வாழ்வின் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு இலக்கு நோக்கிப் பயணிப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருந்தாலும் சுழற்சியின் வேகத்தில் ஓடி கொண்டிருக்கும் மனதுக்கு நின்று நிதானிக்க மிகைப்பட்ட நேரங்களில் தெரிவதில்லை. ஏதோ ஒரு இறப்பு, ஒரு தோல்வி, அல்லது இழப்பு என்று மனிதனுக்கு வரும் கணங்களில் மட்டும் இந்த மனசுழற்சி மெதுவாய் நின்று ....என்ன இது வாழ்க்கை என்ற எண்ணமும் ஏன் இப்படி எல்லாம் நகர வேண்டும்? மேலும் எதை நோக்கி நகர்கிறோம் என்ற கேள்விகளாய் நெஞ்சை கவ்விப்பிடிக்கின்றன.
மீண்டும் ஏதேனும் ஒரு மாய நிகழ்வின் மூலம் வெளியே வந்தவுடன் இந்தக் கேள்விகள் அறுபட்டுப் போய் வழக்கமான ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் ஓராயிரம் முறை நிகழ்ந்தாலும்...மானுட வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கிறது என்ற கேள்வி மட்டும் மறந்து போகிறது, ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வெளியே ஓராயிரம் இரைச்சல்கள் இருந்தாலும் ஆழ்மனதில் எதை நோக்கிப் போகிறோம் என்றும் ஏன் போகிறோம் என்ற கேள்வி கரைதொடும் அலைகள் போல மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டுதானிருக்கிறது.
கடவுள் என்ற விசயத்தைப் பொறுத்த வரைக்கும் இன்று வரை மனிதர்கள் ஒரு குழப்பத்தில் தான் இருக்கிறார்கள், ஒரு சாராருக்கு கடவுள் நம்மைப் போல இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு கடவுள் எனது பல பேர், ஒரு சாராருக்கு கடவுள் உருவமில்லாதவர் ஆனால் வேறு உருவமானவர்... ஒரு சிலருக்கு வழிப்பாடுகளே கடவுள் என்று மொத்தத்தில் அவர் அவர் மனதை எது திருப்தி படுத்துமோ அது அவருக்கு கடவுளாகிறது, இப்படி பல மதங்களுக்குள் நின்று கொண்டு பல கடவுளைப் பற்றி பேசும் அத்தனை பேரும் ஒரு இடத்தில் ஒத்துப் போவர்கள். அதாவது கடவுள் கடவுள் பிரமாண்டமானவர்....எனப்தை கடவுளை நம்பும் அதனை பேரும் ஒத்துக் கொள்வார்கள்.
இந்த குழப்பம்தான் நாத்திகவாதம் பேசுபவர்களின் மிகப் பெரிய + பாயிண்ட் என்று கூட சொல்லலாம். மதம்தான் கடவுள் பற்றியும் பேசுகிறது அதே மதம் தான் சட்டதிட்டங்கள் இட்டு மனிதன் தன் மதத்தை விட்டு வெளியே செல்லாத வன்ணம் மூட நம்பிக்கைகளையும் சாதிகளையும் தீண்டாமையும், போதிக்கிறது அதற்கு விளக்கங்கள் கூட கொடுக்கிறது. புராணங்கள் என்ற நீதிக் கதைகளை எல்லாம் உண்மையாய் நடந்த விசயம் என்று யார் நம்புகிறார்களோ இல்லையோ அது கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒர் வசதியான ஆயுதமாகக் கூட போய் விட்டது.
காஞ்சி சங்காராச்சாரியாரையும், கல்கியும், நித்யானந்தனும் ஆன்மீகப்பாதையில் சென்று வழுக்கி விழுந்து கடவுளால் பழிவாங்கப்பட்டவர்கள், ஆமாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ளவ் வேண்டும். விளக்க முடியாத விசயத்தை இவர்கள் வியாபாரம் ஆக்கியதுதானே இவர்களின் வழுக்கல்கள், முற்றும் துறந்தவனுக்கு எதுக்கு கோடிகளும் புகழும் ? காணாததை கண்டவர்கள் .....கண்டதை சொல்ல முடியாது, ஒழுக்க நெறிகளில் வாழ்ந்து காட்டி தன்னின் வாழ்க்கையை அடுத்தவருக்கு படிப்பினையாய் ஆக்குவதை விட்டு விட்டு இவர் தம்மை மட்டுமே கடவுளர் என்று எண்ணி மாயையில் விழுந்ததுதானே வழுக்கல்..?
பதஞ்சலிதான் யோக சூத்திரத்தை உருவாக்கியவர்... அதை கற்றறிந்த ஆன்மீக முனி என்றால் ஏன் காசுவாங்க வேண்டும்....சிவசூத்திரம் உருவாக்கியவர் யார் என்று நமக்கு சரியாகத்தெரியாது ஆனால் அதை படித்து விட்டு பயிற்றுவிக்க லட்சங்களில் கட்டணம்.பயிற்சி கொடுப்பதும், பயிலுவதும் தவறு இல்லை...ஆனால் பயிற்றுவித்தலை வியாபாரமாக்கியது தான் வழுக்கல்.
தந்திரா என்ற காமம் சார்ந்த தியானம் இல்லறத்தானுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வழிமுறை,முறைப்படி ஒரு பெண்ணை மணம் புரிந்து ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் போது உபோயோகம் செய்ய வேண்டிய ஒரு சாதனை முறை...! காம உணர்வுகளே எனக்குள் எழவில்லை நான் பிரம்மச்சாரி என்று சொல்லி விட்டு பின் ஆராய்ச்சி செய்தேன் என்று சொல்வது மிகப்பெரிய பித்தலாட்டம்...! உங்களை யாரேனும் திருமணம் செய்யக்கூடாது என்று சொன்னார்களா? சந்தோசமாய் திருமணம் செய்து கொண்டு ஆராய்ச்சியை அணு அணுவாய் செய்திருக்கலாமே...!
ஆன்மீகப்பாதையில் ஓராயிரம் வழுக்கல்கள் கடவுளை கற்பிக்கும் முறையிலும் மனிதர்களுக்கு ஓராயிரம் குழப்பங்கள்...இவை எல்லாம் சாதகமாய் போய்விட்டன கடவுள் மறுப்பாளர்களுக்கு!
நம்மைச் சுற்றி கோடானு கோடி விசயங்கள் நடக்கின்றன..ஆராய்ந்து அடைந்து விட முடியாதவாறு பிரபஞ்சம் இருக்கிறது... நாம் எல்லோரும் கூட பிறக்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம் ...இறக்கிறோம்....ஏதோ ஒன்று இருக்கிறது .... அதனால்தான் எல்லாம் நடக்கிறது என்பதை பகுத்தறிவுள்ள அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
அறிவியல் எப்போதுமே...எப்படி நிகழ்கிறது என்று மட்டுமே விளக்கமுடியும் ஏன் நிகழ்கிறது என்று விளக்க முடியாது. அறிவியலே இப்படி இருக்கையில் ஏதோ இருக்கிறது என்றும் இல்லை என்றும் விவதிகும் எல்லாமே வீண்தானே? நாம் செய்ய வேண்டியது எல்லாம் வாழ்கையை மறுக்காமல் ஒருவர் மேல் அன்பு வைத்து உதவி செய்து ஒரு நிறைவான வாழ்வாய்...வாழ்ந்து..
கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற குழப்ப வட்டத்திற்குள் சிக்காமல், வாழ்க்கை இருக்கிறது, நம்மைச் சுற்றி சக மனிதர்கள் இருக்கிறார்கள் என்று மனிதநேயத்தோடு வாழ்ந்து வாழ்க்கையை கொண்டாடி வாழ்க்கையை சிறப்பிப்பதே..... தெளிவான பார்வையாகும் என்று கூறி கட்டுரையை நிறைவு செய்கிறோம்.
(கழுகு இன்னும் உயரப் பறக்கும்...)
5 comments:
//மனித நேயத்தோடு வாழ்ந்து...கொண்டாடி வாழ்க்கையைச் சிறப்பிப்பதே.....// என்ற தங்களின் அறிவுறுத்தல் அனைவரும் [நான் உட்பட] பின்பற்றத் தக்கதே.
பாராட்டுகள் நண்பரே.
அன்பு சகோ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
== கடவுள் என்ற விசயத்தைப் பொறுத்த வரைக்கும் இன்று வரை மனிதர்கள் ஒரு குழப்பத்தில் தான் இருக்கிறார்கள், ஒரு சாராருக்கு கடவுள் நம்மைப் போல இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு கடவுள் எனது பல பேர், ஒரு சாராருக்கு கடவுள் உருவமில்லாதவர் ஆனால் வேறு உருவமானவர்... ஒரு சிலருக்கு வழிப்பாடுகளே கடவுள் என்று மொத்தத்தில் அவர் அவர் மனதை எது திருப்தி படுத்துமோ அது அவருக்கு கடவுளாகிறது, ==
கடவுள் குறித்த பொதுவான பார்வையை தான் மையப்படுத்தி சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் கடவுள் என்று சொல்லப்படுபவர் குறித்து உண்மையான கோட்பாடுகள் அறிந்தால் அவற்றால் எந்த குழப்பங்களும் எவருக்கும் ஏற்படாது. ஆனால் அத்தகைய கோட்பாடுகள் அறிந்துக்கொள்ளவே மனித மனங்கள் மறுக்கிறது. ஆக இங்கே குறைக்கூறும் கடவுளர் எல்லாம் மனிதர்களின் எண்ணங்களில் உதித்தவைகளே...
கடவுளுக்கும் தனிமனிதனுக்கும் இடையே இடைத்தரகர்களை ஏற்படுத்துவதால் மேற்கண்ட போலி ஆன்மிகவாதிகளின் தோற்றங்கள். இதற்கு யார் காரணம்? கடவுளும் அவரது போதனைகளுமா...? போலியாய் ஆத்திகம் பேசும் மானிடர்களே.. ஆக உண்மையான கடவுள் கோட்பாடுகள் என்னவென்பதை அறிந்தால் மட்டுமே நம்மால் எந்த நிலையில் என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாய் அறிய முடியும்.
இப்படி தனிமனிதர்கள் செய்யும் தவறுகள் தான் ஒரே இறைவன் மீதான மறுப்புக்கு காரணம் என்றால் இது அவர்களின் அறியாமை என்று தான் சொல்லவேண்டும். நமக்கு முன்மாதிரி கடவுளின் போதனைகள் மட்டுமே மாறாக சமூகத்தில் மதரீதியான பெயர் வைத்து செயல்படும் போலி மனிதர்கள் அல்ல.
== அறிவியல் எப்போதுமே...எப்படி நிகழ்கிறது என்று மட்டுமே விளக்கமுடியும் ஏன் நிகழ்கிறது என்று விளக்க முடியாது. அறிவியலே இப்படி இருக்கையில் ==
இதுதான் பாயிண்ட்! நாத்திகமும் கடவுள் மறுப்புக்கு அறிவியலை துணைக்கு அழைத்தாலும் அவற்றாலும் கடவுள் மறுப்பை உறுதி செய்ய முடியாது.
தனிமனித ஒழுக்கத்திற்கும்
சமூகத்தின் நலனுக்கும்
கடவுள் இல்லையென்ற நிலையை விட கடவுள் உண்டென்ற நிலையே உயர்வு தரும் சகோ
உங்கள் சகோதரன்
குலாம்.
//தனிமனித ஒழுக்கத்திற்கும்
சமூகத்தின் நலனுக்கும்
கடவுள் இல்லையென்ற நிலையை விட கடவுள் உண்டென்ற நிலையே உயர்வு தரும் சகோ
உங்கள் சகோதரன்
குலாம். //
I agree & believe this point
நல்லதொரு பதிவு...நல்ல பின்னூட்டங்கள். கடவுளை மறுப்பவர்கள் கடவுளை நம்பும் சாரார் - இருவரும் நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதில் மாற்று கருத்து தெரிவிப்பதில்லை...நாத்திகன் அந்த சக்திக்கு 'Luck' என்று பெயரிடுகிறான். ஆத்திகன் அந்த சக்திக்கு 'கடவுள்' என்று பெயரிடுகிறான். மொத்தத்தில் மனித நேயம் காத்து வாழும் வாழ்வை செம்மைபடுத்தலாம்..... நல்ல பதிவிற்கு நன்றி
kadavuL irunthaal enna , illaavittal enna ?
manitharkaL manitharkaLaakavae vaaLvom
abubakkar km / kallidaikurichi
Post a Comment