Friday, April 25, 2014

எப்போது நிகழும் எழுவரின் விடுதலை..?

எத்தனை காலங்கள் எங்களை அசுரர்களாகவே ஆக்கிவைத்திருப்பீர்கள்  மனிதர்களே.....? காலமெல்லாம் அசாத்தியத்தை நெஞ்சினில் வைத்துகொண்டு சத்தியம் பேசி நடிக்கும் உங்களையெல்லாம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தான் நாங்கள் சகித்துத் கொள்வது..? இதிகாசமென்று  சொல்லி நீங்கள் ஒரு கதை சொல்வீர்கள் அதில் கடவுள் கதாபாத்திரம் உங்களுக்கு குரங்கு பாத்திரம் எங்களுக்கு! அவதாரம் என்ற பெயரில்   எட்டுகட்டி விஷ்தாரிக்கப்படும் பொய்களுக்கு எங்கள் கூட்டமே உங்களுக்கு உதவி நிற்கும். அப்படி உயிர் கொடுத்து உதவி நின்றாலும் நீங்கள் எங்களை வானரங்கள் என்று தான் அழைப்பீர்கள்  என்ன நியாயம் இது? யார் சொல்லி சென்ற  சமமற்ற  சமூக   நீதி இது..? ராமாயணகாலத்தில் இருந்து திரிக்கப்பட்ட பொய்கள்   இதோ  ராஜிவ்காந்தி கொலை வழக்கு வரை  நீண்டு...

Monday, April 21, 2014

வாக்களிப்பீர்....உதயசூரியன் அல்லது இரட்டை இலைக்கு !!!!

பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் மீது இன்னும் நமக்கு கூடுதல் வன்மம் உண்டு என்பதற்கு ஒரே ஒரு காரணம் ஈழம். ஈழத்தில் நடத்தப்பட்ட கொடுமையான போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் கட்சி என்னும் போது காங்கிரசை ஒரு மானமுள்ள சுயமாரியதைக் கொண்ட எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான்.... ஆதரிக்கவும் கூடாது!!!!! இப்படியான சூழலில் காங்கிரஸ் ஆளவில்லை எனில் வேறு யார் ஆள இருக்கிறார்கள் என்று பார்த்தால் இங்கே நமக்கு இருக்கும் ஒரே மாற்று மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி மட்டும்தான்....என்பதற்காக மோடியை ஆதரிக்க முடியுமா என்ன...? காங்கிரசுக்கு மாற்று பிஜேபி என்று முடிவு செய்து பிஜேபியை ஆதரிக்க கூடாது தோழர்களே மோடி இந்துத்துவா அடிப்படையைக் கொண்டவர். இந்துத்துவா என்பது வேறு இந்து மதம் என்பது வேறு, இந்து மதம் என்பது எளிமையாய் சிக்கலில்லாமல் வாழ பயிற்றுவித்து...

Sunday, April 20, 2014

மோடி என்னும் மாயை.....விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே...!

நான் என் குடும்பத்தாரோடு உறங்கிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று  என் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. நிறைய பேர் கூட்டமாய் கத்திக் கொண்டு என் வீட்டு கதவை உடைப்பது போல தட்டி ஆக்ரோஷமாய் கத்திக் கொண்டிருக்கின்றனர். பயத்தில் எழுந்து என்ன ஏது என்று யோசிப்பதற்கு முன்பே என் வீட்டுக் கதவு உடைக்கப்படுகிறது.... திபு திபுவென்று கோஷமிட்டபடியே என் வீட்டிற்குள் நுழைந்த கூட்டம் என் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்து இழுத்துச் செல்கிறது. என் குழந்தையை இரும்புக் குழாய் கொண்டு இடது பக்கத் தலையில் ஒருவன் அடிக்கிறான், ஆக்ரோஷமாய் அந்தக் கூட்டம் இதை ஏன் செய்கிறதென்றே என்று எனக்குப் பிடிபடவில்லை. என் வீட்டை எரிக்கத் தொடங்குகிறது கூட்டம்.... இரண்டு பேர் சேர்த்து என்னைப் பிடித்துக் கொண்டு தாக்கத் தொடங்குகிறார்கள். என் தலை உடைந்து ரத்தம்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes