...

:-))

என்னது நானு யாரா? said...

சிரிப்பு ஒரு வரம்! அது கிடைக்கப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியவான்கள். என்ன ஒரு விசித்திரம்! சிரிக்கக் கூட சொல்லி தர வேண்டி உள்ளது. இது தான் கொடுமை!

மனம் விட்டு சிரியுங்கள்! மன இறுக்கத்தைக் குறையுங்கள். நல்ல பதிவு! நன்றி நண்பா!

எஸ்.கே said...

உண்மையாக சிரிப்பதும் மனதார சிரிப்பதும் இப்போது குறைந்து விட்டது. நம்மை வரவேற்பவரின் புன்னகையும் பொய்யோ என எண்ணத் தோன்றுகிறது.
எங்கும் பதற்றம் எதிலும் பதற்றம்!

மனதார சிரிக்காவிட்டால் இந்த வாழ்க்கையின் ஆயுள்நாள் குறைவுதான்!

அருண் பிரசாத் said...

உண்மை... சிரிக்க தெரிந்த ஒரே உயிரினம் மனிதன்தான், அதை மறந்தவனும் அவன் தான்

மங்குனி அமைசர் said...

சார் , நம்மளோட தாரக மந்திரமே சிரிக்கிறது தான் சார் , நல்ல பதிவு சார்

பஸ்ஹான் said...

#கோபம் என்பது பெரிய சிறப்பான குணம் அல்ல..அது ஒரு ஆயுதம் மட்டுமே.#

நான் ரசித்த வரி

இன்னும் சற்று சிறப்பாக சொல்லியிருக்கலாம் இருந்தும் நல்லதொரு பதிவு

பதிவுலகில் பாபு said...

Nice post..

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல பதிவு

ப.செல்வக்குமார் said...

//சிரிக்காமலேயே ஒருவனால் வாழத்தான் முடியுமா!!!!
இல்லை இல்லையில்லை நான் சிரித்ததே இல்லை என்று சொல்லத்தான் முடியுமா....//

வாய்ப்பே இல்லை .. சிரிக்காதவர் உலகில் இருக்கவே முடியாது ..

Ananthi said...

///கோபம் கொள்ளவேண்டிய இடத்தில் கோபம் கொள்ள வேண்டும்,அது கள்ளமில்லாக் கோபமாக இருக்கும் பட்சத்தில் கன நேரத்தில் மறைந்துவிடும். அது வன்மமும் கொள்ளாது. வன்மத்தின் உச்சம் யாருக்கும் தெரியாது. உங்கள் கோபத்திலோ இல்லை புன்னகையிலோ வன்மம் கலக்காது பார்த்துக்கொள்ளுங்கள். ///

ஹ்ம்ம்.. நல்லா இருக்குங்க..
சிரித்து வாழ வேண்டும்... என்பதை அழகா சொல்லிட்டீங்க.. :-)))

சே.குமார் said...

மனம் விட்டு சிரியுங்கள்! மன இறுக்கத்தைக் குறையுங்கள்.

நல்ல பதிவு நண்பா!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes