Monday, July 19, 2010

ஓளி படைத்த கண்ணினாய் வா...வா...வா!




வளைகுடா ஷேக்குகளிடன் வதை படும் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் வினவு தளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். செளதி அரேபியா பற்றி மிகைப்பட்ட இடத்தில் விமர்சனம் செய்து இருந்தார்கள்....செளதி அரேபியா பற்றி எனக்கு அதிகம் தெரியாதது என்பதால் அது பற்றி கருத்து சொல்ல என்னிடம் ஏதும் இல்லை. ஆனால்....துபாய் பற்றி அவர்கள் தெரிவித்து இருப்பதும்........ஒரு புகைப்படத்தை போட்டு அதற்கு கீழே சோனாப்பூர் கொத்தடிமைகள் கூடாரத்தில் பன்னாட்டு தொழிலாளர்கள் என்று போட்டிருப்பதும் மிகைப்படுத்தப் பட்ட செய்திகள். உலகின் எந்த மூலையாய் இருந்தாலும் ஆண்கள் மட்டும் தங்கியிருக்கும் இடம் அப்படித்தான் இருக்கும்.



துபாயை பொறுத்த வரைக்கும் ஊரில் இருந்து அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் முழு விழிப்புணர்வோடு வருவதில்லை. பல நேரங்களில் லோக்கலில் இருக்கும் ஏஜென்ட் என்று சொல்லக்கூடிய உள்ளூர்க்காரர்கள் விவரித்துச் சொல்லும் தவறான சில கற்பிதங்கள்தானேயன்றி துபாயில் உள்ள நிறுவனங்களின் நிர்வாகிகள் அல்ல. வினவு கூறியிருப்பது போல தொழிலாளர்கலின் போராட்டத்திற்கு பிறகு துபாயில் ஓய்வு நேரம் நண்பகல் 12:30 லிருந்து பிற்பகல் 3 மணி வரை என்ற கால வரையறை நிர்ணயிக்கப்பட்ட்து தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பிறகு என்பது ஒரு தவறான செய்தி....ஏனெனில் இதை நிர்ணயம் செய்ததே தொழிலாளர் நலத்துறை வாரியம் தான்.



வினவு வெளியிட்டுள்ள படி கொத்தடிமைகள் யாரும் துபாயில் இல்லை. அவர்கள் படத்தில் காட்டியிருப்பது துபாயில் சோனாப்பூர் என்ற இடத்தில் தொழிலார் தங்கும் குடியிருப்பு என்றே வைத்துக் கொள்வோம். அவை எல்லாம் மிகப்பெரிய கட்டிடங்கள் எல்லா அறையிலும் ஏ.சி. உண்டு கழிப்பிட வசதி மற்றும் சமையலறை வசதிகள் உண்டு. அங்கொன்றும் இங்கொன்றூம் சீர் கேடான விசயங்கள் இருக்கலாம்.... ஆனால் மிகக் கடுமையான நிர்வாகம் பல்தீயா என்று சொல்லக்கூடிய எப்போதும் ரோந்தில் இருக்கும் துபாய் முனிசிபாலிட்டி அதிகாரிகள், மேலும் சூறாவளியாய் சுற்றி இயங்கும் யூ.ஏ.இ தொழிலாளர் நலத்துறை என்று எவர் பிடித்தாலும் சீர்கேட்டான நிர்வாகத்திற்கு அபராதம் பல ஆயிரம் திர்ஹம்கள் என்பது துபாயில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
யூ.ஏ.யில் தொழிலாளர்கள் நலம் சீரகப் பேணப்படுகிறது, தொழிலாளர்களுக்கு தங்கள் நிர்வாகத்தின் மீது பிணக்கு இருக்கும் பட்சத்தில் மிக எளிமையானமுறையில் தொழிலாளர் நல வாரியத்தில் புகார் கொடுக்கலாம். வரும் புகார்களை விசாரிக்கும் ஒவ்வொரு அதிகாரியும் நேர்மையான முறையில் விசாரித்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஊதியம் மற்றும் சகலுகைகளை தொழிலாளர் சட்டத்திறுகு உட்பட்டு தீர்த்துவைக்கின்றனர். தவறாக நடக்கும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதை நேரிடையாகவே எனது பணி நிமித்தம் தொழிலாளர் நல வாரியத்தில் நான் கண்டிருக்கிறேன். சாதி, மத, நாடு பேதமின்றி பொறுமையாய் எல்லாம் கேட்டு நேர்மையா இவர்கள் வழங்கும் தீர்ப்புகள் புத்தகத்தில் படித்த மனு நீதிச் சோழனை எனக்கு நினைவுபடுத்தியது........



ஒரு விசயம் மட்டும் புரிந்து கொள்ளுங்கள், கல்வியறிவும் போதிய விழிப்புணர்வும் கொண்டு அதிகம் சம்பாரிக்கும் ஆசையில் வந்து இங்கு வெயிலடிக்கிறது அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்வது நமது மிகைப்பட்ட எதிர்பார்புதானேயன்றி வேறேதும் இல்லை.....இந்த உழைப்பை நமது தேசத்தில் காட்ட யாரும் தயாரில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.....இதற்காக நாம்தான் வருந்த வேண்டும் (என்னையும் சேர்த்துதான்) வேறு நாட்டை குறை சொல்வதில் ஒன்றும் பெரிதாய் விடிந்துவிட போவதில்லை.

கழுகிற்காக
தேவா. s



16 comments:

எல் கே said...

thanks for the good informative post dheva. also dont give importance to posts come in vinavu

Prathap Kumar S. said...

உண்மை. சென்னை திருவல்லிக்கேணி மேன்ஷன்களின் நிலைமை இதைவிட மோசம்...
ஒரு போட்டோவை வைத்து ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் குற்றம் சொல்வாது முட்டாள்தனம்... வினவு நிருபருக்கு சவுதிலேருந்து ஒரு புகைப்படம் எடுத்துப்போடமுடில....என்ன நிருபரோ...?

AltF9 Admin said...

துபாயை பொறுத்த வரைக்கும் ஊரில் இருந்து அழைத்துவரப்படும் தொழிலாளர்கள் முழு விழிப்புணர்வோடு வருவதில்லை.
- ithu thaan anaithu pirachanaikalukkum kaaranam..

செல்வா said...

உண்மையை மட்டுமே யாராக இருப்பினும் கூற வேண்டும் ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Good post anna

Unknown said...

இடம் மாறி வேலைக்கு செல்லும் எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைதான் இது..

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் எனும் எண்ணத்தில் பணம் கட்டி செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் தன் சொந்த ஊரில் இப்படி உழைக்க தயாரில்லை..

க ரா said...

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இடம் மாறி வேலைக்கு செல்லும் எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைதான் இது..

வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் எனும் எண்ணத்தில் பணம் கட்டி செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் தன் சொந்த ஊரில் இப்படி உழைக்க தயாரில்லை.. //

நிதர்சனம் செந்தில் அண்ணா.

ஆனால் ஒரு உண்மை என்னனா நம்ம நாட்டுல ஆட்சி பன்ற வர்க்கம் ம்க்களுகு வேலை வாய்ப ஏற்படுத்த தவறிட்டாங்க.

கழுகு said...

கொத்தடிமை கூடாரம் என்று கூறுவது...என்னவோ வேறு யாரையோ கேவலப்படுத்துவதாய் நினைத்துக் கொண்டு....குடும்ப சுமைக்காக பணிக்கு வந்திருக்கும் எம் தோழர்களை அடிமை என்று சொல்வது......சரியான ஒரு வழிமுறையா?

கட்டிட வேலை செய்யும், சுத்தம் செய்யும் தொழில் செய்யும் தொழிலாளிகளுக்குப் பின் இருக்கும் பின்புலமும் கண்ணீர் கதைகளும் தெரிந்தால்......

எம்மால் கட்டுரை எழுத முடியுமா? விமர்சிக்கும் எம்மிடம் தீர்வு இல்லையே......??????

ஜீவன்பென்னி said...

இந்த முறை கோடைக்காலத்தில் மதிய இடைவேளை நேரத்தை அதிகரித்திருக்கின்றார்கள். முக்கியமாக சாலைப்பணி மற்றும் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடைவேளை விட வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று. அதை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

School of Energy Sciences, MKU said...

மிகவும் நன்று. நானும் ஒரு அமீரகவாசி என்ற முறையில் இக்கருத்தினை வரவேற்கிறேன். செய்திகளை மிகைப்படுத்தி ஆதாரமில்லாமல் எழுதுவது தவறு.

பனித்துளி சங்கர் said...

நானும் வினைவின் பதிவை வாசித்தேன் .
தெளிவான விளக்கத்துடன் உண்மை நிலையை மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறது இந்த பதிவு பகிர்வுக்கு நன்றி .

ஜில்தண்ணி said...

வெளிநாடு என்றாலே எல்லோரும் பெரிய கனவு கோட்டை கட்டிவிடுகின்றனர்,அங்கு போகும் போது அது உடைகிறது,அதனால் தான் இது சரியில்லை அது சரியில்லை என்று குற்றம் சொல்கிறார்கள்

போதிய விழிப்புனர்வு தேவை அவர்களுக்கு

அருமையான பதிவு தேவா அண்ணா

தனி காட்டு ராஜா said...

//அதிகம் சம்பாரிக்கும் ஆசையில் வந்து இங்கு வெயிலடிக்கிறது அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்வது நமது மிகைப்பட்ட எதிர்பார்புதானேயன்றி வேறேதும் இல்லை.....இந்த உழைப்பை நமது தேசத்தில் காட்ட யாரும் தயாரில்லை என்பதும் நிதர்சனமான உண்மை...//

உண்மை ..

Jay said...

வினவில் ...
//ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.

துப்புறவுத் தொழிலாளி ஒருவருக்கு எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200 ரியால் வரை ஊதியம் கிடைக்கும், பிலிபைனியாக இருந்தால் 900 ரியால், இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால், இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால், தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்கு கூட ஆட்கள் வருகிறார்கள் (ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபாய்) இது அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து சற்று கூடக் குறைய இருக்கும்.//

இதை பற்றி நீங்கள் விளக்கமாக கூற முடியுமா...

அ.சந்தர் சிங். said...

yaaraithan nambuvatho theriyavillai

dheva said...

ஜெய்

அப்படி எல்லாம் கிடையாது....மிகைப்பட்டவர்களின் ஊதியம் முடிவு செய்யப்படுவது அவர்களின் தாய் நாட்டில் தான்....! இங்கே இருப்பவர்கள் நிர்ணயம் செய்து முறைகேடுகள் இருக்குமென்றால் தொழிலாளர் நலாவாரியத்தை அணுக முடியும் ஜெய்...!


பொதுவாக...எல்ல நாட்டிலும் எல்லா துறையிலும் இது போன்ற நிகழ்வுகள்.....இருப்பது சகஜம்....அது களையப்படவேண்டிய ஒன்று!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes