Tuesday, December 18, 2012

பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு சரியா? ஒரு எதார்த்தப் பார்வை...!


சுற்றி நிகழும் ஓராயிரம் சூழல்களையும் உள்வாங்கிக் கொண்டு சரியான தெளிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதையே நாம் வழமையாகக் கொண்டிருக்கிறோம். மிகைப்பட்ட நம்மைச் சுற்றிய முரண்களைப் பற்றி எழுதுவது கைப்புண்ணிற்கு கண்ணாடி வைத்து காட்டுவதைப் போன்ற தேவையற்ற நிகழ்வாகி விடும் என்பதாலேயே பல நேரங்களில் அடர்த்தியான மெளனத்தை சுமந்த படியே நாங்கள் சிறகடிக்க வேண்டியும் இருகிறது.

சமீபத்தில் நாம்  அறிந்த  ஒரு விடயத்திலிருக்கும் முரணை எழுத்தாக்கி உங்களிடம் சேர்க்கும்  விதமாய் எங்களின் கழுகு குழுமத்தில் விவாதித்த செய்தியின் சாரம்சத்தை கட்டுரையாக்கி இருக்கிறோம்...! கட்டுரையின் மையக்கருத்திலிருந்து மாறுபடும் நண்பர்களின் ஆரோக்கியமான கருத்துரைகளை நாங்கள் வரவேற்பதோடு....நேர்மையான  விவாதங்கள் மேலும் பல புதிய கதவுகளை திறந்து விடும் என்பதையும் திண்ணமாய் நம்புகிறோம்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கான ஓட்டெடுப்பு நேற்று ராஜ்யசபாவில் வெற்றி பெற்றிருக்கிறது.. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இச்சூழலில் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஒட்டரசியலில் வென்றும்  இருக்கிறது.

இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே மறு சீரமைப்பு தேவைப்படும் ஒரு சூழல் இப்போது உருவாகிப் போயிருப்பதை தெளிவான பார்வைகள் கொண்டோர் யாரும் மறுக்க முடியாது. டாக்டர் அம்பேத்கார் எழுதிய சட்டம் 25 ஆண்டுகளுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 25 ஆண்டுகள் முடிந்த பின்னால் அந்த சூழலை ஆராய்ந்து அப்போதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் பொதுப்பிரிவினர் அளவிற்கு சமமாய் இல்லாவிடில் மேலும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நீட்டிக் கொள்ளாம் என்றுதான் அம்பேத்கார் எழுதிய சட்டம் சொல்கிறது.

ஆனால் 25 வருடங்கள் கழிந்த பின்னால் உண்மையான ஆய்வுகள் செய்து இச்சட்டம் நீட்டிக்கப்படாமல் ஓட்டரசியலுக்காய் தொடர்ச்சியாய் மத்திய அரசால் பத்து பத்து ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.....

உண்மையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களில் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெற்றர்களோ அவர்களின் குடும்பங்களே தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு சாரார் மட்டுமே இட ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொண்டு தங்கள் பிரிவில் இருக்கும் மற்றவர்களுக்குத் தடையாகவும் இருக்கிறார்கள்...

உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் ஐஏஎஸ் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளைகள் மட்டுமே  இனி அந்த இட ஒதுக்கீட்டை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், ஏனெனில் அவர்கள் அந்தப் படிப்பிற்கு என்னென்ன தேவையோ அதனை மிகத் தெளிவாக தங்கள் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவித்து விடுகின்றனர். (ஆரம்பத்தில் முற்பட்ட வகுப்பினர் இப்படிச் செய்து தங்கள் வகுப்பினர் மட்டுமே அரசுப் பணிகளில் நீக்கமற நிறைந்திருந்தது போல)

ஆனால் அதே வகுப்பைச் சேர்ந்த இது வரையிலும் இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திராத ஒரு தினக்கூலியின் பிள்ளை இந்த முன்னேறிய ஆதிதிராவிடர்களின் பிள்ளைகளோடு போட்டி போட்டு அந்த ஐஏஎஸ் பதவியை அடைய முடியாத நிலை தான் இன்று உள்ளது.

ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இது வரை அந்த பலனை அனுபவித்தவர்களின் வாரிசுகள் இனி மேல் பொதுப் பிரிவுக்கு மாறி விட வேண்டும் என்ற வகையில் அந்த சட்டம் திருத்தப்பட வேண்டும். மற்ற எந்த வகுப்பினரின் இட ஒதுக்கீட்டிற்கும் இதை பொதுவான சட்டமாக மாற்ற வேண்டும்..

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், எந்த வகையான இட ஒதுக்கீடாக இருந்தாலும் அது அந்தந்த சமூகத்தினரின் முதல் தலைமுறையினருக்கு மட்டுமே என்பதை சட்டமாக இயற்ற வேண்டும்.  இட ஒதுக்கீட்டையே இப்படியாய் திருத்தம் செய்ய வேண்டும் என்ற பார்வையை உங்களுக்காக நாங்கள் பகிரும் இந்த வேளையில் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் எபதை எப்படி  ஏற்று கொள்வது என்று நீங்களே கூறுங்கள்...?

இந்தச் சட்டத்தினால் அரசுப் பணியாளர்கள் மத்தியில் மனநிலை சமச்சீர் கெட்டுப் போய், அரசு இயந்திரம் ஒட்டு மொத்தமாக முடக்கப்படும் பெரும் ஆபத்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு அதிகாரியின் கீழே குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்து அவரிடம் வேலை பயின்ற ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு சமமாகவும், அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரை வேலை வாங்கும் உயரதிகாரியாகவும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் உயரும் போது, அரசுப் பணியாளர்கள் 82 சதவிகிதத்தினர் மத்தியில் ஒருவித கோபத் தீ ஏற்படும். அது ஒரு வித ஒத்துழையாமையை ஏற்படுத்தி அரசு எந்திரம் அப்படியே ஸ்தம்பித்துப் போகவும் வழி வகுக்கும்.

மேலும் தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சலுகையின் அடிப்படையில் ஒரு துறையின் அதிகாரியாக உயரும் ஒருவர், எப்படி அவசர காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? அனுபவம் இல்லாத முடிவுகளால் முழுக்க முழுக்க முரண்பட்ட அசாதரண சூழல் ஏற்பட்டுப் போய்விடாதா?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவரில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கண்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்பதில் நமக்கு யாதொரு மாற்றுக் கருத்துகளும் இல்லை என்பதை வலுவாக பதிவு செய்யும் அதே நேரத்தில் இது போன்ற பதவி உயர்வுக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்று ஓட்டரசியலுக்காய் அரசியல் கட்சிகள் நடத்தும் குட்டிக் கலாட்டாக்கள் அரசையும், அரசு நிர்வாகத்தையும், அதன் விளைவுகள் கடுமையாய் மக்களாகிய நம்மையும் பாதிக்கப் போவது உறுதி....!


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


11 comments:

குலசேகரன் said...

//இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே மறு சீரமைப்பு தேவைப்படும் ஒரு சூழல் இப்போது உருவாகிப் போயிருப்பதை தெளிவான பார்வைகள் கொண்டோர் யாரும் மறுக்க முடியாது//

நீங்கள் ஒரு கழுகு என்றமைப்பு. கருத்துக்கள் கழுகு என்ற குழுவினரது. "எங்கள் கருத்து", "நாங்கள் எண்ணுகிறோம்" என்றுதான் எழுத வேண்டும். பொதுவாக எல்லார் சார்ப்பாகவும் 'யாரும் மறுக்க முடியாது' என்று எப்படியெழத முடியும்?

நாய் நக்ஸ் said...

Kulasekaran......

Do you agree this
article.....?????

Pl...discuss about it......

குலசேகரன் said...

கட்டுரையின் தலைப்பு பதவிஉயர்வில் இட ஒதுக்கீடு பற்றி. அதுதான் பாரளுமன்றத்தில் வைக்கப்பட்ட மசோதா. அதைபபற்றித்தான் சர்ச்சை.

உங்கள் கட்டுரை பாதிக்குமேலாக பதவி நுழைவில் கொடுக்கப்படும் இட ஒதுக்கிட்டைப்பற்றியே பேசுகிறது.

இரண்டாவது பற்றி நீங்கள் வைக்கும் வாதம் அனைவரும் சொல்லிய வாதிட்ட நன்கறியப்பட்ட மூன்றே கருத்துக்களே:

1. முத‌லாவ‌து வ‌கை இட‌ ஒதுக்கீட்டைப்பெற்று அதிகாரிகளான‌வ‌ரின் குழ‌ந்தைக‌ள் அம்முதலாவ‌து வ‌கை இட‌ஒதுக்கீட்டைபெற‌விடா வ‌ண்ண‌ம் த‌டுக்க‌ப்ப‌ட‌வேண்டும். அவ‌ர்க‌ளை பொது பிரிவின‌ராக்கிவிட்டால் அது சாத்திய‌ம்.

2. ஒரு சாராருக்கு மட்டுமே பதவியுயர்வில் ஒதுக்கீடு பண்ணினால், இளையவர் முதியவரை அதிகாரம் பண்ணும்படி வந்து ஊழிய‌ர்க‌ளுக்கிடையே மனக்கசப்பு உருவாகி அது தொழில‌மைப்பைப் பாதிக்கும்.

3. அனுப‌வ‌ம் பெறாத‌ இளைய‌வரால் அவ்வ‌மைப்பு ந‌ன்றாக வழி ந‌ட‌த்த‌ அவ‌ரால் முடியாது.

இவைதானே?

இட‌ஒதுக்கீடு என்ப‌து எஸ்.எஸ்டியைத்தாண்டி பிசிக‌க‌ளும் வ‌ந்து ப‌ல்லாண்டுக‌ளாகின்ற‌ன‌. இப்போது மாயாவ‌தி எஸ்.எஸ்டிக்க‌ளுக்குத்தான் கேட்கிறார். ஆனால், இது பிசிக்க‌ளுக்கும் தொட‌ரும். ஆக‌, இதை எவ‌ராலும் எதிர்க்க‌ முடியாது. இருபிரிவின‌ரும் சேர்ந்து இந்திய‌ ம‌க்க‌ள் தொகையில் 80 விழுக்காட்டுக்குமேல‌ வ‌ருவார்க‌ள்.

80 விழுக்காட்டு ம‌க்க‌ளின் விருப்ப‌ம் அஃதாகிருப்பின் எப்ப‌டி த‌டுக்க‌முடியும்?

மெரிட் போய்விடுமென்றால் அஃது அவ‌ர்க‌ளையும் பாதிக்காதா? இந்நாடு அவ‌ர்க‌ளுக்கும்தானே?

இர‌யில்வேயில் எஸ் டிக்க‌ள் எண்ணிக்கை குறைவாக‌ இருந்தார்க‌ள். இப்போது தெரியாது. என‌வே அவ‌ர்க‌ள் கோட்டாவின் ப‌டி ப‌த்துவ‌ருட‌ங்க‌ளில் உய‌ர்ப‌த‌விக‌ளுக்குப்ப்போய் விடுவ‌ர். அவ‌ர்க‌ள் கீழ் அனைவ‌ரும் அவ‌ர்க‌ளின் முன்னாள் சீனிய‌ர்க‌ளே. 50 ஆண்டுக‌ளுக்குமேலாக‌ இது ந‌ட‌க்கிற‌து. இர‌யில்வே ஓட‌த்தான் செய்கிற‌து.

எந்த‌ அர‌ச‌மைப்பு எப்ப‌டி இட‌ ஒதுக்கீட்டால், வீழ்ந்த‌து என்று ஆதார‌த்தோடு நிருபீக்க‌வேண்டும். இப்ப‌டி:

அமைப்பின் பெய‌ர்/ தொழிலாள‌ர் எண்ணிக்கை/ உய‌ர் அதிகாரிக‌ள் / அவ‌ர்க‌ளில் எத்த‌னை பேர் எஸ்.சி/எஸ்டிக்க‌ள். முன்ன‌ர் அவ்வ‌மைப்பின் திற‌ன் எப்ப‌டியிருந்த‌து? அத்திற‌ன் இவ‌ர்க‌ள் ப‌த‌வி உய‌ர்வு பெற்ற‌வுட‌ன் எப்ப‌டி கீழான‌து? இவ‌ர்க‌ள்தான் அக்கிநிலைக்குக்கார‌ணம் - இவையெல்லாம் நிரூபிக்கப்ப‌ட்டால் உங்க‌ள் வாத‌ம் வ‌லுப்பெறும்.

நாய் நக்ஸ் said...

@ kulasekaran........

In Reservetion content....

Is it correct......?????

THEN Y DONT V
GIVE THIS
RESEVATION....IN
STUDIES......?????

do u agree my Q....????

நாய் நக்ஸ் said...

@ kulasekaran.....

Just imagin this
reservetion content......

IN A RUNNING RACE.....!!!!!

What will happen.....????

iTTiAM said...

//அமைப்பின் பெய‌ர்/ தொழிலாள‌ர் எண்ணிக்கை/ உய‌ர் அதிகாரிக‌ள் / அவ‌ர்க‌ளில் எத்த‌னை பேர் எஸ்.சி/எஸ்டிக்க‌ள். முன்ன‌ர் அவ்வ‌மைப்பின் திற‌ன் எப்ப‌டியிருந்த‌து? அத்திற‌ன் இவ‌ர்க‌ள் ப‌த‌வி உய‌ர்வு பெற்ற‌வுட‌ன் எப்ப‌டி கீழான‌து? இவ‌ர்க‌ள்தான் அக்கிநிலைக்குக்கார‌ணம் - இவையெல்லாம் நிரூபிக்கப்ப‌ட்டால் உங்க‌ள் வாத‌ம் வ‌லுப்பெறும்.//
இதே போன்ற ஒரு நிரூபிப்புடன்தான் இந்த சட்டம் முன் மொழியப்பட்டதா?

//மெரிட் போய்விடுமென்றால் அஃது அவ‌ர்க‌ளையும் பாதிக்காதா? இந்நாடு அவ‌ர்க‌ளுக்கும்தானே?// சரி யாரையுமே இது பாதிக்கப்போவதில்லையா? அப்படி பாதிக்கும் என்றால் ஏன்? சரி செய்வது எவ்வாறு?

மேலும், இவ்வாறு நாம் ஏன் ஒரு ஒதுக்கீட்டினை, விளையாட்டு மற்றும் பள்ளி கல்லூரி தேர்வுகளில் முதல் இடம் பெறுவோர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்திலும் கொண்டு வரக்கூடாது?

இம்சைஅரசன் பாபு.. said...

இடஒதுக்கீடு சொர்க்கம் ,நரகத்தில் உண்டா ..ஏன்னா 21 தேதி பூமா தேவி சிரிக்க போறா நாம எல்லாம் மேலுலகம் போக போறோம் . :))

குலசேகரன் said...

இமசை அரசன்!

சுடுகாட்டிலும் உண்டு. மேல்ஜாதியினர் சிதை எரிக்கப்படும் அல்லது மேல்ஜாதி கிருத்துவர் சிதை புதைக்கப்படும் இடத்தில் தலித்துக்கள் சிதைகள் புதைக்கப்படக்கூடா. எரிக்கப்படக்கூடா. அதையேன் கேட்கிறீர்கள்: மேல்ஜாதியினர் சடலங்கள் எடுத்துச்செல்லப்படும் பாதையில் இவர்களுடையன் செல்லக்கூடா. இவ்வாறு சாவுக்குப்பின்னும் இட ஒதுக்கீடு உண்டு.

சொர்க்கத்தில் உண்டா என்றால் இருக்கும் அப்படித்தான் எழுதவும் பட்டிருக்கின்றன.

எனவே இட ஒதுக்கீடு வேலையில் மட்டும் இருக்கும்போது தெரிகிறது. மற்றவிடங்களில் இருப்பது தெரியவில்லை.

இம்மை அரசன் உண்மையிலேயே இம்சைதான் தருகிறார்!

குலசேகரன் said...

இதே போன்ற ஒரு நிரூபிப்புடன்தான் இந்த சட்டம் முன் மொழியப்பட்டதா?

சட்டம் அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகளால் போடப்படுகின்றன. இங்கே எழுதப்பட்ட கட்டுரை இட ஒதுக்கீடே தவறென்கிறது. இவர்களுக்குத்தான் என் பதில். எப்படி இந்த முடிவை எடுத்தார்கள்? நாங்கள் கலந்தாலோசித்தோம் என்கிறார்கள். ஒரு தனிமனித உணர்வுகளை வைத்தேயா கழுகு என்றமைப்பு கலந்தாலோசிக்கிறது? புள்ளிவிவரங்கள்தானே ஆதாரமாக இருக்கவேண்டும்? அதன் படி ஆலோசித்தார்களா?


// சரி யாரையுமே இது பாதிக்கப்போவதில்லையா? அப்படி பாதிக்கும் என்றால் ஏன்? சரி செய்வது எவ்வாறு?
பாதிக்கும் என்று ஏதேனும் நீருபனங்களிருந்தால் சொல்லுங்கள். அப்படியே பாதிக்கும் என்றே எடுத்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் அப்படியே வலியைத்தாங்கிக்கொண்டேயிருப்பார்களா? உடனே சிகிச்சை முறைகளத் தேடுவார்களே? அப்படித் தேடுபவர்கள் யார்? இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள்தானே? அவர்கள் எப்படித் தேடுவார்கள் என்றால்,. இட ஒதுக்கீட்டை பெறுபவர்கள் அப்படி ஒதுக்கீட்டை பெறாமல் போகவேண்டியதுவருமாயின் (அச்சிகிச்சைமுறையில் ஒன்றாக) அதனால் வரும் பாதிப்பையும் ந்யூட்ரலைஸ் பண்ணுமுகமாகத்தான் செய்வார்கள்..
ஆக, இங்கே அடிக்குறிப்பென்னவென்றால், மெரிட்டைப்பற்றி நீங்கள் மட்டும் கவலைப்படத்தேவையில்லை. உங்கள் கண்ணீர் முதலைக்கண்ணீர் என்பதே அவர்கள் வாதம்.

குலசேகரன் said...

//மேலும், இவ்வாறு நாம் ஏன் ஒரு ஒதுக்கீட்டினை, விளையாட்டு மற்றும் பள்ளி கல்லூரி தேர்வுகளில் முதல் இடம் பெறுவோர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்திலும் கொண்டு வரக்கூடாது?//
It is there in a different way. In TN, the first rank holder in +2 and SSLC examinations is decided on the fact of her optional language in Paper 1. If it is other than Tamil her marks won’t be taken into consideration at all. If the girl with Sanskrit Part II paper has the highest aggregate among all students of TN, and another girl with Tamil as language paper, has next highest score i.e. below the Sanskrit girl, the another girl will be ranked first, who will go on getting selected for BITS directly as the BITS give direct admission to State first rank holder. She will also get prizes from government and other organisations, and admission or other opportunities lifelong. Imagine the fun, if the Tamil girl score is the highest among the students with Tamil i.e just 80 and the girl with Sanskrit’s score is 99%? She has the highest score only from among the students with Tamil as Part I language. There may be hundreds of students with other languages who have scored more than her; but all of them will lose their ranks. So, here u see reservations in ranking based on marks.
Now based on region. In NIT engg admissions, the boy with 90 % score in the entrance won’t get admission in NIT Trichy if he has passed the + 2 exam from other State. 50% quota for TN students whichever board he passed. Generally, the TN students get lower marks than the CBSE students in entrance. But they will be selected against the quota. Here, you may see a reverse discrimination too: i.e. if an SC boy from Delhi has 80 score in the entrance, whereas the Brahmin boy from TN board has 70, the TN boy will get the seat with lower merit!!!
In Sports, it is there. The complaint is abroad that the 11 national team cricket players get backdoor entries if they are close to the selectors or politicians. There is a feeling that caste and regional politics enter there. Also, politicians govern the sports bodies.
In jobs, it is obvious to you. In other fields, it is hidden. Ramadoss complains that in judiciary there is much lobbying for top posts; resulting in elimination of lower castes. There are thousands of fields where hidden reservations for upper castes or powerful people go on. Sivakami IAS took VRS from TN government because she said she was consistently made victim of upper caste machinations which prevented from becoming Home Secretary. She had merits as well as seniority going by her tract record as an IAS officer. She was discriminated as she is a dalit. Many complain the same when it comes to top post.
In a scenario of no reservations, there was favoritism on the bases of caste, region etc. The mighty get all leaving nothing to others. If ppl feel victimized or neglected consistently, the demand to protect their interests will arise logically. Merit can’t be at the cost of social justice. Both shd be served equally. This blog post fails to see such realities, but call itself ஒரு எதார்த்த பார்வை :-)

kannaimambathey y said...

பெற்றோர் அரசு வேலையில் இருந்தால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீடு சலுகை இழக்கிறார்கள் என்றால், அவர் தாயோ தந்தையோ வேறு ஒருவரோடு குடும்பம் நடத்துபவராக அல்லது அவர்கள் பொறுப்பற்ற ஒரு ஊதாரியாக இருந்தால் அவர்கள் பிள்ளைகள் சலுகை பெற கூடாதா ? ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் இருந்தால் அது முதல் தலை முறையாகவே இருந்தாலும் யாராவது ஒருவருக்கு மட்டும் வேலை கொடுக்க வேண்டுமா ?
இட ஒதுக்கீடு எந்த இடத்தில தேவைப்படுகிறது! ஒரு வலுவான இனத்தில் இருப்பவர் அதிகாரம் பெற்றார் என்றால், அவர் தனது இன மக்களுக்கே சலுகை தரும்போது மற்ற இன மக்கள் என்ன செய்ய முடியும் . அங்கே இது போன்ற ஒரு சட்டம் தேவைதானே ஏற்ற தாழ்வு இல்லாவிட்டாலும் இந்த மாதிரியான நிலை வந்தால் என்ன செய்வது அப்போது இன அடிப்படையில் % கொடுக்கலாமா ?
இதற்கு என்ன தீர்வு மக்களிடம் இந்தியன் தமிழன் என்ற உணர்வு தவிர வேறு எந்த இன உணர்வும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு தேவை இல்லாமல் போகும். அது சாத்தியமா ? அது இந்த சமுகம் சாத்தியப்படுத்துமா ? குறைந்தது இந்து மத பெரியவர்கள் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஜாதி என்ற கொள்கை இந்து மதத்தில் இனி இல்லை அனைவரும் ஒரே இனம் என்று பெரிய அளவில் அறிவித்தால் என்ன அதை நடைமுறை படுத்த முயற்ச்சி செய்யலாமே.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes