
விளைவுகளையும், தாக்கங்களையும், மாற்றங்களையும் கொடுக்காத பேச்சும், எழுத்தும், கூட்டமும் புதிதாய் மனிதர்களை மட்டும் நமக்கு அறிமுகப்படுத்துவதோடு நின்று போகின்றன. கெட் டூ கெதர் என்றழைக்கப்படும் மனிதர்கள் கூடி அளவலாவும் நிகழ்வுகள் வாழ்வியலின் தேவைகள்தான் என்றாலும் அவை ஒரு போதும் வாழ்க்கைகான தீர்வுகளைச் சொல்லி விடுவதில்லை.
கேளிக்கைகள் எல்லாம் கடும் அயற்சியான வேலைகளுக்கு நடுவேயான நாம் எடுத்துக் கொள்ளும் ஓய்வுகள். அவை புத்துயிர் அளித்து மேலும் உற்சாகமளிக்கும் என்றாலும் முழுமையான ஓய்வுகள் நம்மை சோம்பேறியாக்கி விடும் என்பதும் உண்மை. இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வரும் அத்தனை பேரும் சமூக மாற்றத்தை விரும்பிதான் வருகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது...! நம் சமூகத்திற்கு இன்னமும் என்ன வேண்டும்...? எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது என்று கருதும் ஒரு...