Monday, April 18, 2011

இணையம் என்னும் வசியக்காரன்....ஒரு பகீர் ரிப்போர்ட்!


இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்? கேள்விக்கு விடையை கொடுக்க அவரவரின் மனோநிலைதான் முடியுமென்றாலும் கழுகு தனது சிறகடிப்பில் கண்டறிந்த விடயங்களை இக்கட்டுரையின் மூலம் உங்களுக்கு கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...!

 

எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம்? அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..


இண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன?


இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளில் அதிக கவனம் செலவழித்து விட்டு ஜீவனுள்ள, கூடவே இருக்கும் உறவுகளுக்கு நேரம் ஒதுக்காமல், வேலை செய்யுமிடத்திலும் சரிவர கவனம் செலுத்த முடியாமலும், ஒரு விதமான மன அழுத்தத்துடனே இருப்பது.


Types of internet addiction:
1. Always want to open any kind of websites
2. chat rooms
3 .Interactive games
4. Database search engine
5. Pornography
6. cybersex

சரி, ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
உங்களுக்குள்ளாகவே சில கேள்விகளைக் கேட்டு அதற்கு உண்மையான பதில்களும் கொடுத்து விட்டு  பின்பு தொடருங்கள்.
1.இதற்கு முன்பாக செய்த அல்லது இனி செய்யப் பொகும் ஆன்லைன் ஆக்டிவிட்டிகளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

2.அதிகப் படியான நேரத்தை ஆன்லைனில் செலவிட்டால்தான் உங்களுக்கு ஒரு சேட்டிஸ்வேக்‌ஷன் கிடைக்கிறதா?

3.நான் அதிகமான இணையத்தைப் பயன்படுத்துகிறேன், இதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா?

4.நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இணைய வசதி தடைப்பட்டால், அதன்பின்பு நீங்கள் moody யாகவோ, restless ஆகவோ, இல்லை ஒரு விதமான மன அழுத்தத்துடனோ காணப்படுகிறீர்களா?

5.இணையத்தில் நீங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் செலவிட்ட நேரத்தை விட தற்பொழுது, அதிகமான நேரத்தை செலவிடுவதாக உணர்கிறீர்களா?

6.இப்படிச் செய்வதால், நீங்கள் உங்கள் ரத்த உறவுகளையோ, இல்லை.. வேலை, படிப்பு என்று எதையாவது இழந்திருக்கிறீர்களா?

7.இதைச் செய்வதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ இல்லை உங்கள் மேலதிகாரிகளிடமோ அடிக்கடி பொய் சொல்ல நேரிடுகிறதா?

8.உங்கள் முக்கிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது ஒரு வடிகாலாக அமைகிறதா?

மேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.

Matrimoniyal lawyers சொல்கிறார்கள், தற்பொழுது படித்தவர்கள் கொண்டு வருகின்ற விவாகரத்து வழக்குகளில் இந்த இண்டெர்னெட் அடிக்‌ஷன் ஒரு மோசமான பங்கை வகிக்கிறது என்பது நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. பெரும்பாலும் 30+ வயதுடைய ஆண்களும் பெண்களுமே இந்த அவல நிலையை அடைகிறார்கள்.

இத்தகைய பழக்கம் உடையவர்கள், எப்பொழுதும் சோஷியல்  ஆக்டிவிடிகளில், அதாவது உறவினர் திருமணம், பிறந்த நாள் விழாக்களில் பங்கு பெற விரும்புவதில்லையாம். அத்தோடு தங்களுடைய அன்றாடத் தேவையான வேலைகளைக் கூட விருப்பமில்லாமல் செய்வது.
பள்ளிக்கு அனுப்பிய தன்குழந்தையைக் கூட கூப்பிட செல்லாமல், மறந்து இரவு வரையிலும் இணையத்தில் செலவிட்ட தாயின் கதையைப் படித்தவுடன் மனது மிகவும் கனத்துத்தான் பொய் விட்டது.

இப்படிப்பட்டவர்கள்  தங்கள் குடும்ப உறுபினர்களிடம் அடிக்கடி சொல்கின்ற ஒரு விசயம் என்னவென்றால், நான் இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது சந்தோசமாக இருக்கிறேன், என் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள், லீவ் மீ அலோன் என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இப்பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் ரியல் டைம் நண்பர்களை, உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சிலர், தான் எப்பொழுதும் ஆன்லைனில் இருப்பதைப் பெருமையாகவும் எடுத்துக் கொள்கிறார்களாம். இது இப்பழக்கத்தின் ஆரம்ப நிலையாம்.
இது தவிர்த்து சில அதி பயங்கரமான நிகழ்வுகளும் உண்டு. தேவையற்றஅதிகப்படியான இணைய நண்பர்களைச் சம்பாதிப்பது, சிலர் ஒரு படி மேலே போய், இத்தகைய சில அநாவசியமான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, தங்களின் செக்சுவல் நீட்ஸைப் பூர்த்தி செய்து கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.

சரி, பெரியவர்கள் தான் இப்படி என்றால், ஐயகோ, பள்ளி/கல்லூரிக் குழந்தைகளையும் இந்த இண்டெர்னெட் வலை விட்டு வைக்கவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை. சரி இவர்கள் பாடம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்காகத் தானே பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஒரு சர்வே சொல்கிறது, அதாவது 85% மாணவர்கள் இதனால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லையாம், ஏனென்றால், பெரும்பான்மையான வெப்சைட்கள் அவர்கள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே கொடுப்பதில்லை. அத்தோடு அவர்கள் நேரத்தயும் வீணடிக்கிறது ஆன்லைன் கேம்ஸ் என்ற உருவத்தில்..

சரி இதற்கு என்னதான் தீர்வு என்று பார்ப்போமேயானால், முதலில் நாம் இப்பழக்கத்திற்கு உட்பட்டு இருப்பதாக உணர்ந்தால், முதலில் நம் தப்பை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். பின்பு இதற்கு தகுந்த முறையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சைமுறைகளைப் பெற வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே.. எனவே இண்டெர்னெட் வசதியை அளவோடு பயன்படுத்தி நாம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் வளமாக வாழ்வோம்..கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக
 மகேஷ்வரி

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

12 comments:

ஷர்புதீன் said...

well known maater, but useful

சேலம் தேவா said...

அருமையான ஆய்வுக்கட்டுரை..!!உண்மையிலேயே களையப்படவும்,கவலைப்படவும் வேண்டிய விஷயம் இது.

Chitra said...

மேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.


...... நான் தப்பிச்சிட்டேன்!

Chitra said...

well-written post.

ராம்ஜி_யாஹூ said...

கட்டுரையில் தீர்விற்கு அதிக இடம் கொடுத்து இருக்கலாம்.
நான் கேள்விப் பட்ட/படித்த தீர்வுகள்.

முடிந்த வரை தனிமையாக இருத்தலை தவிர்த்தல், பெருமளவு நேரம் சக நண்பர்களோடு/உறவினர்களோடு/அலுவலக ஊழியர்களோடு/வணிகர்களோடு நேரிடையாக உரையாடிக் கொண்டிருத்தல்.

குறைந்தது ஒரு மணி நேரமாவது சாலைகளை/கோவிலில்/பூங்காக்களில்/நதியில்/கடலில் நேரம் செலவிடுதல்.

வாரம் ஒருமுறை பயணம் செய்தல்.

வைகை said...

இந்த பிரச்சனைகளை தவிர்க்கவே நான் வார இறுதிகளில் இணையத்தை தவிர்த்து விடுகிறேன்!

akulan said...

Good questions.....
It made me think about it Thansks for the information...

வளர்மதி said...

இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி நான் என்று கூட சொல்லலாம். விட்டிலே உள்ளது உள்ளபடி அப்படியே இருக்கும் எப்படி நேரம் போகும் என்றே தெரியாது. எல்லா செய்தி வலைத்தளத்திலும் சென்று எல்லா செய்திகளையும் படித்து விடுவேன்.. சில சமையம் ஒரே செய்தியை வெவேறு வலை தளங்களில் திரும்ப திரும்ப படிப்பதுண்டு. பெற்றோரிடம் கூட அவசர அவசரமாக பேசிவிட்டு இணையத்தை அலசிக்கொண்டு இருப்பது. உலகத்தின் அத்துணை நிகழ்வுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அதில் ஒரு அலாதி இன்பம்... பெருமை, எதை பற்றி யார் பேசினாலும் அது எனக்கு தெரிந்து இருக்கவேண்டு... அவர்களுடன் சரி சமமாக உரையாடுவதில் ஒரு மகிழ்ச்சி.... உன்ன கூட மறந்ததுண்டு. கொஞ்ச காலம் என்னை இப்படி பார்த்த என் கணவர் எனது செயல்களில் உள்ள வித்தியாசத்தை எனக்கு உணரவைத்தார். நான் எவ்வளவு விசயங்களை இழக்கிறேன் என்று புரியவைத்தார் பிறகுதான் எனக்கே அது புரிந்தது ...இப்போதுதான் அதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு கண்டு கொண்டிருக்கிறேன் . நேரத்தை ஒதுக்கி அந்த நேரம் மட்டும் இணையத்தை பார்ப்பது. இப்போது என்னுடைய வேளைகளில் கவனம் செலுத்துகிறேன். இணையத்தில் பொது விசயங்களை பற்றி பேசுவது எழுதுவது எல்லாம் பெருமையாக இருக்கும்.. எதோ நாம் நம் நாட்டிக்கு நல்ல து செய்தது போல் சமுதாயத்தை மாற்றி அமைத்தது போல். அனால் நாம் எவ்வளவு இழக்கிறோம்.. நமை சுற்றி உள்ளவர்கள் நம்ம எவ்வளவு இழக்கிறார்கள் என்று புரியாது. நம் குடும்பத்தில் அருகில் நம்பர்களிடம் உள்ள பிரச்சனைகள எல்லாம் விட்டு விட்டு வேறு வேறு பிரச்சனைகளை பற்றி பேசிக்கொண்டு இருப்போம்... இது ஒரு நோய் மெதுவாக நம்மிடம் பரவி வரும் நோய். இதை உணர்ந்தாலே தீர்வு கிடைத்துவிடும்.

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப நாட்களுக்குப் பின், கழுகு கட்டுரையை படிக்க நேரம் வந்தது.
மிகவும், பயனுள்ள கட்டுரை.

எதுவுமே ஒரு அளவோடு இருந்தால்தான் சரி..
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவோ !

இன்பம் துன்பம் said...

கொல்லங் கொண்டன் அய்யனார் துணை
மகேஸ்வரி ரெம்ப நல்ல இருக்குடா,எழுத்தும் கருத்தும் இன்றைய சுழலில் எல்லோருக்கும்தேவையான் ஓன்று தொடரட்டும் உனது தொண்டு மென் மேலும் எழுத்துலகில் மேன்மை பெற ஐயனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் எல்லா வளமும் பெற்று வளர வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

Anonymous said...

அடகொடுமையே இதுல நான் ஆறுக்கு ஆம் னு தலை ஆடி இருக்கனே ....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes