சீரான எமது சிறகடிப்பில் சரியான பார்வைகளை கழுகின் வாசகர்களுக்கும் மற்ற இணைய உலாவிகளுக்கும் கொடுப்பதை எமது கடமையாகக் கொண்டிருக்கிறோம். சமகாலத்தில் அரசியல் பற்றிய தெளிவுகளை எம் மக்கள் அவ்வளவு எளிதாக பெற்று விட முடியாமல் பொய்கள் எல்லாம் உண்மையைப் போலவே வேடமிட்டு ஆதாரங்கள் என்று கூறிக் கொண்டு மனித உணர்ச்சிகளை தூண்டும் செயல்களை திட்டமிட்டே ஆனால் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியான ஒரு கொடும் வேலையின் கோடாரிக் காம்பைத்தான் இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தங்களின் கருத்துக் கோர்வையாக கையிலேடுத்திருக்கிறார்கள். ஈழப்போராட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் எந்த மானமுள்ள தமிழனும் மறக்க முடியாது என்றாலும் மீண்டும் அங்கே தனித் தமிழ் ஈழம் பிறக்க, ஒரு தமிழர் அரசு அமைய என்ன செய்யவேண்டும்....? எப்படி தமிழ் சமூகம் நகரவேண்டும்...? என்பதை சரியாக திட்டமிடாமல் தமிழர்களை ஒன்று சேர்க்கிறேன் பேர்வழி என்று இன்றைய தமிழ் தேசியவாதிகள் அடிக்கும் அரசியல் கூத்துக்கள் எதுவரை வந்திருக்கிறது என்றால்....
பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரை சாடி அவரை தெலுங்கர் என்று கூறி தத்தமது மேடைகளில் பெரியாரின் படத்தை வைக்க கூடாது என்று தீர்மானம் இயற்றும் புற்று நோயை மூளைகள் செயற்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது.
இங்கே தமிழ்த் தேசியம் பேசும் போர் முரசுகள் தமிழர்களை தமிழர்கள் என்ற அடைப்பிற்குள் நிற்க வைத்து தமிழர் ஒற்றுமையை வளர்க்கிறேன் பேர்வழி என்று மனிதர்கள் என்ற அடையாளத்தை சுத்தமாய் மழித்துக் கொண்டு விலங்குகளாய் மாறத் தொடங்கி இருக்கிறார்கள்.
திராவிடம் என்ற வார்த்தை தமிழ் மொழியில் இல்லை, திராவிடம் என்பது தமிழர்களை ஏமாற்ற உயிர்ப்பிக்கப்பட்ட ஒரு சொல் என்றெல்லாம் பரப்புரை செய்து சமகால இளையர்களின் மூளைகளை எல்லாம் சலவை செய்து வரலாறு என்ன என்று அறியவிடாமல் உணர்ச்சியினை உசுப்பி விட்டு.....தமிழர் என்ற வட்டத்திற்குள் அடைத்து விலங்குகளாய் திரிய விட்டு நாளை தமிழர் அல்லாதவர் ஒருவர் தண்ணீர் கேட்டால் கூட கொடுக்க கூடாது என்று எண்ணுமளவிற்கு மனநோயினை விதைக்கவும் செய்கின்றனர்.
திராவிடம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதாரச் சொல் என்பதை எப்படி தமிழ் தேசியவாதிகள் மறந்து போனார்களோ, அப்படியேதான் இன்றைக்கு நாம் சுதந்திரமாய் பேசவும், கல்வி கற்கவும், சமூகத்தின் எல்லா பதவிகளிலும் சரிக்கு சமமாய் எல்லோரும் இருக்கவும், மூடநம்பிக்கைகள் இன்றி மனிதராய் வாழவும், தந்தை பெரியார் என்ற பெரும் சுடர்....உதவியது என்பதையும் வசதியாய் மறந்து போய் விட்டனர்.
ஆரியர்களின் அடக்குமுறைகள் மனித சக்தியைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டது அல்ல அது சமயோசித மூளைகளால், சாதி, மதம், சடங்குகள், இன்னபிற மூடநம்பிக்கைகள் என்று மனோதத்துவ ரீதியான ஒடுக்குமுறைகள் கொண்டது. இதை தமிழர்களுக்கான ஒரு பிரச்சினையாய் மட்டும் தந்தை பெரியார் போன்ற அறிவிற் சிறந்தவர்களால் எப்படி பார்த்திருக்க முடியும்..?
என் இனமும் வாழ வேண்டும் என்பதுதானே பேரறிவும், விசாலபார்வைகளும் கொண்டவர்களின் ஆசையாக இருக்க முடியும்..., மாறாக என் இனம் மட்டுமே வாழ வேண்டும் வேறு எவரைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை என்பது போன்ற தான்தோன்றித்தனங்கள் எல்லாம் எப்படி மானுட நேயமாகும்...?
தந்தை பெரியார் மானுட நேயத்தோடு ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கு போராட, ஒடுக்கப்பட்ட மக்களை எல்லாம் ஒன்று சேர்க்க கட்டியெழுப்பிய வீரிய மிகு வார்த்தைதான்
திராவிடம்...!
அதை தான் வாழ்ந்திருந்த, தன்னைச் சூழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி விழிப்புறச் செய்ய சரியாக பயன்படுத்தினார். மக்களை அடிப்படையில் விழித்தெழச் செய்து அவர்களைக் கொண்டே போராடச்செய்யும் வழிமுறைதான் திராவிடம்..... !அந்த வழிமுறையில் பிறந்ததுதான் தந்தை பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம். அது இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற வாதத்துக்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம் அது கட்டுரையின் மையக்கருத்தை விட்டு எங்கோ கூட்டிச் சென்று விடும்.
ஈழத்தில் இன அழிப்பை நடத்தி முடித்த கொடுங்கோலன் ராஜபக்சே மீதும், அதை நடத்த உதவிய காங்கிரஸ் கட்சியின் மீதும் நமது இருக்கும் கோபம் சரியானது என்றாலும் இந்த இன அழிப்பின் வஞ்சிப்பினை எப்படி முறியடித்து தனித் தமிழ் ஈழம் பெறுவது என்பதை சீமான் போன்றவர்கள் இதுவரை சரியாய் உணராமல் தமிழர்களை ஒன்று சேர்க்கின்றேன் பேர்வழி என்று ...இன்று நாம் தலை நிமிர்ந்து வாழ அயராது உழைத்த தந்தை பெரியாரை புறக்கணித்து அடுத்த தலைமுறையினரிடம் அவரை இருட்டடிப்பு செய்யும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
தனித் தமிழ் ஈழம் அமைவது என்பது தமிழகத்தில் வாழும் தமிழர்களால் நிகழ்த்தப் பெற வேண்டுமெனில் இந்திய அரசியலில் குறிப்பிடத் தகுந்த ஆளுமையை, வலுவினை தமிழர்கள் பெறவேண்டும். இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு இந்தியப் பேரரசின் பகுதியாய் இருக்கும் தமிழகத்தில் இருந்து ஒரு தமிழ் பேசும் இந்தியனாய் இருந்துதான் இக்காரியத்தை சாதிக்க வேண்டும். இதுதான் சரியான அறிவுசார் நகர்வாகும். அதைச் சரியாய் செய்யும் ஒரு வலுவான அரசியல் கட்சியின் பின்னால்தான் நாம் திரளவும் வேண்டும்....
எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய போது அவர் சேர தேசத்து தமிழராய் ஏற்றுக் கொண்ட சீமான் வகையறாக்கள், தனித்தமிழ் ஈழம் அமைவதை ஆதரிப்போம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாதான் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வதில் ஆதார சக்தியாய் நின்றார் என்பதையும் வசதியாய் மறந்து போனார்கள்....
இன்றைக்கு பெரியாரையும், கலைஞரையும் தெலுங்கர்கள் என்று கூறி இவர்கள் செய்யும் அரசியல் எவ்வளவு மடத்தனமானது என்பதை அறிவுள்ளவர்களின் ஆய்வுக்கே இந்தக் கட்டுரை விட்டு விடுகிறது. தமிழர்களாய் இன்று அடையாளம் காணப்படும் அத்தனை பேரும் தொழில் ரீதியாக, உறவு ரீதியாக, தென் தமிழ்நாட்டின் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் தொடர்புகளோடு இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் இன்னமும் வெகு தீவிரமாய் ஆராய்ந்து நோக்கினால் தமிழகத்தின் வளர்ச்சியில் ஆதார சக்தியாய் இருக்கும் பல பெருமக்களின் மூலம் பல மாநிலங்களாய் இருக்கலாம்..அவர்களை எல்லாம் தமிழர்கள் இல்லை என்று விரட்டி விட முடியுமா? அப்படி செய்தல் பைத்தியக்காரத்தனம் ஆகாதா?
இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வாழ்ந்து இங்கே ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்காய் தனது கடைசிக்காலம் வரை மூத்திர வாளியை தூக்கிச் சென்று தெருத்தெருவாய் நின்று போராடிய பெரியாரை மறுத்துவிட்டு இங்கே செய்யப்படும் அரசியல் எல்லாம் செல்லாக்காசுதான் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள் எப்படி நம்மை நாளை வழி நடத்த முடியும்?
காவிரி பிறப்பது கர்நாடகாவில், முல்லை பெரியாறு நீர் ஆதாரம் இருப்பது கேரளாவில் என்று ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பெரும் தேசமாய் விரிந்து கிடக்கும் இந்தியா என்னும் நாட்டில் தமிழர் ஒற்றுமையாய் இருப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அவர் மனிதராய் இருப்பபதும் எனபதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்தானே...?!
ஜனநாயகம் என்பது எப்போதும் தோற்றுப் போன வழிமுறை அல்ல, அஹிம்சை என்பது அக்கிரமங்களின் கூட்டும் அல்ல....! இளையர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு மூளைச் சலவை செய்து சாகத் துணிந்து நில் என்று வெறியர்களாய் மாற்றுவது எப்படி சரியான வழிமுறையாகும்...?
தேர்தல் என்னும் அரசியலில் ஜனநாயகம் என்னும் துப்பாக்கியின் உதவியுடன் கொள்கைகள் என்னும் தோட்டாக்களை வெடிக்கச் செய்து உரிமைகள் என்னும் வெற்றியைப் பெறுவதே....நவீன மானுட யுகத்தின் மிகப்பெரிய அறிவுப் புரட்சி...!
ஜனநாயக வழியில் போராடி, போராடி வேறு வழியின்றி நம் இனத்தைக் காக்க ஆயுதத்தை எடுத்த ஒரு வீரனின் படத்தை வைத்துக் கொண்டு, ஒரு ஜனநாயக நாட்டிற்குள் நின்று கொண்டு தமிழர் ஒற்றுமை பேசுகிறேன் பேர்வழி என்று மனிதநேயத்தையும், மாபெரும் தமிழக வரலாற்றையும் தங்கள் வசதிக்கு ஏற்றார் போல எழுதிக்கொள்ளும் வேலையை இன்றைய தமிழ் தேசியவாதிகள் தங்களின் சுயநலத்துக்காய் செய்து கொள்வது வரலாற்றில் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.
40 தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் போர் முரசு கொட்டி இந்திய அரசை பணிய வைத்து அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாய் இந்தியாவை வாக்களிக்கச் செய்தது எப்படியோ.....
அதே போல 40 தமிழக எம்.பிக்களும் ஒரு சேர தொடர்ந்து இந்திய பாரளுமன்றத்தை உலுக்கி....அதற்கு தமிழகத்தை ஆளும் தமிழர் அரசும் இன உணர்வோடு நின்று ஆதரவு அளிக்கும் அந்தப் பொழுதில்....
தமிழ் ஈழம் அமைவதும், தமிழகத்தில் இருக்கும் தமிழர் நலம் பெறுவதும் தவிர்க்க முடியாத விடயமாகிப் போகும்...! இதை இன்றைய இளையர்கள் உணர்ந்து உணர்ச்சிவயப்படும் ஒரு அரசியல் கூட்டத்தை விட்டு வெளிவந்து அறிவுசார் பாதையில் பயணித்து.... நமது குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற பெருங்கனவை இக்கட்டுரையின் மூலம் விதைத்து கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
22 comments:
விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி தொடரட்டும்....படிக்கும் 10 பேரில், ஒருவர் கொஞ்சமாய் உலுக்கப்பட்டாலும் கழுகின் முயற்சி வெற்றியே!!
மிகவும் அருமையான கட்டுரை. போலி தமிழ்தேசியவாதிகளின் முகத்திரையையும், அவர்களின் திரிபுகளையும் கிழிக்கிறது. மேலும் இதில் கலைஞர் மீதான தெலுங்கர் என்ற பொய்க்குற்றச்சாட்டைப் பற்றி குறிப்பிட்டிருப்பதால் அது சம்பந்தமான ஒரு விளக்கத்தை அளித்துவிடுகிறேன்.
கலைஞரை இசை வேளாளர் எனச் சொன்னால் தமிழர் என ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால் 'சின்னமேளம்' என அழைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்த அண்ணாவை (அண்ணாவின் தந்தை செங்குந்த முதலியார் வகுப்பு எனினும் அண்ணாவின் தாயார் பொட்டுக்கட்டப்பட்ட இசைவேளாளர் பெண்) பெரியமேளம் என்றும், கலைஞரை சின்னமேளம் என்றும் திராவிட இயக்கத்தினர் விளையாட்டாக அழைப்பது வழக்கம். அதைத்தான் இந்த கேடுகெட்ட நாய்கள் சின்னமேளம் என ஒரு சாதி இருந்ததாக திரிக்கிறார்கள். Ms.Subbulakshmi கூட இசைவேளாளர் தான். இசைவேளாளர்கள் அதிகமாக காணப்படுவது கோயில்கள் அதிகம் இருக்கும் தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் தான். இசைவேளாள சமூகம் என்பது தமிழிசைத்தொண்டு புரிந்து வரும் சுத்தத்தமிழ் சமூகம்.
தமிழ் மணம் பட்டை என்ன ஆச்சு?
periyar kannader...tamilar illai...eniyum engalai eemarthamudiyathu...nooru koodi sampathar....
ஈழத்தில் இன அழிப்பை நடத்தி முடித்த கொடுங்கோலன் ராஜபக்சே மீதும், அதை நடத்த உதவிய காங்கிரஸ் கட்சியின் மீதும் நமது இருக்கும் கோபம் சரியானது என்றாலும்//
அய்யோட ! திமுக மட்டும் எங்கே போச்சு இங்கே :)
தமிழர்களாய் இன்று அடையாளம் காணப்படும் அத்தனை பேரும் தொழில் ரீதியாக, உறவு ரீதியாக, தென் தமிழ்நாட்டின் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் தொடர்புகளோடு இருக்கிறார்கள்//
சன் குருப்ப சொல்றார் போல :)
இன்றைக்கு பெரியாரையும், கலைஞரையும் தெலுங்கர்கள் என்று கூறி இவர்கள் செய்யும் அரசியல் எவ்வளவு மடத்தனமானது என்பதை அறிவுள்ளவர்களின் ஆய்வுக்கே இந்தக் கட்டுரை விட்டு விடுகிறது.//
அப்போ புரட்சித்தலைவரையும் , செல்வி,ஜெயலலிதாவையும் மலையாளி, கன்னடர் என சொல்லுவது மட்டும் அறிவார்ந்த புத்திசாலித்தனமான செயலா :)
போலி தமிழ் தேசியவாதிகளே....விழித்துக் கொள்ளுங்கள்...!//
முதல்ல தலைப்ப மாத்துங்கப்பா :) இந்த கட்டுரை எழுதினவர் எவ்வளவு சமார்த்தியமாக திமுகவை குறை சொல்லாமல் எழுதி இருக்கார் .. இதில் நடுநிலைமை வேசம் வேறு :)
குறை ஒன்றும் இல்லை !!! said...
இன்றைக்கு பெரியாரையும், கலைஞரையும் தெலுங்கர்கள் என்று கூறி இவர்கள் செய்யும் அரசியல் எவ்வளவு மடத்தனமானது என்பதை அறிவுள்ளவர்களின் ஆய்வுக்கே இந்தக் கட்டுரை விட்டு விடுகிறது.//
அப்போ புரட்சித்தலைவரையும் , செல்வி,ஜெயலலிதாவையும் மலையாளி, கன்னடர் என சொல்லுவது மட்டும் அறிவார்ந்த புத்திசாலித்தனமான செயலா :)/////////
சார் எம்.ஜி.ஆர்.....இலங்கையில் பிறந்து கேரளாவில் இருந்து,,பிறகு தமிழ் நாட்டுக்கு
வந்தவர்.
ஜெ--தான் ஒரு பாப்பாத்தி என்று சட்டசபையிலும்,,,,,மைசூர் மகாராஜா கொடுத்த நகைகள் என்று நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்....
இங்கு பரம்பரையா இருந்த பெரியாரையும்,,,,இருக்கும் கலைஞர்ரையும்,,,,இப்படி வேறு படுத்துவதை தான் இந்த கட்டுரை கூறுகிறது....
எப்படி எதிர்க்கட்சி தலைவர்,,,,தெலுங்கு நாயுடு என்றாலும் அவரை நாம் தமிழராகதான்
நினைக்கிறோம்.....ஏன் எனில் அவர் எந்த மற்ற மொழி படங்களிலும் நடித்ததில்லை....
அது போலதான்....இந்த சார அம்சமும்....
மேலும்.....
இப்ப நீங்க இந்த கணணி மூலம் இவ்வளவு செய்யவும்,,,,
அதற்க்கு படித்ததும் பெரியார் என்று ஒருவர் இருந்ததால் மட்டுமே.....
ஒரு வேலை இவர்கள் செய்த ஆக்கப்பூர்வமான "ஒரு சில காரியங்கள்" உங்களுக்கு
மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி இருக்கலாம்....அந்த பொறாமையின் வெளிப்பாடே கூட இந்த கமெண்ட் இருக்கலாம்....
ஆனால் சற்றே மாற்றி சிந்தித்தால்....
இன்னும் எங்களைப்போன்ற சாதாரணவர்களுக்கு இன்னும் ஆதிக்க சக்தி....
கடும் போட்டியை கொடுப்பதாக நினைக்க தோன்றுகிறது....
இன்னும் சில பல பெரியார்களுக்காக...
நங்கள் தவம் இருக்கிறோம்....
விடியலுக்காக....
குறை ஒன்றும் இல்லை !!! said...
ஈழத்தில் இன அழிப்பை நடத்தி முடித்த கொடுங்கோலன் ராஜபக்சே மீதும், அதை நடத்த உதவிய காங்கிரஸ் கட்சியின் மீதும் நமது இருக்கும் கோபம் சரியானது என்றாலும்//
அய்யோட ! திமுக மட்டும் எங்கே போச்சு இங்கே :)//////
இதை பலமுறை எங்கள் வேறுவேறு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.....
எனினும் இங்கு அந்த விடுபட்டு போய் விட்டது.....
:-)
குறை ஒன்றும் இல்லை !!! said...
தமிழர்களாய் இன்று அடையாளம் காணப்படும் அத்தனை பேரும் தொழில் ரீதியாக, உறவு ரீதியாக, தென் தமிழ்நாட்டின் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் தொடர்புகளோடு இருக்கிறார்கள்//
சன் குருப்ப சொல்றார் போல :)//////
ஏன் சார் நித்தியா,,,காஞ்சி மாடாதிபதிகள் எல்லாம் உங்க நினைவுக்கு வரலை....????
இன்னும் நிறைய பேர் இருக்காங்க சார்....
அவர்கள் கல்லுளி மங்கன்போல் வெளிய தெரியாம இருக்காங்க...
அவங்களையும் ஒரு லிஸ்ட் போடுங்க சார்.....
அவ்வளவு ஏன்...????நேரம் மற்றும் இன்ன பிற நல்லபடியாக உங்களுக்கு
அமைந்தால்...நீங்களும்,,,உங்களை சார்ந்தவர்களும்....இதே அளவுக்கு பேர் சொல்லும்படியாக வருவீர்கள்....
அப்பா யாராவது இதே மாதிரி கமெண்ட் போடுவாங்க.....
நீங்க கவலை படாதீங்க சார்....
அப்பாவும் எங்களை மாதிரி ஆட்கள் இருந்து அவர்களுக்கு பதில் போடுவார்கள்....P
குறை ஒன்றும் இல்லை !!! said...
போலி தமிழ் தேசியவாதிகளே....விழித்துக் கொள்ளுங்கள்...!//
முதல்ல தலைப்ப மாத்துங்கப்பா :) இந்த கட்டுரை எழுதினவர் எவ்வளவு சமார்த்தியமாக திமுகவை குறை சொல்லாமல் எழுதி இருக்கார் .. இதில் நடுநிலைமை வேசம் வேறு :)///////
இப்படி யோசிங்களேன்.......
இந்த கட்டுரையை எழுதியவர்...."""உங்களையும்""".......இப்படி சிந்திக்க வைத்துள்ளாரே....
அதுக்கு நன்றி சொல்லுங்களேன்.....
ராசி இந்த கட்டுரையில் திமுக தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது ஓரளவிற்கு சரி என்றே நினைக்கிறேன். இதில் பெரியாரை முக்கியப்படுத்தி எழுதப்பட்டு இருப்பதே முக்கியம்...
சில கட்டுரைகளில் திமுகவை சாடி எழுதப்பட்டு இருப்பது சற்று அதிகம் எனத் தோன்றினால் சற்று குறைக்கவும் வேண்டி இருக்கிறது.
மிக முக்கியமாக அரசியல் வாதங்கள் என்பது முடிவு இல்லாததே...அதில் கழுகு தீவிரமாக இறங்குவதில்லை.
அரசியல் கட்டுரைகள் தேர்ந்த அரசியல் கட்டுரைகளாக இல்லாமல் கழுகுவின் பார்வையாக மட்டும் அமையும்.
நீஙக கழுகுவ உபின்னு நினைக்கிறீங்க., ஆனா சில உபிகள் கழுகுவ ரரன்னு நினைக்கறாங்க.. :))
நீங்க வந்ததால நான் வந்து புரிதலுக்காக சொல்றேன் ராசி :))))
அண்ணே !
ஈழ விசயத்தில் திமுகவை விட்டதாலும்
இன விசயத்தில்
கருணாநிதையை இழுத்ததாலும் தான் நான் வர வேண்டியதாயிற்று !
நன்றி உங்கள் புரிதலுக்கு !
இங்கு பரம்பரையா இருந்த பெரியாரையும்,,,,இருக்கும் கலைஞர்ரையும்,,,,இப்படி வேறு படுத்துவதை தான் இந்த கட்டுரை கூறுகிறது....
//
அப்படியா ! கருணாநிதியின் தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் பற்றிய விபரங்கள் கூட உங்களிடம் உள்ளதா :)
தமிழனாய் பிறந்து கனடாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ செட்டிலான ஈழத்தமிழரை என்ன சொல்லி அழைப்பீர்கள் ?
ஏன் சார் நித்தியா,,,காஞ்சி மாடாதிபதிகள் எல்லாம் உங்க நினைவுக்கு வரலை....????
இன்னும் நிறைய பேர் இருக்காங்க சார்....
அவர்கள் கல்லுளி மங்கன்போல் வெளிய தெரியாம இருக்காங்க..//
பால் தினகரன், இந்து மடாதிபதிகள்
இவங்க எல்லாம் மத வியாபாரிகள்.. இவர்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு என்ன பிரச்சினை வந்து விட போகிறது ? நல்ல படித்த முட்டாள்கள் இவர்களை கடவுள்ன்னு சொல்லி தன்னை தானே முட்டாளாக்கிக்கறான்.. அவர்களால் நமக்கு என்ன தொந்தரவு ?
----------------------------
முல்லை பெரியாறு விசயத்தில் மாநிலத்துக்கு ஒரு வேசம் போட்ட சன் குரூப் தானே மோசமானவர்கள்?
முல்லை பெரியாறு விசயத்தில் மாநிலத்துக்கு ஒரு வேசம் போட்ட சன் குரூப் தானே மோசமானவர்கள்?////
அவங்க வியாபாரிகள்....சார்.....
அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தாலும் அது தான்........விதி தான் சார்....
இங்கு பரம்பரையா இருந்த பெரியாரையும்,,,,இருக்கும் கலைஞர்ரையும்,,,,இப்படி வேறு படுத்துவதை தான் இந்த கட்டுரை கூறுகிறது....
//
அப்படியா ! கருணாநிதியின் தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் பற்றிய விபரங்கள் கூட உங்களிடம் உள்ளதா :) //////
அப்ப உங்க கிட்டே இல்லையா.....????/
அப்புறம் ஏன் சார் கேள்வி கேட்டீங்க....????
தமிழனாய் பிறந்து கனடாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ செட்டிலான """"ஈழத்தமிழரை"""" என்ன சொல்லி அழைப்பீர்கள் ?/////
என்னா சார் பதிலை சொல்லிட்டு கேள்வி கேக்குகுறீங்க....???
பால் தினகரன், இந்து மடாதிபதிகள்
இவங்க எல்லாம் மத வியாபாரிகள்.. இவர்களால் நாட்டின் பொருளாதாரத்துக்கு என்ன பிரச்சினை வந்து விட போகிறது ? நல்ல படித்த முட்டாள்கள் இவர்களை கடவுள்ன்னு சொல்லி தன்னை தானே முட்டாளாக்கிக்கறான்.. அவர்களால் நமக்கு என்ன தொந்தரவு ?/////
அங்கேயே இன்னும் சொல்லி இருக்கேன் பாருங்க சார்....உங்களுக்காக...மீண்டும்......
அவ்வளவு ஏன்...????நேரம் மற்றும் இன்ன பிற நல்லபடியாக உங்களுக்கு
அமைந்தால்...நீங்களும்,,,உங்களை சார்ந்தவர்களும்....இதே அளவுக்கு பேர் சொல்லும்படியாக வருவீர்கள்....
அப்ப யாராவது இதே மாதிரி கமெண்ட் போடுவாங்க.....
நீங்க கவலை படாதீங்க சார்....
அப்பவும் எங்களை மாதிரி ஆட்கள் இருந்து அவர்களுக்கு பதில் போடுவார்கள்....P
//இதை பலமுறை எங்கள் வேறுவேறு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.....
எனினும் இங்கு அந்த விடுபட்டு போய் விட்டது.....
:-)//
அன்பின் நக்கீரன், இங்கே கருணாநிதியைப்பற்றியோ ஜெயலலிதாவைப் பற்றியோ நாம் விமர்சிக்க வரவில்லை. மாறாக நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் இருக்கும் குளறுபடியையும் தமிழர் என்ற அடைப்புக்குள் மனிதர்களை அடைக்கிறேன் பேர்வழி என்று மனிதநேயத்தை சுட்டுப்போடும் ஒரு தன்மையையும், அப்படியான குறுகிய பார்வையால் பெரியார் என்ற பெருந்தகையையே புறக்கணிக்கும் அவலத்தையுமே நாம் கிழித்தெறிய முற்ப்பட்டிருக்கிறோம்.
தமிழ் தேசியவாதிகள் என்ற அடைப்புக்குள் தற்போது நிற்கும் தோழர்கள் பெரியாரை எதிர்ப்பதோடு பெரும்பாலும் கலைஞரையும் சாடி அவரையும் தெலுங்கர் என்று கூறும் அந்த போக்கையும் நாம் கண்டித்திருக்கிறோம். ஏனெனில் எந்த ஒரு அரசியல் தலைவரையும் அவரின் அரசியல் செயல்பாட்டை வைத்துதான் எதிர்க்க வேண்டுமே அன்றி தெலுங்கர், கன்னடர் மலையாளி என்று வைத்து எதிர்க்கும் பாவனை தவறு.
மேலும் இதே தமிழ் தேசியவாதிகள் ஜெயலலிதாவைப் பற்றி அதிக விமர்சனங்கள் வைத்திருக்கவில்லை ஆதலால் அவரைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை. ஒருவேளை ஜெயலலிதாவையும் அவர் கன்னடர் என்று கூறி எதிர்ப்பார்களேயானால் அதுவும் தவறு..., மேலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது...
கழுகின் பார்வையில் கொள்கை ரீதியாக மானுட சமூகத்திற்கு தீங்கு செய்யும் எந்த சக்தியாய் இருந்தாலும் நாம் எதிர்ப்போம்.. இதில் எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும் நமக்கு விதிவிலக்கு அல்ல;
ராசியும் கழுகிற்கு நண்பரே...இந்த பதிலால் அவருக்கு புரிதல் ஏற்பட்டிருக்கும்...!
நன்றிகள்!
அருமையான கட்டுரை.
இன்னும் சொல்வதற்கு நிறைய உள்ளது.
Post a Comment