Monday, April 09, 2012

சேது சமுத்திரதிட்டமும் இரமேஸ்வரம் தீவு மக்களும்...! ஒரு அசத்தல் பார்வை....(புத்தக விமர்சனம்)




ஒரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?

1. ராமாயணத்தில் வரும் லங்காபுரி, இன்றைய மத்தியப்பிரதேசத்தின் 
தண்டகாரண்யப் பகுதியில் ஏரியொன்றினால் சூழப்பட்டுள்ள குன்றின் மீதமைந்த பரப்பாகும். அயோத்தி தொடங்கி இப்பகுதிவரையாக வாழ்ந்த மக்களிடையே வாய்மொழி மரபில் புழங்கிவந்த பழங்கதையொன்றை தன் மொழியையும் கற்பனையும் கலந்துகட்டி வால்மீகி ‘ராமாயணமாக’ உருவாக்கினார். இயற்கைப் பேரழிவுகள், போர், வணிகம் போன்ற காரணங்களை முன்னிட்டு விந்திய மலைகளைத் தாண்டி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்த மக்கள் கொண்டுவந்த கதைகளில் ஒன்றுதான் ராமாயணம். புலம்பெயர்ந்த மக்கள் அக்கதையை தங்களின் புதிய வாழிடம் சார்ந்ததாக மறுஉருவாக்கம் செய்துகொண்டார்கள்.

பிற்காலத்தில் அது இந்திய இதிகாசங்களில் ஒன்றாக கொண்டாடப்படுமென்றோ மதவாதத்தை விதைத்து இந்திய சமூகத்தை ரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புகிறவர்களின் கைப்பிள்ளையாக ராமன் மாற்றப்படுவான் என்றோ அப்போது வால்மீகி உட்பட யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா என்கிற கருத்தாக்கமே உருவாகியிருக்கவில்லை. பெரும் பிரளயம் உருவாகி உலகமே அழியும்போது ஒரு கப்பல் அல்லது தெப்பம் ஏறி தப்பிப்போகிற சிலரிடமிருந்து மீண்டும் உலகம் உருவானது என்பதான கதை உலகின் எல்லாக் கண்டங்களிலும்- எல்லா மொழியிலும்- எல்லா மதத்திலும் சொல்லப்படுவதைப் போல, இந்த ராமன் கதையும் வடக்கே மக்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

கங்கை கொண்டான், கடாரம் வென்றான், கம்மர்கட் தின்றான் என்று நம்மால் புளகாங்கிதத்தோடு குறிப்பிடப்படும் தமிழ்ப் பேரரசர்கள் தமிழ்நாட்டின் தென்முனையிலுள்ள இலங்கைத்தீவை அடிமைப்படுத்திய காலத்தில் அதை நியாயப்படுத்தியும், அதற்கொரு தெய்வாம்சத்தை நிறுவியும் வடக்கின் ராமாயணம் தெற்கின் கதையாக உல்டா செய்யப்பட்டது. கதைக்களம் லங்காபுரியிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்தது இவ்வாறுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்படியாயிருப்பினும், கவிச்சக்கரவர்த்திகளும் போர்ச் சக்கரவர்த்திகளும் எங்கோ கிடந்த சனியனை இழுத்துவந்து இங்கே விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

10 ஆயிரம் செய்யுள்களைக் கொண்ட வால்மீகியின் மூலப்பிரதியானது பார்ப்பனீய இடைச்செருகல்களால் பிற்காலத்தில் 24 ஆயிரம் வரிகளாக வீக்கம் கொண்டது. ராமனுக்கு ஆஃப் டிரவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் கேம்ப்பில் நிறுத்துமளவுக்கு அவன்மீது இந்துத்துவ சாயம் ஏற்றப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சில்லுண்டி வேலைகளையும் கழித்துப் பார்த்தால் கற்பனைத்திறம் வாய்ந்த ஒரு பழங்கதை நமக்கு கிடைக்கிறது. பாடல் அமைப்பு, மொழி அடிப்படையில் வால்மீகியின் மூலப்பிரதி பிரித்தெடுக்கப்பட்டு அதில் குறிப்பிடப்படும் ராமாயணக் கதைக்களத்திற்கும் இலங்கைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.

2. இலங்கைக்கு மிக அருகாகவும் இலங்கையுடன் நீர்வழித் தொடர்பு கொண்டதுமான ஒரு மீன்பிடித்தீவு ‘ராமேஸ்வர’மாக மாறிய பின்புலங்களை குமரன்தாஸின் இக்கட்டுரைகள் பேசவில்லை. ஆனால் ராமன் வந்து வழிபட்ட சிவஸ்தலம் என்கிற புராண நம்பிக்கையின் மீது அஸ்திவாரம் கொண்டு தீவின் நடுவே 15 ஏக்கர் விஸ்தீரணத்தில் பரவியுள்ள இராமநாதசாமி கோவில் சார்ந்து ஒரு ஊராக மாறிவிட்ட ராமேஸ்வரத்தைப் பற்றியனவாக விரிகின்றன. (இப்போதும் இதுபோல இன்னும் சில புராண, இதிகாச நகரங்களை உருவாக்கும் திட்டம் சங்கபரிவாரிடம் உண்டு. இன்றைய பரூக்காபாத்தில்தான் முன்பு பீஷ்மர் பிறந்தார் என்றும் ஆகவே அதை பீஷ்மநகர் என்று பெயர் மாற்றுவது, சரஸ்வதி நதியை செயற்கைக்கோள் வழியே கண்டறிந்து அதை மீண்டும் உருவாக்குவது என்று அதன் பட்டியல் மிக நீளமானது. இந்தியாவின் கணக்குத் தணிக்கை அதிகாரியாயிருந்து பின் பா.ஜ.க. எம்.பியான யாரோ ஒரு திரிவேதியோ சதுர்வேதியோ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இதுதான் திரௌபதி குளித்த குளம் என்று ஒரு மொட்டைக்குளத்தை புனருத்தாரணம் செய்த கதையை ‘ஆர்கனைசரில்’ படித்திருக்கிறேன். )

மக்களின் ஞாபகங்களிலிருந்தும் அவர்களது அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளுக்குள் பொதிந்திருக்கும் தரவுகளைக் கொண்டும் ஒரு ஊரின் வரலாறு எழுதப்படுமானால் அது எத்தகையதாய் இருக்கும் என்பதற்கான கைச்சான்றாக இருக்கிறது இந்நூல். தலபுராணங்கள் என்ற கட்டுக்கதைகளில் ராமேஸ்வரம் தீவின் மீது கவிந்திருக்கும் தெய்வாம்சங்களை விலக்கி அந்த மண்ணுக்கேயுரிய மீன்கவிச்சியை முதன்முதலாக நுகரவைத்திருக்கிறார் குமரன்தாஸ்.

ராமேஸ்வரம் தீவின் நிலவியல், அதன் மக்கள் யாவர், அவர்களது வாழ்முறை என்ன, பூர்வகுடிகளாகிய மீனவர்களின் இன்றைய இருப்பின் நிலை குறித்தெல்லாம் நுணுக்கமாக பேசும் கட்டுரைகள், இத்தீவு குறித்து எங்கும் விவாதிக்கப்படாத கருத்துகள் பலவற்றை முதன்முதலாக துணிந்து பேசுவதாயுமிருக்கின்றன. பூர்வகுடிகளாகிய மீனவர்கள் உழைப்பை நம்பி வாழ்கிறவர்களாகவும், அதேவேளையில் அம்மண்ணை ஆக்ரமித்த வெளியாட்கள் (சமவெளி மனிதர்கள்- கடல்புரம் சாராதவர்கள்) வெகுமக்களை ஏமாற்றுகிறவர்களாகவும், மூடநம்பிக்கைகளை தக்கவைப்பவர்களாகவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருக்கின்ற முரணை வாசிக்கும்போது ராமேஸ்வரம் தீவு ஒரு புதுவகை காலனீயத்தால் பங்கிடப்பட்டுவிட்டதைப் போலிருக்கிறது. இந்த தீவுக்கும் அது சார்ந்த மீன்பிடித் தொழிலுக்கும் யாதொரு தொடர்புமற்ற இந்த சமவெளி மனிதர்கள் தீவை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ள சூதினை விவரிக்கும்போது அதில் சாதியம் வகிக்கும் பங்கு நம்மை அச்சமடைய வைக்கிறது.

ஒரு கோவிலுக்குள் ஒரு சாதியின் இடமாக எது இருக்கிறதோ அதுவே ஊருக்குள் அச்சாதியின் இடத்தையும் அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. அவ்வடிப்படையிலேயே கோவிலைச் சுற்றிய முதல்வட்டத்தில் பார்ப்பனர் தொடங்கி அடுத்தடுத்த வட்டத்தில் பிற சாதியினர் வசிப்பது என்ற தமிழக/ இந்திய ஊர்களின் நியமத்திற்கு ராமேஸ்வரமும் விதிவிலக்கானதல்ல என்பதை நிறுவுகிறார். இங்குள்ள ராமநாதசாமி கோயிலை மையமிட்டு சமூக, பொருளாதார அதிகாரப் பகிர்வுகள் நடைபெற்றிருப்பதை வரலாற்றுப்பூர்வமாக விவரிக்கிறார் குமரன்தாஸ்.

பார்ப்பனர்களிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் கேரள நம்பூதிரிகளை இந்த ராமநாதசாமிக் கோயிலின் குருக்களாக நியமிப்பதற்காக, அதுவரை பூசாரிகளாயிருந்த பண்டார சன்னிதிகள் என்ற வீரசைவர்கள் கோவிலுக்குள்ளிருந்து பூக்கட்டும் தொழிலுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். சேதுபதி மன்னர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மராட்டிய பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டு நம்பூதிரிகள் கைவிடப்பட்டனர். கருவறைக்குள் நுழைய அதிகாரம் பெற்ற ஒரே சாதியினர் இந்த மராட்டிய பார்ப்பனர் மட்டுமே. இக்கோயிலைப் பொறுத்தவரை தமிழ்ப்பார்ப்பனர் தீண்டத்தகாதவர். எனவே அவர்கள் மராட்டியப் பார்ப்பனர்களின் அல்லக்கைகளாக இருந்து பூசைக்கும் திவசங்களுக்குமான எடுபிடி வேலைகளை செய்து வருகின்றனர்.

சமூகத்தை மாசுபடுத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கடலையும் மாசுபடுத்தி காசுபறிக்கும் உத்திகள் பலவற்றை உலவவிட்டுள்ள பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து பலபட்டறை இடைநிலைச்சாதிகளும் செயல்படும் களமே இத்தீவு என்பதற்கான ஆதாரங்கள் வரிக்குவரி கிடைக்கின்றன. வருமானத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்வதற்காக, கோவிலுடன் தொடர்புடைய குருக்கள், பாராக்காரர் போன்ற வேலைகளைப் பெற்றிட பெருந்தொகை கையூட்டாக செலவிடப்படும் செய்தியை வாசிக்கும்போது இங்கு இறைப்பணி என்று ஒரு வெங்காயமும் இல்லை என்பது புரிகிறது. கோவில் மற்றும் சுற்றுலா சார்ந்த யாத்திரைப் பணியாளர்களாக தலித்துகள் எவரும் அனுமதிக்கப்படாத தீண்டாமைக் கொடுமையையும் நூலாசிரியர் கவனப்படுத்தியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்து வாழலாம் என்கிற பசப்பான வார்த்தைகளின் போலித்தனம் மீண்டும் இங்கே அம்பலமாகிறது.

இத்தீவில் இருக்கும் பார்ப்பனர்கள் மற்றும் இடைநிலைச் சாதியினரின் வருமானமும் வாழ்வாதாரமும் கோவில் சார்ந்ததாகவே இருக்கும் நிலையில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதையை மீட்டுவரும் ராமனின் நடவடிக்கைகளோடு தொடர்புடைய ஏராளமான கட்டுக்கதைகள் மிகுந்த நம்பகத்தன்மை உள்ளதுபோல இங்கே புழக்கத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ராமனுடன் தொடர்புபடுத்தப்படுவதால் வடநாட்டிலிருந்து புனித யாத்திரை வரும் எளிய மக்கள் அப்பொருட்களை வெறும் பொருட்களாக மட்டுமே பாவித்து வாங்கிச் செல்வதில்லை. மாறாக, ராமன் என்கிற தெய்வத்தின் அம்சங்களாகவே போற்றுகின்றனர். எனவே தன் படையணிகளோடு இலங்கையைப் பார்த்து கையுயர்த்தும் ராமனின் புகைப்படத்தை விலைகொடுத்து வாங்கிச் செல்கிற ஒருவர், போர் இன்னும் முடியவில்லை என்ற ராமனின் செய்தியையும் சுமந்து செல்கிறார் மனதில்.

அச்சு இயந்திரம் வெகுஜன புழக்கத்திற்கு வந்த இந்த 100 ஆண்டுகளில் இந்த புகைப்படத்தின் கோடிக்கணக்கான பிரதிகளை- அதன் செய்தியோடு வாங்கிச் சென்றிருக்கிற எளிய வடஇந்தியர்கள்தான், ‘ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம்’ என்று சேதுக்கால்வாயைத் தடுக்கிற இந்துத்வாவின் பின்னே பலமான சக்தியாக அணிதிரள்கின்றனர் என்கிற நுண்ணரசியலைப் பேசுகிறார் குமரன்தாஸ்.

ஒரு புகைப்படம் சமூகத்தின் ஆழ்மனதில் உருவாக்கும் இந்த அபாயகரமான விளைவை உணரும்போதுதான், இன்றைக்கு ஆளும் வர்க்கத்தின் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி மற்றும் காட்சிரூபமான கருத்துகளின் பிடியிலிருந்த உழைப்பாளி மக்களை மீட்டெடுப்பதற்கான கருத்தியல் போராட்டம் எவ்வளவு வீச்சோடு நடத்தப்பட வேண்டும் என்பது உறைக்கும். காட்சி ஊடகம் சமூகத்தின் மீது தன் பிடியை இறுக்கிவரும் இந்நாளில், தொலைக்காட்சிகளில் வரும் புராணத்தொடர்களும், தேர்தல்கால பிரச்சாரப்படங்களும் ஆளும் வர்க்கத்தின் தற்காலிகத் தேவைகளை மட்டுமே நிறைவுசெய்யக்கூடியவை அல்ல. அவை மக்களை கருத்தியல்ரீதியாக தம்பக்கம் சாய்த்துக் கொள்வதில் தொடர் வெற்றியை ஈட்டிக்கொண்டுமிருக்கின்றன. ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல விரும்பும் எவரொருவரும், தமது மரபுவழிப்பட்ட பிரச்சாரக் கருவிகளை விடுத்து தமது தேவைகளை நிறைவேற்றும் புதிய நிலைகளை எய்த வேண்டியுள்ளது என்பதையும்கூட இந்த ‘புகைப்பட’ அரசியல் நமக்கு உணர்த்துகிறது. அல்லது ஒரு சாதாரண புகைப்படத்தையே உண்மை என்று நம்பிவிடக்கூடிய எளிய மக்களிடம் நாம் இதுவரை எதைக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியாவது எழுகிறது.

4. இன்றைய இலங்கையையே ராமாயணக் களமாகக் கொண்டாலும் ஒரு தர்க்கம் இடிக்கிறது. ராமனும் அவனது குடும்ப உறுப்பினர்களாகிய சீதையும் இட்சுமணனும் தங்கியிருக்கிற பர்ணசாலை அமைந்திருக்கும் காட்டுப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து எல்லைதாண்டி முதலில் நுழைந்தவள் சூர்ப்பனகை. அவள் மூக்கறுபட்டதும் ரத்தம் சொட்டச் சொட்ட தன் சகோதர்களிடம் சொல்வதற்காக மீண்டும் இலங்கை போகிறாள். ராம லட்சுமணர்களிடம் சண்டைபோட அவளது சகோதரர்கள் 14 கிங்கரர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டதையறிந்து சகோதரர்களே நேரடியாய் வருகிறார்கள். அவர்களும் கொல்லப்பட்ட பின்புதான் தன் மூத்த அண்ணன் ராவணனிடம் சென்று முறையிடுகிறாள். ராவணனும் கிளம்பி வந்து சீதையை சிறையெடுத்துப் போகிறான். சீதை இலங்கையிலே இருப்பதை ராமனின் பக்தனான அனுமன் நேரில் கண்டுவருகிறான் அசோகவனத்தில்.

ஆக, பர்ணசாலை இருந்த காட்டுக்கும் இலங்கைக்கும் ‘அத்தை வீட்டுக்கும் கட்டைப் புளியமரத்துக்கும்’ போய் வருவதைப்போல அடிக்கடி போகவர இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் எப்படி நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி போய்வர முடிந்தது எனக் கேட்டால் ‘புஷ்பக விமானத்தில்’ பறந்து வந்ததாக கதைவிடுகிறார்கள். ‘ஒரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?’ என்று புதுகை பூபாளம் கலைக்குழுவினர் கேட்கிற அர்த்தம் பொதிந்த கேள்வியை இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சீதையை சிறையெடுக்க ராவணன் சகட வண்டியேறி (மட்டக்குதிரை அல்லது கழுதை பூட்டிய வண்டி) போனான் என்ற குறிப்பை வசதியாக பின்தள்ளிவிட்டு அவனை புஷ்பக விமானத்தில் ஏற்றிவிட்டார்கள் புரட்டர்கள். அணிலையும் குரங்குகளையும் சித்தாளாக வைத்துக்கொண்டு தானே கொத்தனாராக இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிய ராமன் திரும்பும்போது பாலத்தைப் பயன்படுத்தவில்லை. ராவணனின் புஷ்பக விமானத்தில் தான் திரும்புகிறான். வழியில் பரத்வாஜ முனிவரிடம் ஆசிபெறுகிறார்கள் ராமன் அண்ட் கோ. செல்லும் வழியில் நிழலும் நீரும் கனியும் கிடைப்பதாகுக என்று ஆசி கூறுகிறார் முனிவர். விமானத்தில் செல்கிறவர்களுக்கு நிழலும் கனியும் தரும் மரங்கள் ஆகாயத்தில் விளைந்திருக்குமா என்ற அறிவுப்பூர்வமான கேள்விகளை இவ்விடத்தில் எழுப்பினால், கதையில் அப்படியெல்லாம் வரும் என்பார்கள். சரி, கதைதானே இது, அப்புறம் ஏண்டா உண்மைபோல சித்தரித்து உயிரை வாங்குகிறீர்கள் என்றால் அது எங்கள் நம்பிக்கை என்பார்கள். இந்த நம்பிக்கைகளின் அத்தனை கெடுவிளைவுகளையும் தாங்கியழியும் இடமாக ராமேஸ்வரம் மாற்றப்பட்டுள்ளது.

போஜனாலயாக்களையும் இன்னபிற வணிகநிறுவனங்களையும் நடத்தி வருகிற மார்வாரிகளுக்கும், மடங்களின் தலைவர்களுக்கும், பூசை திவசமென்று தினமும் ஆயிரக்கணக்கில் தேற்றும் பார்ப்பனர்களுக்கும் யாத்திரைப் பணியாளர்களாகிய இடைநிலைச் சாதியினருக்கும், மக்களை ஏமாற்றிச் சுரண்ட ஆதம் பாலம் எனப்படும் அந்த மண்திட்டு ‘ராமர் பாலமாக’ நீடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எனவே அவர்கள் சேதுகால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்வாவின் இயல்பான கூட்டாளிகளாக இருக்கின்றனர்.

எங்கோ உருவான ஒரு கதையை இங்கே நடந்த உண்மையென சொல்லிக் கொண்டு நடந்துவரும் ஆன்மீக வியாபாரமும், வியாபார ஆன்மீகமும் படுத்துவிடக்கூடாது என்ற குயுக்தியை அம்பலப்படுத்தி இந்த பாலம் குறித்த அறிவியல்பூர்வமான அல்லது ஆய்வுநோக்கிலான உண்மைகளை மக்களிடையே கொண்டு சென்றால் அவர்களது மதஉணர்வு புண்படும் என்று மதச்சார்பற்றவர்களும் அறிவுத்துறையினரும் காட்டும் சுணக்கத்தின் விளைவாக ராமாயணம் என்ற ஒரு கதை, இந்த நாட்டின் வரலாறாகவும், ராமன் ஒரு தேசிய வீரனாகவும் முன்னிறுத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ராமன் அவதாரப்புருஷன் என்றால் அவனது கால்பட்டதால் புனிதமடைந்தவிட்ட இத்தீவின் ஒரு பகுதியான தனுஷ்கோடி ஏன் கடல்கோளுக்கு ஆளாகியது என்கிற கேள்வியைக்கூட நாம் எழுப்புவதில்லை.

இந்துத்துவக் கொட்டத்தை முறியடிப்பதில் ஆளுங்கட்சிகளுக்குள்ள ஊசலாட்டமான அணுகுமுறை காரணமாக இன்று ‘ராமர் பாலத்திற்கு சேதாரமில்லாத மாற்றுப்பாதை’ பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளதற்கும் இந்நூல் கண்டனத்தை பதிவு செய்கிறது. சேதுகால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னுள்ள வகுப்புவாத அரசியலை எதிர்க்கும் பொருட்டு திட்டத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு குமரன்தாஸ் சென்றாலும், திட்டத்தால் விளையும் சுற்றுச்சூழல் சார்ந்த சீர்கேடுகள் குறித்த கவலையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறார். இவ்விமர்சனம், மீனவர் நலன் சார்ந்த நிலையிலிருந்தும் எழுகிறது.

சேதுகால்வாய்க்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசிக்கொண்டிருக்கும் யாரும் அத்தீவின் பூர்வகுடிகளாகிய மீனவர்களின் கருத்துகளை பொருட்படுத்தத் தயாரில்லாதது குறித்து கவலையை வெளிப்படுத்தும் நூலாசிரியர், இப்பகுதி மீனவர்களின் மேம்பாட்டிற்கான ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை முன்வைத்திருக்கிறார். கடல்சார் தொழிலாளர்களான மீனவர்களும், படகோட்டிகளும், சங்கு எடுப்பவர்களும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியிருப்பதை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், அவர்கள் மீதான தொழிற்சங்க இயக்கங்களின் முனைப்பான தலையீட்டையும் இந்நூல் கோருவதாயிருக்கிறது. மீன்பாடு இல்லாக் காலங்களில் சீவனத்துக்கு சிரமப்படும் மீனவர்கள் கடுமையான கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதிலிருந்து அவர்களை மீட்பதற்கும் கண்ணியமானதொரு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் குமரன்தாஸ் முன்வைக்கும் திட்டங்கள் பயனளிக்கக்கூடும்.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் அதன் பிள்ளைகளாகிய பழங்குடிகள் அன்னியப்படுத்தப்படுவதைப் போல கடலின் பிள்ளைகள் அதனிடமிருந்து விலக்கப்படும் நிலை குறித்த விசாரணைகள் இந்நூலை முன்வைத்து நடத்தப்பட வேண்டும். கடல் சார்ந்து வாழ்வதன்றி வேறொன்றை கனவிலும் நினைக்கவியலாத மீனவர்களை அவர்களது பாரம்பரிய வாழ்முறை என்ற அளவில் மீன்பிடித் தொழிலிலேயே முங்கிக் கிடக்க விடுவதா அல்லது மாற்றுத் தொழில் பயிற்சி மூலமாக அதிலிருந்து விடுவிப்பதா என்கிற கேள்வியை அவர்களுக்கு வெளியே இருந்து எடுக்க முடியாது. ஆனால் இது குறித்த தீவிரமான விவாதம் மீனவச் சமூகத்திற்குள் நிகழ்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

கடல் கறுப்பா சிவப்பா என்றுகூட அறியாதவர்கள் எங்கோ இருந்துகொண்டு எல்லைகளை வகுக்குறார்கள். ஆனால் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடலெல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பது இயல்பாக கொண்டிருந்திருக்கின்றனர். கடலுக்கு புறத்தே மாறிய அரசியல், கடலையும் மீனவர்களையும் சேர்த்தே பாதிப்படைய வைத்திருக்கிறது. கச்சத்தீவை மீட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கரையிலே நின்று முண்டா தட்டுகிறவர்கள் கடலைப் பகிர்ந்துகொண்ட மீனவர்களைத் துண்டாடிவிட்டார்கள் என்பதை உணர முடிகிறது.

1988ல் இந்திராகாந்தி பாலம் திறக்கப்பட்ட பிறகு கடலுக்கும் மீன்பிடி தொழிலுக்கும் எவ்விதத்திலும் தொடர்பற்ற சமவெளி மனிதர்கள் ராமேஸ்வரம் தீவுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் போக்கு வேகமெடுத்தது என்பதை வாசிப்பினூடாக உணரமுடிகிறது. மட்டுமன்றி தென்மாவட்டங்களில் தலித்துகளான பள்ளர்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில் 1980களின் பிற்பகுதியில் ஜான்பாண்டியன், மரு.கிருஷ்ணசாமி போன்றவர்களின் தலைமையில் அவர்கள் எழுச்சி பெற்று திருப்பியடிக்கத் தொடங்கியதும், தாக்குபிடிக்க முடியாத மறவர் போன்ற இடைநிலை ஆதிக்கச்சாதியினர், பள்ளர்கள் இல்லாத பகுதியான ராமேஸ்வரம் தீவுக்கு தப்பியோடி வந்துவிட்டனர் என்ற மிக முக்கியமானதொரு மாற்றம் இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மணற்பாங்கான இந்நிலப்பகுதிக்குள் விவசாயம் நடைபெறுவதில்லையாதலால் வேளாண்குடிகளான பள்ளர்கள் அனேகமாக இத்தீவில் இல்லை என்பதும் நுணுகியப் பார்வையிலிருந்து கிடைக்கும் தகவல்தான்.

காரணம் என்னவாக இருந்தாலும், சமவெளி மனிதர்கள் இத்தீவின் கடல்சார் பூர்வகுடி மக்களை ஆதிக்கம் செய்கிறவர்களாக தங்களை வலுவடையச் செய்துகொண்டதும், மீன்பிடித்தொழிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுமாகிய கேடு நிகழ்ந்துவிட்டது. கிறிஸ்தவர்களான பரதவர்களை சுரண்டுவதும் அடக்குவதுமாகிய தங்களது இழிநோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இந்த வெளியாட்கள் இந்துத்துவ அமைப்புகளில் அணிதிரண்டிருப்பது தற்செயலானதல்ல. கோவிலை மையப்படுத்தி ராமேஸ்வரம் தீவு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்துத்துவ வெறியர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அங்கு பிற ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதையும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதையும் சற்றே பதற்றத்துடன் உள்வாங்க வேண்டியுள்ளது. அங்கிருக்கும் இஸ்லாமியர்கூட, தான் இஸ்லாமியர் என்று எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடையாளமழித்துக் கொண்டவராகவே இருப்பார் என்ற செய்தியை படிக்கும்போதுதான், அப்துல்கலாம் சங்கரமடத்துக்கு செல்வதின் சூட்சுமம் பிடிபடுகிறது.

இப்படி கடலைப்போலவே ஆழமும் விரிவும் கொண்டதாகி அலையலையான விவாதங்களைத் தூண்டும் தன்மையுடையதான இந்நூலுக்கு கடல்சார் வாழ்வின் நுட்பங்கள் அறிந்த வேறொருவர் முன்னுரை எழுதியிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனவே இதை முன்னுரையாக பொருட்படுத்தாது, ஒரு வாசகனின் பகிர்வாக கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

(நூல் வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 5. பக்கங்கள்: 96. விலை ரூ.50)



(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)

 


39 comments:

Madhavan Srinivasagopalan said...

இந்த Book ஆசிரியருக்கு தில்லு இருந்தா வேற மதத்துல இருக்கற ஏதாவது மூட நம்பிக்கைய விமர்சனம் செய்ஞ்சு பாக்கட்டும்... அந்தாளு நெஞ்சில மான்ஜாச் சோறு இருக்குறத ஒத்துக்கறேன்..

இந்து மதத்தோட உயரிய பண்பே 'சகிப்புத் தன்மை' அதனாலத்தான் இந்து மதத்தைப் பத்தி இழிவா எழுதுற ஆளுங்கலாம் தைரியமா எழுதுறாங்க...

மதத்தோட நம்பிக்கையில விளையாடுற எவனும் நல்லா வாழ்ந்தானாப் பாருங்க..

இந்தமாதிரி புத்தகத்துக்குலாம் ஒரு விளம்பரம் செய்யிற கழுகொட நிலைய நெனச்சா எனக்கு பரிதாபமா இருக்கு... ம்ம்ம் நல்லா இருங்கப்பு..

வைகை said...

இந்த புத்தக விமர்சனம் கழுகால் எழுதப்பட்டதா? அல்லது இதுதான் கழுகின் பார்வை என்பதால் இங்கு பகிரப்பட்டதா? இதில் ஏதேனும் கேள்வி வந்தால் புத்தக ஆசிரியரை நோக்கி உங்கள் கைகளை நீட்டுவீர்களா? தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் :-))

dheva said...

வைகை @ உங்கள் கேள்விகளைக் கேளுங்கள் இயன்ற வரையில் பதிலளிக்கிறோம்.

பதிலளிக்க முடியாத கேள்விகளை பொதுவில் வைத்து உங்களோடு சேர்ந்து நாங்களும் விடை தேடுகிறோம்...!

புத்தக விமர்சனம் திரு. ஆதவன் தீட்சண்யா என்னும் தோழரால் எழுதப்பட்டது.

கழுகு வாசித்து உணர்ந்து இங்கே பகிரப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

வைகை said...

நன்றி தேவா.
நான் இன்னும் இந்த புத்தகம் படிக்கவில்லை. இங்கு உள்ளதை படித்தவரை எனக்கு தோன்றுவது இது சேது சமுத்திர திட்டம் பற்றியும் ராமேஸ்வரம் மக்களை பற்றியும் கூறுவதை விட இந்து மதத்தை இழிவுபடுத்துவதில்தான் அதிக கவனமாய் இருக்கிறது. இந்த உலகத்தில் ஆண்கள் யாரும் ராமன் இல்லைதான் ஆனாலும் தனக்கு வரும் கணவன் ராமனாக இருக்கவேண்டும் என்று நினைக்க வைத்ததே அந்த இதிகாசத்தின் வெற்றிதான். இந்த ஆசிரியரின் வாதப்படி கற்பனை என்றாலும் இது கூறும் வாழ்வியல் நெறிமுறைகள் இன்றைக்கும் நமக்கு தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மதங்களை எடுத்துக்கொண்டால் அதன் தோற்றத்தின் நோக்கமே மனிதர்களை நெறிப்படுத்த மட்டுமே வேறு நோக்கம் இல்லை. அதன் நோக்கங்களை சிதைத்த மனிதர்கள் ( இந்த கட்டுரை ஆசிரியர் உட்பட ) தங்கள் தவறையும் பலவீனத்தையும் மறைக்க கடவுளை குற்றம் சொல்லவும் கிண்டல் செய்யவும் இறங்கி விடுகின்றனர். இதற்க்கு இன்னும் பிற மதங்களை உதாரணம் காட்டியும் இங்கு பதில் சொல்லலாம். அது என் நோக்கம் அல்ல. அந்த பாலத்தில் ஒன்றும் விசேசம் இல்லையென்று நிரூபித்து திட்டத்தை செயல்படுத்துவதில் தப்பில்லை... ஆனால் அந்த பாலத்தை காரணமாக வைத்து ஒரு மதத்தின் உணர்வுகளின் மேல் ஒட்டுமொத்தமாக புல்டோசர் ஏற்ற வேணாம். நன்றி :-)

dheva said...

//அந்த பாலத்தில் ஒன்றும் விசேசம் இல்லையென்று நிரூபித்து திட்டத்தை செயல்படுத்துவதில் தப்பில்லை... ஆனால் அந்த பாலத்தை காரணமாக வைத்து ஒரு மதத்தின் உணர்வுகளின் மேல் ஒட்டுமொத்தமாக புல்டோசர் ஏற்ற வேணாம். //

இதை ஒரு கண்ணியமான பார்வையாக வரவேற்று ஏற்கிறேன்.

இந்த பாலத்தை இராமர் பாலம்தான் என்று மத ரீதியாக உறுதி செய்ய முனைவோருக்கு அதே ரிதியாக அதை உடைத்தெறிய புத்தகத்தின் ஆசிரியர் முயன்றிருக்கிறார்......என்பதே எனது பார்வையாக இருக்கிறது.

நன்றிகள் வைகை...!

இம்சைஅரசன் பாபு.. said...

மாதவன் சார் ... :))
தைரியமா இங்க வந்து உங்க கம்மேன்ட்ஸ் போட்டதுக்கு ...உங்களோட கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு .

கழுகு வர வர வானத்தில் இருந்து கீழ் நோக்கி பரகிறதே ..ஒரு வேலை தரையில் மோதி தற்கொலை பன்னிக்க போகுதோ ..?

ஒரு வேளை ஹிட்ஸ் க்காக எழுதியாதா இருக்கும் ...
மாதவன் சார் கமெண்ட்ஸ் அண்ட் வைகை கமெண்ட்ஸ் மட்டும் படித்து ..கமெண்ட்ஸ் போட்டேன் ..இந்த மாதிரி பதிவுகள் புக்ஸ் எல்லாம்
படிக்கிறதே இல்லை ....

Madhavan Srinivasagopalan said...

.// இந்த மாதிரி பதிவுகள், புக்ஸ் எல்லாம் படிக்கிறதே இல்லை ....//

Improved version of your comment, Babu will look like

"ஓசில கெடைச்சாலும் நாங்கலாம் இந்த மாதிரி புஸ்தகத்த படிக்க மாட்டோம்... ஃபிரீயா கெடைச்சாலும் ஃபினாயில குடிக்கவா முடியும்... "

Madhavan Srinivasagopalan said...

//இந்த பாலத்தை இராமர் பாலம்தான் என்று மத ரீதியாக உறுதி செய்ய முனைவோருக்கு அதே ரிதியாக அதை உடைத்தெறிய புத்தகத்தின் ஆசிரியர் முயன்றிருக்கிறார்......என்பதே எனது பார்வையாக இருக்கிறது. //

இந்த ஆசிரியருக்கு இந்து மதத்த தவிர வேற ஏதாவது ஒரு ...அட்லீஸ்ட்.. ஒரு மதத்தோட (மூட)நம்பிக்கைய எதிர்த்து சவால் விட திராணி இருக்கா...

இந்த ஆரிரியருக்கு வக்காலத்து வாங்கும் கழுகும் இதற்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளது... பதில் சொல்ல வரலேன்னா.. .. ஆசிரியர் தனது எழுத்துலகிற்கும் .. கழுகு பதிவுலகிற்கும் குட்பை சொல்லிட்டு கடைய இழுத்து மூடுறதுதான் சரியா இருக்கும்..

டிஸ்கி : கழுகு மனசில வெறும் குப்பைதான் இருக்கு போல...

Madhavan Srinivasagopalan said...

//அதே ரிதியாக அதை உடைத்தெறிய புத்தகத்தின் ஆசிரியர் முயன்றிருக்கிறார். //

எதையாவது உடைக்கறதுன்ன உடனே வந்துடுவானுங்களே !!

Where did the Author do his 'Archeology' or 'Marine Engineering'. This article lacks scientific evidences..

// மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?//

These are called 'Hand Waving Arguments'. ஓஹோ.. அவருக்கு தமிழ்ல சொன்னாத்தான் புரியும்னா..
'விதண்டாவாதம்'

Madhavan Srinivasagopalan said...

//சேது சமுத்திரதிட்டமும் இரமேஸ்வரம் தீவு மக்களும்...! ஒரு அசத்தல் பார்வை... //

"...ஒரு அசிங்க பார்வை.."

தலைப்பாவது சரியா இருக்கா.... படிச்சிட்டு நாம Correct பண்ண வேண்டி இருக்கு...

dheva said...

பிரியத்துக்குரிய மாதவன்,

கட்டுரை முழுதும் கருத்துக்கள் இருக்கின்றன....ஒரு வாசிப்பாளனின் பார்வையாக. தயை கூர்ந்து கட்டுரையில் வரும் கருத்துக்களை தங்களின் மேலான கருத்துக்களால் தர்க்க ரீதியாக மறுத்துப் பேசுங்கள்.

இராமர் பாலம் என்று வரும்போது அங்கே அதோடு தொடர்புடைய ஒரு மதத்தை இழுத்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாற்று மதத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லாத இடமாய் ஆதம் பாலம் (பாலம் தானா என்பதை அறிவியலார்தான் கூற வேண்டும்..) இருப்பதை தாங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

எதிர் கருத்துக்களை பதிவதை நாங்கள் வரவேற்கும் அதே நேரத்தில் வார்த்தை தடிமன்களும், மரியாதைக் குறைவான சொற்றொடர்களும் வருவதை நாங்கள் சர்வ நிச்சயமாய் ஏற்க முடியாது.

மேலும் கருத்துக்களால் விவாதிக்க வரும் போது அதை எப்படி எதிர் கொள்வது மேலும் அறிவுசார் விடயங்களைக் கொண்டு எப்படி விவாதத்தை கட்டியெழுப்பிச் செல்வது என்பதை நாங்கள் அறிந்திருக்கும் அதே நேரத்தில்...

ஏகவசனத்தில் தனி மனிதர்களைச் சாடி வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்றும் கற்றறிந்தே வைத்திருக்கிறோம்.

சேது சமுத்திர திட்டம் ஏன் நிறைவேற்றப்படக் கூடாது?

மேலும் அந்த மணல் திட்டுக்கள் இராமர் கட்டிய பாலம்தான் என்று விஞ்ஞான ரீதியாக உறுதி செய்ய இயலுமா?

அப்படி அதை உறுதி செய்து அறிவியலார் அதை மெய்ப்பிக்கும் போது கூட....

வறட்சியினால் தலைமுறைகளாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கை செழிப்பினையும், அந்த பகுதியின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு மானுட நேயத்தோடு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் என்ன....

என்று

ஆதாரக் குரல் எழுப்புவது மிகப்பெரிய மானுட நேயத்தின், தேசப்பற்றின் வெளிப்பாடாகும்.

இது ஒரு மதத்தை தாக்கி எழுதப்பட்ட புத்தகம் அல்ல.....; ஒரு திட்டத்தை மதத்தின் பெயரால் நம்பிக் கொண்டு அதை முறியடிக்க முயல்வதின் மூலம் லட்சோபம் லட்ச மக்களின் எதிர்காலத்தையும், வருவாயையும் அழிக்கும் ஒரு போக்கினை உடைத்தெறிய அறிவியல் ரீதியாக, வரலாற்று தரவுகளின் ரீதியாக வாதிடும் ஒரு சாமனியனின் குரல்...என்பதை அறிக;

இப்படி எல்லாம் நாங்கள் எழுதிக் கொண்டிருப்பதால் எங்களுக்குள் ஆன்மீக நம்பிக்கை இல்லை என்றோ... நாங்கலள் கண் மூடித்தனமாய் ஒரு கூட்டத்தை ஆதரிக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு...!

அன்பான வாழ்க்கையில் இறைவன் என்ற படிமாணத்தை உணர....வெறும் உணர்ச்சிகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது......

கடவுள் என்பவர் சுட்டிக்காட்டி அறியப்படவேண்டியவர் அல்ல... மாறாக.. ஆழமான தன்னுணர்வில் உணரப் பட வேண்டியவர்..!

மானுட நேயத்தைப் போதிக்கத்தான் மதங்கள் தோன்றின; அந்த மானுட நேயம் காக்கப்படாமல் மனிதர்கள் மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று கூறுவதில் ஒரு நியாயமும் இல்லை...(இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்...)

நன்றிகள்!

lingam said...

இந்த Book ஆசிரியருக்க family enna______________________________ va

கழுகு said...

HH = A23q - OBSERVATION - HH = A23q -

STARTED

http://www.blogger.com/profile/06666451015267621113

PROFILE NAME: LINGAM

CONTINUE....

Prabu Krishna said...

@ lingam

நண்பரே பதிவில் உள்ள மாற்றுக் கருத்துக்களை முன் வையுங்கள். இவ்வளவு கேவலமான வார்த்தைகள் வேண்டாம்.

Prabu Krishna said...

@ அனைவருக்கும்,

பதிவை எந்த இடத்தில் இருந்து நீங்கள் பார்க்கிறீர்கள்? ராமர் பாலத்தை பற்றிய விமர்சனத்தில் மற்ற மதம் சார்ந்த விசயங்களை விவாதிக்க அவசியம் எங்கே வருகிறது? அத்தோடு பதிவில் ஆதவன் பகிர்ந்து இருக்கும் நியதியான கேள்விகள் குறித்து உங்களிடம் பதில் உள்ளதா என்று தெரியவில்லை.

இதே மதத்தின் பெயரால் எத்தனை கொடுமைகள் நடந்து உள்ளன, அப்போதெல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி இருக்கிறது. (ஆனால் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்க வேண்டாம். இது அதற்கான இடமும் இல்லை)

பதிவை விவாதிக்காமல் வெறும் வார்த்தைகளை வீசுவதில் பலனில்லை. உங்களுக்கு தெரியும் என்றால் இது குறித்த ஆதாரங்களை தரலாமே?

தவறு என்றால், கழுகு தன் தவறுகளை ஒப்புக் கொள்ள தயாராய் இருக்கிறது. (உறுப்பினராய் இதை நம்புகிறேன்).

- கழுகு உறுப்பினராக

Prabu Krishna said...

@கழுகு

இனி நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். உளறலகளுக்கு எல்லாம் வீணாக பதில் சொல்ல வேண்டாமே.

- பிரபு கிருஷ்ணா (வாசகனாக)

dheva said...

பிரபு @ வரவேற்கிறேன் தம்பி...!

saidaiazeez.blogspot.in said...

ஐயா இம்சை, இங்கே வந்து கமெண்ட் போட என்ன தைரியம் தேவை?
வாய்லே அறுவாவ புடிக்கும்போதே தெரிகிறது, building strong but basement week என்று. அதான் தற்கொலை அது இது என்பது!
மாதவன் சார்,
அது ராமர் பாலம் மட்டுமல்ல, ஆதாம் பாலம் என்றும் கூறுவதுண்டு. so, இங்கு இந்துக்களின் மனமட்டுமின்றி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் (மூட)நம்பிக்கைகளும் இந்த ஆசிரியரால் விமர்சனத்துக்கு ஆளாகிறுக்கிறது. அது போக, "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை" என்பதற்கு ஏற்ப ராமரே தன் மனைவி பத்தினி என்பது தெரிந்தும் மற்றவர்களின் நம்பகத்தன்மைக்காக சீதையை தீ குளிக்க வைத்தது.
இந்திய பொருளாதாரத்துக்கு பயன்பெறும் எனும்பட்சத்தில், யாருக்குமே பயனில்லாத இந்த ராமர்/ஆதம் பாலத்தை தகர்ப்பதில் என்ன தவறு?

//These are called 'Hand Waving Arguments'//
அப்படீங்களாண்ணா!
அப்போ கீழே உள்ளதுங்கண்ணா?

...எதையாவது உடைக்கறதுன்ன உடனே வந்துடுவானுங்களே...
...ஒரு அசிங்க பார்வை...
...கழுகு மனசில வெறும் குப்பைதான் இருக்கு போல...
...இந்தமாதிரி புத்தகத்துக்குலாம் ஒரு விளம்பரம் செய்யிற கழுகொட நிலைய நெனச்சா எனக்கு பரிதாபமா இருக்கு...

ஹிந்துமதம் said...

உச்ச நீதி மன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கும் போது ....இந்த புத்தக ஆசிரியரும் நீங்களும் .பொய் பரப்புரை செய்கீறீர்கள் என்று உங்கள் மீது வழக்கு தொடுக்க நேரிடும் ....ஜாக்கிரதை

ஆதாம் பாலம் என்று எவன் கூறினான் எந்த விஞ்சானி கூறினான் ..
டி..ஆர் பாலுவிடம் இருந்து கழுகு நிர்வாகிகளுக்கு எவ்வளோ பணம் வந்தது ..
ஏற்க்கனவே மணல் தோண்டுறேன்னு அடித்த கொள்ளை போராதா ...? இன்னும் ஒரு இமாலைய கொள்ளை அடிக்கனுமா ..?

ஆமா இந்து மதம்ன்னா அவ்வளோ கேவலாமா போச்சா . ஏன் கிர்ச்த்துவ பாதிரியார்கள் நடத்தின கூடங்குளம் போராட்டத்துக்கு மட்டும் உங்கள் ஆதரவு ..அவர்களிடம் இருந்து எவ்வளோ பணம் வாங்கி பதிவு இட்டீர்கள் .........

ராமர் பாலம் இடித்தால் பெரிய பிரச்சனை வெடிக்கும் ..அப்படி ஒரு திட்டம் தேவையே இல்லை மாற்று பாதை கண்டுபிடித்து அந்த திட்டத்தை நிறைவேற்றினா என்ன ?

முஸ்லிம் கோவில இடிச்ச்சன்னு பஸ் புக் ல வேற போட்டு இருக்கான் இந்த ராஸ்கல் ..ஏண்டா இந்தியா என்பது முன்பு ..ஹிந்துஸ்தான் தானே இருந்தது . பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் இருந்தது என்பது கோர்ட் தீர்ப்பு அது தெரியுமா ?

..வந்துட்டாங்க தூக்கி பிடிச்சிட்டு விமர்சனம்ன்னு

நிகழ்காலத்தில்... said...

இந்த இடுகைக்காகவே ஹிந்துமதம்னு ஃபுரைபல் பிறந்திருக்கிது போல.,

ஹிந்து இந்த மிரட்டல் எல்லாம் இங்கே எடுபடாது. வேறு எங்காவது வைத்துக்கொள்ளவும்.,

மொதல்ல சொந்த மூஞ்சிய காமிங்க அப்புறம் பேசுவம்...

Prabu Krishna said...

@ ஹிந்துமதம்

ஹலோ ஹிந்துமதம், ராமர் பாலம் என்று எந்த விஞ்ஞானி சொன்னாரோ அவர்தான் எங்களுக்கு இத ஆதாம் பாலம்னு சொன்னார்.

உங்க கடவுளிடம் சொல்லி ஒரு மாற்றுப் பாதையை சொல்லுங்களேன்.

//பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் இருந்தது என்பது கோர்ட் தீர்ப்பு அது தெரியுமா ?//

அதுக்கு முன்ன அங்க ரெண்டு கல்லு தான் இருந்துச்சாம்.

முதல்ல பதிவுல இருக்க கேள்விக்கு பதில் இருக்கா? (பதிவ படிச்ச ஆளுகிட்ட கேட்டு இருக்கணுமோ?)

Surya Prakash said...

வாங்க Duplicate ID's, மண்டைக்கு மேல இருக்குற கொண்டைய மறைக்க மறந்துடீங்க அத கொஞ்சம் கவனீங்க !

நிகழ்காலத்தில்... said...

@பிரபு

லிங்கம், ஹிந்துமதம் இவையெல்லாம் இந்த மாதம் நமக்கென துவக்கப்பட்ட போலிகள்.

வலையுலகில் ஏற்கனவே இருக்கிற பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பது என் யூகம். வலையுலகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களின் கமெண்ட்தான் இவைகள்.

எனவே இவற்றிற்கு பதில் அளிப்பதற்கு முன் கேள்விகளில் நியாயம் இருப்பின் தொடரலாம். மாறாக வம்புக்கு இழுப்பதே நோக்கம் எனில் உதாசீனப்படுத்தலாம்.

இவர்களுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டாம். அவசியமெனில் நான் பதில் அளிக்கிறேன்.

நாய் நக்ஸ் said...

இந்த பதிவு பத்தி விவாதிக்கனுமா....? இல்லை
ஹிந்து மதத்தை பத்தி விவாதிக்கனுமா....????

பதிவை பத்தினா நான் வரலை....
ஆனால் நம்முடைய இந்த நிலைக்கு காரணமான பெரியாரை...
பத்தியும்...ஹிந்து மதத்தில் உள்ள ஆதிக்க சக்திகளின் ....
முகத்திரையை கிழிப்பது பற்றியும் பேசவேண்டும் என்றால்....
பேசுவோம்...நான் தயார்....

அதற்கு முன் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஒதுவானுகளே...
திருமணம் அப்ப...அதற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளவும்.....

எத்தனை பேர் மணமகளை அனுபவித்து பிறகு நமக்கு தாரை வார்த்து கொடுப்பதை.... ????????

முழுமையான அர்த்தம் தெரிந்து பிறகு பேசவும்.....

நாய் நக்ஸ் said...

FOLLOW UP....

தமிழ்சேட்டுபையன் said...

சேது சமுத்திர திட்டத்தினால் தமிழகத்திக்கு பயன் கிடைக்குமானால்,
ராமன் கட்டியதாக கூறப்படும் பாலத்தை இடிக்க முதல் இந்துவாக நான்
கிளம்புகிறேன்... அதற்கு முன் சில கேள்விகள்...

தமிழ்சேட்டுபையன் said...

சுற்றிச் செல்லும் கப்பல் எரிபொருளை சேமிக்க கப்பல் முதலாளிகளிடம்
வாங்கிய கோடிகணக்கான பணதிக்கு விசுவாசமாக பகுத்தறிவு பகலவன்களின்
செல்ல தம்பி பாலு பாலத்தை இடிக்க முனைந்தார் இந்துகளின் தடையால் அவர் ஆசையில் மண்!
இதுதான் உண்மை!

இதனால் பயன்பெறுவது அரசியல்வாதிகளும் கப்பல் முதலாளிகளும்தான் தமிழகத்திக்கு
ஒரு வெங்காயமும் கிடைக்காது....! இருக்கிற மீன் வளமும் கோவிந்தா!

இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு ஒரு கற்பனையான கேள்வி
இதுவே ஒரு மசூதியை இடித்து சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம்
என்றால்...அறிக்கை இப்படியிருக்கும்

கலைஞர்
அய்யகோ! ஒரு மதத்தின் நம்பிக்கையை இடித்து விட்டு சேது சமுத்திர திட்டமா வேண்டவே வேண்டாம்....

வீரமணி

ஏன்? கப்பல் சுற்றி போனால் என்ன? குறைந்தா போகிறது!

டிஆர்பாலு

மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

இது மாதிரி அறிக்கைகள் கண்டிப்பாக இவர்கள் வாயிலிருந்து உதிர்க்கும்...

தமிழ்சேட்டுபையன் said...

,இ44அஇனியும் ரத்தஆறு ஓடும் கிட்னி ஆறு ஓடும் என்றெல்லாம் அரபு நாடுகளில் ஆப்கானிஸ்தான்
நாடுகளில் இருந்து AK47கையில் வைத்துக்கொண்டு மிரட்டல் அறிக்கையெல்லாம் வரும்

தமிழ்சேட்டுபையன் said...

பாலத்தை இடிப்பது என்றால் இடித்துவிட்டு போகவேண்டியதுதானே அரசாங்கம்....!
சூடு செரனை இல்லாத இந்துகள் ஒன்னும் கண்டுக்க மாட்டான் அவனை விடுங்க
ஆனால் சில பகுத்தறிவுவாதிகள் ஒரு
40புக் எழுதி வித்து காசு பார்த்திருவானுக.....

Madhavan Srinivasagopalan said...

//ராமர் பாலத்தை பற்றிய விமர்சனத்தில் மற்ற மதம் சார்ந்த விசயங்களை விவாதிக்க அவசியம் எங்கே வருகிறது? //

Please (re)read the following lines
//ஒரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்? //

ராமன் -- ஒரு மதத்தினரால் வணங்கப் படுபவர்.. மரியாதைக்கு உரியவர். அவரை மேற்கண்டவாறு எழுதியது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படும்படி செய்வது அல்லவா ? உண்மையோ பொய்யோ.... இது 'நம்பிக்கை' சம்பந்தப் பட்ட விஷயம். நம்புவது ஒருவனுடைய உரிமை.

Madhavan Srinivasagopalan said...

Ref:.//அது ராமர் பாலம் மட்டுமல்ல, ஆதாம் பாலம் என்றும் கூறுவதுண்டு. &&

so, இங்கு இந்துக்களின் மனமட்டுமின்றி இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் (மூட)நம்பிக்கைகளும் இந்த ஆசிரியரால் விமர்சனத்துக்கு ஆளாகிறுக்கிறது. //

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொது இந்தியப் பெயர்கள் அவர்களுக்கு எதுவாக (சொல்வதற்கு) இல்லை என்பதால், பல பெயர் மாற்றங்கள்.. உதாரணம்..
1) Mumbai (based on Goddess Mumbadevi ) --- renamed as Bombay
2) Chennappatnam -- renamed as Madras
3) Pataliputra - Patna
4) Indraprasta - Delhi
5) Ramar Paalam - Adam's bridge.

I mean, Just because it was renamed for their(britishers) convinience, it does not mean it(referred bridge) has something to do with another(here christianity) 'religious reason'.

I never heard 'the same bridge' is associated with any 'muslim religion', you have mentioned (quoted above). I welcome if you provide more light on this.

அதனால.. இந்தப் பாலத்தைப் பத்தி தவறா எழுதினது சகிப்புத் தன்மைய அதிகமாகச் சொல்லும் இந்து மதம் மீதுள்ள காழ்புனற்சியன்றி வேறொன்றுமில்லை என்பதே எண் கருத்து. (கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற படைப்பினை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன் )

Madhavan Srinivasagopalan said...

////These are called 'Hand Waving Arguments'//
அப்படீங்களாண்ணா!
அப்போ கீழே உள்ளதுங்கண்ணா?

...எதையாவது உடைக்கறதுன்ன உடனே வந்துடுவானுங்களே...
...ஒரு அசிங்க பார்வை...
...கழுகு மனசில வெறும் குப்பைதான் இருக்கு போல...
...இந்தமாதிரி புத்தகத்துக்குலாம் ஒரு விளம்பரம் செய்யிற கழுகொட நிலைய நெனச்சா எனக்கு பரிதாபமா இருக்கு... //


'Handwaving arguments' are very different from 'abuse' What I said as quoted above are 'abuse'.

I agree, I went out of control and 'abused', which I could have avoided and made my views in a better / polite way.

Madhavan Srinivasagopalan said...

//@ சைதை அஜீஸ் said... "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை" என்பதற்கு ஏற்ப ராமரே தன் மனைவி பத்தினி என்பது தெரிந்தும் மற்றவர்களின் நம்பகத்தன்மைக்காக சீதையை தீ குளிக்க வைத்தது.

இந்திய பொருளாதாரத்துக்கு பயன்பெறும் எனும்பட்சத்தில், யாருக்குமே பயனில்லாத இந்த ராமர் ஆதம் பாலத்தை தகர்ப்பதில் என்ன தவறு?
//

சாதகமா இருந்தா அதனை மேற்கோள் காட்டி பயன் பெற நினைப்பது..
பாதகமா இருந்தா.. 'கதை', 'மூட நம்பிக்கனு' சொல்லுறது..

எதற்கு இந்த இரட்டை வேடம் சார் ?

Madhavan Srinivasagopalan said...

//இந்திய பொருளாதாரத்துக்கு பயன்பெறும் எனும்பட்சத்தில், யாருக்குமே பயனில்லாத இந்த ராமர் ஆதம் பாலத்தை தகர்ப்பதில் என்ன தவறு? //

பாலத்த உடைக்கலாமா கூடாதானு நா எந்தக் கருத்தும் சொல்லல... As we hear "The law will take its own course" to settle(!) the issue.

இந்தப் பதிவில் வரும் புஸ்தகத்தில் எதற்கு ஒரு மதத்தினர் மனது புண்படும்படி ஆசிரியர் எழுதி இருக்கிறார்.. --- இந்து மதத்தினரில் இயலாமை அல்லது சகிப்புத்தன்மையை தனது பலமாக நினைத்தே ஆசிரியர் அப்படி எழுத முடிந்தது என்பதே எனது கருத்து...

lingam said...

கலி யுகம்தில் ஹிந்துத்துவம் இப்படி தான் , but முடிவில் அது எதிரி கலை வேறொடூ எதிரி அனைவரை யும் அழிந்து விடும்

காலம் காலம் மாக ஹிந்து மதம் இப்படி தான் , முன்பு நரகாசுரன்,.etc.. now இயேசு, அல்லா..etc...

Madhavan Srinivasagopalan said...

//இராமர் பாலம் என்று வரும்போது அங்கே அதோடு தொடர்புடைய ஒரு மதத்தை இழுத்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாற்று மதத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லாத இடமாய் ஆதம் பாலம் (பாலம் தானா என்பதை அறிவியலார்தான் கூற வேண்டும்..) இருப்பதை தாங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன். //

My Dear Dheva.. I like your kind words. Hope I also use similar words w/o hurting others. My point is given below.

கப்பல் போக்குவத்திற்கு வழி வேண்டுமென்றால்.. கடலை ஆழப் படுத்துவது பற்றியும்.. அதனால் விலையும் நன்மைகளையும் .. மேலும் முடிந்தால் அதனால் வேறு வித தீங்கு இல்லை என்பதையும் அழுத்தமாக ஆதாரத்துடன் சொல்லி இருந்திருக்கலாம்...
அந்த கடல் வழி திறக்கப் பட்டால் இந்தியப் பொருளாதாரம் உயரும்...( இந்தியா வல்லரசு ஆயிடும்...) என்பதற்காக ஒரு மதத்தினரை புண்படுத்தும் அளவிற்கு சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன அந்த ஆசிரியருக்கு ?

Madhavan Srinivasagopalan said...

Please read the article on Adam's Bridge from wikipedia.

No conclusive evidence discovered. One govt agency said something based on some research.. another govt. agency contradicts the same.

Even it's not proved anything for or against the 'religious belief'

So, I feel it does not matter what I say, or what the respectful(!) author of the article says...

But, one thing, better to avoid hurting other's religious belief / sentiments.

ADAM said...

PONGADA..............

saidaiazeez.blogspot.in said...

மாதவன் சார்,
முதலில் உங்களின் புரிதலுக்கு நன்றி!

முகமது நபி இறைவனின் திருத்தூதர்...
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், பின் உயிர்த்தெழுந்தார்...
ராவணனுக்கு பத்து தலைகள்...
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி...

மேலே சொன்ன அனைத்தும் ஒரு சிலரின் (மூட?)நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளை யார் தகர்த்தாலும் "கழுகு" முதல் ஆளாக முன்னின்று அதை கண்டிக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.

அதே போல கழுகு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு தளம். அதில் விருப்பு வெறுப்பு என்று எதுவும் இல்லை. just விழிப்புணர்வு, அவ்வளவே!

இத்தளத்தில் AIDS பற்றி கட்டுரை வெளியிட்டால், கழுகிற்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ AIDS என்று விளங்கிக்கொள்பவர்களுக்காக நாம் கவலைகொள்வதில்லை. மாறாக நம் பயணம், நம் இலக்கு, simple. "விழிப்புணர்வு" அவ்வளவே!

அதே பார்வையில்தான் இந்த கட்டுரையும். மற்றொரு கோணம். இப்படியும் ஒரு பார்வை ஒரு சில சாரார்களிடம் உள்ளது. அது ஒடுக்கப்பட்டவர்களின் நலிந்தவர்களின் வேதனையடைந்தவர்களின் வலி அல்லது நம்பிக்கை என்றும் சொல்லலாம்.
so, avoid hurting others belief/sentiments, please.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes