
கோடைவிடுமுறைகள் முடிந்து குழந்தைகள் பள்ளிக்கு திரும்பும் காலம் வந்துவிட்டது! நேற்றுவரை வீட்டில் ஆடி ஓடிக் கொண்டிருந்த பிஞ்சுகளை கூட பள்ளிகளில் சேர்க்க மும்மரமாய் இருப்பார்கள் பெற்றோர்கள்! கால்கடுக்க வரிசையில் நின்று பல பெரிய மனிதர்களின் சிபாரிசினைப் பிடித்து,ஆயிரக்கணக்கில் நன்கொடைகொடுத்து எப்படியாவது நல்ல பள்ளியில் சேர்ப்பது ஒன்றே அவர்களது நோக்கமாகக் இருக்கும்! கவனிக்கவும் இங்கே பெற்றோர்களை பொருத்தமட்டில் நல்ல பள்ளி என்பது குழந்தைகளை வறுத்தெடுத்து அவர்களை மதிப்பெண் வாங்க வைக்கும் தொழிற்கூடம்தான்!
ஆனால் அந்த பள்ளியில் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாக படிக்கிறார்களா என்றால் அவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது! இந்த அறியாத்தனம் மெத்தப்படித்தவர்களிடம் இருந்து கடைக்கோடி மக்கள் வரை ஒரே மாதிரி இருப்பதுதான் வேதனை! அரசாங்க அதிகாரிகளுக்கும்...