ஆழ்ந்த மெளனங்களுக்குப் பின்னால் இருக்கும் கவனிப்புகளை அனுபவங்களாக்கி கொண்டிருக்கிறோம். கால சுழற்சியில் ஏற்படும் மன மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களின் ஓட்டங்களும், திட்டங்களும் திசைமாறிச் செல்வதை கவனிக்க முடிகிறது. மிகைப்பட்ட மனிதர்கள் பொதுபுத்தியின் பின் நடந்து கொண்டும், சத்தியத்தின் வேர்களைப் பற்றிய விழிப்புணர்வு இன்றியும் இருப்பதாகவே படுகிறது.
விளம்பரங்களும் அதனால் வரும் புகழ்களும் மனிதர்களின் மனதை கவ்விப் பிடித்து அதன் போக்குகளில் ஏதாவது செய்து தம்மை தக்க வைத்துக்க் கொள்ள போராடும் முயற்சிகளையும் அறியப் பெற முடிகிறது. அரசியலும் சினிமாவும் தமிழனின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து இருக்கும் அதே வேளையில் அது பற்றிய விழிப்புணர்வுகள் சீர்கேட்டை உண்டு பண்ணுபவர்களாலலேயே பரப்பப்படுவது அந்த பரப்பலில் கிடைக்கும் பரபரப்புகளில் தங்களில் அரிதாரமுகங்களை வெளிக் கொணர்ந்து பல்லிளித்து, வாய்கோணி அகத்தின் ஆயிரம் அழுக்குகளை மறைத்து புறத்தில் தம்மை சமூக காவலர்களாய், மக்களின் பிரதி நிதிக்களாய் பிரதிபலிக்க முயன்று முயன்று கயவர்களின் மூளைகள் கயமையால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சமீபத்திய உதாரணம் எந்திரன் என்ற செல்லுல்லாய்டு பொழுது போக்கு பற்றிய ஆதரவு எதிருப்பு கருத்துக்கள் என்ற சொன்ன மட்டோடு வாய் பொத்திக் கொள்கிறது கழுகு. ஏனென்றால் மில்லி மீட்டர்களில் கூட எமது எழுத்துக்கள் அந்த திசை நோக்கி நகராது என்ற தீர்மானத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை. பகிரப்படும் செய்திகள் மனிதனின் ஆற்றலை அதிகரிக்கவைக்க வேண்டும் மாறாக உணர்ச்சியை தூண்டவும் எமது புலமையை எடுத்தியம்பவும் வகையில் இருக்க கூடாது என்ற எண்ணம் எம்மிடம் திண்ணம்.
அரசியலை போதிக்கவும், சமூகத்தில் சக மனிதரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஜன நாயக கடமைகள் என்ன அதை ஏன் செய்யவேண்டும் செய்யாவிடில் என்ன நிகழும்? அந்த நிகழ்வுகள் எப்படி நம்மை பாதிக்கும்? சுகாதரமான வாழ்க்கை என்றால் என்ன? என்று போதிக்க நாதியற்ற ஒரு ஊடக அரசியலுக்குள் சிறு குழந்தையாய் நாம் நடை பயின்று வரும் வழியெல்லாம் எமது நாசிகளை அடைத்து கொண்டு நடக்கும் அளவுக்கு அசிங்கங்கள்.....? ஏன் களையப்படவில்லை அல்லது இதற்குள் அமர்ந்து கொண்டு மெளன்ட் எவரெஸ்ட் பற்றி எப்படி பேசுகிறார்கள்....? கேள்விகள் எல்லாம் கேள்விக்குறிக்கு பதிலாக ஆச்சர்ய குறிகள் தாங்கி எம்மை கேலி செய்கின்றன.
நல்ல பதிவர்களின் படைப்புகள் எல்லாம் முடங்கிப்போய்விடாமல் இருக்க.. கழுகினை வாசிக்கும் தோழர்கள்.. உங்களின் பங்களிப்பினை இவ்விழிப்புணர்வு போரில் கொணர நல்ல கட்டுரைகளை எமக்கு மின்னஞ்சல் மூலம் தருவியுங்கள். யாருக்கோ எதற்கோ அல்ல நமது பயணங்கள் இவை நாம் வாழ.. மனிதம் செழிக்க...!
கழுகின் பேட்டிகள் பற்றிய அதீத ஆர்வத்தை கொஞ்சம் வரைமுறை படுத்தி நிதானித்து செல்லும் வகையில் எமது அனுபவங்கள் கொடுத்துள்ள போதனைகளின் படி... சிறந்த பேட்டிகளை தருவித்தலுக்கான குழு அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் மேலும் பதிவர்கள் தாண்டி ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களிடமும் பேட்டிகள் எடுக்கவிருக்கிறோம்.
ஆக்கப்பூர்வமாய் மனிதர்கள் வாழ.. தொலை நோக்குப் பார்வையும், விசால அறிவும் வேண்டும்....அதற்கான முயற்சியின் ஒரு வடிவமாய் ஆன் லைன் புத்தகங்களைப் பட்டியலிட்டு தேவைப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் செய்யவிருக்கிறோம்.
பெரும் சமுதாயத்தின் நடுவே நாம் சீராய் செல்ல....வலு கொண்ட.. கரங்கள் இணைய வேண்டும்....கழுகின் கரங்கள் எப்போதும் நீண்டிருக்கின்றன...சத்தியங்களையும் உண்மையைகளையும்....விசால அறிவுகளையும் நோக்கி....!
(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
19 comments:
//.கழுகின் கரங்கள் எப்போதும் நீண்டிருக்கின்றன...சத்தியத்தங்களையும் உண்மையைகளையும்....விசால அறிவுகளையும் நோக்கி....!//
தொடர்ந்து செல்வோம் ...!!
உயர பறக்கட்டும்...
வெறிச்சோடிப் போயிருக்கின்றன
மயக்கும் வசீகரமில்லா வீதிகள்...
கவர்ச்சியிலும் பொழுது போக்கிலும்
கழிந்து கொண்டிருக்கிறது காலம்....!
எப்போதுமி இருந்ததில்லை
ஆள் அரவங்கள்...
சத்தியக்காட்டின் செறிவுகளுக்குள்!
எங்கேயோ நிகழும்
நிகழ்வுகள்.. நமது வீட்டின்
கதவு தட்டும் வரை...
அது யாருக்கோ....!
இந்த பயணத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளகிறேன்
//பகிரப்படும் செய்திகள் மனிதனின் ஆற்றலை அதிகரிக்கவைக்க வேண்டும் மாறாக உணர்ச்சியை தூண்டவும் எமது புலமையை எடுத்தியம்பவும் வகையில் இருக்க கூடாது என்ற எண்ணம் எம்மிடம் திண்ணம்.//
வாழ்த்துக்கள்
kazhu thelivaagave irukkinradu.
thodarattum....
கழுகு பாதையில் இருந்து விலகாமல், ஒரு பக்கமாக சாயந்து பறக்காமல் இருக்கும்வரை கழுகின் நீண்ட இறக்கையில் ஒரு சிறகாக இருக்க முயற்சிப்பேன்.... :)
Template மாத்துதுனதுல Followers option காணவில்லை என்று நினைக்கிறன் ......Followers Option வைத்தால் நெறைய பேரை சென்று அடைய நன்றாக இருக்கும் என நெனைக்கிறேன் தேவா அண்ணா...
//ஆக்கப்பூர்வமாய் மனிதர்கள் வாழ.. தொலை நோக்குப் பார்வையும், விசால அறிவும் வேண்டும்....அதற்கான முயற்சியின் ஒரு வடிவமாய் ஆன் லைன் புத்தகங்களைப் பட்டியலிட்டு தேவைப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் செய்யவிருக்கிறோம்//
அருமையான திட்டம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் குமுறி கொண்டு தன இருக்கிறான் .எதாவது வழியில் ஒரு நல்ல சமுதயத்தை உருவாகிட .அது கழுகின் முலம் இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற வழிவகுக்கும் என்றே நினைக்கிறன் .நானும் இதில் இன்னைந்து கொள்கிறேன்
கழுகு நல்ல நல்ல சிந்தனைகள் கொண்டு இன்னும் இன்னும் மனிதனை உயர்த்தி ஒரு மகா சக்தி அவனுள் புகுத்தி ஆகத்தை கூட்டி மேலே மேலே பறக்கட்டும். வாழ்த்துக்கள்!
//ஆக்கப்பூர்வமாய் மனிதர்கள் வாழ.. தொலை நோக்குப் பார்வையும், விசால அறிவும் வேண்டும்....அதற்கான முயற்சியின் ஒரு வடிவமாய் ஆன் லைன் புத்தகங்களைப் பட்டியலிட்டு தேவைப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் செய்யவிருக்கிறோம்//
நாம இன்னும் நிறைய செய்வோம் :)
கழுகின் கூரிய பார்வை போலவே இருக்கட்டும் நமது செயல்கள்
எது வேண்டுமானாலும் செய்ய நானும் தயார்
கழுகின் பேட்டிகள் பற்றிய அதீத ஆர்வத்தை கொஞ்சம் வரைமுறை படுத்தி நிதானித்து செல்லும் வகையில் எமது அனுபவங்கள் கொடுத்துள்ள போதனைகளின் படி... சிறந்த பேட்டிகளை தருவித்தலுக்கான குழு அமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் மேலும் பதிவர்கள் தாண்டி ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுனர்களிடமும் பேட்டிகள் எடுக்கவிருக்கிறோம்.
......கழுகு, மென்மேலும் சிறக்க - பறக்க - வெற்றி பெற வாழ்த்துக்கள்! நிறைய நல்ல ஐடியாக்கள் இருப்பது தெரிகிறது..... Keep Rocking!
Followers option வைத்து விட்டோம் சுட்டிகாட்டியதற்கு நன்றி தனிகாட்டு ராஜா
nall karutukkalai masala tadavi kodukka vendum balakumaranin karutai sujata nadiel i will wait for it
மென்மேலும் சிறக்க - பறக்க - வெற்றி பெற வாழ்த்துக்கள்!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
கழுகு உயர பறக்கட்டும்.வாழ்த்துக்கள்.
Post a Comment