
நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும்.
மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!
அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு...