தினவெடுத்த தோள்கள்...ரெளத்தரம் பழகி நினைவுகள், புலியின் பாய்ச்சல், சிறுத்தையின் வேகம், சிங்கத்தின் கம்பீரம்....தெளிவான சிந்தனை கொண்டு தேசத்தின் இளைஞர்களும் வளர்ந்து வரும் சிறுவர்களும் நடை பயில ஒரு தவிர்க்க முடியாத கருத்துக்களின் களமாய் கழுகு மாறும்...என்று? இன்றா? நாளையா...இல்லை...அடுத்த மாதமா?
கவலையில்லை...செதுக்கும் சிற்பங்களின் செம்மை வெளிப்படுவது சிலையின் முழுமையில்...அதுவரை காத்திருத்தல், கவனித்தல், என்ற இரண்டுமே ஆயுதம்...இன்னும் 10 வருடம் இல்லை 20 வருடம் இல்லை இந்த தலைமுறை தாண்டி அடுத்த தலைமுறை தெளிவாய் சிந்திக்கும்.....! கழுகுக்கு எப்போதும் சமகால அரசியலிலும், சுற்றி நடக்கும் அட்டூழியங்களிலும்...அதிக கவனம் இல்லை என்றுதான் சொல்வேன்...!
கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறதா.... எல்லா பிரச்சினைகளையும் விமர்ச்சிக்க..குரல் கொடுக்க..ஒராயிரம் ஊடகங்கள் இருக்கின்றன...!சம காலத்தில் நடக்கும் அநீதிகளை மிகைப்பட்ட ஊடகங்கள் கிழித்து குதறிக் கொண்டிருக்கும் போது கழுகு மெளனமாய் எதிர் திசையில் பயணிக்கிறது....
மரங்களையும்..கிளைகளையும்...
சீரமைக்கும் போட்டியில்...
கழுகு இல்லை....ஆனால்..
அது...விதைகளை செப்பனிட்டு
நாளைய விருட்சங்களை
படைத்துக் கொண்டிருக்கிறது....!
வளரும் முறையிலும், பிரச்சினைகளை எதிர்க் கொள்ளும் மனப்பாங்கிலும், விசாலமான பார்வையிலுமே ஒரு நல்ல சமுதாயம் பிறக்கிறது. இது வரை நடக்கும் முரண்பாடுகளுக்கு காரணம் வளர்ந்து நிற்கும் கரடுமுரடான முரட்டு மரங்களும், முள் செடிகளும், விஷ செடிகளும்தான்..பரவி விரவியிருப்பதுதான்...இவற்றோடு போரிட ஆயிரம் பேர் இருகிறார்கள்....! நாம் இந்திய அரசியலையும், தமிழ் நாட்டு தலை எழுத்தையும் மாற்றி எழுத சமகாலத்தில் இருக்கும் புரையோடிப்போன சமுதாயத்தில்... போராடினால்...எமது எண்ணமும் பேச்சும் கேலிக்குரியதாய் போகும்.....
விசாலமான பார்வை கொண்ட இளைஞர் கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது... யார் தடுத்தாலும் நவீன ஊடகங்கள் இவர்களுக்கு நாடு கடந்த பரவலையும் அறிவுப் பெருக்கத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்...! சமீபத்தில் விஜய் டி.வி நீயா நானவில் கோபி நாத் கேட்ட கேள்வி இது...." ஜன நாயகத்தை வலைப்பூக்கள் நிறுவுமா? நிலை நிறுத்துமா" என்ற ரீதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் கடினத்தை நிகழ்காலம் சமர்ப்பிக்கலாம்...
ஆனால்...கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள்...1980களில் தொலைக்காட்சிகளின் வல்லமை என்னவென்று? ஒன்றுமில்லை...திங்கள் கிழமை வயலும் வாழ்வும், செவ்வாய் கிழமை நாடகம், புதன் கிழமை சித்ர மாலா, வியாழக்கிழமை மலரும் நினைவுகள், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், சனிக்கிழமை இந்திப்படம் ஞாயிற்று கிழமை தமிழ்ப் படம்....இதுதானே தமிழனின் தொலைக்கட்சி அனுபவமாயிருந்தது...இன்று....
தமிழனை கட்டிப் போட்டு அவனின் சிந்தனைகளை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக விசுவரூபமெடுத்திருக்கிறதே....? வலைப்பூக்கள் இந்த மீடியாக்களை சர்வ நிச்சயமாய் உடைக்கும்....ஏனெனில் இங்கே சிந்திப்பவன் மட்டுமெ எழுத முடியும்...மெலும் எழுதுபவன் எல்லாம் கட்டுக்களின்றி சுதந்திரமாய் எழுத முடியும்..........
அங்கே நிறுவப்படப்போவது ஜன நாயகம் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்....? அடுத்த 10 வருடத்தில் வலைப்பூக்களின் ஆளுமையை யாராலும் தடுக்க முடியாது என்பது மட்டுமே உண்மை...!
கழுகின் பாதை....விதைகளை செம்மைப்படுத்துவதிலும்...அதை பேணி வளர்ப்பதிலும்....
பரவட்டும்...அறிவுத்தீ....
அதில் பொசுங்கி அழியட்டும்....தீமைகள்...!
கழுகிற்காக
தேவா.s
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
10 comments:
//மரங்களையும்..கிளைகளையும்...
சீரமைக்கும் போட்டியில்...
கழுகு இல்லை....ஆனால்..
அது...விதைகளை செப்பனிட்டு
நாளைய விருட்சங்களை
படைத்துக் கொண்டிருக்கிறது....!//
KAZAHUKIN ILAKKU ENNA ENPATHU THELIVAAGIVITTATHU.
//தமிழனை கட்டிப் போட்டு அவனின் சிந்தனைகளை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக விசுவரூபமெடுத்திருக்கிறதே....? வலைப்பூக்கள் இந்த மீடியாக்களை சர்வ நிச்சயமாய் உடைக்கும்....ஏனெனில் இங்கே சிந்திப்பவன் மட்டுமெ எழுத முடியும்...மெலும் எழுதுபவன் எல்லாம் கட்டுக்களின்றி சுதந்திரமாய் எழுத முடியும்..........//
yes. correct. me also
#பரவட்டும்...அறிவுத்தீ....
அதில் பொசுங்கி அழியட்டும்....தீமைகள்...!#
நிச்சயமாக அதற்கான நாட்கள் வெகு தூரம் இல்லை
//பரவட்டும்...அறிவுத்தீ....
அதில் பொசுங்கி அழியட்டும்....தீமைகள்...//
நிச்சயமாக அதற்கான நாட்கள் வெகு தூரம் இல்லை
கண்டிப்பாய் நடக்கும்
தமிழனை கட்டிப் போட்டு அவனின் சிந்தனைகளை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக விசுவரூபமெடுத்திருக்கிறதே....? வலைப்பூக்கள் இந்த மீடியாக்களை சர்வ நிச்சயமாய் உடைக்கும்....ஏனெனில் இங்கே சிந்திப்பவன் மட்டுமெ எழுத முடியும்...மெலும் எழுதுபவன் எல்லாம் கட்டுக்களின்றி சுதந்திரமாய் எழுத முடியும்..........
......உற்சாகமூட்டும் விஷயம்!
தமிழனை கட்டிப் போட்டு அவனின் சிந்தனைகளை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக விசுவரூபமெடுத்திருக்கிறதே....? வலைப்பூக்கள் இந்த மீடியாக்களை சர்வ நிச்சயமாய் உடைக்கும்....ஏனெனில் இங்கே சிந்திப்பவன் ..எழுத முடியும்...மெலும் எழுதுபவன் எல்லாம் கட்டுக்களின்றி சுதந்திரமாய் எழுத முடியும்..........//
நானும் ரசித்த வரிகள் இதுதான் தேவன்..மிக அருமை..
//கழுகின் பாதை....விதைகளை செம்மைப்படுத்துவதிலும்...அதை பேணி வளர்ப்பதிலும்..///
நிச்சயம் நாமும் அதன் வழியில் செல்வோம் ..!
கருத்து சுதந்திரந்தை அதிகரிக்க வேண்டியதில்லை. நம் உரிமைகளை நாம் அறிந்து கொண்டாலே விழிப்புணர்வு கிட்டும். வலையுலகம் அதற்கொரு அடித்தளம் இடும்.
கழுகைப் பற்றி... சும்மா தோனிச்சு
கூண்டில் அடைப்பதற்கு இது கிளியல்ல(சொன்னதையே சொல்லாது). கவ்விக்கொண்டு (வாசகர் மனதை) உயரப் பறக்கும்
கழுகின் பயணம் சிறக்கட்டும்..
Post a Comment