
கிளர்ச்சிகளை ஊட்டும் திட்டங்களையும், விளம்பரப் பலகைகளில் பெயர் கோர்க்கும் அறிவிப்புகளையும், கோஷங்கள் போட்டு கும்பல் சேர்க்கும் வழிமுறைகளையும், வியாபார யுத்திகள் கொண்ட புத்திகளையும் கடந்து செல்ல முற்படுகையில் சராசரியான எம்மைப் போன்ற மானுடர்களின் விழிப்புணர்வுத் தன்மை என்பது மங்கித்தான் போய்விடுகிறது.
சுயமாய் சிந்திக்கவும், சுயமாய் திட்டமிடவும், விரும்பிய திசையில் நகரவும் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பொதுப் புத்தி என்னும் வலைப்பின்னல் நம்மை விடுவதே இல்லை.
காலம் காலமாக மானுட இனத்திற்கு நன்மை செய்கிறேன் என்ற போர்வையில், தம்மையும் தம்மைச் சுற்றி இருக்கும் சுய நல மிக்கவர்களையும் முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் போராட்டங்களும், மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களும், சமூக இயக்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும், சமூக...