
பாகம் I பாகம் IIபாகம் IIIபாகம் IVபாகம் V
ஊடகங்களின் வளர்ச்சி பற்றிய சென்ற பகுதியில் இந்தியாவில் வானொலியின் வரவு பற்றிச் சிறிது பார்த்தோம். இன்றும் அதான் தொடர்ச்சியைப் பற்றிக் காணலாம்!
இந்திய அரசு உதவ இயலாத நிலையினைத் தெரிவித்திருந்த போது அரசு சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடெங்கிலும் வேண்டுகோள்கள் பிறந்தன. அப்போது வானொலிப்பெட்டிகள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த நிறுனவங்கள் தாம் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான ரூபாய்கள் முடக்கப்பட்டுவிடுமே என்றும் அரசிடம் முறையிட்டனர். ஆப்போதைய அரசு ஒளிபரப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தது. அவ்வண்ணம் 1930 ஏப்ரல் மாதம் முதல் நாளிலிருந்து இந்திய அரசின் தொழில் மற்றும் தொழில்சார் துறையின் கீழ் ( Industries and Labour Department ) " தி இந்தியன் ப்ராட்கேஸ்டிங் சர்வீஸ் ( The Indian...