பதிவுலகம் என்னும் மாயா உலகில் எழுத்துக்களால் கிடைக்கும் நட்புக்கள் அந்த மாயக்கட்டினை உடைத்து தூர எறிந்து விடுகின்றன. ஆமாம்... மணிஜி மாதிரி அனுபவமிக்க மனிதர்கள் மாற்றுக் கருத்துக்களை பகிரும் போது கூட உதட்டில் புன்னகையை ஏந்தி அன்புடனே இதைப் பகிர்கிறார்கள். இணைய நட்பு வட்டத்தில் யாராலும் மறுக்க முடியாத நேசத்துக்குரிய மணிஜி அவர்களிடம் இருந்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல நிறைய பழைய பதிவர்களுமே கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றன.
பேட்டிக்காக நாம் மணிஜி அண்ணனை அணுகிய போது தோளில் கை போட்டு சாகவாசமாய் நம்மோடு பேசத் தொடங்கினார்...பேட்டி கொடுக்குமளவிற்கு நான் இன்னும் வளரவில்லையே என்று அவர் கூறியது அவரின் இயல்பான மனோநிலையை எடுத்துரைத்தாலும், தண்டோரா என்னும் வலைப்பூ மூலம் அன்றும் இன்றும் என்றும் கலக்கும் மணிஜியின் படைப்பாற்றல் திறன் என்னவென்று அவரை வாசித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்...! இதோ மணிஜியின் கலக்கல் பேட்டி உங்களுக்காக...
மணிகண்டன்..........அன்பு மணிஜி ஆனது எப்போது எப்படி?
என்னிடம் ஒரே ஒரு கதர் ஜிப்பா இருக்கிறது என்பதை தவிர எனக்கும் ஜீக்கும் எந்தவித ஸ்நானப்ரார்ப்தியும் இல்லை.. பெயர் சுருங்குதல் பிரபலத்தின் அடையாளம் என்ற விதிப்படி மணிஜி ஆகி விட்டேன்:-)
உதவி இயக்குனராய் இருந்த நீங்கள் தனியாய் திரைப்படம் இயக்கும் இலக்கை விடுத்து விளம்பர உலகத்திற்கு மாறியது ஏன்?
சினிமா ஒரு மாயக்கிணறு.. கற்பனையில் நீச்சலடிக்க சுகமாக இருக்கும்.... எல்லோராலும் ஜெயிக்க முடிவதில்லை.. திருமணம் ஆகிவிட்டதால் , தாக்கு பிடிக்க முடியாமல் சினிமாவை விட்டு வெளியேறும் சூழல்.. லட்சியம் என்ற வெங்காயத்தை நான் கண்ணீருடன் உரிக்கலாம்.. ஆனால் நம்பி வந்தவளுக்கு என்ன தலையெழுத்து!!
உதவி இயக்குனராய் இருந்த போது உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் என்ன...?
ஜீவிதம் ஒரு ராகம் என்று ஒரு மலையாளப்படம்.. வயநாட்டில் படபிடிப்பு.. பிரேம் நசீரின் மகன், சாதனா நடித்தது.. மம்பட்டியான் முதலில் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமானப்படம்.. திடீரென்று தயாரிப்பாளரை காணவில்லை.. என்னோடு சேர்த்து 4 உதவி இயக்குனர்கள்.. அத்துவான காட்டில் நிற்கிறோம். கையில் சல்லிக்கூட இல்லை.. கொலைப்பட்டினியோடு ஒரு டெம்போவில் கெஞ்சி கேட்டு பாலக்காடு.. அங்கிருந்து வித்தவுட்டில் சென்னை.. (சென்னை வந்தும் பட்டினிதான் என்பது தனிக்கதை)
முதல் முதலாய் நீங்கள் இயக்கிய குறும்படம் எது...?
டிஜிடல் சினிமா மேக்கிங் என்றொரு க்ராஷ் கோர்ஸ் படித்தேன்.. நவீன தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து கொள்ள.. அது முடித்தவுடன் ஒரு குறும்படம்.. அதாவது பிராஜெக்ட் படம் செய்தேன். மிஸ்ஸிங் லெட்டர்ஸ் என்பது படத்தின் பெயர்.. நாம் இருவர்..நமக்கு இருவர் என்பது நமக்கு ஒருவர் ஆனது.. எதிர் காலத்தில் நாமே இருவர்.. நமக்கேன் இன்னொருவர் என்று ஆனால்? அதுதான் கரு . அத்தை ,மாமா, சித்தப்பா என்கிற உறவுகள் அழியும் நிலையை பிரதிபலிக்க முயற்சித்திருந்தேன்.. அந்தப்படத்தின் சிடி காப்பி என்னிடம்(இப்போது) இல்லை.. மிஸ்ஸாகி விட்டது:-)
குறும்படங்கள் எந்த அளவிற்கு சமூகத்தில் தாக்கத்தை உண்டு பண்ண முடியும் என்று நினைக்கிறீர்கள்...?
ஆத்மதிருப்தி.. எல்லோருக்கும் விமானம் ஓட்ட ஆசைதான்.. ஆனால் சாத்தியமா? ஆனால் எல்லோராலும் காத்தாடி விடமுடியும்.. குறும்படமும் அப்படித்தான்.. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால் , முடியாது என்பதுதான் என் கருத்து.. பரவலாக எல்லோரையும் குறும்படங்கள் சென்று அடைவதில்லை என்பதினால் இருக்கலாம்..
குறும்படங்களை காண்பதற்கு இணையம் மட்டுமே உதவுகிறது என்று வைத்துக் கொண்டால் அது வெகு ஜனங்களிடம் சென்று சேர முடியாது தானே?
உண்மைதான்.. ஆனால் தமிழ் ஸ்டூடியோ போன்ற அமைப்புகளின் பணி மகத்தானது.. அது போல இன்னும் நிறைய அமைப்புகள் குறும்படங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தால் வரும் காலத்தில் சாத்தியமாகலாம்
எதிர் காலத்தில் திரைப்பட இயக்குனர் ஆகும் திட்டமிருக்கிறதா?
நிச்சயம்.. ஒரு நல்ல படத்தை எடுப்பேன்.. ஆனால் நிச்சயம் ஓடாது..
விளம்பர நிறுவனம் நடத்தி இருக்கிறீர்கள்...அதனால் இந்த கேள்வி ....ஒரு நல்ல விளம்பரம் ஏதோ ஒரு கெட்ட பொருளைக் கூட விற்று விட முயலுகிறதே இதில் என்ன தர்மம் இருப்பதாக நினைக்கிறீர்கள்...?
நாய் வித்த காசுதான்..
வலையுலகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்....?
நான் வலையுலகத்துக்கு வருவதற்கு காரணம் தமிழ் ஸ்டுடியோ திரு அருண் தான்.. பின் ஜாக்கிசேகர்.. . இப்போது அவர்கள் வருத்தப்படக்கூடும்.. ஆனாலும் அவர்களுக்கு என் நன்றிகள்!!
தற்போது படைப்பாளிகள் என்றாலே மேதாவிகள்...மற்றும் வெகு ஜன சாதரணர்களுக்கு அன்னியமானவர்கள் என்பது போல நடந்து கொள்கிறார்களே இது பற்றி உங்கள் கருத்து...?
:-))))))))
இலக்கியவாதிகள் என்ற பெயரில் சராசரி வாசகனை குழப்பத்தில் ஆழ்த்தும் எழுத்துக்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?
தலைகீழாகத்தான் பார்க்கிறேன்..அதாவது சரக்கடித்த ஃபீலிங்கோடு
வலைப்பூக்கள், சமூக இணைய தளங்கள் இவற்றின் வளர்ச்சி எதிர்காலத்தில் சமூகத்தை பாதிக்குமா?
இனிமேலும் பாதிக்க ஏதாவது மீதி இருக்கிறதா? இப்போதே கற்பழிப்புவரை முகப்புத்தகம் வந்து விட்டது
மிக மிக முக்கியமான கேள்வி.......தங்கள் இளமையின் ரகசியம் என்ன?
மனம் போல் வாழ்க்கை.. (ஆனாலும் இந்த கேள்வி நெம்ப ஓவர்)
நீங்கள் பார்த்து வியக்கும் மனிதர் யார்?
கமல்ஹாசன்
முதல் முறையாக கேமராவை தொட்டுப் பார்த்த போது என்ன நினைத்தீர்கள்..?
நான் உதவி இயக்குனராக இருக்கும்போது கேமராவை தொட அனுமதியில்லை.. மீறி வ்யூ ஃபைண்டரில் பார்த்தால் அபராதம் கூட உண்டு. முதல் முறை கேமராவை தொட்டபோது , உண்மையில் காதலியின் முதல் ஸ்பரிசத்தை விட சுகமாக இருந்தது
அரசியலில் ஈடுபடும் எண்ணமிருக்கிறதா?
ஜீனியர் விகடன் கழுகார் நீங்கள் இல்லையே பாஸ்:-)
பணிச்சுமையையும் சமாளிக்கிறீர்கள்... இணையத்திலும் சிக்சர் அடிக்கிறீர்கள் எப்படி...?
பணிச்சுமை என்று இல்லை.. என் வேலையை நான் மிக விரும்பி செய்கிறேன். மேலும் அது எனக்கு ஆகாரமும், ஆதாரமும்.. இணையத்தில் சிக்ஸர் என்பதெல்லாம் டூ மச்.. நண்பர்களுடன் இணைந்திருப்பது மிகவும் பிடித்த விஷயம்.. உட்கார்ந்த இடத்தில் இருந்து அது இணையத்தில் சாத்தியமாகிறது..
ஜாலியாக இருப்பதற்கு டிப்ஸ் கொடுங்களேன்....?
ஜாலியாக இருங்கள்..
இணைய உலகத்திற்குள் நீங்கள் வந்ததால் பெற்றது என்ன? இழந்தது என்ன?
ஒன்றையும் இழக்கவில்லை.. ஆனால் நிறைய பெற்றிருக்கிறேன். நட்பு, அன்பு..கொஞ்ச(ம்) காதல்:-)
தற்போது வலைப்பூவில் எழுதுவபர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் எழுதுங்கள்.. வாசிப்பவர்கள் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள்..
--
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
26 comments:
ஜாலியாக இருப்பதற்கு டிப்ஸ் கொடுங்களேன்....?
ஜாலியாக இருங்கள்.//
:-))))))))
மிக அருமை...உண்மைகள் அப்பட்டமாய் வந்து விழுந்த விதத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. //தற்போது வலைப்பூவில் எழுதுவபர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் எழுதுங்கள்.. வாசிப்பவர்கள் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள்..// ரொம்பப் பிடித்தது. இதைப் போன்ற நல்ல பேட்டிகள் கழுகை மேலும் உயரப் பறக்க உதவி செய்யும்.
//லட்சியம் என்ற வெங்காயத்தை நான் கண்ணீருடன் உரிக்கலாம்.. ஆனால் நம்பி வந்தவளுக்கு என்ன தலையெழுத்து!!//
எதார்த்தமான உண்மை.
திருமணம் ஆகிவிட்டதால் , தாக்கு பிடிக்க முடியாமல் சினிமாவை விட்டு வெளியேறும் சூழல்.. லட்சியம் என்ற வெங்காயத்தை நான் கண்ணீருடன் உரிக்கலாம்.. ஆனால் நம்பி வந்தவளுக்கு என்ன தலையெழுத்து!!
superb
காமெடியும்,கருத்துகளும் உள்ள நல்ல பேட்டி..!! முக்கியமாக (லட்சியம் என்ற வெங்காயத்தை நான் கண்ணீருடன் உரிக்கலாம்.. ஆனால் நம்பி வந்தவளுக்கு என்ன தலையெழுத்து!!) இது மிகவும் பிடித்த பதில். :)
யதார்த்தம்....
வெகு யதார்த்தமான பதில்கள்....... அருமையான படைப்புத்திறனுடன் இருக்கும் மிகச்சில பதிவர்களுள் மணிஜீயும் ஒருவர். அவரது லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்!
அருமை மணிஜி! அருமை மணிஜி! அதும் அந்த புது ஆளுங்களுக்கான டிப்ஸ் டாப். எல்லாத்தையும் எழுதினா வேணும் என்பதை எடுத்துக்க போறான் வாசகம். இதான் டாப். நல்ல பேட்டி மணிஜி. கழுக்குக்கு என் நன்றிகள்!
அருமையான நேர்காணல்.
நன்றி.
அந்த ஃபோட்டோவில், மகேந்திரனுக்கும் மணிஜிக்கும் முன்னால் இருக்கிற வாத்தியார் யார்?
//எல்லோருக்கும் விமானம் ஓட்ட ஆசைதான்.. ஆனால் சாத்தியமா? ஆனால் எல்லோராலும் காத்தாடி விடமுடியும்..//
//பெயர் சுருங்குதல் பிரபலத்தின் அடையாளம்//
//ஜாலியாக இருப்பதற்கு டிப்ஸ்....
ஜாலியாக இருங்கள்..//
//நாய் வித்த காசு//
//தலைகீழாகத்தான் பார்க்கிறேன்..அதாவது சரக்கடித்த ஃபீலிங்கோடு//
மணிஜி ராக்ஸ்!
அனுபவங்கள் ரொம்ப அழுத்தமாய் பேசுகிறது... அத்தனையும் எழுத்தில் ஏற்றுங்கள் படிப்பவர்க்கு வேண்டியதை அவரவர் எடுத்துகொள்வார் என்ற கடைசி வரிகள் நிதர்சனமான உண்மை....
இலக்கியவாதிகள் என்ற பெயரில் சராசரி வாசகனை குழப்பத்தில் ஆழ்த்தும் எழுத்துக்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?
தலைகீழாகத்தான் பார்க்கிறேன்..அதாவது சரக்கடித்த ஃபீலிங்கோடு\\
சேம் பிளட் மணிஜி..:))))))
இதுபோன்ற எழுத்துகள் இயல்பாக வருவது மணிஜிக்கே சாத்தியம் :))
அருமை. பல விஷயம் வெளிப்படையா சொல்லியிருக்கார்
" ஒரு படம் எடுப்பேன். ஆனா ஓடாது " சான்சே இல்லை !
எங்க தோளில் கை போட்டு பேசிய உணர்வு. மணிஜியை பார்த்து நாளாச்சு என எண்ண வைக்கிறது பேட்டி
யோசிக்காமல் பளிச் பதில்கள்..அலட்டல் இல்லாமல்..இதுவும் வெற்றிக்கும் சந்தோஷத்துக்கும் ஒரு காரணமா இருக்கலாம்..
கடைசி கேள்விக்கு பதில்
அங்க தான் நிக்கறார் மணிஜி.
நல்ல நேர்காணல்.
இலக்கியத்தை பற்றி சொன்னிங்க பாருங்க.....மணிஜி! ராக்ஸ்!
Super
வாய்ப்பளித்த கழுகு குழுவினருக்கும் , பின்னூட்ட்டமிட்டு ஊக்கப்படுத்திய நன்பர்களுக்கும் என் அன்பும் நன்றிகளும்...
வாவ்! :))
இயல்பான பேட்டி. கலக்கிட்டீங்க மணிஜி
மணிஜி..நேர்ல எப்புடியோ, பேட்டியும் அப்படியே. அருமையான பதிவு.
அருமை மணிஜி :)))
செம :)))
மணிஜி கலக்கிட்டீங்க ))
@கழுகு,
அவருக்கு இதெல்லாம் சோளப்பொறி மாதிரி. இன்னும் எடக்கு மடக்கா கேட்டு பதில் வாங்கியிருந்தா, வாசகர்கள் அனைவருக்கும் இன்னும் பெரிய விருந்து கிடைத்திருக்குமே?!
சூப்பர்.
செம.
Post a Comment