Monday, February 28, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......!



ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவு அவசியமாகிப் போய் விட்டதும் நமக்குத் தெரியும், ஊடக தர்மங்கள் மீறப்படுவதும் நமக்குத் தெரியும். நாட்டில் நடக்கும் செய்திகளை சாதாரண பாமரன் வரை தெளிவான ஒரு பார்வையோடு கொண்டு சேர்க்கும் ஒரு உன்னதமான பணியினைச் செய்வதில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. 

சாதாரண வாழ்க்கையின் தகவல் பரிமாற்றத்தில் இன்று நேருக்கு நேராய் நாம் இருந்து வீடியோ சாட் செய்வது வரை வளர்ந்து இருக்கும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஊடகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை எழுதும் படி செல்வாவிடம் கூறினோம்....! ஒரு தொடராக வரப்போகும் இதன் முதல் பாகம் இதோ....
 இன்றைய சூழலில் ஊடகம் என்ற ஒன்று இல்லாத வாழ்க்கையை நம்மால் சிந்தித்துப் பார்க்க இயலாது.அச்சு வடிவில் இருந்த ஊடகங்கள் நமக்கு வேண்டிய செய்திகளைத் தந்ததோடு நம்மை மகிழ்விக்கவும் செய்தன, செய்துகொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகத்துறையில் அளவிட முடியா மாற்றங்களை அள்ளி வழங்கியுள்ளது என்றால்  மிகையல்ல.





முதலில் ஊடகங்கள் பெரும்பாலும் அச்சு வடிவிலேயே இருந்தது. பின்னர் வானொலியின் வரவு ஊடகத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதான் பின்னர் வந்த தொலைக்காட்சியும் , பின்பாக இணையம் , இப்பொழுது தொலைபேசியிலும் கூட நம்மால் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது.




இப்படிப்பட்ட ஊடகத்தின் வளர்ச்சிநிலை குறித்தும் , அதான் வரலாறு குறித்தும் அறிந்திட நமக்கு விருப்பம் இருக்கலாம். எனவே இந்தியாவில் ஊடகங்களின் வளர்ச்சி பற்றியும் அதான் வரலாறு பற்றியும் என்னால் இயன்ற அளவு தகவல்களைத் தொகுத்துத் நான்கு அல்லது ஐந்து பாகங்களாகத் தருகிறேன்.




ஊடகங்களின் முன்னோடியான அச்சு ஊடகங்கள் ( அதாவது தினசரி செய்தித் தாள்கள் , குமுதம் , ஆனந்த விகடன் போன்ற வார இதழ்கள் ) மற்றும் எவையெல்லாம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது அவையெல்லாம் அச்சு ஊடகங்களாகும்.


இதழியல் என்பதன் ( Journalism meaning ) பொருள் :


" Journalism " என்ற ஆங்கிலச்சொல்லின் வேர்ச்சொல் " dirnulis " என்ற இலத்தீன் சொல்லாகும். " dirnulis " என்றால் " ஒருநாளின் " என்று பொருளாகும். இச்சொல்லே பின்னாட்களில் " Journal " என்று மாற்றம் பெற்றது.


தோற்றம் மற்றும் வளர்ச்சி : 


அரண்மனை அல்லது அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிக்கவே முதன்முதலில் இதழ்கள் தோன்றின. கி.மு.60 இல் எகிப்து நாட்டை ஆண்ட சூலியசுசீசர் தனது ஆணைகளையும் அரண்மனைச் செய்திகளையும் எழுதித் தெருக்களில் வைத்தார்.இதனை ஆக்டானடர்ணாஎன்றனர். ஆக்டானடர்ணா என்றால் அன்றாட நடவடிக்கை என்று பொருள். இதுவே உலகின் முதல் செய்தித்தாள் என்று கூறப்படுகிறது.


முதல் அச்சு இதழ் :


முதல் அச்சு இதழ் சீனாவில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டடிசிங்பவே என்ற அரண்மனை இதழாகும்.அதில் அரசனின் ஆணைகள் , அறிவிப்புகள் வெளியிடபட்டிருந்தன.




கி.பி.1566 இல் நோட்டிசு கிரிட்டி என்ற இதழ் இத்தாலிய அரசால் வெளியிடப்பட்டது. இது ஒரு கையெழுத்து இதழாகும் . இதைப் படிக்க கெசட்டா என்ற செப்புக்காசு வழங்கவேண்டும். இதுவே அந்த இதழின் பெயராக மாறியது. அரசு இதழ்கள் அனைத்துமே கெசட்டு என்று அழைக்கப்பட்டன. எடுத்துகாட்டாக 


*.பெங்கால் கெசட்டு ,
*.மதராஸ் கெசட்டு ,
*.இலண்டன் கெசட்டு ,
*.சிலோன் கெசட்டு .



வரும் பதிவுகளில் இந்தியாவில் இதழ்கள் பற்றியும் , இந்தியாவின் முதல் இதழான பெங்கால் கெசட்டு பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.
கழுகுகுழுமத்தில் இணைய....

கழுகிற்காக
செல்வா  




(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

12 comments:

எஸ்.கே said...

எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக், தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

Anonymous said...

அறிந்திராத நிறைய 'செய்திகள்' செய்தி ஊடகங்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி.

மாணவன் said...

சிறப்பாக எழுதியிருக்கீங்க செல்வா...
வாழ்த்துக்கள் :)
வரும் பாகங்களில் இன்னும் எதிர்பார்க்கிறேன்...

Chitra said...

கருத்துக் களஞ்சியமாக பதிவு, ரொம்ப நல்லா இருக்குதுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா அலசி இருக்கே தம்பி...
சூப்பர் தொடர்ந்து எழுது.....

அகலிக‌ன் said...

மிகவும் அவசியமான பதிவு. நன்றி‌

வைகை said...

நல்ல முயற்சி செல்வா......

Anonymous said...

சுவாரசியமான தகவல்கள் செல்வா! தொடர்க!

மைதீன் said...

nalla thodakkam

Unknown said...

பிரமாதமான துவக்கம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமை அருமை..... ஆனந்த அதிர்ச்சி... வெல்டன் செல்வா...!

vasan said...

செய்தியைப் பற்றிய‌ செய்திக‌ள். வேரில் இருந்து துவ‌ங்கி இருக்கிறீர்க‌ள். கழுகின் துல்லிய‌ பார்வையின் ஆழ அக‌லம் ஆச்சரியப் படுத்துகிற‌து. செய்திக‌ளால் ந‌ட‌ந்த‌ ச‌மூக‌, அர‌சிய‌ல் திருப்ப‌ம் மாற்ற‌ம் ஆகிய‌வைகள‌யும் க‌ட்டுரைக்குள் இழுத்து வாருங்க‌ள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes