
ஜனநாயகம் என்ற பெயர் தாங்கிய ஒரு சர்வாதிகார கட்டமைப்புக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இதுவரை நாம் கருதியது இல்லை. அப்படி கருதக்கூடிய சூழல்கள் அனேகமாக வந்திருக்கவில்லை இல்லையேல் எமது புத்திகளுக்கு அது எப்போதும் மறைக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்திய ஊடகங்கள் அதுவும் குறிப்பாய் தமிழ்நாட்டின் ஊடகங்களில் மிகுதியாய் நடத்தப்படும் வேசித்தனத்தை வார்த்தைகளால் மட்டும் விவரித்து விட முடியாது.
ஆமாம்....
கூடங்குளம் அணு உலை பிரச்சினையை ஏடுகளில் வாசித்து விட்டு இது சரி, தவறு என்று கூப்பாடு போடும் என் மானமுள்ள தமிழன், இதே இந்தப் பிரச்சினை யாரோ ஒரு வடநாட்டு ஹசாரேயாலேயோ அல்லது துக்கா ராமாலேயோ கையில் எடுக்கப்பட்டு, இந்திய தேசத்தின் வட மாநிலங்களில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடந்திருக்குமேயானால்... ஒவ்வொரு தமிழனும் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு தெருவில்...