Friday, November 29, 2013

தேசிய அளவிலான தேர்வுகளும்...இந்தி மொழி திணிப்பும்...!

  இன்றைய நிலையில் தேசிய அளவிலான எல்லா தேர்வுகளின் கேள்வித் தாள்களும் இரு மொழிகளிலேயே அச்சிடப் படுகின்றன. முதன்மையாய் ஆங்கிலம், இரண்டாவது இந்தி. போட்டி தேர்வுகளில் இவ்விரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால் அதிகம் பாதிக்கப் படுவது நம் தமிழக மாணவர்கள் மட்டும்தான். அதுவும் முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்று போட்டித் தேர்வுக்கு முயலும் மாணவர்கள்தான். எப்படி என்று கேட்பவர்களுக்கு. இந்தி நம் தேசிய மொழி என்ற தவறான எண்ணம் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. இந்தியா தனது அலுவலக மொழியாக மாநில வாரியாக இருபத்தி இரண்டு மொழிகளை ஏற்றுள்ளது. ஆங்கிலம் எல்லா மாநிலங்களிலும் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது. இப்படி இருக்க ஏன் இந்தியில் மட்டும் கேள்வித்தாள் அச்சிட என்ன காரணம். இந்தியாவின்...

Saturday, November 23, 2013

வெடிக்கட்டும் ஒரு அரசியல் புரட்சி... !

இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக்...

Sunday, July 14, 2013

கழுகு பேஸ்புக் பக்கம்....!

வாழ்க்கையின் போக்கில் நிகழும் மாற்றங்கள் யாரின் விருப்பு வெறுப்பினையும் பொறுத்து அமைவதில்லை. கழுகு இணையத்தில் அடி எடுத்து வைத்து வார்த்தைகளை தட்டச்சு செய்ய ஆரம்பித்த காலத்தில் இணையத்தை அரசியல், ஆதிக்க சாதீய சக்திகள் மிகையாய் சூழ்ந்திருக்கவில்லை. நவீன ஊடக வளர்ச்சி சாமானிய மக்களுக்கு வசப்பட்டே போனது என்று நாம் கருதியிருந்த காலத்தில் எழுதுவதற்கான கோட்பாடுகளாய் அறிவு ஜீவிகளின் உலகம் சமைத்து வைத்திருந்த அத்தனை வரைமுறைகளையும் எம் இளையர்கள் உடைத்து எறிந்து விட்டு தங்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த கவனிக்கத்தகுந்த, சமூகத்திற்கு பயன் தரக்கூடிய ஏராளமான நிகழ்வுகளைப் பதிவு செய்தும் வந்தார்கள். வலைப்பூக்கள் எனப்படும் பிளாக் உலகத்தின் வசீகரமே அது சாமானியர்களால்  கருத்து சொல்ல முடிந்த இடம் என்பதுதான். வலைப்பூக்களைத்...

Tuesday, May 07, 2013

சடுகுடு ஆடும் தமிழக அரசியல்....மிரட்சியில் திருவாளர் பொதுஜனம்...!

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; ...

Sunday, March 03, 2013

பூரண மதுவிலக்கு வருமா? ஒரு காந்தியவாதியின் உண்ணாவிரதப் போராட்டம்...!

சசி பெருமாள் ஒரு சாதாரண காந்தியவாதி. அவர் கவர்ச்சி அரசியலை கையிலெடுக்கவில்லை. விளம்பரப் பதாகைகளை தமிழகமெங்கும் நட்டு வைக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தமது கைத்தடிகள் மூலம் காட்டுத்தீயாய் பிரச்சாரம் செய்து தனது உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக ஊடகங்களின், இணைய எழுத்தாளர்களின் கவனத்தை அவர் ஈர்க்கவில்லை. அவரின் தேவை அரசியல் விளம்பரம் அல்ல. தன்னை இன்னொரு காந்தியாய் காட்டிக் கொள்ள அவர் விரும்பி இருக்கவில்லை. அவருக்குத் வேண்டியது எல்லாம் பூரண மதுவிலக்கு தமிழகம் முழுதும் வேண்டும் அவ்வளவுதான். அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து இரத்தம் கொதித்த என் தமிழ்ச்சொந்தங்கள் யாரும் ஒரு தமிழனின் தமிழர் நலம் வேண்டிய பெரும் கோரிக்கைக்கு இரத்தம் கொதிக்கவில்லை. கொதிக்கவும்  மாட்டார்கள். ஏனென்றால் கூட்டு மனோபாவம் எங்கே...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes