நாட்டின் வளர்ச்சியை நிர்ணயம் செய்ய ஏதேதோ திசைகளில் திட்டங்களைத் தீட்டுவதை விட பள்ளி பிள்ளைகளுக்கான வழிகாட்டுதலை ஒரு பள்ளி நிர்வாகமும் பெற்ற்றோரும் சிரத்தையெடுத்து செய்தல் வேண்டும். நாளைய தேசத்தை நிர்மாணம் செய்யப் போகும் தேசத்தின் குடிமக்கள் உருவாகும் ஒரு இடமாக பள்ளிகள் இருப்பதன் பின் புலத்தில் ஒரு கல்வி நிலையத்தின் செயல்பாடுகளும் முடிவுகளும்தான் இருக்கின்றன..!
இதோ இந்த கட்டுரையை வாசியுங்கள்.. உங்களுக்கான புதியதோர் செய்தி காத்திருக்கிறது.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, கோடைக்கால விடுமுறை என்று தான் பேரு.. ஆனா, குடுப்பாங்க பாருங்க சம்மர் ப்ரஜெக்டுனு.... அது உண்மையிலேயே பிள்ளைகளுக்குத்தானா? இல்லை பெற்றோர்களுக்காவென்றே தெரியவில்லை. இப்போ சந்தேகம் என்னவென்றால், இந்த வகையான ஆக்டிவிட்டீஸ்கள் எல்லாம் நம்முடைய பிள்ளைகளின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கின்றதா? இல்லை அது ஒரு சுமையாக மட்டும் அமைந்து விடுகிறதா என்பதே..
அதற்காக பள்ளி ஆசிரியர்களைக் குறை கூற விருப்பமில்லை.. ஆதங்கமெல்லாம் கொஞ்சம் இந்த ஆக்டிவிட்டீஸ்கள் கொஞ்சம் பிள்ளைகளுக்கு இண்டெரெஸ்டிங்காகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது. சரி
இந்த மாதிரியான ப்ராஜெக்டுகளை நம்ம பிள்ளைகளையே செய்ய வைப்போம் என்று நன்கு பயிற்சி கொடுத்து.. பாப்பா.. இங்க பாரும்மா.. இந்த படத்தை இப்டி cut பண்ணி ஒட்டுமா என்று அவர்களையே செய்ய வைத்துக் கொண்டு சென்றோம் என்றால், அங்கு அதற்குத் தகுந்த மதிப்பெண்கள் கிடைப்பதில்லை.. மாறாக 99% யார் மிகச் சரியாக செய்து கொண்டு வந்திருக்கிறார்களோ அவர்களுக்கே அதிக மதிபெண்கள்.. இது நியாயம் தானே என்று விசாரித்துப் பார்த்தோமானால், அதன் பிண்ணனியில் பெற்றொர்களின் பங்கே அதிகம் இருக்கும். இப்படி இருக்கும் பட்ச்சத்தில் அந்த ஆக்டிவிட்டிகளின் நோக்கம் சரிவர நிறைவேறவில்லை என்று தானே அர்த்தம்.
இதில் பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது.. ஏனென்றால் அத்தகைய நெருக்கடிக்குள் பாடத்திட்டங்கள் இருக்கிறது.. குறிப்பாக இந்த மாதிரியான Extra curricular activities எல்லாம் அப்படி இருக்கிறது என்றே சொல்லலாம். ஆதலால் பள்ளி நிர்வாகிகளே.. ஆசிரியர்களே.. பிள்ளைகளின் வயதுக்குத் தகுந்த மாதிரியான vocation project களைக் கொடுங்கள்.
இப்போது பெரிய பெரிய CBSE syllabus கொண்ட பள்ளிகளில் செமஸ்டர் முறையில் தேர்வுகளும், மதிப்பெண்களும் வழங்குகிறார்கள். இதில் பார்த்தால் அதிகப்படியான மதிப்பெண்கள் இருக்கிறது acadamics தவிர்த்து..
இந்த மாதிரியான ஆக்டிவிட்டீஸ்களுக்கே வழங்குவதால் தான் இத்தனை பிரச்சனைகளும் என்று தோன்றுகிறது
நல்ல வசதியுடைய பெற்றோர்கள், மிகச் சிறப்பான முறையில் அதிக பணம் செலவழித்து இந்த ப்ராஜெக்டுகளை submit செய்கிறார்கள்… ஆனால் அப்பொழுது தான் கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை இந்த மாதிரியான பெரிய பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது…அதனால்.. இந்த முறையால்.. எங்கே சமத்துவம் இருக்கிறது? பிள்ளைகளின் திறமையை மட்டும் பொறுத்தல்லவா மதிபெண்களும் முன்னிரிமைகளும் வழங்கப்பட வேண்டும். மாறாக இங்கு பெற்றோர்களின் பின்புலத்தைப் பொறுத்தும் அல்லவா அமைந்து விடுகிறது இத்தைகய பாடத் திட்டங்களால்..
சரி.. இது தான் இப்படி என்றால்.. போட்டிகள் என்று ஒன்றை நடத்துகிறார்கள்.. அதிலும் பெற்றோர்களின் ஆளுமையே அதிகமாக இருக்கும். இப்படித்தான்.. திருச்சியில் உள்ள ஒரு பெரிய பள்ளியில்… அதுவும் LKG மாணவர்களுக்கிடையே நடந்த ஒரு போட்டிக்கு… அவனுடைய பெற்றோர் ஒரு லாரி நிறைய.. அப்போட்டிக்குத் தேவையான(?) supporting equipments கொண்டு வந்து இறக்கி விட்டார்கள்… இந்த ஆடம்பரங்கள் எவ்வகையில் நியாயம்? அங்கு கூடி இருக்கும் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன நிலையயும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. இங்கு அந்த பெற்றோர்களை எவ்வகையிலும் குறை சொல்ல முடியாது.. அது அவர்கள் பிள்ளையின் பால் கொண்ட பாசம்.. இதை நிர்வாகமும் எப்படி அனுமதிக்கிறது எனபது வியப்பாகவே இருக்கிறது..
ஆதலால்.. எமது ஆதங்கமெல்லாம்.. பள்ளி நிர்வாகிகளே.. ஆசிரியர்களே.. மாணவர்களின் திறமையையும் அறிவுத் திறனையும் பொறுத்தே மட்டும் பிள்ளைகளை வகைப்படுத்துங்கள்.. Extra curricular activities என்ற பெயரில்.. பெற்றோர்களின் பின்புலம் பண வசதி போன்ற காரணிகள் அதனுள்ளே வராமல் இருத்தல் நலம்.. இக்கட்டுரையின் நோக்கம் பள்ளிகளையோ, ஆசிரியர்களையோ குறை கூறுவதற்காக அல்ல… மாறாக புதிய பாடத்திட்ட வழிமுறைகளியோ.. ப்ராஜெக்டுகள் ம்ற்றும் acadamics தவிர்த்த ஆக்டிவிட்டீஸ்கள் கொடுக்கும் போது எங்கள் பிஞ்சுகளின் மனநிலையையும் கருத்தில் கொள்ளுங்கள்.. என்றே யாம் இந்தக் கட்டுரையின் வாயிலாக எங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் மனதளவில் பிஞ்சு மனங்களுகிடையே வேறுபாடுகள் புகுத்தப் படாமல் காத்து நல்ல இளைய சமுதாயம் படைப்போம்..
உயரட்டும் கல்வியறிவு.. வாழிய இந்தியா..
கழுகிற்காக
மகேஷ்வரி
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
5 comments:
//இந்த படத்தை இப்டி cut பண்ணி ஒட்டுமா என்று அவர்களையே செய்ய வைத்துக் கொண்டு சென்றோம் என்றால், அங்கு அதற்குத் தகுந்த மதிப்பெண்கள் கிடைப்பதில்லை.//
அங்கு வேண்டுமானால் மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். ஆனால், அந்த மாணவர்கள் வாழ்வில் முழு மதிப்பெண் பெறுவார்கள். எந்த சாதனையும் ஒரு நாளில் நிகழ்ந்து விடுவதில்லை. பெற்றோருக்கு பொறுமை அவசியம்.
மிக நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. பாராட்டுக்கள்.
மகேஸ்வரி இந்த பதிவு என் கடந்த காலங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் என் மகன் தோல்வி அடைந்த போட்டியில் வெற்றி பெற்ற என் மகனின் தோழன் இன்று என் மகனிடம் வேலை கேட்டு நிற்கிறான்..
உங்கள் ஆதங்கம் புரிகிறது..
குழந்தைகள் தானாக செய்றதுல தான் சந்தோசம் இருக்குங்க.. அதுவே அவங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.. :)
உண்மையிலேயே பலரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.. மேலும் அதை சொல்லிய விதமும் அருமை..:)
நடுத்தர வர்க்கத்து பெற்றோரின் மனக்குமுறலை வெளிபடுத்தும் பதிவு இது. தொடரட்டும்
Post a Comment