தமிழ் வலைப்பதிவுகளைச் எல்லாம் சங்கமித்து ஒரு இடத்தில் திரட்டிக் கொடுக்கும் மையமாக தமிழ்த்திரட்டிகள் இருக்கின்றன. திரட்டிகள் தமிழ் வலைப்பதிவுகளைச் சேகரித்து உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்களின் விழிகளுக்கு நல்ல கருத்துக்களையும் கட்டுரைகளையும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதுவே திரட்டிகள் தொடங்கியதின் மையக்கருவாய் இருக்க வேண்டும் என்று நாங்கள் கணித்த போது திரட்டிகள் தங்களின் நிர்வாகச் செலவுகளை மீட்டெடுக்க கொஞ்சம் வியாபார யுத்தியோடு விளம்பரங்களையும் இன்ன பிற திட்டங்களையும் செயல்படுத்தினால் அவை எப்போதும் செழித்து நிற்கும் என்றும் எமக்குள் ஒரு எண்ணம் தோன்றிய காலங்களும் உண்டு.
தமிழின் முன்ணனி திரட்டிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்த் திரட்டிகள் இன்று எந்த நோக்கத்துக்காக தங்களின் செயலினைத் தொடங்கின என்பது திரட்டிகளை நடத்தும் முதலாளிகளுக்கே தெரியும்....ஆனால் அவை சர்வ நிச்சயமாய் சமீப காலங்களில் தமிழ்மணம் போன்ற முதன்மைத் திரட்டிகள் நல்ல எழுத்துக்களை மேலெடுத்து வந்து எம் சமூகத்துக்கு நல்ல வாசிப்பனுபவங்களை கொடுக்க கூடிய படைப்புக்களை தங்களின் முன்னணி வரிசையில் வைப்பதில்லை என்ற கடும் குற்றச்சாட்டை இந்தக் கட்டுரை வைக்கிறது.
நாங்கள் திரட்டிகள், எங்களால் இவ்வளவுதான் முடியும், எங்களுக்கு தணிக்கை செய்யவும், நல்ல கட்டுரைகளை மேலெடுத்துக் கொண்டு வந்து காட்டவும் நேரமும், பொருளும் இல்லை என்று வாதிட்டு எமது குற்றச்சாட்டை உடைத்தெறியவும் முயலாலாம். பயனில்லாத கூட்டு அரசியலை முன்னிலைப்படுத்திக் கொண்டு எப்போதும் காழ்புணர்ச்சி எழுத்துக்களை கரடு முரடாக எம் சமூகத்து பிள்ளைகளிடம் தங்களின் வலைப்பூக்களின் மூலமும், இணையத்தளங்கள் மூலமாகவும் எடுத்துச் செல்லும் பொறுப்பில்லாத மனிதர்களை கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் ஏன் இந்த திரட்டிகளால் இயலவில்லை? என்பதுதான் எமது கேள்வி!
உங்களின் வியாபார நோக்கில் எமக்கு எள் முனையளவும் உறுத்தல்கள் இல்லை... பொருளாதாய உலகில் பொருளின் தேவையும் அவசியமும் அதன் சீற்றமும் நாம் அறியாதது இல்லை. ஆனால் தவறான எழுத்துக்களை, மானுட சமூகத்தை உடைத்துப் போட்டு தமிழ் சமூகத்தின் எழுத்துக்களின் களம் இப்படித்தான் இருக்கும் என்று பொதுவாக உலகத்தீர் அடையாளம் சொல்லக் கூடிய கறுப்பு எழுத்துக்களை கூட்டு சேர்ந்து வாக்குகள் அளித்து முன்ணனி வரிசைக்கு கொண்டு வரும் போது...
நிர்பந்தப்படுத்தி வாசிப்பாளனின் விழிகளுக்குள் விசம் பரவி அது மூளையை சிதைக்கிறது என்ற மனோதத்துவ நிகழ்வை எப்படி மறந்தீர் எம் தமிழ்த் திரட்டிகளின் நிர்வாகிகளே...? உமக்கு வசதி இருந்தால் வந்து வாசித்து செல்லுங்கள்.... எமது திரட்டிகள் எமது கொள்கைகள் என்று நீங்கள் எம்மிடம் எதிர்வாதம் செய்வதை எந்தக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்க முடியாது.
பொதுவில் வந்த பிறகு சரியான விளைவுகளைக் கொடுக்காத எழுத்துக்களை கடைப்பரப்பி அதை முன்னணி, வைரம், மகுடம் என்று அடையாளம் கொடுத்து, சாதி, இன, மத அரசியல் பாகுபாடுகளும் காழ்ப்புணர்ச்சிகளும் கொண்ட கட்டுரைகளைத் தொடர் பரப்புரை செய்யும் குற்றத்திற்காக இணையத்தையே முடக்குமளவிற்கு நமது தேசத்தில் சட்டமும் நீதியும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
சமீபகாலத்தில் தமிழ் மணத்தின் மகுடத்தை எட்டிப்பிடிக்கும் கட்டுரைகளில் 99% தனிமனித தாக்குதல் நடத்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் சமூக விரோத கட்டுரைகளாக இருப்பதை எப்படி தமிழ் மணம் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது எமக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தமிழமணம் நல விரும்பிகளுக்கும் அது ஆச்சர்யமே...!
குறைந்த பட்சம் மகுடத்தில் ஏறும் கட்டுரைகளையவது தமிழ் மணம் நிர்வாகம் வாசித்து தணிக்கை செய்ய முடியாதா என்ன?
மனித உணர்வுகளைத் தூண்டும் படி ஒருவர் எழுதுகிறான், வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது போல இன்னொருவர் எழுதுகிறார், மத உணர்வுகளை புண்படுத்தும் படி ஒருவர் எழுதுகிறார், மனிதநேயத்தை வெட்டிச் சாய்க்கும் படி ஒருவர் எழுதுகிறார், எப்போதும் சக பதிவர்களை தனது தொழில்நுட்ப அறிவினை காட்டி மிரட்டி ஒருவர் பகிரங்கமாக எழுதுகிறார்....
இப்படி எழுதுபவர்கள் எல்லாம் ஒன்று கூடி நின்று திரட்டிகளில் வாக்களித்து தன்னை முன்னிலைப்படுத்தி மேலெழும்பி தமிழ்ச்சமூகத்தின் அடையாளக் கொம்புகள் என்று தங்களின் கோரப்பற்களைக் காட்டுவதால் நல்ல எழுத்துக்கள் மேலே எழும்பி வரமுடிவதில்லை என்பதை.வருத்தத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது
இது எமது சமூகத்து வளரும் பிள்ளைகளை சீரழித்து சரியில்லாத ஒரு பாதைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை எப்படி நாம் கண்டு கொண்டே மெளனித்து நடப்பது?
பூனைக்கு மணி கட்டுவது வேண்டுமானல் எலிகளுக்கு பிரச்சினையாய் இருக்கலாம்......ஏனெனில் எலிகளுக்கு பூனை என்றால் பயம், ஆனால் பூனைகளுக்கு மணி கட்டுவதில் புலிகளுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பதை பூனைகள் அறிந்து கொண்டால் சரிதான்.
எந்த ஒரு திரட்டிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது... ஏனெனில் திரட்டிகள் கொடுத்த உத்வேகத்திலும் உற்சாகத்திலும் அந்த ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்தி மேலெழும்பிப் பறப்பவர்கள்தான் நாமும்....அந்த நன்றியுணர்ச்சியும், அன்பும் எம்மிடம் எப்போதும் உண்டு என்றாலும்....
சமீபகாலங்களில் திரட்டிகளை ஆக்கிரமிக்கும் அத்துமீறல் அடாவடி அனாவசிய கும்பல்களை அடையாளம் கண்டு அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை திரட்டி நிர்வாகிகளிடம் இந்தக் கட்டுரை அன்போடு வைக்கிறது.
அதோடு மட்டுமில்லாமல் வேறு இணையப்பத்திரிக்கைகளில் வரும் நல்ல விசயங்களைச் செய்திகளை நகலெடுத்து தங்களின் வலைப்பூக்களில் பகிரும் தோழர்களை எல்லாம் தடுக்காமல், வாசிக்க வாய்ப்பில்லாதவர்கள் வாசிக்க வேண்டி பகிர்கிறார்கள் என்ற நல்நோக்கையும் நாம் உணரவேண்டும். அப்படி பிரதி நகல் எடுத்து வெளியிடும் தோழர்கள், கறுப்பு எழுத்துக்களை எழுதும் பூனைகளை விட எவ்வளவோ மேலானவர்கள் என்பதையும் அறிக;
இவையெல்லாம் கேட்க நீ யார்...? என்று கேட்கும் குரல்வளைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.......
நன்மையை யார் வேண்டுமானலும் சொல்லலாம்....நீதியைப்பற்றி யார் வேண்டுமானலும் பேசலாம்....!
பொதுவில் நடக்கும் சமூகதீங்குகளை உணர்தலும் அதன் கறைகளை களைதலும் விழிப்புணர்வு என்னும் உணர்ச்சியின் சீற்றம் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
செம்மையான சமுதாயத்தின் அங்கமாவோம்...! பொறுப்புள்ள தமிழ் குடிமக்களாவோம்....! செழுமையான சமுதாயத்தைப் படைப்போம்...!
கழுகு
பின் குறிப்பு: இந்த பதிவினை பகிரவிரும்பும் நண்பகள் தத்தம் வலைப்பதிவுகளில் இதை பகிர்ந்து நிறைய பேரிடம் இதை கொண்டு சேர்க்கவும். நமது வலுவான குரல் சரியான மாற்றத்தை விளைவிக்கும்.
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
56 comments:
ஐடியாவுடன் சேர்ந்த மணி வேணும் இவ்வுலகத்தில் வாழ ...:)))
இந்த கட்டுரைக்கு..பதில்...யார் சொல்லுவது???
என்னமோ போங்க சார்...நாட்டுல நல்லவங்க அதிகமா போயிட்டாங்க வேற என்னத்த சொல்ல!
நல்லது நடக்கும் என நம்புவோம்!
யாராவது வந்து...பதில் சொல்லுங்கப்பா...
ஆரோக்கியமான விவாதத்துக்கு..எங்கள்
குழுமம் தயார்...
திரட்டிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வெகுநாளாயிற்று. முன்னணி திரட்டி என்பதால் எல்லாவற்றையும் சகித்துப் போகும் நிலையில் தான் பெரும்பாலான பதிவர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி கேட்டால் உடனே நீக்குவதில் காட்டும் முனைப்பை, முன்னணி பதிவுகளை தணிக்கை செய்வதில் காட்டலாம்.
//// NAAI-NAKKS கூறியது...
ஆரோக்கியமான விவாதத்துக்கு..எங்கள்
குழுமம் தயார்...////
என்னது ஆரோக்கியமான விவாதமா? நீங்க இன்னும் வளர வேண்டி இருக்குண்ணே....!
என்னாது குழுமமா....அய்யயோ நான் இல்லீங்க்!
திரட்டிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வெகுநாளாயிற்று. முன்னணி திரட்டி என்பதால் எல்லாவற்றையும் சகித்துப் போகும் நிலையில் தான் பெரும்பாலான பதிவர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி கேட்டால் உடனே நீக்குவதில் காட்டும் முனைப்பை, முன்னணி பதிவுகளை தணிக்கை செய்வதில் காட்டலாம்.//////
இது மட்டுமா...இன்னும் இருக்கு...
இதுல..ஏகப்பட்ட...அரசியல்...
இந்த அரசியலில் நீ இப்படி எழுதாதே..அப்படி எழுதாதே-னு
நம்மளை...கமென்ட் பண்ணுறது...
//// NAAI-NAKKS கூறியது...
ஆரோக்கியமான விவாதத்துக்கு..எங்கள்
குழுமம் தயார்...////
என்னது ஆரோக்கியமான விவாதமா? நீங்க இன்னும் வளர வேண்டி இருக்குண்ணே....!////
அப்படியாச்சும் வளருவோமே...
யாருமேதான் நம்மளை வளர்ப்பதிலையே....
indha pannikutti raamasaamikku lollu romba adhigamthaan. azifair-sirkali.blog
தீவிர தனிமனித தாக்குதல் மற்றும் மததுவேஷ பதிவுகளை அனுமதிக்க மாட்டோம் என்று சம்பீபத்தில் கூறிய திரட்டியின் சத்தியம் காற்றில் பறந்து விட்டது போலும். பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சபையில் வைப்பேன் என்று சொல்வதெல்லாம் கண்டனத்திற்கு உரியது.
தீவிர தனிமனித தாக்குதல் மற்றும் மததுவேஷ பதிவுகளை அனுமதிக்க மாட்டோம் என்று சமீபத்தில் கூறிய திரட்டியின் சத்தியம் காற்றில் பறந்து விட்டது போலும். பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சபையில் வைப்பேன் என்று சொல்வதெல்லாம் கண்டனத்திற்கு உரியது.
//அதோடு மட்டுமில்லாமல் வேறு இணையப்பத்திரிக்கைகளில் வரும் நல்ல விசயங்களைச் செய்திகளை நகலெடுத்து தங்களின் வலைப்பூக்களில் பகிரும் தோழர்களை எல்லாம் தடுக்காமல், வாசிக்க வாய்ப்பில்லாதவர்கள் வாசிக்க வேண்டி பகிர்கிறார்கள் என்ற நல்நோக்கையும் நாம் உணரவேண்டும். அப்படி பிரதி நகல் எடுத்து வெளியிடும் தோழர்கள், கறுப்பு எழுத்துக்களை எழுதும் பூனைகளை விட எவ்வளவோ மேலானவர்கள் என்பதையும் அறிக;
//
உண்மை .. உண்மை
நல்ல பதிவுக்கு அங்கே மரியாதையை இல்லை
அனைத்துமே சரியான கருத்துக்கள்....
பதிவுகளின் உள்ளர்த்தம் புரிந்து திரட்டிகள் செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம்....
தீவிர தனிமனித தாக்குதல் மற்றும் மததுவேஷ பதிவுகளை அனுமதிக்க மாட்டோம் என்று சமீபத்தில் கூறிய திரட்டியின் சத்தியம் காற்றில் பறந்து விட்டது போலும். பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சபையில் வைப்பேன் என்று சொல்வதெல்லாம் கண்டனத்திற்கு உரியது./////
ஆமா..இன்னிக்கு நான் என்ன சாப்பிட்டேன்...என்ன கலர்-ல உள்ளாடை போட்டிருக்கேன்...இதுஎல்லாம் ரோம்ப அவசியம் பாருங்க...
இந்த தகவல் தெரியலைனா..பதிவு உலகம்...அழிஞ்சிடும் பாருங்க...!!!
நண்பர் திரு வீடு சுரேஷ்-ன் கருத்துக்ளுக்கு இசைந்து...(மாய உலகம் --ராஜேஷ்-மரணம்--துக்கம்)
நாளை...செவ்வாய் கிழமை மட்டும் ..பதிவர்கள்
பதிவு போடுவதை..தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறோம்...
//மத உணர்வுகளைப் புண்படுத்தும் சமூக விரோத கட்டுரைகளாக இருப்பதை எப்படி தமிழ் மணம் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறது//
கடந்த இரு மாதத்தில் நிறைய பதிவுகளை இது போன்று காண முடிந்தது. இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டிய ஒன்று...
//எப்போதும் சக பதிவர்களை தனது தொழில்நுட்ப அறிவினை காட்டி மிரட்டி ஒருவர் பகிரங்கமாக எழுதுகிறார்....//
அட பாவமே!! இப்படி எல்லாம செய்யராங்க? டெக்னிக்கல் அறிவை வச்சி உதவி செய்வாங்க நினைச்சேன்... :(
பண்ணிகுட்டி ராமசாமி மன்னிக்கவும்....
பண்ணிக்குட்டி எல்லாம்..ஜாலி -யா
தெருவில் சுத்தும்...அதை யாரும் ஒன்னும் செய்ய மாட்டங்க...
ஆனா சிங்கத்தை கூண்டுல அடைசிடுவங்க...காட்டுல தான் மத்த
விலங்குகளோட இருக்கணும்...!!!!!
//ஆனால் அவை சர்வ நிச்சயமாய் சமீப காலங்களில் தமிழ்மணம் போன்ற முதன்மைத் திரட்டிகள் நல்ல எழுத்துக்களை மேலெடுத்து வந்து எம் சமூகத்துக்கு நல்ல வாசிப்பனுபவங்களை கொடுக்க கூடிய படைப்புக்களை தங்களின் முன்னணி வரிசையில் வைப்பதில்லை என்ற கடும் குற்றச்சாட்டை இந்தக் கட்டுரை வைக்கிறது./
சும்மா சுலபமா கட்டுரை எழுலாம். ஒரு திரட்டி நடத்தி பாருங்க அப்போ தெரியும் எவ்வளவு கஷ்டம்னு. வேணும்னா 2 மணி நேரத்தில் திரட்டி ஆரம்பிப்பது எப்படினு லிங்க தருகிறோம். நடத்த முடியுமா உங்களால்?? #நான் இல்லை நான் இல்லை.. யாரோ கேட்டாங்க
//ஆனால் அவை சர்வ நிச்சயமாய் சமீப காலங்களில் தமிழ்மணம் போன்ற முதன்மைத் திரட்டிகள் நல்ல எழுத்துக்களை மேலெடுத்து வந்து எம் சமூகத்துக்கு நல்ல வாசிப்பனுபவங்களை கொடுக்க கூடிய படைப்புக்களை தங்களின் முன்னணி வரிசையில் வைப்பதில்லை என்ற கடும் குற்றச்சாட்டை இந்தக் கட்டுரை வைக்கிறது./
சும்மா சுலபமா கட்டுரை எழுலாம். ஒரு திரட்டி நடத்தி பாருங்க அப்போ தெரியும் எவ்வளவு கஷ்டம்னு. வேணும்னா 2 மணி நேரத்தில் திரட்டி ஆரம்பிப்பது எப்படினு லிங்க தருகிறோம். நடத்த முடியுமா உங்களால்?? #நான் இல்லை நான் இல்லை.. யாரோ கேட்டாங்க/////
ஏன் பாஸ் எத்தனை திரட்டி வேணா வாங்க என்கிட்டே பணம் இருக்கு...தெரியும்-ல ...
திரட்டில பிரச்சினயா இல்ல திரட்டியே பிரச்சினயா!
விக்கியுலகம் கூறியது...
திரட்டில பிரச்சினயா இல்ல திரட்டியே பிரச்சினயா!...///////
அட அதைதானே...தலைல துக்கி வச்சி
ஆடுறாங்க...அட அது "புலிட்சர் விருதுப்பா"...
\\சமீபகாலத்தில் தமிழ் மணத்தின் மகுடத்தை எட்டிப்பிடிக்கும் கட்டுரைகளில் 99% தனிமனித தாக்குதல் நடத்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் சமூக விரோத கட்டுரைகளாக இருப்பதை \\
//குறைந்த பட்சம் மகுடத்தில் ஏறும் கட்டுரைகளையவது தமிழ் மணம் நிர்வாகம் வாசித்து தணிக்கை செய்ய முடியாதா என்ன?
மனித உணர்வுகளைத் தூண்டும் படி ஒருவர் எழுதுகிறான், வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது போல இன்னொருவர் எழுதுகிறார், மத உணர்வுகளை புண்படுத்தும் படி ஒருவர் எழுதுகிறார், மனிதநேயத்தை வெட்டிச் சாய்க்கும் படி ஒருவர் எழுதுகிறார், எப்போதும் சக பதிவர்களை தனது தொழில்நுட்ப அறிவினை காட்டி மிரட்டி ஒருவர் பகிரங்கமாக எழுதுகிறார்....
இப்படி எழுதுபவர்கள் எல்லாம் ஒன்று கூடி நின்று திரட்டிகளில் வாக்களித்து தன்னை முன்னிலைப்படுத்தி மேலெழும்பி //
இதை தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு., இந்த கழுகு கட்டுரையை குறிப்பிட்டு தகவல் கொடுத்திருக்கிறேன். இதை ஆக்கபூர்வமான ஆலோசனையாக தமிழ்மணம் எடுத்துக்கொள்ள வேண்டும். பதில் அளித்தால் தமிழ்மணத்தின் நிலையை நாம் தெளிவாக அறியலாம்.
//சும்மா சுலபமா கட்டுரை எழுலாம். ஒரு திரட்டி நடத்தி பாருங்க அப்போ தெரியும் எவ்வளவு கஷ்டம்னு. வேணும்னா 2 மணி நேரத்தில் திரட்டி ஆரம்பிப்பது எப்படினு லிங்க தருகிறோம். நடத்த முடியுமா உங்களால்?? #நான் இல்லை நான் இல்லை.. யாரோ கேட்டாங்க//
இருடி இப்ப வருவாங்க பாரு பல பெயரிலிகள் வந்து ..வந்து ... வந்து ..பிம்பிளிக்கி ..பிளாப்பி ன்னு பயமுறுத்துவாங்க ...அப்பா தான் உனக்கு பயமா வந்து ...நீ பதிவுலகை விட்டே ஓடி போக வைப்பாங்க (இல்லாட்டியும் எழுதி கிளிச்சிகிட்டு தான் இருக்க ..இப்ப மட்டும் என்ன வாழுதாம் )
”இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சும்மா சுலபமா கட்டுரை எழுலாம். ஒரு திரட்டி நடத்தி பாருங்க அப்போ தெரியும் எவ்வளவு கஷ்டம்னு. வேணும்னா 2 மணி நேரத்தில் திரட்டி ஆரம்பிப்பது எப்படினு லிங்க தருகிறோம். நடத்த முடியுமா உங்களால்?? #நான் இல்லை நான் இல்லை.. யாரோ கேட்டாங்க//
இருடி இப்ப வருவாங்க பாரு பல பெயரிலிகள் வந்து ..வந்து ... வந்து ..பிம்பிளிக்கி ..பிளாப்பி ன்னு பயமுறுத்துவாங்க ...அப்பா தான் உனக்கு பயமா வந்து ...நீ பதிவுலகை விட்டே ஓடி போக வைப்பாங்க (இல்லாட்டியும் எழுதி கிளிச்சிகிட்டு தான் இருக்க ..இப்ப மட்டும் என்ன வாழுதாம் )”
>>>>>>>>>>>>>>>>
”மாமா பிஸ்கோத்து!”
மாப்ள இத விட்டுட்டீங்களே..
\\சமீபகாலத்தில் தமிழ் மணத்தின் மகுடத்தை எட்டிப்பிடிக்கும் கட்டுரைகளில் 99% தனிமனித தாக்குதல் நடத்தும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் சமூக விரோத கட்டுரைகளாக இருப்பதை \\
//குறைந்த பட்சம் மகுடத்தில் ஏறும் கட்டுரைகளையவது தமிழ் மணம் நிர்வாகம் வாசித்து தணிக்கை செய்ய முடியாதா என்ன?
மனித உணர்வுகளைத் தூண்டும் படி ஒருவர் எழுதுகிறான், வக்கிர உணர்வுகளைத் தூண்டுவது போல இன்னொருவர் எழுதுகிறார், மத உணர்வுகளை புண்படுத்தும் படி ஒருவர் எழுதுகிறார், மனிதநேயத்தை வெட்டிச் சாய்க்கும் படி ஒருவர் எழுதுகிறார், எப்போதும் சக பதிவர்களை தனது தொழில்நுட்ப அறிவினை காட்டி மிரட்டி ஒருவர் பகிரங்கமாக எழுதுகிறார்....
இப்படி எழுதுபவர்கள் எல்லாம் ஒன்று கூடி நின்று திரட்டிகளில் வாக்களித்து தன்னை முன்னிலைப்படுத்தி மேலெழும்பி //
இதை தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு., இந்த கழுகு கட்டுரையை குறிப்பிட்டு தகவல் கொடுத்திருக்கிறேன். இதை ஆக்கபூர்வமான ஆலோசனையாக தமிழ்மணம் எடுத்துக்கொள்ள வேண்டும். பதில் அளித்தால் தமிழ்மணத்தின் நிலையை நாம் தெளிவாக அறியலாம்.//////
இதுல இரண்டு நிலைப்பாடு இருக்கு...
தமிழ்மணம் மற்றவர்களை..ஊறுகாயா
பயன் படுதுதா...இல்லை..மத்தவங்க..தமிழ்மணத்தை..ஊறுகாயா பயன் படுதுரான்களா ???
இது தான்..முக்கிய கேள்வி...
ஊறூக்கான்னா அதுல்ல
//இதுல இரண்டு நிலைப்பாடு இருக்கு...
தமிழ்மணம் மற்றவர்களை..ஊறுகாயா
பயன் படுதுதா...இல்லை..மத்தவங்க..தமிழ்மணத்தை..ஊறுகாயா பயன் படுதுரான்களா ???
//
ஆக பாட சரக்கு இல்லாம ...எழுதினா நல்லதுன்னு சொல்லுறீங்க
மத உணர்வுகளை / தனி நபர்களை /பாலியலை முன்னிறுத்தி எழுதும் எழுத்துக்கள்தான் மகுடங்களில் இடம் பெறுவதில் எனக்கு என்றுமே ஆச்சர்யம் இல்லை. நான் வாழும் இந்த இடத்தில் எனக்கு தெரிந்த அநேகம் பேர் அந்த மாதிரியான செய்திகளைத்தான் அதிகம் படிக்கிறார்கள், பகிருகிறார்கள். நானும்தான். - ஆனால் மற்றதை ( பாசிடிவ் ) மட்டும் பகிர்ந்துகொள்வேன், அதில் மட்டும்தான் வித்தியாசம்!
பதிவர் சுவன்ப்ப்ரியனின் இடுக்கை ஒன்றில் இட்ட பின்னூட்டம் இங்கேயும்-
நிகழ்ச்சி ஓன்று:
எனக்கு தெரிந்த இஸ்லாமிய ( அதாவது இஸ்லாமியத்தை மிக உறுதியாக பின்பற்ற முயற்சிப்பவர் ) நண்பர் கொச்சினில் பதினான்கு வயது பெண் ஒருவர் பல அதிகாரிகளால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை பற்றி பகிர்ந்துகொண்டார், இயல்பில் அவர் இஸ்லாமியம் சாராமல் பேச விரும்பாதவர்!)
நிகழ்ச்சி இரண்டு :
எனது தெருவில் ஒரு பெண்., 'முறை தவறியதை' குரூப்பாக நின்று கொண்டு அலசினார்கள்! அவர்களிடம் " இந்த வருடம் நமது தெருவில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தது யார் என்று கேட்டேன்" - அவர்கள் சொன்ன பதில் " இவன் பெரிய இவன் மாதிரிதாண்டா பேசுவான் "
வேறு வழியில்லை ...இதோ சில சுய சொரிதல்கள் :
கடந்த பத்துஆண்டுகளாக எந்த நண்பரிடமும், மனைவியிடமும் நெகடிவ் செய்திகளை பகிர்ந்ததில்லை, என்னை சுற்றி நடந்த எந்த சிறு விசயத்திலும் அழகோ, பாராட்டப்படும் விசயமோ தெரிந்தால் உடனே அதனை பலரிடம் பகிர்ந்ததுண்டு! ( சாட்சி -பதிவுலகில் மங்குனி அமைசர் என்பவர் எனது நெருங்கிய பதினைந்து ஆண்டுகால குடும்ப நண்பர்) அப்படி சொல்லப்படும் போது ரசித்ததும் இல்லை!அதனை ஊக்குவித்தும் இல்லை, அரக்கிளாசில் தண்ணீர் இருப்பதும் உண்மை, காலியாக இருப்பதும் உண்மை! அடியேன் இருக்கு என்று சொல்லும் கட்சி!
உங்களை சுற்றிலும் நடக்கும் விசயங்களில் இருக்கும் தேவை இல்லாத சமாச்சாரங்களில் உள்ள விஷயத்தை பரப்பாதீர்கள், பகிராதீர்கள், நமது பிள்ளையை பைக்கில் ஏற்றிக்கொண்டு போகும்போது சிக்னலில் ஒழுங்காக நிக்காத நாம் , வருங்காலங்களில் அந்த பிள்ளையை சிக்னல் குறித்து பேணி நடக்க அறிவுருத்தாதீர்கள், நமக்கு அந்த அருகதை இல்லை.
முடிவுரை :
உலகில் எல்லாமும்தான் இருக்கும், அதனை எப்படி கையாளுவது என்பது மட்டுமே நாம் யோசிக்க வேண்டிய விசயம்! ஏதொ எனது மனதளவில் என்னை சுற்றி நடக்கும் எல்லா விசயத்தையும் அலசி ஆராயும் புத்தியை நான் பெரமுயற்சிப்பதே சிறந்ததாகக் எனக்கு தெரிகிறது!
தவறான ஒரு கருத்தை சில இருபது முப்பது பேர் சேர்ந்து கொண்டு ஓட்டிட்டு முன்னால் கொண்டு வந்தாலும்...படித்து பார்த்தாலே புரிந்து விடும் இது நஞ்சு என்று...முதலில் இந்த மகுடத்தை நீக்க வேண்டும்...இல்லையென்றால் நல்ல பதிவர்கள் குழுவாக திரட்டியில் இருந்து விலகி நமக்குள் விவாதம்,விமர்சனம்,ஆலோசனை வழங்கி நம்மை மேம்படுத்தி கொள்ளவேண்டும்.
இது ஒரு முடிவிலா விவாதம்... திரட்டிகளை கேட்டால் பதிவர்கள் எழுதுவதைத்தான் நாங்கள் திரட்டி கொடுக்கிறோம் என்பார்கள்.. பதிவர்களை கேட்டாள் அவர்கள் முதல் பக்கத்திலும் மகுடதிலும் இதேபோல பதிவுகள் வருவதால்தான் நாங்கள் தொடர்ந்து இதுபோல எழுதுகிறோம் என்பார்கள்! இரண்டு பக்கமுமே குறைந்த பட்ச பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொண்டால் ஒழிய இதை தவிர்க்கமுடியாது என்பதே உண்மை. ஆனால் திரட்டிகளை வைத்து பதிவுகளை அடையாளம் கண்டு படிப்பவர்கள் நல்ல பதிவுகளை கடைசி வரை படிக்க முடியாத சூழ்நிலைதான் இப்போது நிலவுகிறது. இது புதிதாக பதிவுலகம் வருபவர்களுக்கு தவறான வழிகாட்டுதலையே கொடுக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் முடிவு என்று உண்டு. எப்போது என்பது மட்டும்தான் புதிர் :-))
நீங்கள் சொல்வதும் சரிதான் ஷர்புதீன்.. நல்ல செய்தியை கேட்பதை விட கெட்ட செய்தி கேட்பதில் தான் மக்களுக்கு ஆர்வம அதிகமாக இருக்கிறது...
முடிந்த வரை நாம் கெட்ட செய்தியை பற்றி பேசாமல் இருந்தாலே போதும்...
அப்படியே நாம் நல்ல விஷயங்களை பேசினாலும் வந்துட்டான் நல்லவன் என்பார்கள்.... இதுவே இப்போதைய உலகம்...
என்ன செய்வது கருத்துக்கள் திணிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது...
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
எமது குழுமத்திலிருந்து மீண்டும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு.
விழித்துக்கொள்ளுங்கள் திரட்டிகளே!
விழித்துக்கொள்ளுங்கள் பதிவர்களே!!
முட்டையிலிருந்து கழுகா
கழுகுவிலிருந்து முட்டையா என்ற கேள்வி போன்றுதான் திரட்டியா/பதிவரா? என்பதும்.
அவரவர் பொறுப்புணர்ந்து நடந்துக்கொண்டால் அனைவருக்கும் நன்மை/மகிழ்ச்சியே
என்னப்பா கழுகுக்கு மிரட்டல் மெயில் இன்னும் வந்துச்சா இல்லையா?
வந்திரும் வந்திரும், நம்ம பாசமிகு பெயரில்லாத அண்ணன் ”முக்கிய” வேலையா இருக்காரு போல, முடிஞ்ச உடனே எப்படியும் அனுப்பிடுவாரு....
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
வந்திரும் வந்திரும், நம்ம பாசமிகு பெயரில்லாத அண்ணன் ”முக்கிய” வேலையா இருக்காரு போல, முடிஞ்ச உடனே எப்படியும் அனுப்பிடுவாரு....//////
அவர் மட்டுமா..???
இன்னும் சில பேர் இருக்காங்க....
புறக்கணிப்பது என்பது தான் ஒருவனுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய தண்டனை. நாம் அது போன்ற புல்லுருவிகளை புறக்கணிப்பதன் மூலமே அவர்கள் செய்யும் தவறை அவர்களுக்கு உணர வைக்க முடியும். அது விடுத்து நாம் அவர்களுக்கு கண்டனங்கள் தெரிவிப்பதன் மூலம் மேலும் இது போன்ற பொறுக்கித்தனமான செயல்களுக்கு சப்போர்ட் செய்வதாகவே அமைகிறது. இது அந்த நபர்களுக்கு ஊக்கமாக அமைந்து மேலும் கழிசடை பதிவுகளை இன்னும் ஆர்வமாகவே இடுவார்கள். அவர்களை தட்டி வைப்பதை திரட்டிகள் செய்ய வேண்டும் என்று எண்ணாமல் புறக்கணிப்பதன் மூலம் முதல்படி நாம் தான் எடுத்து வைக்க வேண்டும். அதிலும் முதலாவதாக இனி இவர்கள் பதிவின் பக்கமே நான் போக மாட்டேன் என்று அறிவிக்கின்றேன்.
முடிந்தால் நீங்களும் அவர்களை புறக்கணிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள். மேலும் பல பதிவர்கள் இந்த பதிவுகளை புறக்கணிப்பதற்கு பக்கபலமாக அது அமையும்.
தரமில்லாத பதிவுகளை நான் புறக்கணிக்கிறேன்.
தரமில்லாத பதிவுகளை நானும் புறக்கணிக்கிறேன்.
தரமில்லாத பதிவுகளை நானும் புறக்கணிக்கிறேன்
தரமில்லாத பதிவுகளை நானும் புறக்கணிக்கிறேன்
//நம்ம பாசமிகு பெயரில்லாத அண்ணன் ”முக்கிய” வேலையா இருக்காரு போல//
யோவ் முக்குனாதானே போகும் .... முக்காம எப்படி போகும் ? ..
solid....
good article bro....
தானம் கொடுத்த மாட்டை பல்லு பிடிச்சு பாக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அந்த வகையில் திரட்டிகள் ஓரளவு சேவை மனப்பான்மையோடு செயல்படுகின்றன. எனவே அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை.
எந்த லாபமும் இல்லாமல் மனத்திருப்திக்காக பதிவு பதிவு எழுதும் நமக்கே சில சமயம் இது அயர்ச்சியாக இருக்கிறது. அப்படி என்றால் திரட்டி நடத்துபவர்களுக்கு இது எப்படி இருக்கும்? அதேசமயம் அவர்கள் என்ன செய்தாலும், அதற்கும் ஒரு வழி கண்டுபிடிப்பார்கள். எனவே இதில் சொல்வதற்கு எதுவுமில்லை.
இவர்களை குறை சொல்வதை விட என்ன செய்யலாம் என ஆலோசனை சொன்னால், அது அவர்களால் பரீசிலிக்கப்படலாம்.
ஏற்கனவே கூவிப் பார்த்தாச்சு, திருடர்களாகப் பார்த்து மனம் திருந்தினால் தான் உண்டு.
அருமையான பதிவு..
பொறுத்திருந்து பார்ப்போம்.!
ஆனா ஒருவேளை அந்த முன்னனி திரட்டி
உங்க வேண்டுகோளுக்கு செவி சாய்க்காவிட்டால்...
" கழுகு " அந்த திரட்டியை விட்டு வெளியே வருமா..?!
நண்பரே
தங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒரு பதிவர் என்ற முறையில் ஒவ்வொருவரும் தங்கள் பதிவை நிறையபேர் படிக்க வேண்டும் என்றும் முதலிடத்தில் வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அவ்வாறு வரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் தவறான பதிவுகள் முதலிடத்தில் இருக்கும் போது தான் ஆதங்கம் வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
திரட்டிகள் அனைத்தும் பயனாளர்கள் வாக்களித்த அடிப்படையிலேயே அவை முதல் இரண்டு எனறு வரிசை படுத்தப்படுகிறது. எனவே முதலிடத்தில் வரும் பதிவுகளில் நிர்வாகிகளின் தலையீடு இருக்குமா என்பது சந்தேகமே.
இருந்தாலும், தங்களின் இக்கோரிக்கையை "தமிழ் நண்பர்கள்" சார்பில் நாங்கள் ஏற்கிறோம். ஒரு வளர்ந்து வரும் சமூக பதிவுத்திரட்டி என்ற முறையில் முதன் சேவையாக பதிவுகளை திரட்டும் சேவையை மட்டும் தற்போது ஆரம்பித்திருந்தாலும் பின்வரும் நாட்களில் மற்ற திரட்டிகளைப்போல வாக்கு அளிக்கும் சேவையையும் தர உள்ளோம்.
பின்வரும் சேவைகளும் பதிவு திரட்டிகள் இருப்பின் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றோம்.
௧. தனிநபர் தாக்குதல்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எழுதப்படும் பதிவுகளை தகுதிநீக்கம் செய்தல்
௨. நண்பர்கள் வாக்கு மட்டுமல்லாது spam என்றால் அதையும் குறியிட வகை செய்வது.
இவ்வசதிகளை நாங்கள் கண்டிப்பாக உள்ளிணைக்க முனைகிறோம்.
மிக நன்றிகள்
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com/
Good Article...better to ignore those illiterate bloggers....
நல்ல கருத்து வரவேற்கிறேன்
Post a Comment