"எமக்கு தினவெடுத்த தோள்கள் இருக்கின்றன.....! எமது உச்சரிப்புகளின் தடிமன் மிகப் பெரியது.....எமக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வோம்....எம்மை கேட்பதற்கும் விமர்சிக்கவும் அல்லது மாற்றுக் கருத்துக்கள் கூறவும் மானுடர் வந்தால்....வசை பாட எம்மிடம் மொழியும் அதை எடுத்துக் கொடுக்க மூளைகளும் இருக்கின்றன.....!
எங்களின் அறிவுகள் வேறு விதம் அதாவது இனம் நிறம் பற்றிப் பேசிக்கொண்டே அப்படி எல்லாமொன்றும் இல்லை என்று கூறிக் கொண்டே......அறிவில் சிறந்தவர் நாங்கள் எமக்கு மட்டும் மூளைகளும் உமக்கு எல்லாம் களிமண்ணும் வைத்து படைத்திருக்கிறான் இறைவன் என்று எண்னக்கூடிய திண்ணமும் எதேச்சதிகாரமும்..... எமது கருத்துக்கள் உறுதியானவை எதிர்த்து பேசினால் மூன்றாம் தர வார்த்தைகள் வந்து விழும் ஜாக்கிரதை......என்று மறைமுகமாய் எச்சரிக்கும் சர்வாதிகாரமும் எம்மிடம் உண்டு.....!"
ம்ம்ம்ம்ம்ம்ம்......உடல் வலு, பொருள் வலு எல்லாம் சேர்ந்து மனிதர்களைப் பேச வைக்கிறது. ஆமாம் பழக்கத்தின் அடிப்படையில் ஓடி வரும் வார்த்தைகளையும் சுபாவங்களையும் மாற்றல் மிகக்கடினம் என்பதை அறியாத மூடரா யாம்...........!!
வலைப்பக்கங்கள் தனி மனிதருக்கு சொந்தமானது எனினும்....அதை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கவும்.... வாசிப்பாளனுக்கு உரிமை இருக்கிறது தானே....????? எப்போதும் கைதட்டி ஆர்ப்பரித்து அடிவருடும் கூட்டமல்லவே நாம்....!
எம்மில் முரண் பட்ட கருத்துக்களை சபையில் வைத்து... எமக்கு பிடிக்கவில்லையெனில் எதிர் ஓட்டுக்கள் இட்டு போவது எப்படி கோபங்களை சமைக்கிறது உங்களது மூளையில்...! மூன்றாம் தர வார்த்தை பிரயோகங்களும்... ஏதோ வீட்டை விட்டு வெளியே போவென்று துரத்துவது போல் வலைப்பூவினை விட்டு ஓடு ஓடு என்று துரத்துவதும்...தர்ம சாஸ்திரத்தின் எத்தனாம் பக்கத்தில் வருகிறது.......?
வலைப்பக்கங்களை திரட்டிகளில் இணைக்கும் பொழுதும் பொதுவான கருத்துக்களை விவாதிக்கும் பொழுதும் அது பொது வெளியன்றோ...! அதிகாரத்தால் உலகை மறைமுகமாக ஆளும் அமெரிக்க அதிபரும் கூட.... விமர்சனத்திற்கு உட்பட்டவர் என்பதை அந்தோ பரிதாபம் சக மானுடர் அறிந்திடவில்லையே...ஐயகோ.....!!!!!
எதிர் வாக்களிப்பவனிடம் ஏதோ ஒரு முரண்பாடு இருக்கிறது என்பதால்தானே எதிர் வாக்குகள் அளிக்கிறான்.... திரட்டிகள் அதற்காகத்தானே அந்த ஒரு உபயோகத்தினை வைத்திருக்கின்றன.....???? இது எல்லாம் தாண்டி எதிர் வாக்களித்தவன் எப்படி அறிவற்ற ஆட்டு மந்தைகளின் கூட்டத்தை சேர்ந்தவன் ஆவான். உமது கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால் சிங்கக் கூட்டம்தான் ஆட்டு மந்தைகள் ஆகிடுமோ....? எப்படி பயில மறந்தீர்கள் இந்த சூத்திரத்தை........அடடே...எமக்கும் நேரமில்லையே உமக்கு பயிற்றுவிக்க.....!!
அநாகரீக வார்த்தை பிரயோகம் செய்து மனிதர்களை, சக வாசிப்பாளர்களை வார்த்தைகளால் நிந்திக்கும் மனிதர்களுக்காக அதை நிறுத்தச் செய்ய ஏதேனும் சட்டம் இருக்குமா என்று தொடர்புகளை முடுக்கிவிட்டு ஆராயும் சூழ் நிலையும் ஏற்பட்டு போயிருக்கிறது.
எதிர்வரும் காலத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் அதற்கு எதிர் வாக்களித்தாலோ அல்லது...எதிர் பின்னூட்டமிட்டாலோ விளக்கங்கள் ஆரோக்கியமாக விவாதிக்கப் படாமல்....தலை முடிக்கு வேறு பெயரிட்டு... இன்னும் கொச்சையான வார்த்தைகள் சேர்த்து ஓடி விடுங்கள் என்று விரட்டும் மாண்பு தொடர்ந்து ஒரு கெட்ட முன்னுதாரணம் ஆகி விடாதா?
வரிக்கு வரி கிண்டலும் கேலியும், தானும் தன்னை ஆதரிக்கும் மனிதர்களும் தவிர மிச்சமிருப்பவர்கள் எல்லாம் எச்சம் என்று நினைக்கும் போக்கும்...அவர்களின் கல்வியும், அறிவும், தகுதியும் ஆராயப்படாமலேயே.... உபயோகம் கொள்ளும் வார்த்தைகளும் கண்டு வெறுமனே போய் விட்டால் சர்வ நிச்சயமாய் யாம் ஆட்டு மந்தைகள்தான்.....!!
விவாதம்...விவாதம்...என்றும்....இது ஆரோக்கியமான களம் என்றும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அறிவான நகர்வு என்றும்.....ஆதரவு தெரிவித்து பேசும் அறிஞர்கள் அனைவரும்....தடிமனான வார்த்தைகளும், கடுமையான விமர்சனங்களும் கொண்டு தாங்கள் ஆதரிக்கும் தரப்பு பேசுகிறது என்று அறிந்தும் அதைக் கண்டிக்க திரணியற்றுப் போயிருப்பது.....நாகரீகமா....???????
விவாதிக்க வேண்டிய கருத்துக்களே மறந்து போய்...மறைந்துபோய்....எனக்குள் இருக்கும் எல்லா வலிமையையும் உம்மை மடக்குவதற்கும் மண்டியிடச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்பது எப்படி அறிவு சார் நிகழ்வாகும்?
இந்தக் கட்டுரையில் தனி மனித தாக்குதல் எங்கும் இல்லை....ஆனால் கற்றறிந்த அறிஞரும்.....நேர் நோக்கு கொண்ட மானுடரும்...கொஞ்சம் சிந்திக்கவும்....இது போன்ற வன் போக்குகள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் விழிப்புணர்வு செய்யும் விதமாகவும் இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
கட்டுரையாளரின் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்கும் அதே நேரத்தில் எமது ஆதரவு அல்லது எதிர்ப்பினை காட்டியமைக்கு மனித உரிமை மீறலுக்கு சமமான வார்த்தை உபயோகம் நடந்தேறியுள்ளது என்பதை வலைப்பூ
வலைப்பூ சமூகத்திற்கும்....எதிர்வரும் காலங்களில் இப்படி மனிதன் சக மனிதனை எழுத்தின் மூலம்...வக்கிர தாக்குதல்கள் நடத்தா வண்ணம் சில கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் இந்தக் கட்டுரையின் நகல் மனித உரிமை ஆணையத்திற்கும்... செய்தி தொடர்புத்துறை அமைச்சகத்துக்கும் ஆதாரங்களுடன் அனுப்பப்படவுள்ளது
நன்றிகள்!(நிகழ்வு: சமீபத்தில் ஒரு வலைப்பூவில் கூறியிருந்த கருத்துக்களுக்கு எதிர் வாக்குகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டதற்கு.....அடர்த்தியான வார்த்தை பிரயோகம் தனிமனிதரை புண்படுத்தும் படி நிகழ்ந்தேறியுள்ளது.
கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு கழுகு கண்டனங்களைத் தெரிவிப்பதோடு........ எல்லா பொது வெளிக்கருத்துக்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டவையே... என்ற கருத்தினை ஆணித்தரமாகவும் வலுவாகவும் இந்த தருணத்தில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது. எந்த தனிமனித அனுசரணைக்காகவும் இந்தக் கட்டுரை வெளியிடப்படவில்லை.. மாறாக விவாதங்கள் கோபங்களாக மாற வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையும் கூடுதலாக வலியுறுத்திக் கொள்கிறது.)
(கழுகு இன்னும் உயர பறக்கும்....)
66 comments:
விவாதம் என்பது கருத்துக்களின் மோதலாக இருக்கவேண்டுமே தவிர கருத்து சொல்பவரை தாக்குவதாக இருக்க கூடாது. இந்த அடிப்படை கூட தெரியாமல் விவாதிப்பர்களிடம் நாம் பேசி பயனில்லை ..
பேசிய வார்த்தைகளை அள்ள முடியாது என்று சொல்பார்கள். அதே போன்றுதான் இது. ஒரு கணத்தில் நிதானம் இழந்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று பேசுபவர்களை என்ன செய்வது ??
அதை விட, தனி மனித தாக்குதல் வேண்டாம் என்று சொல்பவர்களை சண்டைக்கு தூண்டுபவர்கள் என்று சொல்கிறார்கள் . அவர்களது புரிதல் ?????
//தடிமனான வார்த்தைகளும், கடுமையான விமர்சனங்களும் கொண்டு தாங்கள் ஆதரிக்கும் தரப்பு பேசுகிறது என்று அறிந்தும் அதைக் கண்டிக்க திரணியற்றுப் போயிருப்பது.....நாகரீகமா....???????///
அவர்களுக்கு தெரிந்த நாகரீகம் அவ்வளவே....! நானும் அந்த தளம் சென்று பார்த்தேன்.......பின் ஏன் சென்றேன் என்று வருந்தும் அளவிற்கு மோசமான வார்த்தை பிரயோகங்கள்....
கழுகின் இந்த நாகரீகமான பதிவிற்கு என் நன்றிகள்.
அவர்களது நாகரீகத்தை இதன் வழியாக சரியாக உணர்த்திவிட்டார்கள்..அது நமக்கு தேவையா இல்லையா என்பதை நாம் முடிவெடுத்துகொண்டு..நாம் நமது வழியில் செல்வதே நலம்...
நல்ல விஷயம்..
நானும் அந்த பதிவை படித்தேன் எதிர் பதிவு அதே மாதிரி இன்னும் நாலாம் தர வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று தான் நினைத்தேன் .....ஆனால் எதோ கடித்தால் நாமமும் ஏன் அதை திருப்பி கடிக்க வேண்டும் ....என்று அப்பப்போ எனக்கு உணர்த்தியது கழுகு........அதனால் இந்த பதிவே அவர்களுக்கு போதும் என்று எண்ணுகிறேன்.....
ஒரு பதிவை முன்னுதாரனமாக வைத்துக் கொண்டு தன் தவறான புரிதலை வலைப்பூவில் வெளியிட்டும் அதற்கு சில அடிவருடிகளை சேர்த்துக் கொண்டும் போலி வேஷம் போடும் அவர்களுக்கு எதிர்த்து வாக்களிப்பதும், எதிர் கருத்து சொல்வதும் தவறு என்று சொல்ல எந்த ஒரு உரிமையும் இல்லை...
ஊருக்கு உபதேசம் செய்யும் பதர்கள்...
///வலைப்பக்கங்கள் தனி மனிதருக்கு சொந்தமானது எனினும்....அதை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கவும்.... வாசிப்பாளனுக்கு உரிமை இருக்கிறது தானே....????? ////
கண்டிப்பாக இருக்கிறது.. அதற்காகத் தானே.. திரட்டிகளில் சேர்ப்பதுவும்..!!
////சிந்திக்கும் திறனற்ற மனிதர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதாலும்.... பின்னூட்டங்களில் புகழ் பாடுவதாலும்....சிங்கக் கூட்டம் ஆகிவிட முடியுமா? இல்லை உமது கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால் சிங்கக் கூட்டம்தான் ஆட்டு மந்தைகள் ஆகிடுமோ....? ////
உங்களின் கருத்தை வலியுறுத்திய விதம்.... உண்மையில் உங்களின் மேலான பண்பைக் காட்டுகிறது.
கழுகிற்கு வாழ்த்துக்கள்...!
//ஆனால் எதோ கடித்தால் நாமமும் ஏன் அதை திருப்பி கடிக்க வேண்டும் ....என்று அப்பப்போ எனக்கு உணர்த்தியது கழுகு........அதனால் இந்த பதிவே அவர்களுக்கு போதும் என்று எண்ணுகிறேன்.....
/
தம்பி , நாம் எப்பொழுது கருத்தால் மட்டுமே எதிர்ப்போம், அவர்கள் போல் அல்ல . சில பதிவர்களின் இந்தப் போக்கை மாற்றுவோம். பதிவுலகை ஆரோக்கியமான சூழலுக்கு மாற்றுவோம்
அன்பு தேவா
/அநாகரீக வார்த்தை பிரயோகம் செய்து மனிதர்களை, சக வாசிப்பாளர்களை வார்த்தைகளால் நிந்திக்கும் மனிதர்களுக்காக அதை நிறுத்தச் செய்ய ஏதேனும் சட்டம் இருக்குமா என்று தொடர்புகளை முடுக்கிவிட்டு ஆராயும் சூழ் நிலையும் ஏற்பட்டு போயிருக்கிறது./
/இந்தக் கட்டுரையில் தனி மனித தாக்குதல் எங்கும் இல்லை....ஆனால் கற்றறிந்த அறிஞரும்.....நேர் நோக்கு கொண்ட மானுடரும்...கொஞ்சம் சிந்திக்கவும்..../
/வக்கிர தாக்குதல்கள் நடத்தா வண்ணம் சில கட்டுப்பாடுகள் வேண்டும் என்றும் இந்தக் கட்டுரையின் நகல் மனித உரிமை ஆணையத்திற்கும்... செய்தி தொடர்புத்துறை அமைச்சகத்துக்கும் ஆதாரங்களுடன் அனுப்பப்படவுள்ளது/
அருமை தேவா. நீங்கள் அங்கு பின்னூட்டமிட்டதைக் கண்டு சிலாகிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் பின்னூட்டம் நீக்கியது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. அதைவிட பெருத்த ஏமாற்றம் இங்கு நான் குறிப்பிட்ட முதல் பத்தி. கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிந்ததாகக் கருதுகிறேன்.
இந்தக் கட்டுரையில் தனிமனிதத் தாக்குதல் எங்கும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
சிந்திக்கும் திறனற்ற மனிதர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதாலும்....பின்னூட்டங்களில் புகழ் பாடுவதாலும்....சிங்கக் கூட்டம் ஆகிவிட முடியுமா? இது யாரைக் குறிக்கிறது தேவா. அவருடைய கருத்தை ஆதரித்து வந்திருக்கிறேன். அவருடைய எழுத்தைச் சிலாகித்திருக்கிறேன். நான் சிங்கம் ஆகவேண்டாம். மனிதனாய் இருந்துவிட்டுப் போகிறேனே. இந்த வார்த்தைகள் என்னைத் தாக்குவதாக கருதுகிறேன். இல்லை எனில் எப்படி என்று சொல்வீர்களா? அல்லது ஆம் என ஒப்புக் கொள்வீர்களா?
இது என்னைப் புண்படுத்துகிறது. என்னைக் குறிப்பிட்டு சிந்திக்கும் திறனற்றவன். நாங்கள் சிங்கக் கூட்டம். கலகலப்ரியாவை ஆதரிப்பவர்தாம் ஆட்டுமந்தை என்ற த்வனி தென்படுகிறதென்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
நீங்கள் சொன்ன மனித உரிமை ஆணையத்துக்கும், செய்தி தொடர்புத் துறை அமைச்சகத்துக்கும் ஆதாரங்களுடன் அனுப்பப்படும்போது இந்தக் கட்டுரையும், இந்த என் பின்னூட்டமும் அனுப்பப்படும் என நம்புகிறேன். I Still believe you you are fair and sincere.
சரி கருத்துக்கு வருவோமா தேவா? ஆபத்தான கலாச்சாரத்தில் இரண்டு அடிப்படையில் முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. ஒன்று சேர்ந்து வாழ்வது தவறு என உச்சநீதி மன்றத்தின் ஆணை இருக்கிறது என்பது. அடுத்தது அப்படி வாழ்பவர்களுக்கு சட்ட பூர்வமான எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்கே இந்தியன் என்பவர் குஷ்பூ வழக்கில் சேர்ந்து வாழ்தலை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பதை பின்னூட்டி இருந்தார். நான் கலகலப்ரியா இடுகையில் பெண்களுக்கான வன்முறைச் சட்டம் சார்ந்த சேர்ந்து வாழ்தலுக்கான உச்சநீதி மன்ற விளக்கத்தின் சுட்டியை குறிப்பிட்டிருந்தேன். உங்கள் கூற்றுப்படி நீங்கள் அந்த இடுகையில் இருக்கும் கருத்தை ஆதரிக்கிறீர்கள். உறுதியான கருத்துக் கொண்ட சிங்கக் கூட்டமாகவே இருந்துவிட்டுப் போங்கள். ஆட்டு மந்தைகளாய் உண்மைக்குப் புறம்பான தகவலை ஆதாரம் கொடுத்தும் மாற்றாமல் இருப்பது சரியா? இது குறித்து நீங்களோ, LKயோ அங்கு கருத்துத் தெரிவித்தீர்களா? அல்லது இப்போதாவது தெரிவிப்பீர்களா?
/வலைப்பக்கங்களை திரட்டிகளில் இணைக்கும் பொழுதும் பொதுவான கருத்துக்களை விவாதிக்கும் பொழுதும் அது பொது வெளியன்றோ...! அதிகாரத்தால் உலகை மறைமுகமாக ஆளும் அமெரிக்க அதிபரும் கூட.... விமர்சனத்திற்கு உட்பட்டவர் என்பதை அந்தோ பரிதாபம் சக மானுடர் அறிந்திடவில்லையே...ஐயகோ.....!!!!!//
வாஸ்தவம் தேவா. நூற்றுக்கு நூறு சரி. இதற்கென்ன சொல்கிறீர்கள்?
//இம்சைஅரசன் பாபு.. said...
கௌசலயா விடம் அனுமதி வாங்கி தான் நீங்கள் பதிவு எழுதினீர்களா(அதாவது சும்மா பேச்சுக்கு ஒரு வார்த்தை ..உங்கள் பதிவை பத்தி எழுத போறேன்னு)கேட்டீங்களா ...இந்த கலாச்சாரத்தை தான் நாங்கள் எதிர்பார்கிறோம் ....//
எது கலாச்சாரம்? என் சிற்றறிவுக்கு எட்டியவரை இடுகையில் தவறான கருத்தைச் சொல்கிறீர்கள். அதற்கு எதிரான நிஜம் இது, ஆதாரம் இது, அதன் அடிப்படையில் நான் இதற்கு மாறான கருத்தைச் சொல்லப் போகிறேன் என்று ஒரு இடுகை நான் எழுதினால் அது எதிர் இடுகை. அதைத் தீர்மானிக்க வேண்டியது நான். என் வாசகன் அப்படிச் சொன்னால் என் நோக்கம் திசைமாறாதா?
நியாயமான கோபம்.. இத்தகைய நபர்களுக்கு எந்த முக்கியத்துவமும் நாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.. அந்தப் பதிவை நான் படிக்கவில்லை.. அதனால் முழு விசயம் என்னவென்று எனக்குப் புரியவில்லை..
/தலை முடிக்கு வேறு பெயரிட்டு... இன்னும் கொச்சையான வார்த்தைகள் சேர்த்து ஓடி விடுங்கள் என்று விரட்டும் மாண்பு தொடர்ந்து ஒரு கெட்ட முன்னுதாரணம் ஆகி விடாதா?/
/அநாகரீக வார்த்தை பிரயோகம் செய்து மனிதர்களை, சக வாசிப்பாளர்களை வார்த்தைகளால் நிந்திக்கும் மனிதர்களுக்காக அதை நிறுத்தச் செய்ய ஏதேனும் சட்டம் இருக்குமா என்று தொடர்புகளை முடுக்கிவிட்டு ஆராயும் சூழ் நிலையும் ஏற்பட்டு போயிருக்கிறது./
கட்டுரைக்கு மட்டுமல்ல தேவா மட்டறுக்கப் பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னூட்டத்திற்கும் பதிவரே பொறுப்பு என்பது நீங்கள் அறியாததல்ல. அப்படியாயின்
//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
ஆனால் எதோ கடித்தால் நாமமும் ஏன் அதை திருப்பி கடிக்க வேண்டும் ....என்று அப்பப்போ எனக்கு உணர்த்தியது கழுகு....//
இதனை அனுமதித்ததன் காரணமென்ன.
அருண் பிரசாத் சொன்னது..
/தன் தவறான புரிதலை வலைப்பூவில் வெளியிட்டும் அதற்கு சில அடிவருடிகளை சேர்த்துக் கொண்டும் போலி வேஷம் போடும் அவர்களுக்கு எதிர்த்து வாக்களிப்பதும், எதிர் கருத்து சொல்வதும் தவறு என்று சொல்ல எந்த ஒரு உரிமையும் இல்லை...//
இந்த அடிவருடிக்கு விளக்குவீர்களா தேவா?
சிந்திக்கத் திறனற்ற சிங்கமென நினைத்திருக்கிற ஒரு சிறுபுழுவின் விண்ணப்பம். இந்த வலைப்பூவில் மட்டறுப்பு இருக்கிறது. விரும்பத்தகாத, வெளியிடத்தகாத முறையில் ஒரு பின்னூட்டம் வருகிறது. அதற்கு பதிலளிப்பதற்குக் கூட லாயக்கில்லாத வகையிலான பின்னூட்டம். வாளாவிருப்பின் மேன் மேலும் வருகிறது எனக் கொள்வோம். எச்சரிப்பதற்காக ஒரு பின்னூட்டம் இடுகிறீர்கள். அது மாற்றுக் கருத்து கொண்டவர்க்கெல்லாம் ஆனது என்பது சுயமாக முடிவெடுக்கப்படுவது சரியா? அல்லது இதை யாருக்காக எதற்காக வெளியிட்டீர்கள் என ஒரு பின்னூட்டமோ மின்னஞ்சலோ செய்து பதில் பெற்றோ பதில் வராத பட்சத்தில் இப்படிக் கேட்டும் பதில் இல்லை. எனவே இது எல்லோருக்குமானது என்பதைச் சுட்டி இடுகையிடுவது சரியா.
@பாலா சார்
இப்பொழுதும் சொல்கிறேன் அந்தப் பின்னூட்டத்தில் , எல்போர்ட் பீ சீரியசும், கலகலப்ரியாவும் சொன்னது தவறுதானே. எந்த வகையில் அவர்கள் கௌசல்யா அவர்களை குறிக்கும் வகையில் உவமைகளை உபயோகப் படுத்தினார்கள் ??
அதை சுட்டிக் காட்டிய என்னை சண்டை தொடங்கி வைப்பவனாக குறித்து பதிவு எழுதினார்கள் ???
தயவு செய்து மீண்டும் அது தனி மனிதத் தாக்குதல் இல்லை என்று சொல்லாதீர்கள் சார். நேரடியாக ஒருத்தரை பற்றி சொல்ல இயலாத பொழுதுதான் உவமை,புனைவு எல்லாம் உபயோகப் படுத்தப் படுகின்றன
வானம்பாடிகள் @ கருத்துக்களுக்கு பதில்கள் கொடுக்கும் முன்......எனது மாறாத அன்பினையும், நேசத்தினையும் உங்களைப் பற்றிய தெளிவான புரிதலையும் வணக்கங்களையும் சமர்ப்பிக்க்றேன் ஐயா......!
மேலும் தாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு உறுத்தும் வரியை உங்களின் பின்னூட்டம் கண்ட அந்த நொடியில் நீக்கிவிட்டேன் என்பதையும் பகிர விழைகிறென்......!
//LK கூறியது...
@பாலா சார்
இப்பொழுதும் சொல்கிறேன் அந்தப் பின்னூட்டத்தில் , எல்போர்ட் பீ சீரியசும், கலகலப்ரியாவும் சொன்னது தவறுதானே. எந்த வகையில் அவர்கள் கௌசல்யா அவர்களை குறிக்கும் வகையில் உவமைகளை உபயோகப் படுத்தினார்கள் ??
அதை சுட்டிக் காட்டிய என்னை சண்டை தொடங்கி வைப்பவனாக குறித்து பதிவு எழுதினார்கள் ???
தயவு செய்து மீண்டும் அது தனி மனிதத் தாக்குதல் இல்லை என்று சொல்லாதீர்கள் சார். நேரடியாக ஒருத்தரை பற்றி சொல்ல இயலாத பொழுதுதான் உவமை,புனைவு எல்லாம் உபயோகப் படுத்தப் படுகின்றன//
LK சகோதரி கவுசல்யாவின் பின்னூட்டமிது.
Kousalya said...
கலகலப்ரியா...
எனக்கு சரின்னு படுவதை நான் எழுதுகிறேன்...மற்றபடி நீங்க சொல்வதை போல் எனக்கும் உங்களுக்கு நடுவில் எந்த கொடுக்கல், வாங்கல் பிரச்சனையும் இல்லை. உண்மைதான்.
என் பதிவை படித்த பலருக்கும் சரி என்று படவே தான் ஆதரித்து பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்....ஒருத்தருக்கு பிடிக்கலை என்பதால் நான் எழுதியது தவறு ஆகிவிடாது.
மேலும் விதண்டாவாதம் செய்வது எனக்கு ஏற்புடையது அல்ல என்பதால் எனது கருத்தை - vote போட்டு சொல்லி இருக்கிறேன். அவ்வளவே.
எழுத்து சுதந்திரம் உள்ள என் நாட்டில் யாரும் எதையும் எழுதலாம் மற்றவர்களின் உணர்வை புண்படுத்தாமல்....!
சகோதரிக்கு என் வாழ்த்துகளும் , நன்றியும்....
அவர்களுக்குள் புரிதல் இருக்கையில் நீங்கள் ஏன் இல்லாததைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏன் இன்றைய உங்கள் பின்னூட்டம் கூட உங்களுக்கு மாறான கருத்துள்ளவர்களைத் தாழ்த்திச் சொல்வதாக இருப்பதாகக் கருதுகிறேன். இல்லை என மறுத்தாலும், அது உண்மையே ஆனாலும், நான் மறுத்துக் கொண்டே இருந்தால் சரியா.
ஏம்பா நாமெல்லாம் பிரபல பதிவர்கள். சண்டை போடலைன்னா எவனாவது மதிப்பானா? சும்மா சண்டை போடாதே, திட்டாதன்னு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும். சும்மா பதிவு போட்டா சூப்பர் நல்லா இருக்கு, மீ தி பர்ஸ்ட் இப்படியா கமென்ட் போடுறது. என்ன பதிவு போட்டாலும் திட்டுறோம். என்ன அவர் பதிவு போட்டா அந்த கருத்தை நாம ஒத்துகனுமோ. நல்ல கருத்தா இருந்தாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம். சண்டை போடுவோம். புனைவு எழுதுவோம். ஏன்னா நாங்கெல்லாம் பிரபல பதிவர்கள்.
டிஸ்கி: ஆனா கொஞ்சம் மரியாதையா சண்டை போட்டா நல்லா இருக்கும். ஹிஹி
@பாலா சார்
என் பதிவில் ஆகட்டும் இல்லை பின்னூட்டத்தில் ஆகட்டும், யாரையும் புண்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம் இருந்தது இல்லை இனியும் இருக்காது.
வார்த்தை பிரயோகம் தவறு என்று பின்னூட்டம் இட்டேன். அப்படி வேறு பின்னூட்டம் வராத காரணத்தால் அவர்கள் சொன்னது சரி என்று ஆகி விடாதே !!
//அவர்களுக்கு தெரிந்த நாகரீகம் அவ்வளவே....! நானும் அந்த தளம் சென்று பார்த்தேன்.......பின் ஏன் சென்றேன் என்று வருந்தும் அளவிற்கு மோசமான வார்த்தை பிரயோகங்கள்....///
இதற்கு என்ன பதில் ?? நான் மட்டுமே சொல்லவில்லையே ... மற்றவர்களும்தானே சொல்லுகிறார்கள்.
யாரோ எழுதிய கட்டுரைக்கு யாரோ பதில் சொன்னது தவறு என்று வலியுறுத்தும் விதமாக கழுகின் கட்டுரை வெளியிடப்படவில்லை என்பதை தெளிவு பட கூற விரும்பிறேன்.
அங்கே நடந்த பின்னூடங்களும் அதற்கான பின்னூட்டங்களும் அதில் இருக்கும் தவறுகளும் அல்லது சரிகளும் ஆராய கழுகு முனையவில்லை. கட்டுரையின் தவறான புரிதலோ சரியான புரிதலோ அது பற்றி விவாதிகக்வும் தெளிவு படுத்தவும்......கட்டுரை எழுதியவருக்கு முழு உரிமையும் சுதந்திரமும் இருப்பதாக கருதுகிறேன்.
அவர்களின் கட்டுரை பற்றி எந்க கருத்தும் சொல்வது கொஞ்சம் சிறு பிள்ளைத்தனம் ஏனென்றால் அது ஒரு தொடர்பதிவு.....அங்கே கட்டுரையின் இறுதி எட்டப்படவில்லை. முழுதாய் முடிந்த பின்....அதில் தெரிவு வேண்டுமெனில் எப்போதும் கட்டிக் கொண்டு சிரமம் கொடுக்கப்போவது இல்லை நமது குரல்வளைகள்....அது எப்போதும் தேவையென்றால்...தேவையான அளவுக்கு சப்தங்கள் ஏற்றி இறக்கி கருத்தினை பதியத்தான் போகிறது அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் கருத்துக்களை எல்லாம் தெரிவித்து விட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஒரு சந்தோசத்தில் கவனிப்பில் இருந்த என் கண்களுக்கு....சில வன் வார்த்தைகள் கண்ணிப் பட்டது..... மேலும் எதிர் ஓட்டு போட்டவர்கள் பெயர்களைப் போட்டு.....மந்தைக் கூட்டம் என்று ஒரு வர்ணணையோடு......எந்த மந்தை என்று விளங்க முடியாமலும் அங்கே ஒரு அசாதரண சூழ்நிலை நிலவுகிறது என்று என் உள்ளுணர்வு கூறியவுடன்.....அந்த இடத்தில் நாம் இருத்தலில் நலமில்லை என்று கருதி எனது எல்லா கருத்துக்களையும் நீக்கிவிட்டேன். இது எனக்குள் நான் என்னை சமப்படுத்த நிகழ்த்திய முயற்சி.....
சரி ஏன் இந்த கட்டுரை....அதில் பின்னூட்டமிட்டவர்களை ஆதரித்த.. இல்லை....அவர்களின் கருத்துக்கு எதிரானதா.. இல்லவே இல்லை.....அவருக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டவர்களுக்க......கிடையவே கிடையாது.....
ஆனால்.....
இன்னும் 40 பேரை கூட்டி வந்து எதிர் ஓட்டுப் போடுங்கள் மந்தைகளா..... என்ற அஃறிணை வார்த்தை படிமத்தை மனிதர்களைப் பார்த்து கூறியிருப்பதின் பின்ணனியில் என்ன கோபம் இருந்திருக்குமோ என்று தெரியவில்லை...ஆனா அதை பார்த்துக்கொண்டு வெறுமனே போய்விட்டால் .....' நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ' என்று வாசித்து தெரிந்ததும்......'அச்சம் தவிர்' என்று முண்டாசுக் கவிஞன் ஊட்டிச் சென்ற வீர வரிகளையும் வாசித்தது வீணாய்ப் போய் விடுமே.....மேலும் நாம் எந்த நிந்தனையும் செய்யாமல் நம்மை மந்தைக|ள் என்று வசை பாடிவிட்டனரே....
என்று எண்ணியதின் விளைவு மட்டுமில்லை......இனி வரும் காலங்களில் ஆட்களை குறிப்பிட்டு வன் சொற்கள் வரக்கூடாது.....என்ற வடிவமும் மனதில் விழுந்தது......!!!!!!
அதுதான் இந்தக் கட்டுரை.....! எந்த தனிமனிதரையும் காயப்படுத்தவில்லை என்பதை நாகரீகமாக கூறி உறுதி பூணுகிறோம்.....! அங்கே வந்த கருத்துக்களைப்பற்றி இங்கே பேச வேண்டாம் அது அங்கேயே மட்டறுக்கப் பட வேண்டியது அல்லது விளக்க வேண்டியது.....
பின்னூட்டத்தில் தோன்றிய வசவுகள் இனி எந்த தளத்திலும் வரக்கூடாது......
இப்போதைக்கு இதுதான் நாம் முதற்கண் பின்பற்ற வேண்டிய கலாச்சாரம்......
என்ன பண்றது சீரியஸா எழுதும் போதும் என்னோட ஸ்டைல் நான் ஃ பாலோ பண்ணித்தான் ஆக வேண்டும் தப்பா எடுத்துக்காதீங்க.....
அப்போ.......வர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!!!!!!!
வானம்பாடிகள்..@ நான் கலகல ப்ரியாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சொன்னது என் பண்பு....மேலும்.....எனது கட்டுரையை மேற்கோள் மட்டும் காட்டிவிட்டு தனது கருத்தினை மொத்தமாக சொல்லாமல்....வரி வரியாக விமர்சித்து.....இருப்பது என்னை இழிவும் புண்படுத்தவும் செய்யவில்லை என்று நீங்கள் எண்ணுவது தவறு.....
நான் மனம் புண்பட்டுதானிருக்கிறேன்....என்னவொன்று, எனக்கு சண்டையிடுவதிலும் மீண்டும் மீண்டும் அதையே பேசுவதிலும் உடன்பாடு இல்லை அவ்வளவே ....!
என் தளம் வந்து நாகரீகமாக சொன்னதிற்காக நானும் அதே நாகரீகமாக பதில் அளித்தேன்....மற்றபடி இதை இருவருக்கும் இடையிலான புரிதல் என்று புரிந்து கொண்ட அறியாமையை நான் என்னவென்று சொல்வது...?
மீண்டும் நன்றிகள்
ப்ரியா என் பதிவையும் எடுத்து வரிக்கு வரி தேவையில்லாமல் நியாண்டி , கேலி செய்தார்..
ஆனால் அவர் பற்றி அறிந்தமையால் நான் கண்டுகொள்ளவில்லை..
அவரின் வேலை அதுதான் என்பது எல்லாரும் அறிந்ததே...:)
/நான் மனம் புண்பட்டுதானிருக்கிறேன்....என்னவொன்று, எனக்கு சண்டையிடுவதிலும் மீண்டும் மீண்டும் அதையே பேசுவதிலும் உடன்பாடு இல்லை அவ்வளவே ....!
என் தளம் வந்து நாகரீகமாக சொன்னதிற்காக நானும் அதே நாகரீகமாக பதில் அளித்தேன்....மற்றபடி இதை இருவருக்கும் இடையிலான புரிதல் என்று புரிந்து கொண்ட அறியாமையை நான் என்னவென்று சொல்வது...?
மீண்டும் நன்றிகள்/
:)). அறியாமைக்கு மிக வருந்துகிறேன். என்ன செய்ய. சில நேரம் வார்த்தகளின் பின்னான உண்மைகள் புரியவில்லை. ஆனால் இந்த அறியாமை எனக்குப் பிடித்திருக்கிறது. இல்லாத புரிதலுடனான வலிகள் இல்லையல்லவா? புரியவத்தமைக்கு என் வந்தனங்கள் சகோதரி.
அநாகரீகமான வரும் கொச்சை வார்த்தைகளுடன் வரும்....பண்பாடற்ற எல்லா பின்னூட்டங்களும் யோசிக்காமல் மட்டறுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
||Kousalya சொன்னது…
வானம்பாடிகள்..@ நான் கலகல ப்ரியாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சொன்னது என் பண்பு....||
உங்கள் பண்புக்கு என்னோட தலைவணக்கம் சகோதரி. தவறான புரிதல் வரக் கூடாதென்றுதான் உங்கள் வலைத் தளத்தில் விளக்கம் கொடுத்தேன். அதை என்னுடைய மேலான பண்பென்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லைதான்.
||மேலும்.....எனது கட்டுரையை மேற்கோள் மட்டும் காட்டிவிட்டு தனது கருத்தினை மொத்தமாக சொல்லாமல்....வரி வரியாக விமர்சித்து.....இருப்பது என்னை இழிவும் புண்படுத்தவும் செய்யவில்லை என்று நீங்கள் எண்ணுவது தவறு.....||
படிக்கிறப்போ வரிக்கு வரி எனக்கு மாற்றுக் கருத்து தோன்றியது... அது உங்கள எப்டிங்க புண்படுத்தும்..?! கலாச்சாரம் பற்றிய பொதுவான கட்டுரை... மேலும்.. உங்களைப் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லைங்க.
:-) இதுக்கு மேல விளக்கம் சொல்ல என்னால முடியாது. ரொம்ப ட்ராமாட்டிக்கா போயிடுமோன்னு பயமா இருக்கு.
________________
மத்தபடி இந்தக் கட்டுரையின் மொழி நல்லா இருக்கு... வாழ்த்துகள்...!!!!!!
இணையதளம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நடக்கும் விஷயம் இல்லை .உலகம் முழுவதும் எல்லோர் பார்வையிலும் படக்கூடிய வலிமை மிகுந்த மீடியா. இதில் பதிவர்கள், வாசகர்கள் அவர்களின் கருத்துகளை மட்டுமே முன்னிலை படுத்தி பேசுங்கள்..அனைவரும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்க்காக பதிவுக்கு சிறிதும் சம்பந்த்தபடாத கருத்துக்களை பேசவேண்டாம் .அனைவரும் சிந்திக்க தெரிந்த மனிதர்கள் என்றே நினைக்கிறேன் கருத்துக்கள் இருந்தால் மட்டுமே பதிவர்களின் பதிவுகளில் விவாதிங்கள் ..ஆரோக்கியமான பதில்களால் தெளிவு பெறுங்கள் ..பதிவுகளை சம்பந்தம் இல்லாமல் குழப்பிவிடாதீர்கள் ......புரிதல்கள் இல்லாமல் ????.
@கலகலப்ரியா
//கலாச்சாரம் பற்றிய பொதுவான கட்டுரை... மேலும்.. உங்களைப் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லைங்க. //
கலாச்சாரம் பற்றி பொதுவா கட்டுரை போடர நீங்க அங்க வந்து கமெண்ட் போடறவங்களை கண்டபடி கலாய்ச்சது ஏங்க?? சும்ம டவுட்டு.. :))
||TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@கலகலப்ரியா
//கலாச்சாரம் பற்றிய பொதுவான கட்டுரை... மேலும்.. உங்களைப் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லைங்க. //
கலாச்சாரம் பற்றி பொதுவா கட்டுரை போடர நீங்க அங்க வந்து கமெண்ட் போடறவங்களை கண்டபடி கலாய்ச்சது ஏங்க?? சும்ம டவுட்டு.. :))||
இந்தப் பதிவு மட்டுமில்லீங்க... அநேகமா எல்லாப் பதிவிலும்.. (சில கனமான பதிவுகளைத் தவிர..) .. இப்டித்தாங்க கலாய்ச்சுக்கிட்டிருப்பேன்...
ஆனா... சிலது... ரொம்ப எரிச்சலூட்டக் கூடியது என்றால்.. மேலே பேசிக்கிட்டு இருக்கப் பிடிக்காதுங்க...
சாந்தி அக்கா சொன்ன மாதிரி... நான் அப்டித்தானுங்க.. :(
...........
சரி... இந்த டீசண்டான பதிவில என்னோட பின்னூட்டம் இனிமே வேணாம்னு பார்க்கறேன்...
வர்றேனுங்க...
@கலகலப்ரியா
//இந்தப் பதிவு மட்டுமில்லீங்க... அநேகமா எல்லாப் பதிவிலும்.. (சில கனமான பதிவுகளைத் தவிர..) .. இப்டித்தாங்க கலாய்ச்சுக்கிட்டிருப்பேன்... //
நான் கூட தப்பி தவறி யாராவது என் ப்ளாக் பக்கம் வந்த இப்படி தான் கலாய்ப்பேன்ங்க. ஆன உங்க கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு நெகட்டிவ் ஓட்டு போட்ட ஒரே பாவத்துக்கு எல்லாரையும் ஆட்டு மந்தை சொல்லிட்டிங்களே. கோவபடாதிங்க நானும் நெகடிவ் ஓட்டு போட்டேன். நீங்க மாற்று கருத்து சொல்லும்போது நாங்க ஒரு எதிர் ஓட்டு போட்டது தப்பா??
//சரி... இந்த டீசண்டான பதிவில என்னோட பின்னூட்டம் இனிமே வேணாம்னு பார்க்கறேன்...//
என்னாங்க ப்ரியா நிங்க இப்படி சொல்றிங்க. புதிய நாகரிகத்த பற்றி சொல்லி தர போற நிங்க. நாகரிகமா பேச மாட்டிங்களா என்ன?
(உண்னையில் நீங்க தொடர் ஆரம்பித்த அப்பொ எதோ புது விஷயம் சொல்ல வரிங்க நம்பி படிச்சேன். ஆன நீங்க போட்ட கமெண்ட்ஸ் தான் நெகடிவ் ஓட்டு போட வச்சிது. புனைவு அது இது சொல்லி ஒளிஞ்சிக்காம தைரியமா இந்த பதிவுக்கு மாற்று கருத்து சொல்லி போட்டிங்க. ஆன கமெண்ட்ல சருக்கிடிங்க.)
கழுகு மற்றும் அனைவருக்கும் முதலில் எனது வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கழுகில் நான் இப்படி ஒரு கட்டுரையை எதிர்ப்பார்க்கவில்லை.! முதலில் இங்கே நடந்து கொண்டிருக்கும் விவாத்தத்தின் மூல காரணமான கௌசல்யா அவர்களின் கட்டுரையை நான் மீண்டும் ஒரு முறை படித்தேன். அவர்களது கட்டுரையிலிருந்து நான் புரிந்து கொண்டது (மற்றவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்று எனக்குத் தெரியாது )" Living Together " என்கிற வாழ்க்கை முறை நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் , எதிர்கால சந்ததிகளை பாதிக்கும் என்றும் கூறியிருந்தார். ஆகவே அது போன்ற கலாச்சாரங்களால் பாதிப்புகள் அதுகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் , அதனை தவிர்ப்பது நல்லது என்றும் கூறியிருந்தார். அங்கே ஆரம்பித்தாக கலாச்சாரம், பண்பாடு என்றால் என்ன என்கின்ற கேள்விகளுக்குப் போய் அதிலே சண்டையிடும் அளவிற்கு வந்துள்ளது வருந்தத்தக்கதே.
கலகலப்பிரியா அவர்களின் பதிவில் கௌசல்யா அவர்களின் பதிவிலிருந்து சில வரிகள் எடுக்கப்பட்டு அதற்குப் பதில் சொல்லப்பட்டிருந்தது. அவர்களது வாதமும் சரியாகவே உள்ளது. ஏனெனில் கலாச்சாரமோ , பண்பாடோ மனித வாழ்க்கைக்கு பயன்பட வேண்டுமே ஒழிய , அவனது வாழ்க்கையை துன்புறுத்தக்கூடாது. எனவே அவர்களது வாதத்தின் படி " Livng Together " என்ற வாழ்க்கை முறை சிறந்தது என்றும் , ஒவ்வொருவருக்கும் தங்களது விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உரிமை உள்ளதென்றும் கூறியிருந்தார்கள். அதுவும் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இரண்டு கலாசார , பண்பாடு முறைகளிலுமே குறைகள் இருக்கிறதென்பதை இருவருமே அறிந்துகொள்ளாமல் , வாதங்கள் செய்ததுதான் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதை இருக்கிறது. இந்திய கலாச்சார முறைப்படி தாலி கட்டிக்கொண்டு திருமணம் என்னும் ஒரு உறவுகொண்டு வாழ்வதில் சில நன்மைகளும் தீமைகளும் உண்டு. தீமைகள் என்று பார்த்தால் திருமணம் ஆனா பின்னர் இரோவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பின் பின்னர் விவாகரத்து , இரண்டாவது திருமணம் போன்ற பிரச்சினைகளைக் கூறலாம். அதே போல " Living Together " என்ற முறையில் அந்த ஒரே ஒரு நன்மை இருப்பதாகவே கருதுகிறேன் .. பிடித்திருந்தால் ஒன்றாக வாழலாம் , இல்லையென்றால் தனியாகப் பிரிந்து விடலாம் .. ஆனால் அதிலும் எண்ணற்ற தீமைகள் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். திருமண முறையில் இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்ப்பட்டால் பெரியவர்களால் சமாதானப் படுத்தப்பட்டு பின்னர் இருவரும் புரிதலில் சாத்திதவர்கள் ஏராளம். அதே சமயம் living together முறையில் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவே .. ஏனெனில் மனிதன் நிச்சயம் தவறுகள் செய்பவனே. ஒரு முறை ஒரு விசயத்திற்காக பிடிக்கவில்லை என்ற உடனே பிரிந்துவிட்டால் அந்த வாழ்க்கையில் என்ன பயன் இருக்கிறது .. ஏதோ எனக்குப் பிடித்தபடி வாழ்கிறேன் என்று சொன்னாலும் அவர்கள் இழப்பது அதிகம் என்றே தோன்றுகிறது .. இது போன்ற கருத்துக்களை உள்நிருத்தியே கௌசல்யா அவர்கள் அந்தப் பதிவினை பதிவிட்டதாக எனக்குப் புரிந்தது . ( இந்தப் பதிவினைப் பற்றிய பின்னோட்டம் அடுத்ததாக )
||TERROR-PANDIYAN(VAS) சொன்னது…||
நாம நமக்குத் தேவையான மாதிரிதாங்க புரிஞ்சுப்போம்...
இதில நான் சொல்றதுக்கு எதுவுமில்லை.. சறுக்கலா..?! நாம சவக்குழில இருந்து எழுந்து வந்தவங்கங்க.... =))))
anyway... i shall continue... dun wry abt that.. :)..
take care..
இதோ ப்ரியாவின் கிண்டல் என் பதிவை பற்றி...
---------------------------
Priya Siva - Buzz - Public - Muted
எல்லாம் வல்ல பிதாவே... என்னை ரட்சித்து அருள்வாயாக
நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?<<
ஆமாம் எத்தனை நிஜம்...!!!! அதுவே இப்டி சொல்லிக்கிட்டே கெடும்..!!!
\\இது எவ்வளவு கேவலமான வார்த்தைகள். நான் புனைவில் அடைந்த மன கஷ்டத்தை விட இதில் தான் அதிகமாக உணர்ந்தேன். எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள். பெண்தானே என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற மனோபாவம். \\
கிழிஞ்சது போ... கேவலமான வார்த்தைகள்.. .கீழ்த்தரமான வார்த்தைகள் பத்திப் பேசற மூஞ்சு பாரு..
\\ஒரு கொலையை விட ஒரு கற்பழிப்பைவிட ஒரு குடும்பத்தையே , இனத்தையே, ஏன் சமூகத்தையே அழிக்க வல்லது இந்த ஆதாரமற்ற புரளிகள்.\\
இன்னாது... தோழர்வாள் வன்புணர்வு ஓக்கே... அவங்க பண்ற புரளிதான் கொடுமைன்னு சொல்லிப்ட்டாய்ங்களா....
\\ஈரம் படத்தில் புரளியால் ஒரு பெண் கொலைசெய்யப்படுவதையும் பின்னர் அப்பெண் பழிவாங்குவதையும் பார்க்கலாம்.\\
இதில செத்த பொண்ணு யாருங்கோ...
\\பொதுவெளியில் மிக துணிவாக ஆதாரமற்ற தகவலை போட்டு என்னை அசிங்கப்படுத்தியிருக்கும் இது ஒன்றே போதும் இவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க...இதை சட்டத்துறை வல்லுனர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..\\
SRI LANKAN WAR CRIME பார்த்துட்டிருந்த... BRUCE FEIN மாதிரி ஆளுங்களா...
\\ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பல இடங்களில் சொல்லி அதை உண்மையாக்கிடுவது..\\
ஆமா சொல்லுங்க சொல்லுங்க சொல்லிக்கிட்டே இருங்க...
\\வதந்திகள் எங்கே கொண்டு சேர்க்கும் ..\\
உங்கள பரலோகத்திலயும்..?! மத்தவங்கள பாத்ரூம்லயும் (வாந்தி எடுக்க) கொண்டு போய்ச் சேர்க்கலாம்..
----------------------------
பதிவுலகை பொருத்தவரையில் நான் கண்டது ,
யார் வேணா என்ன வேணா பேசலாம்..
சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தைரியம்.
ஆக இனி பதிலுக்கு பதில் இப்படி பேசினாத்தான் முடியும் என்ற நிலைமை..ஒரு சாபக்கேடுதான்..
சரியான சட்ட நடவடிக்கைகள் வரும் வரை.
>||பயணமும் எண்ணங்களும் சொன்னது…||
ஏனுங்க மேடம்.. அன்னிக்கு குழந்தைங்க ரெண்டு பேர கொன்னு போட்டுட்டாங்கன்னு சொல்லிட்டிருந்தா.. அங்க உங்க பஞ்சாயத்து... காப்பி பேஸ்ட்...
இதிலயும் ஆரம்பிச்சிட்டீங்களா...
பாவம் கழுகு... இனிமே உங்கள அந்தப் பரமபிதாவால கூடக் காப்பாத்த முடியாது...
சாந்தி மேடம்.. ப்ளீஸ் மேடம்... வேணாம் மேடம்... இந்த மெஸேஜ் இருக்கிற இடத்திலயே நீங்க பின்னூட்டினீங்கன்னா... நாம நம்ம ப்ரச்சனைய அங்க தீர்த்துக்கலாம்..
சரியா...
ப்ரியா உங்க கிட்ட மல்லுகட்ட போவதில்லை..
ஆனா இதே வேலையா நீங்க திரியிறத சொல்லணும்னு தோணிச்சு..
யு கண்டின்யூ மேம்..:)
இல்லன்னா என்ன பத்தி " அக்காவ நாய் கட்சுட்சு " னு ஒரு பதிவை போடுங்க மா.
எனக்கு வேற வேலை இருக்கு..
@கலகலப்ரியா
//இன்னும் நாப்பது பேரக் கூட்டி வந்து மைனஸ் போடலாமே... உங்க மந்தைல கூட்டம் எக்கச்சக்கமா இருக்குமே...
ஒன்னியும் பதறாதீங்க... நான் உசிர் போனா என்ன... ......ர் போனா என்ன எழுதிக்கிட்டுதான் இருப்பேன்..//
மேல இருக்க கமெண்ட் உங்க ப்ளாக்ல இருந்து எடுத்தது சகோ (சகோனு சொல்லலாமா?)
//நாம நமக்குத் தேவையான மாதிரிதாங்க புரிஞ்சுப்போம்... //
எனக்கு இருக்கு நான் நினைச்சிட்டு இருக்க (சிறு) அறிவுல மந்தை அப்படினு மனுஷங்கள சொல்லுவாங்களா தெரியல சகோ. கொஞ்சம் விளக்குங்க.. :))
//நாம சவக்குழில இருந்து எழுந்து வந்தவங்கங்க.... =))))//
உங்க அளவு இல்லாட்டியும் நாமளும் கொஞ்சம் அப்படிதங்க. அதனால நிங்க சொல்ல வர புது நாகரிகத்த புரிஞ்சிக்கிற பக்குவம் ஒரு அளவு இருக்கும் நானே சொந்தமா நம்பரேங்க... =)))) . இவ்வளோ அனுபவமும் விசால அறிவும், படைச்ச நீங்க ஒரு பொதுஜன எதிர்ப்பான கருத்த சொல்ற அப்பொ எப்படி உடனே ஆமாம் ஆமாம். நீங்க சொல்றது சரி சொல்லுவாங்க எதிர் பாக்கறிங்க....
//anyway... i shall continue... dun wry abt that.. :).. //
i also wishing for the same.
u too tak care.
@ கலகலப்ரியா :
கலாச்சாரம் கிடக்குது விடுங்க ., இப்ப என்ன பிரச்சினை அப்படின்னு பார்த்தா கௌசல்யா அக்கா அவுங்களோட கருத்துகள சொல்லிருக்காங்க ., அத நீங்க ஒவ்வொரு வரியையும் எடுத்து அதுக்கு பத்தி சொல்லுறேன் அப்படின்னு கிண்டல் பண்ணிருக்கீங்க. ஆனா நான் தனி மனித தாக்குதல் எல்லாம் பண்ணலை அப்படின்னு சொல்லுறீங்க . அத விடுங்க ., தனி மனித தாக்குதல் அப்படின்னா எனக்கு ஒரு அபிபிராயம் இருக்குதுங்க ., அதாவது ஒருத்தரோட பேர வச்சோ அல்லது அவுங்களோட எழுதுக்கள வச்சோ கேவலமா எழுதறது மட்டும் தனி மனித தாக்குதல் இல்லைங்க . இப்படி கிண்டல் பண்ணும் விதமாக எழுதுவதும் தனிமனித தாக்குதல் தான் அப்படின்னு நினைக்கிறேன் .. ஏன்னா ஒருத்தவங்க சொல்லுற கருத்து உங்களுக்கு பிடிக்கலை அப்படின்னு நினைக்கும் போது அங்கேயே உங்க எதிர்ப்பா காட்டுங்க .. அதைவிட்டு தனியா சொல்லுறது கொஞ்சம் நாகரீகமா படலைங்க .. அதோட உங்களுக்கு " Living Together " பிடிச்சிருக்கு அப்படின்னா " Living Together ன் நன்மைகள் " அப்படின்னு பதிவு எழுதனுமே ஒழிய living together தப்பு அப்படின்னு சொல்லுரவங்களா கிண்டல் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன் .. ஏன்னா அடுத்தவங்க மனச காயப்படுதிதான் நாகரீகம் வளர்க்கணும் அப்படிங்கறது எந்த கலாசாரம்னு தெரியல .. அதே மாதிரி உங்களுக்குத் தெரியாது , உங்களுக்குப் புரியாது , Living Together முறைய ஆதரிக்கரதுக்கு தெளிவு வேணும் , கலாச்சாரத்தைப் பத்தி சரியா தெரிஞ்சிக்கிட்டு எழுதலை அப்படிங்கறதும் எந்த நாகாரீகம் அப்படின்னு தெரியலைங்க ..
மொத்ததுல உங்களுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காது , எனக்குப் பிடிச்சது உங்களுக்குப் பிடிக்காது , அதுக்காக அவனுக்கு அது பிடிக்கலை அதனால
முட்டாள் அப்படின்னு சொல்லுறது எப்படிங்க நியாயம்..? அதே மாதிரி நாம படிச்சது எதுக்குங்க .., அவுங்க அப்படி எழுதிருக்காங்க , அது தப்பு நான் எழுதுறதுதான் சரி .. நான் எல்லோரையும் கிண்டல் பண்ணுவேன் , அவுங்க அப்படி எழுதினாங்க அதனால நான் இப்படி எழுதுறேன் ,, இது கூட அடுதுவங்களுக்காக வாழுறமாதிரி தெரியளைங்களா .? அடுத்தவங்கள கிண்டல் பண்ணுறது எந்த நாகரீகம்க.? உங்களுக்கு சில நம்பிக்கைகள் இல்லாம போகலாம் , அதுக்காக மத்தவங்க எல்லோரும் முட்டாள் அப்படின்னு சொல்லுறதா .? முட்டாள் அப்படின்னு சொல்லுங்க , எழுதுங்க . அது உங்க விருப்பம் .. உங்க விருப்பத்த நாங்க தடுக்க முடியாது ,, இதுக்குப் பேரும் தனி மனித சுதந்திரம்தான் ,,!! அதுக்காக உங்க பதிவுக்கு நானும் என் பதிவுக்கு நீங்களும் எதிர்ப்பதிவு போட்டுட்டே போனா எதிர்ப்பதிவுகள தவிர்த்து எதுவுமே இருக்காதுங்க .. மொத்ததுல உங்க கருத்துக்களை நீங்க நம்புங்க , அடுத்தவங்க மனச பாதிக்கற மாதிரி வேணாம்னு தான் சொல்ல விரும்புறேன் (அடுத்து Living Together கலாசாரத்தின் தீமைகள் (என்னோட கருத்து மட்டுமே ) தொடரும் )
//விவாதிக்க வேண்டிய கருத்துக்களே மறந்து போய்...மறைந்துபோய்....எனக்குள் இருக்கும் எல்லா வலிமையையும் உம்மை மடக்குவதற்கும் மண்டியிடச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்பது எப்படி அறிவு சார் நிகழ்வாகும்?//
மிகச்சரி
அவங்கதான் மசுரே போச்சுன்னுட்டாங்களே? அப்புறம் ஏன் மெனக்கெட்டு எழுதிகிட்டு????
வானம்பாடிகள் அய்யாவுக்கு.... ப்ரியா மைனஸ் ஓட்டு போடுறவங்களை மந்தைன்னு சொன்னப்போ ஏன் அது உங்களுக்கு தப்பா படலை? ஓ! நீங்களும் மைனஸ் ஓட்டு போடுறவங்க மந்தைதான்னு நெனச்சுட்டீங்களா?
/விந்தைமனிதன் கூறியது...
வானம்பாடிகள் அய்யாவுக்கு.... ப்ரியா மைனஸ் ஓட்டு போடுறவங்களை மந்தைன்னு சொன்னப்போ ஏன் அது உங்களுக்கு தப்பா படலை? ஓ! நீங்களும் மைனஸ் ஓட்டு போடுறவங்க மந்தைதான்னு நெனச்சுட்டீங்களா?/
சாமி. மைனஸ் ஓட்டுக்கு யாரும் அழமாட்டாங்க. அத பத்தி கவலைப் பட்டதும் இல்லை. நீங்க பதிவெழுத வருமுன்னாடில இருந்து நான், கதிர், கலகலப்ரியா எங்களுக்கெல்லாம் கும்பலா வந்து குத்திட்டு போவாங்க. எங்க பழைய இடுகை எல்லாம் பார்த்தா தெரியும். கும்பலா வந்து காரணமே இல்லாம மைனஸ் குத்தறதுக்கு பேரு என்னங்க? அதுக்கு இப்படித்தான் சொல்ல முடியும்னு தோணுது. சில நேரம் ஒன்னு ரெண்டு விழுந்ததுமே நான் பெயர் குறிப்பிட்டு இவங்கள்ளாம் இன்னும் வரலையேன்னு சொல்லுவேன். கேப் விட்டு விட்டு வந்து குத்திட்டு போவாங்க:)). கருத்துக்கு எதிரான மைனஸை ஏற்றுக் கொள்ளும் பக்குவமில்லாமலா இருக்கோம். சாரி!
@வானம்பாடிகள்
ஐயா வணக்கம்!! எனக்கு உங்களை முன்ன பின்ன தெரியாது. உங்களுக்கு என்னை சத்தியமா தெரிஞ்சி இருக்க வாய்ப்பே இல்லை (இப்படி எல்லாம் சொல்லனும் இல்லைனா உங்களுக்கும் எனக்கும் முன்பகை சொல்லிடுவாங்க).
//சாமி. மைனஸ் ஓட்டுக்கு யாரும் அழமாட்டாங்க. அத பத்தி கவலைப் பட்டதும் இல்லை. //
கவலைபடாதவங்க அதை பற்றி பேசாமலே இருந்து இருக்கலாம் சாமி. சும்மா யாரு போட்டு இருக்காங்க பாத்து நக்கல் அடிக்கலாம் பார்த்தோம் சொல்ல கூடாது. ஏன்ன நான் நீங்க மைனஸ் ஓட்டு போட்டவங்களை கடுப்புல திட்டினிங்க சொல்லவில்லை.
//நீங்க பதிவெழுத வருமுன்னாடில இருந்து நான், கதிர், கலகலப்ரியா எங்களுக்கெல்லாம் கும்பலா வந்து குத்திட்டு போவாங்க. //
பார்டா!!! அப்பொல இருந்தே சார் சனங்களுக்கு எதிராதான் எழுதராங்க போல... ச்சீ... ஐயா மன்னிக்கனும். ஜனங்களை திருத்த தான் எழுதராங்க போல.
// கும்பலா வந்து காரணமே இல்லாம மைனஸ் குத்தறதுக்கு பேரு என்னங்க? அதுக்கு இப்படித்தான் சொல்ல முடியும்னு தோணுது.//
இது தப்புங்க ஐயா.... காரணமே இல்லைனு நீங்க எப்படி கண்டு பிடிச்சிங்க?? ஓட்டு பட்டை வைக்கரது படிக்கிறவங்க விருப்பு வெறுப்ப காட்டதான? அப்பொ நீங்க சொல்ற விஷயம் பிடிக்கலனா மைனஸ் போடரதுல என்ன தப்பு?? ஒருத்தவங்களுக்கு பிடிச்ச விஷயம் மத்தவங்களுக்கு பிடிக்கலனா அவங்க மந்தையா? அப்பொ நீங்களும் தான் ஒரு குரூப்பா பல பேருக்கு பிடிக்காத கருத்தை சொல்றிங்க. உங்க நியாப்படி பார்த்தா உங்களை நாங்க மந்தைனு சொல்லளாமா? அய்யோ!! ரொம்ப பேசிட்டேன்... கோவபடாம விளக்கம் சொல்லுங்க ஐயா.... :))
@பால சார்
இந்தக் கருத்து உங்கள் மீதான மரியாதையை குறைக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ப்ரியா செய்வதே சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எந்த குழுவை சொல்லுகிறீர்கள் என்று ஓரளவு எனக்கு தெரிகிறது.
ப்ரியா சொன்ன கருத்து பிடிக்காமல் மைனஸ் போட்டு இருக்க வாய்ப்பு இருக்கே ??
ஏன் அப்படி நினைக்க மாட்டேங்கறீங்க ???
//கருத்துக்கு எதிரான மைனஸை ஏற்றுக் கொள்ளும் பக்குவமில்லாமலா இருக்கோம். சாரி! //
வானம்பாடிகள் அய்யா... கீழே உள்ளது ப்ரியா அவங்க பதிவுல சொன்னது...
//
இன்னும் நாப்பது பேரக் கூட்டி வந்து மைனஸ் போடலாமே... உங்க மந்தைல கூட்டம் எக்கச்சக்கமா இருக்குமே... //
இதுதான் உங்க புரிதல்ல மைனஸ்ஸ ஏற்றுக்கொள்ளும் பக்குவமா?!
வானம்பாடிகள் அய்யா, நான் பெரும்பாலும் பதிவுலக சண்டைகளில் நுழைவதில்லை. கலகலப்ரியாவின் லிவிங் டுகெதர் பற்றிய கருத்துக்களுக்கு நான் எதிரானவனும் இல்லை. எந்தக் கலாச்சாரமானாலும் அடிப்படை மானுட அறமான பரஸ்பர நம்பிக்கையைக் குலைக்காமலிருத்தல் என்பது மட்டும்தான் முக்கியம் என்று நினைப்பவன் நான். கலாச்சாரம் என்பதைவிட அறம் என்பதை மதிப்பவன் நான். எனவே ப்ரியாவின் பதிவு என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடியதே! ஆனால் எதிர்ப்பு ஓட்டுக்கள் போட்டவர்களைப்பற்றிய ப்ரியாவின் விமர்சனம்தான் ஜீரணிக்கப்பட முடியாததாக இருக்கின்றது.
@ கலகலப்பிரியா.,
உங்க பதிவுல நீங்க எழுதி இருக்கிறதை
பத்தி நான் ஒண்ணும் சொல்லலை..
அது உங்க கருத்து..
ஆனா சக மனிதனை வாய்க்கு வந்தபடி
திட்டுவது என்ன நாகரீகமோ..?!!
( எதிர் கருத்து சொல்லி இருந்தாலும் கூட )
இதுக்கு பேசாம ஆரபத்துலயே..
// சாந்தி அக்கா சொன்ன மாதிரி...
நான் அப்டித்தானுங்க.. :( //
இப்படி சொல்லி இருந்து இருக்கலாம்..
நான் இதுவரைக்கும் யாருக்கும் மைனஸ்
ஓட்டு போட்டதில்ல.. முதல் முறையா
உங்களுக்கு போட்டேன்..
உங்க Comment-க்காக..
@ வான்ம்பாடிகள்..,
// கும்பலா வந்து காரணமே இல்லாம மைனஸ்
குத்தறதுக்கு பேரு என்னங்க? அதுக்கு இப்படித்தான்
சொல்ல முடியும்னு தோணுது. //
நான் மைனஸ் ஓட்டு போட்டதுக்கு
காரணம் சொல்லிட்டேங்க..
அப்ப என்னை மனுஷன்னு
ஒத்துக்குவீங்கன்னு நம்பறேன்..
மைனஸ் ஓட்டு போறதுக்கு என்னங்க
காரணம் வேணும்..?
அப்ப பிளஸ் ஓட்டு போறதுக்கு என்ன
காரணம்..?
பிளஸ் ஓட்டு - எழுதியது பிடிச்சிருக்கு / உடன்படுகிறேன்
மைனஸ் ஓட்டு - எழுதியது பிடிக்கவில்லை / உடன்படவில்லை
ஆமா குமபலா வந்து பிளஸ் ஓட்டு
போடறவங்கள என்ன் சொல்லுவீங்க..?
சும்மா டவுட்டு..!!
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
கலைஞர் உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
//LK சொன்னது…
@பால சார்
இந்தக் கருத்து உங்கள் மீதான மரியாதையை குறைக்கிறது.//
மிக்க நன்றி. ஒரு கருத்தை, ஒரு மைனஸ் வாக்கை வைத்து மனிதனின் மரியாதை கூடவோ குறையவோ செய்யும் என்பதைக் கற்றுக் கொண்டேன். ஆனால் பாருங்கள் எனக்கு ஒரு கெட்ட குணம் உண்டு. என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னை எப்படி மதிக்கிறார்கள் என்று நான் கவலைப் படுவதில்லை. என்னை நான் எப்படி மதிக்கிறேன் என்பதுதான் முக்கியம் என்பதைக் கற்றுக் கொண்டவன் நான்.
//ஆரம்பத்தில் இருந்தே ப்ரியா செய்வதே சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். //
ஆமாங்க. ஆரம்பத்தில் இருந்தே சகோதரி கவுசல்யா சொல்லுவதே சரி என்று சொல்வதைப் போல என்று வைத்துக் கொள்ளலாமே.
//நீங்கள் எந்த குழுவை சொல்லுகிறீர்கள் என்று ஓரளவு எனக்கு தெரிகிறது.//
நிச்சயம் உங்களுக்குத் தெரியாது என்று சொல்லுவேன். நேரமிருந்தால், தெரிந்துக் கொள்ள நிஜமாகவே ஆர்வமிருந்தால், கதையோ, கவிதையோ ஏன் ஒரு வீடியோ இணைப்பொ (அது எந்த இசையாக இருந்தாலும் சரி) ஒரு கும்பல் வந்து மைனஸ் குத்தும். அதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
//ப்ரியா சொன்ன கருத்து பிடிக்காமல் மைனஸ் போட்டு இருக்க வாய்ப்பு இருக்கே ??//
ஓ. ஒருவர் ஒரு விஷயம் சொல்கிறார். இது மிக நல்லது என்று. அதனால்தனக்கு அல்லது தனக்குத் தெரிந்தவர்களுக்கு நேர்ந்த சங்கடம் (கவனிக்க: *நேர்ந்த*) குறித்த விளக்கம், அது கற்பனை இல்லை, கருத்து இல்லை , நிஜம் அது எனக்கு பிடிக்கவில்லை என்பதால் அது மாறிவிடாது. அதற்காக மைனஸ் குத்துவேன் என்றால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மற்றது மின்னஞ்சலில் விளக்கம் கொடுத்த பின்னும் தனிமனித தாக்குதல் என்று நான் கருதுகிறேன் என்றால் என்ன செய்ய முடியும்.
@பாலா சார்
மைனஸ் வாகை வைத்து உங்கள் மரியாதையை குறைக்கவில்லை. இன்னும் எதற்காக மைனஸ் வோட்டு போட்டார்கள் என்று புரிந்து கொள்ளவில்லை அல்லது புரியாதது போல் இருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் ஒரு சிலரை தவறாக பிரியா சொல்லியும், இன்னமும் அவர் சரியாகத்தான் சொல்லுகிறார் என்று நீங்கள் சொல்லுவது, இவைதான் அதற்க்குக் காரணம். இப்பொழுதும் தவறாகத்தான் ஔரிந்து கொண்டுள்ளீர்கள். இனி விவாதித்து பயனில்லை
//ஏன் அப்படி நினைக்க மாட்டேங்கறீங்க ???///
காரணம் 1: கலகலப்ரியாவின் இடுகையிலும் சரி, இந்த இடுகையிலும் சரி, அடிப்படையாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, பெண்ணுக்கெதிரான வன்முறை குறித்தான தீர்ப்பு சகோதரி கவுசல்யா சொன்னது இல்லை. அதற்கு நேர்மாறானது என்பதை இந்தியன் அவர்களும், நானும் சுட்டியுடன் சுட்டிக் காட்டியும் அது குறித்து நீங்களோ கருத்து பிடிக்காமல் மைனஸ் போட்டவர்களோ ஏன் கேட்கவில்லை என்பது.
காரணம் 2: தனிநபர் தாக்குதல் என்று ஆரம்பித்து வைத்துவிட்டு இங்கு என் மரியாதை குறைந்துவிட்டதாக நீங்கள் சொல்வதில் உள்ள முரண்பாடு
காரணம் 3: அங்கு மைனஸ் ஓட்டு போட்டவர்கள் நீங்கள் உட்பட சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னாலும் சரி, அதெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. சட்டம் அதற்கு எதிரானது என்றுதான் சொல்லுவோம். அதை குறித்து என்ன ஆதாரம் இருந்தாலும் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ளவோ, இடுகையில் அந்த தகவலை மாற்றவோ மாட்டோம் என்ற பிடிவாதம்.
நன்றி நண்பரே.
/LK கூறியது...
@பாலா சார்
மைனஸ் வாகை வைத்து உங்கள் மரியாதையை குறைக்கவில்லை. இன்னும் எதற்காக மைனஸ் வோட்டு போட்டார்கள் என்று புரிந்து கொள்ளவில்லை அல்லது புரியாதது போல் இருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் ஒரு சிலரை தவறாக பிரியா சொல்லியும், இன்னமும் அவர் சரியாகத்தான் சொல்லுகிறார் என்று நீங்கள் சொல்லுவது, இவைதான் அதற்க்குக் காரணம். இப்பொழுதும் தவறாகத்தான் ஔரிந்து கொண்டுள்ளீர்கள். இனி விவாதித்து பயனில்லை/
ஏன் இவ்வளவு அவசரம். மட்டறுத்து பதில் வரும் வரை காத்திருக்கக் கூடாத அவசரம். ஒளிய வேண்டிய அவசியமே இல்லை எல்.கே. இதிலிருந்து தெரிகிறதா. இது கருத்துக்கு எதிரான எதிர்ப்பில்லை என்று? மீண்டும் நன்றி.
காரணம் ௧ : ஏற்கனவே மைனஸ் எதற்கு என்று பலர் சொல்லிவிட்டார்கள். அதை மீண்டும் சொல்ல வேண்டியது இல்லை
காரணம் ௨ : இதற்கும் அதற்கும் என்ன முரண்பாடு உள்ளது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இதில் தாக்குதல் எதுவும் இல்லையே ?
காரணம் ௩ அப்படியானால் எதிர் கருத்து யாரு சொன்னாலும் அவர்கள் ஆட்டு மந்தைகள் தானா??
நான் ஒளிய வேண்டிய அவசியம் இல்லை அய்யா. ஒழியும் ஆளும் இல்லை நான். எதையும் நேராக நேர்மையாக சந்திப்பவன். நீங்கள் போட்ட அந்தப் பின்னூட்டதிற்கு உண்டான பதில்தான் அது. நீங்கள் எத்தனை பின்னூட்டம் இடுவீர்கள் என்று பார்ப்பது என் வேலை அல்ல
நன்றி
>>வானம்பாடிகள் சொன்னது… <<
பாலா சார்... ஏன்? ஏன் இவ்ளோ விவாதம்..?.. சில தேவையற்ற சுட்டல்கள்..? மத்தவங்க உங்களுக்கு மரியாத கொடுக்க அவசியம் இல்லதான்.. ஆனா அவங்க எங்க நின்னு பேசிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சும்... நீங்க பேசறதால என்ன ஆகப் போறது..?!
ம்ம்.. :).. என்னை மாதிரி இந்த இடுகை மொழிக்கு ஒரு ஓட்டுப் போட முடிஞ்சா போடுங்க.. மத்தபடி ஒன்னும் ப்ரயோசனம் இல்ல சார்..
டேக் கேர்..
/LK சொன்னது…
காரணம் ௧ : ஏற்கனவே மைனஸ் எதற்கு என்று பலர் சொல்லிவிட்டார்கள். அதை மீண்டும் சொல்ல வேண்டியது இல்லை/
எதற்கு? தனிமனித தாக்குதலுக்கு எதிரான பதிவென்பதாலா? அப்படியானால்
இந்த இடுகையில் இப்படி எழுதி
//LK சொன்னது…
விவாதம் என்பது கருத்துக்களின் மோதலாக இருக்கவேண்டுமே தவிர கருத்து சொல்பவரை தாக்குவதாக இருக்க கூடாது. இந்த அடிப்படை கூட தெரியாமல் விவாதிப்பர்களிடம் நாம் பேசி பயனில்லை ..
பேசிய வார்த்தைகளை அள்ள முடியாது என்று சொல்பார்கள். அதே போன்றுதான் இது. ஒரு கணத்தில் நிதானம் இழந்து தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று பேசுபவர்களை என்ன செய்வது ??
அதை விட, தனி மனித தாக்குதல் வேண்டாம் என்று சொல்பவர்களை சண்டைக்கு தூண்டுபவர்கள் என்று சொல்கிறார்கள் . அவர்களது புரிதல் ?????//
*இன்னொரு பதிவில்*
//இந்தியாவில் பிறந்த நான் இந்திய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்தை மதிக்கிறேன் அப்படி மதிக்காதவர்கள் பற்றி எனக்கொன்றும் கவலையில்லை அவர்கள் இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையில் பிறக்காதவர்களாய் இருக்க கூடும்....//
உங்கள் அகராதியில் இது என்ன? இதற்கும் மைனஸ்தான் போட்டீர்களா நீங்கள். தனிமனித தாக்குதலுக்கு எதிராக ஒன்னும் சொல்லவில்லையே.
LK said...
மாம்ஸ் காரம் தூக்கலா இருக்கு ,.,.. மழை நேரத்துக்கு நல்லா இருக்கு
நல்லா இருக்கு சார் .
காரணம் ௨ : இதற்கும் அதற்கும் என்ன முரண்பாடு உள்ளது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இதில் தாக்குதல் எதுவும் இல்லையே ?
சரி தெளிவாகவே சொல்கிறேன்
முரண்பாடு 1. ப்ரியாவின் பதிவில் தனிநபர் தாக்குதல் வேண்டாம் என்று பின்னூட்டமிட்டு அதற்கான விளக்கங்கள் கொடுத்த பிறகும் அதையே பிடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னை ஒளிந்து கொண்டிருப்பதாக சொல்வதும், இதே இடுகையில் மேலே சொன்னபடி நியாயமாக பேசிவிட்டு வசந்தின் இடுகையில் கண்டிக்காததும் உங்களுக்கு எப்படியோ. பார்க்கிற எவருக்கும் முரண்பாடு தெரியும்.
/காரணம் ௩ அப்படியானால் எதிர் கருத்து யாரு சொன்னாலும் அவர்கள் ஆட்டு மந்தைகள் தானா??/
எதிர் கருத்து யார் சொன்னீர்கள். சொல்லாமல் மைனஸ் போடுவது கூட எதிர்ப்புதான் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதே நபர்கள் இன்னோரு இடுகையில் உங்கள் கருத்துக்கு ஆதரவான இடுகையில் அவதூறான வார்த்தைகள் இருப்பினும் யாருமே கண்டிக்காமல் பிரமாதம், நெத்தியடி என்று சொல்லுவீர்கள். உங்கள் கருத்துக்கு எதிரான இடுகையில் இல்லாத தனிமனித தாக்குதலை ஆரம்பித்து வைப்பீர்கள். மைனஸ் மொத்தமாக வந்து பின்னூட்டமிடாமலும் போடலாம். இதற்கு ஒரு பெயர் நீங்களே சொல்லுங்கள்.
//நான் ஒளிய வேண்டிய அவசியம் இல்லை அய்யா. ஒழியும் ஆளும் இல்லை நான். எதையும் நேராக நேர்மையாக சந்திப்பவன்.//
ஒளியவேண்டிய அவசியம் இல்லை என்று முதல் பின்னூட்டத்தில் சொன்னது நீங்கள் எனக்கு சொன்னதற்கான விளக்கம். உங்களைச் சொன்னதல்ல.
//எதையும் நேராக நேர்மையாக சந்திப்பவன்.//
அப்படியானால் ஒரே ஒரு பின்னூட்டம் போடுங்கள் இங்கே. இந்த இடுகையில் குறிப்பிட்டபடி பொதுவாக தனிமனித தாக்குதலோ, ஆபாசச் சொற்களுக்கோ நான் எதிரானவன் இல்லை. நான் ஆதரிக்கும் கருத்துக்களுக்கு எதிர் கருத்து இருக்கும் இடுகைகளில் அப்படி இருக்குமானால் எதிர்ப்பேன். எனக்கு ஆதரவான இடுகையில் சம்பந்தமின்றி பொத்தாம் பொதுவாக இந்தக் கருத்துக்கு எதிரானவர்கள் தப்பாகப் பிறந்தவர்கள் என்று இருக்குமானால் அதை முழுமனதோடு ஆதரித்து ஓட்டும் போடுவேன் என்று. மறுக்க முடியாது. மேலே குறிப்பிட்டுள்ளேன். எங்கே போடுங்கள் பார்க்கலாம்.
தேவாவுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் குறிப்பிட்டபடி ப்ரியாவின் இடுகையை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பும்போது என் பெயரையும் ஆதரிப்பவனாக சேருங்கள் (அபெட்டிங் ஃபார் த க்ரைம்). அதே போல் வசந்தின் இடுகையையும் அதற்கு ஆதரித்தவர்களையும் குறிப்பிடவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அப்படிக் குறிப்பிடும்போது அந்த இடுகை சுப்ரீம் கோர்ட்டில் சேர்ந்து வாழ்வது சரி என்று தீர்ப்பு சொன்ன மூன்று நீதிபதிகளையும் சேர்த்து அவமத்துள்ளது. நீதி மன்ற அவமதிப்புக்கு உள்ளாகக் கூடியது என்பதையும் குறிப்பிடுவீர்கள் என நம்புகிறேன்.
//சுப்ரீம் கோர்ட்டில் சேர்ந்து வாழ்வது சரி என்று தீர்ப்பு சொன்ன மூன்று நீதிபதிகளையும்//
ஒரு சின்ன க்ளாரிஃபிகேஷன்.... அடிக்கடி வானம்பாடி அய்யா தீர்ப்பு தீர்ப்புன்னு சொல்றார். அது தீர்ப்பல்ல.... ஒரு வழக்கு தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து. அவ்வளவே! தீர்ப்புக்கும் கருத்துக்கும் உள்ள வேறுபாடு அய்யா அறியாததல்ல!
@வானம்பாடிகள் என்று வந்த இதர பின்னூட்டங்களுக்கு
இதற்கு மேலும் தெளிவு படுத்தவோ சொல்லவோ ஏதும் இல்லை.பாறையில் மோதிக்கொள்வது போல் இருக்கிறது. நீங்க நடத்துங்க. பண்புன்னா என்னன்னு தெரிஞ்சிடும். வந்தனம்.
//பண்புன்னா என்னன்னு தெரிஞ்சிடும். வந்தனம். //
அய்யா, மொதல்ல இத மைனஸ் ஓட்டு போடுற மந்தைன்னும், மசிருன்னும் சொல்றவங்களுக்கு கத்துக் கொடுத்தா நல்லாருக்கும்!
@விந்தை மனிதன்
அதை பற்றித்தான் இப்பொழுது கூகிள் ஆண்டவரிடம் கேட்டேன். அந்த வழக்கில் குறிப்பிட வாசகம் இதோ
" It was referring to a 2006 judgment in which the Supreme Court directed the administration and police across the country to protect runaway couples from harassment, and to initiate action against those resorting to violence."
அந்தத் தீர்ப்பும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்களை குறித்து அல்ல. அது வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் காதலர்களை குறித்தே.
இப்பொழுது வந்த தீர்ப்பிலும் அவர்கள் சொல்லி இருப்பது
"A Bench of Justice Markandey Katju and Justice T.S. Thakur pointed out that the Act had used the expression “relationship in the nature of marriage” and not “live-in relationship” for the grant of benefit to affected women. “In our opinion, not all live-in relationships will amount to a ‘relationship in the nature of marriage’ [for women] to get the benefit of the Act. A ‘relationship in the nature of marriage’ is akin to a common law marriage. "
திருமணம் செய்யாமல் வாழும் பெண்களுக்கு சட்டப் படி பொருளாதார இழப்பீடு பெற உரிமை இல்லை என்பதே சமீபத்திய தீர்ப்பின் சாரமும்.
இதில் சுப்ரீம் கோர்ட் எங்கு living together முறையை ஆதரிக்கிறது
கருத்துக்கள்......பற்றிய விவாதங்கள்.....அர்த்தம் நிறைந்தவை....! அங்கே மனிதனின் கோபம் கலந்து விடும்போது வார்த்தைகளில் ஏற்ற இறக்கங்களும்....வந்து விழும் வார்த்தைகளின் தடிமன்களும் மொத்த சூழ்நிலையை மாற்றிவிடுகிறது.......!!!!
ஒவ்வொரு மனிதரின் பார்வைக்கும் புரிதலுக்கும் ஏற்ப கருத்துக்கள் புரிந்து கொள்ளப்படும் என்ற பேருண்மை ஏன் யாருக்குமே பிடிபடவில்லை என்பதின் பின்னணியில் ஆன்ம விழிப்பு என்ற ஒன்று இருக்கிறது.
என் கருத்து ஒருவிதம்....அது எந்த தளத்தில் இருந்து சொல்லப்படுகிறது............. என்பது விளங்க அந்த தளம் பற்றிய அறிவும் அனுபவமும் வேண்டும் மனிதர்களுக்கு....
' எல்லாம் எல்லோருக்கும் விளங்க வேண்டும் ' என்று எதிர்பார்ப்பதும் தவறு....ஏன் அவர்களுக்கு விளங்கவில்லை என்று வாதம் செய்வதும் தவறு.....அது அப்படித்த்தான்...இது இப்படித்தான்......!!!
எல்லாம் தெரிந்த சரியான கருத்துக்களோடு....இருக்கும் தெளிவான மனிதரின் ஆட்சி தமிழ்நாட்டுக்கு வேண்டுமெனில் நான் திரு. ஜக்கி வாசு தேவ் அவர்களை ஆதரிப்பேன்....ஆனால் அவர் நல்லவர் இல்லை மேலும் மேல் நோக்கிய பார்வை கொண்டவர் அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அவர் தேர்தலில் நின்றால் படு தோல்வி அடைவார்...என்றுதான் சொல்ல முடியும்....
ஓப்பற்ற கருத்துக்களை போதித்த விவேகானந்தரை எத்தனை பேர்கள் பின்பற்றுகிறார்கள். அவ்வளவு ஏன்.... சமகாலத்தில் இருக்கும் திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள்....?
இங்கே மனிதர்களுக்கு கொடுக்கப்படும் விசயங்கள் சரி சமமாக கலந்து விநியோகிக்கப்பட வேண்டும்....!!!!!
கலிங்கத்துப் பரணியை எடுத்து நான் பாடினால்...எத்தனை பேருக்கு அது புரியும்....கம்ப இராமயணத்தின் சொல்லாடல் தமிழ் கற்றவர்களுக்கு புரியும்....ஊரில் இருக்கும் சுப்பன், குப்பன், மாரி முணியாண்டி, தீபா, மாலதிக்கு புரியுமா? புரியாது. அப்படி புரியவில்லை என்பதால் கம்பராமாயணத்தில் சொல் அழகு இல்லை என்று ஆகிவிடுமா?
....continue.....
...continue...from above.....
புரியாமல் இருக்கும் அது புரிய தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் அதுதான் வழி முறை..... அந்த சுவை உணர்த்தப்படவேண்டும்... எனக்கு தெரிந்து விட்டது என்று மமதையோ அவர்களுக்குத் தெரியவில்லை என்று....அவர்களிடம் சிறுமையோ இல்லை. அவர்களுக்கு கம்பனின் சொல்லாடல் வாழ்க்கை முழுதும் அவசியப்படாமலேயே போய் விடலாம்.
இங்கே நான் ஒன்று சொல்கிறேன்...அது சரி என்று நான் நினைக்கிறேன்....ஆனால் அவர்களுக்கு அது ஒத்துவருமா? இல்லை தேவையா என்றும் யோசிக்கிறேன்......
ஒரு வித கலாச்சார சூழலில் அமீரகத்தில் வாழும் நான்... என் புரிதலை... வேறு சூழலில் இருப்பவருக்கு சொல்வதற்கு முன்.....அது அங்கே சரிப்பட்டு வருமா என்றும் யோசிக்கிறேன்......!
எல்லாம் சுவையானது எல்லாம் அழகானது......! இந்த விவாதங்களும் புரிதல்களும், புரிதல் அற்ற கேள்விகளும் தெளிவற்ற பதில்களும், புரிதலான கேள்விகளும், தெளிந்த பதில்களும் என்று எல்லாமே அழகானது.......!
இப்போது கூட இதை எல்லாம் பார்த்து கோபம் கொள்ளத் தேவையில்லை . எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை.....அத்துமீறல், அடக்குமுறை, சந்தோசம், வேதனை, சண்டைகள், திருப்தி எல்லாம்.....இவை எல்லாம் இல்லாவிட்டால் அப்படி ஒரு வாழ்க்கை ரொம்பவே ஒரு சவப்பெட்டிக்குள் இருந்து வாழ்வது போல ஆகிவிடாது.....?
எல்லோருக்கும் தெரியும் வாழ்வில் மரணம் நிச்சயம் என்று.....இடையே இது போல வரும் பிணக்குகளும், விவாதங்களும், மனிதர்களிடயே ஏற்படும் உறவுகளும், சந்தோசங்களும்.... சுவாரஸ்யமானது.....!
என்னையும் வாழ்வின் சுவாரஸ்ய பக்கங்களுக்குள் பயணிக்க வைத்த அத்தனை உயிர்களையும் அன்போடு அரவணைத்து...என் நன்றிகளையும், பாசத்தையும் பகிர்கிறேன்......!
கலாச்சாரம் வேண்டும்.......ஏன் வேண்டும்? எங்கே வேண்டும்.....?
கலாச்சாரம் வேண்டாம்.........ஏன் வேண்டாம் எங்கே வேண்டாம்?
என் வலைப்பூ அனுபவத்தில் இது பற்றி எழுதப்போவது எனது பெரும் பேறாக கருதுகிறேன்.....மேற்சொன்ன இரு தளங்களிலும் எனது பார்வைகளை பதிகிறேன்......!
எல்லா பிரச்சினைக்கும் சரி அல்லது தவறு தாண்டி ஒரு மூன்றாவது கோணம் ஒன்று இருக்கிறது.
"நான் மூன்றாம் கோணத்தை கையிலெடுக்கிறேன்......என்னுடைய நகர்வு....யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல....ஆனால் சத்தியத்தின் மூலம் நோக்கிய நகர்வு.....!"
இந்த கட்டுரைக்கு ஆதரவு, மற்றும் மனதளவில் எதிர்ப்பு தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பான நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்.
"எல்லாவற்றையும் விவாதம் என்ற அளவில் நிறுத்திவிட்டு சந்தோசமாக வாழ்வின் எதார்த்தப் பக்கங்களில் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்க எனது ஆழ்ந்த தியானத்தையும், பிராத்தனைகளையும் காணிக்கையாக்குகிறேன்......!"
அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா
ப்ரியங்களுடன்
தேவா. S
பின்குறிப்பு: இது பற்றி இன்னமும் இங்கே விவாதம் தேவையில்லை என்பது எனது தாழ்மையன கருத்து.
உங்கள் கருத்து உண்மைதான்...
Post a Comment