Wednesday, May 18, 2011

திருமதி. ஃபாத்திமா பாபுவுடன் சந்திப்பு....!தேர்தல் முடிவுகள் அதன் தொடர்ச்சியான வழமையான எண்ணங்கள் என்று மக்களின் மனது சுழன்று கொண்டிருக்கும் ஒரு கால இடைவெளியில் கழுகு தன்னை உற்று நோக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த இடைவெளியை எடுத்துக் கொண்டது. நண்பர்களை போன்ற எதிர்களையும் எதிரிகளைப் போன்ற நண்பர்களையும் சற்றே தமது கழுத்தை சாய்த்து கடைக்கண்ணால் பார்த்து மனதில் உருவேற்றிக் கொண்டோம்.


கழுகின் எதிர் கால நடவடிக்கைகளுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று மேலும் தமது திட்டங்களை கூர்மையாக்கிக் கொண்ட போதே தனது சிறகடிப்புக்கு தனது இறகுகளின் வல்லமையே காரணம் என்ற எண்ணத்தையும் சீராக மனதில் பதித்துக் கொண்டது.


காலத்தின் சுழற்சியில், பதிவுலகம் என்ற இடத்தை விட்டு இன்னும் நகர்ந்து மேலேறி வந்து இந்தப் பரந்த உலகின் வெளியில் கால் பதிக்கும் முயற்சிகளை எதிர் வரும் காலத்தில் தீரமுடன் செயற்படுத்த முடிவெடுத்த அதே வேளையில் தடையென்று குறுக்கே வரும் ஜந்துக்களின் தலைகளை கொய்வதில் எந்த ஒரு தயவு தாட்சண்யமும் கொள்ளப் போவதில்ல என்பதும் திண்ணமானது.


தொடர்ச்சியான எமது பயணத்தில் பதிவர்களின் பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருந்த நாம் பதிவுலகம் விட்டு வெளியே கால் பதித்து பேட்டிக்காக நமது சிறகடிப்பினை ஜெயா டி.வி செய்தி வாசிப்பாளர், சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரம், பொதுநல வாதி திருமதி. ஃபாத்திமா பாபு அவர்களின் வீடு நோக்கி செலுத்தினோம்.


கடும் அலுவல்களும், குடும்பப் பொறுப்புகளும் கொண்ட திருமதி. ஃபாத்திமா பாபு நாம் கழுகு என்ற சமூக நல வளைத்தளத்திற்காக பேட்டி எடுக்க விரும்புகிறோம் என்று சொன்னதும், புன்முறுவலோடு ஓ... கொடுக்கலாமே என்று கூறிய படி கழுகிற்கான தனது பேட்டியை கொடுக்க உடனே தயார் ஆனார்.


பிரபலம் என்ற வார்த்தைகள் மிகையாக தவறாக கையாளப்படும் ஒரு உலகத்திலிருந்து ஒரு நிஜ பிரபலத்தின் எளிமையும் எம்மை எதிர் கொண்ட பண்பும் எமக்கு வாழ்க்கையின் மீதும் எமது திட்டங்களின் மீதும் இருந்த நம்பிக்கையை இன்னும் அதிகரித்தது என்பதை  இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.


எமது நன்றிகளை திருமதி. ஃபாத்திமா பாபுவிற்கு தெரிவித்துக் கொண்டு இந்த பேட்டியை உங்களுக்கு  சமர்ப்பிக்கிறோம்.வலைப்பூக்களைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?


மிக ஆர்வமாக எழுதுகிறார்கள்... ஆனால் all are not worth the time we take to read them...அப்போதுதான் பத்திரிகையில் ஒரு எடிட்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று தோன்றுகிறது...
தற்போதைய அரசியல் மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


மக்கள் மிகத் தெளிவாக தங்கள் தீர்ப்பை வழங்கி விட்டார்கள்.... பணத்தையும் வாங்கிக் கொண்டு ..... மனசாட்சி(!!)ப் படி வாக்களித்திருக்கிறார்கள்.... ஊழலை வெளிக்கொணருவதில் ஊடகங்களின் பங்கு தெள்ளத்தெளிவாகியிருக்கிறது....இலவசங்களுக்கு இனி விலை போக மாட்டார்கள் நம் மக்கள் என்பதை பளிச்சென்று புரியவைத்துவிட்டார்கள்
உங்களுக்கு அரசியலில் ஆர்வம் உண்டா? உங்களைக் கவர்ந்த அரசியல் தலைவர் யார்? ஏன்?


விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அரசியலோடு தான் ஒரு செய்தியாளரின் வாழ்க்கை... எப்போதும் உன்னிப்பாக கவனிப்பதுண்டு....ஜெயலலிதா,.... தன் அயராத போராட்டத்தாலும், ஒரு பெண்ணை சக்தியின் சொரூபமாக இந்த ஆணாதிக்க சமூகத்தை வணங்க வைத்ததாலும், ஒபாமா..... ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வீறு கொண்டெழுந்து இத்தனை இளம் வயதிலும் ஒரு வல்லரசின் தலைவனாக தன்னை அடையாளபபடுத்திக்கொண்ட காரணத்தாலும் என் மனம் கவர்ந்தவர்கள்
தேர்தலில் நிற்கும் ஆசை இருக்கிறதா....அந்த வாய்ப்பு வந்ததா..?

 தேர்தலில் நிற்கும் ஆசை அதிகமாகவே உண்டு....இது வரை வாய்ப்பு வரவில்லை ....இனிமேலும் வராது என்று சொல்வதிற்கில்லை 


முதன் முதலாக செய்தி வாசிக்கும் வாய்ப்பு எப்போது கிடைத்தது? அந்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்... 

1987 july was my first news in television. 1985 லேயே புதுவை வானொலியில் செய்தி வாசித்ததுண்டு...அவர்கள் போட்ட விதை தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்ற கனவு...
திருமதி.ஃபாத்திமா பாபுவுடன் சந்திப்பு....!

தொடரும் .......காத்திருங்கள்...
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தலான சந்திப்பு, வாழ்த்துகள் கழுகு இன்னும் உயரே பறப்பதற்கு...

MANO நாஞ்சில் மனோ said...

பதிவுலகை மதித்து பேட்டி அளித்த திருமதி பாத்திமா பாபு'வுக்கு "நாஞ்சில்மனோ" வலைத்தளம் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறது....

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

இத்துடன் நில்லாது இன்னும் பல உயர்ந்த இடத்தை எட்ட எனது வாழ்த்துக்கள்

விக்கி உலகம் said...

பேட்டி கொடுத்தவங்களுக்கும் எடுத்த நண்பர்களுக்கும் நன்றி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல தொடக்கம்.. கழுகிற்கு வாழ்த்துக்கள்..!!!

Chitra said...

வலைப்பூக்களைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?

மிக ஆர்வமாக எழுதுகிறார்கள்... ஆனால் all are not worth the time we take to read them...அப்போதுதான் பத்திரிகையில் ஒரு எடிட்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று தோன்றுகிறது...


....... பதிவர்கள் மட்டுமே பதிவுகளை வாசிப்பது இல்லை என்று தெரிகிறது. இன்னும் பொறுப்புடனும் கவனத்துடனும் பதிவுகள் எழுத உற்சாகப்படுத்துகிறது.

Chitra said...

கழுகு - மேலே மேலே பறக்க வாழ்த்துக்கள்!

மாணவன் said...

கழுகு இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் :)

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

Share

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

கயல் said...

மிகவும் அருமை!

வாழ்க மென்மேலும்!

Imayavaramban said...

கழுகு - மேலே மேலே பறக்க வாழ்த்துக்கள்! // - repeat

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes