Monday, March 19, 2012

அமெரிக்கர்களின் இரக்கமும்! இந்திய மக்களின் நிராகரிப்பும்!
வணக்கம் இந்திய பெருங்குடி மக்களே! மேலே உள்ள புகைப்படம் 1972 ம் வருடம் அமெரிக்க இராணுவத்தின் விமானங்கள் டிராங்பாங் என்கிற வியட்நாமிய கிராமத்தின் மீது பாஸ்பரஸ் குண்டு மழை பொழிந்த போது உடைகள் முழுவதும் பற்றியெறிய இந்த சிறுமி ஓடி வந்த புகைப்படம் அமெரிக்க நாளிதழ் ஒன்றில் வந்தது, அதைக் கண்ட அமெரிக்க மக்கள் கொதித்தார்கள் வீதிகளில் கூடி போராட்டம் நடத்தினார்கள் வியட்நாம் சுதந்திரம் பெற்றது.


ரத்த உறவும் இல்லை தன் நாட்டை சேர்ந்தவர்களும் இல்லை தன் நாடு அடிமைப்படுத்தியிருக்கும் ஒரு நாடு அந்த மக்களுக்காக அமெரிக்கர்கள்  கொதித்தார்கள் ஆனால் சொந்த நாட்டின் சகோதரர்கள் இலங்கை வீதிகளில் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டு சிறுமிகள் கூட கற்பழிக்கப்பட்டு நடுவீதியில் பிணமாய் தூக்கியெறிந்த புகைப்படம், நகரும் படங்கள் கண்டும் பிற இந்தியர்கள் மௌனமாய் இருப்பதின் மர்மம் என்ன? அகிம்சை நாடு என கூறும் நாட்டில் வாழும் உங்கள் மனதில் ஈரம் என்பது இல்லையா? இல்லை தமிழனுக்காக நாம் வருந்தக் கூடாது என்கிற எண்ணமா? இந்தியாவில் தமிழன் தீணடத்காதவனா?

ஆஸ்திரேலியாவில் அடிபட்ட பணக்கார வடஇந்திய மாணவனுக்கு பிரதமர் கடிதம் எழுதுகிறார், கண்ணீர் உவர்க்கிறார் கண்டனம் தெரிவிக்கின்றன இந்திய பத்திரிக்கைகள் ஏழை தமிழன் உயிர் உங்களுக்கு பெரிதாக தெரியவில்லையா….இந்திய மக்களே இந்த தமிழ் சமுதாயம் உங்களிடம் கண்ணீருடன் கேட்கிறோம்

குஜராத் பூகம்பத்தில் அதிக நிதிகொடுத்த மாநிலம் தமிழநாடு. கார்கில் யுத்தத்தில்
அதிக நிதி கொடுத்த தமிழ்நாடு, கன்னடர், ஆந்திரர் மலையாளி, என வந்தவரை வாழ வைத்த தமிழநாடு இன்று இவனுக்காக ஒரு எதிர்ப்பு குரல் இல்லாமல் போய் விட்டதே மற்ற மாநில மக்கள் மனதில் தமிழனுக்கு தரம் இல்லையா…வடநாட்டில் இருந்து பிழைக்க வந்து சுகமாக வாழும் நீங்கள்  தமிழனுக்காக ஒரு குரல் கொடுக்க மாட்டீரா பிரதமரின் மனதை அசைத்திட தமிழனின் குரல் போதாது..போதாது ஒட்டு மொத்த இந்தியாவே பொங்கியெழுந்தால்தான் இத்தாலி ராணியின் கைப்பாவை மன்மோகன் சிங்கின் மனதில் துளியாவது ஈரம் சுரக்கும்.

இந்தியாவில் நாங்கள் இருக்கிறோம் என்று உங்களை நாங்கள் நம்ப வேண்டும் என்றால் நீங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் அங்கு வாழும் எம் சகோதரர்கள் அமைதியுடன் வாழ வழி வகுக்க வேண்டும் அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு இருப்பிடங்களை உருவாக்க நாம் முனைய வேண்டும் தமிழர்களை தவிர இந்தியர்கள் யாரும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது எங்களுக்கு மனவேதனையளிக்கிறது உங்கள் தேவைகளுக்கு என்றால் தமிழன் வேண்டும், ஆட்சி நிலைக்க தமிழன் வேண்டும் அப்படித்தானே…

அவனுடைய துயரங்களில் நீங்கள் எந்த பங்களிப்பும் செய்ய மாட்டீர்கள் பிறகு நாங்கள் எப்படி இந்தியர் என்று எப்படி கூறுவது? உங்கள் கொடியை நாங்கள் எப்படி தேசிய கொடியாக ஏற்றுக்கொள்வது...? எங்கோயோ பிறந்த தாகூரின்  தேசியகீதத்தை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் சிந்தியுங்கள் தோழர்களே! எங்கள் கண்ணீருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

ஒரு இனத்தையே அழிக்க துணைபோன தமிழக அரசியல்வாதிகள் மிச்சமிருக்கும்
தமிழ்மக்களை தீக்குளித்து காப்பற்ற போகிறார்களா….இல்லை..இல்லை நாங்கள்
அவர்களை நம்பவில்லை, இந்திய மக்களே உங்களை தமிழர்களாகிய நாங்கள் நம்புகிறோம். உங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பு குரலே அவர்களை காப்பாற்றும் இந்திய சகோதர சகோதரிகளே உங்கள் சகோதரர்கள் நாங்கள் என்றால் எங்கள் ரத்த உறவுகள் உங்களுக்கு உறவுகள் இல்லையா? இலங்கையில் வாழ்வது..தமிழர்கள் என்று நினைக்க வேண்டாம் அவர்களும் மனிதர்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.

ராசபக்‌ஷே உதவமாட்டார் விடுதலைபுலிகளோ உதவும் நிலையில் இல்லை அப்படியே ராஜபக்ஸே பச்சாதாபம் காட்டுவது போலவும் பரிதாபம் கொள்வது போலவும் நடித்து அவர்களை ஏமாற்றி ஆடு மாடுகளைப்போல் அடிமைகளாக்கிவிடலாம் சொந்த மண்ணில் தான் உழுத மண்ணில் தான் வாழ்ந்த பிரதேசத்தில் அடிமைகளாக தமிழ்ச்சமுதாயம் மலர  வேண்டுமா நாளை நம் குலப் பெண்கள் ஈழ வீதியிலே மானத்துடன் வாழ முடியுமா…?

ரத்தகறை படிந்த முசோலினியின் கரங்களை தொட்டு கைகுலுக்க மாட்டேன் என உரைத்த நேரு. அவர் பரம்பரையின் வழிவந்த சோனியா தமிழ்மக்களின் மீது பாஸ்பரஸ் குண்டுகளை தெளித்த ராஜபக்ஸேவுடன் கைகுலுக்குவது என்ன நியாயம்? சோனியாவுக்கு இந்திய வரலாறு தெரியாது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு தெரியாதா…..தமிழக பயணத்திலே மேலாடையில்லாமல் திரிந்த தமிழர்களைப் பார்தது கண்ணீர் விட்டாரே மகாத்மா இன்று அமிலங்களை தமிழர்கள் மேல் தெளித்து அவர்தம் தோலையே உரித்த காட்சி பார்த்து உங்களுக்கு கண்களில் கண்ணீர் வரவில்லையா இல்லை உங்கள் மனம்தான் கல்லாகிப்போனதா ஆளும் காங்கிரஸாரே…..!

இந்திய மக்களே! உலக மக்களே! உங்களின் குரல் தமிழர்களின் வாழ்வை காக்க வேண்டும் உண்மைக்கு குரல் தாரீர்! கல் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி அம் மொழி பேசும் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர குரல் தாரீர்! அவர்களின் வாழ்வு சிறக்க குரல் தாரீர்! ராஜபக்ஸேவை போர்க் குற்றவாளி என அறிவிக்க, மத்தியில் ஆளும் அரசு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி குரல் தாரீர்! தாரீர்! தாரீர்!


கண்ணீருடன்....
தமிழக மக்கள்


கழுகிற்காக
வீடு K.S.சுரேஸ்குமார்

(கழுகு இன்னும் உயரப் பறக்கும்)


16 comments:

Anonymous said...

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!
செம்மை மறந்தாரடி!!

:-(

வேதனையுடன்
***மைத்ரேயி***

nigalkalathil siva said...

வியட்நாம் என்ற நாட்டிற்காக அமெரிக்க நாட்டு மக்கள் துடித்த்னர். ஆனால் ஒரே நாட்டில் நமது தமிழ் மாநில உறவுகள் படுகொலைக்கு நமது நாட்டு மற்ற மாநில மக்கள் கிளர்ந்தெழ மறுக்கும் அவலம் நிதர்சனமான உண்மை., இந்த கட்டுரை அவரவர்க்கு அவரவர் மொழியில் சென்று சேர்ந்தால் இதன் நோக்கம் நிறைவேறும்....

நன்றி வீடு சுரேஸ்குமார்

NAAI-NAKKS said...

Nalla kevi....
Inthiya makkalai..
Senradiuma...??????

Intha post-i
anaithu
inthiya mozhigalilum.....
Senradiya....
Uthavungal.....

PATHIVARGALE...

UNMAIKAL said...

சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.

இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

FOOD NELLAI said...

தங்கள் கருத்துக்களின் வேகம் அனைவரையும் சென்றடைய வேண்டும். நல்ல முயற்சி.

சைதை அஜீஸ் said...

நாம் தமிழர்கள் என்பதைவிட இந்தியர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்ள நாம் இழந்தவை... உதாரணத்திற்கு, கோலார் தங்க வயல், திருப்பதி கோயில், பீர்மேடு மேலும் கச்சத்தீவு, இப்படி பல.
நம் பறந்த மனப்பாண்மையை இவர்கள் "கோழைத்தனம்" என்று எண்ணிவிட்டனர்!
நம் தலைவர்களோ கடிதங்களில் கதை வசனமும், மேடைகளில் நாடகங்களும் அறங்கேற்றுகின்றனர்.
பல நாடுகளில் மனிதநேயத்தை கொன்றுகுவிக்கும் அமேரிக்காவே வெட்கப்படும் அளவில் இலங்கையில் நடந்த அவலங்களுக்கு இந்திய அரசு இனியும் துணை செல்லுமானால், நான் ஏன் இந்தியனாக இருக்கவேண்டும்?
நான் இந்தியனா என்பதை இந்தியாவே முடிவெடுக்கட்டும்.
அடுத்த முறை "மா துஜே ஸலாம்" என்று கூறும் முன் ஒராயிரம் முறை யோசிப்பேன்.

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் எழுத்தின் வேகமும் ஆதங்கமும் நன்றாகவே புரிகிறது....!!!

சைதை அஜீஸ் said...

UNMAIKALகூறியது....

நண்பரே முதலில் புரிந்துகொள்ளுங்கள், இந்த கட்டுரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானது அல்ல.
தவறு யார் செய்தாலும் அது தவறுதான்.
கட்டுரையின் நோக்கத்தை திசைதிருப்பாமல், இன அழிப்பு சம்பவத்தை எதிர்க்க, நாம் இந்திய அரசை வற்புருத்துவோம்! நெறுக்குவோம்!

nigalkalathil siva said...

இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; லோக்சபாவில் பிரதமர் அறிவித்தார் ஓப்பனாக

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=429884

எல்லோருடைய எண்ண அழுத்தம் நிறைவேறிவிட்டது...!!

வீடு K.S.சுரேஸ்குமார் said...

இலங்கைக்கு எதிரான தீர்மாணத்திக்கு ஆதரவு அளிப்பதாக லோக்சபாவில் அறிவிப்பதோடு நிறுத்திவிடாமல், நம் பிரதமர்....நிவாரண பொருள்களையும், மருத்துவ உதவிகளையும்,இருப்பிடத்தை சீரமைக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஆவல்.....

சம்பத்குமார் said...

வணக்கம் சுரேஸ்

உங்களின் எண்ணம் கண்டிப்பாய் நிறைவேறும்.

போரில் மடிந்த காயமுற்ற என் சொந்தங்களின் விடியல் வெகுதொலைவில் இல்லை.

எல்லாம் மாயா said...
This comment has been removed by the author.
விக்கியுலகம் said...

உரைக்கும்கறீங்க...புலம்பும் கோடிக்கணக்கான தமிழர்களில் நாமும்!

Yellow Rose said...

காங்கிரஸ் இருக்கும் வரை
தமிழினம்
மானத்தோடு வாழும் என நான் நம்ப வில்லை...!

இந்திய மண்ணிலேயே தமிழன்
எங்கும் மதிக்கப்படுவதில்லை,
அந்நிய மண்ணில்
மனிதனாகவே பார்க்கப்படுவதில்லை...!

'அப்பனை கொன்ற நாகப்பனை'
கொன்றே தீருவதென்ற
ராகுல் காந்தி முடிவுக்கு
தமிழகத்திலேயே
சிலர் சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள்...!!

மழையாய் குண்டுகள் பொழிந்தது
மாவீரன் படை அழிந்தது
மானங்கெட்ட காங்கிரஸ்
மார் தட்டிச் சிரித்தது...!

இலங்கையில்
இறந்த தமிழினத்தைக் கண்டு
இளித்தது
இந்திராவின் பேரப்பிள்ளை

இதற்கு,
இந்தியா கரம் கொடுக்க,
இதைக் கைக்கட்டி வேடிக்கை பார்த்தான்
இந்த திருவாரூர் திருட்டுப்பிள்ளை...!

கொடுங்கோலன்
கூண்டில் நிற்க வேண்டும்,
என் தாய் தமிழினம் அதற்கு
துணை நிற்க வேண்டும்...!!!

--தனாகுட்டி...

நிரூபன் said...

Hi guys, imm really appreciate about your work. Suresh, we are very proud of you. Thanks for you emotional and conterversial post.

தமிழ்சேட்டுபையன் said...

மக்களாகிய நம்முடைய போராட்டமே மத்திய அரசை அசைக்கும் என்பதை கூறும் விதமான கட்டுரை!தமிழன் என்றாலே டெரரிஸ்ட் என்று கூறியே காங்கிரஸார் தமிழனுக்கு கிடைக்க கூடிய நீதியை தடுத்துள்ளார்கள்.உலக அரங்கில் இலங்கைக்கு எதிர்ப்பு வலுபெறுவது நல்ல அறிகுறிகளே. நன்றி கழுகுக்கும் கட்டுரை ஆசிரியர்க்கும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes