தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இயக்கம் மீண்டும் சோம்பல் முறித்து எழுந்து ஒரு மாநாடும் நடத்தியும் விட எல்லாவிதமான முஸ்தீபுகளையும் செய்ய ஆரம்பித்தாகி விட்டது. ஈழ ஆதரவு இயக்கம் என்று கடும் ஆக்ரோசத்தோடு 1985லே ஆரம்பிக்கப்பட்டு இலங்கை அரசை நடு நடுங்கச் செய்த டெசோவும் இந்த டெசோவும் ஒன்றுதானா என்ற கேள்வி நமக்குள் எழுவதற்கு காரணமாய் பல்வேறு விடயங்களை இங்கே முன் வைக்கலாம். ஈழம் பற்றிய இந்தியாவின் பார்வை எப்போது தனி ஈழம் பெற்று தருவதாய் ஒருபோதும் இருந்திருக்கவே இல்லை.
சர்தார் வல்லபபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் தைத்துக் கொடுத்த ஒட்டுப்போட்ட துணியைத்தான் இன்று நாம் இந்திய தேசம் என்று ஏந்திப் பிடித்துக் கொண்டு தேசிய உணர்வென்னும் தொடர்ச்சியாய் பரப்பப்பட்ட பொது புத்தியில் இந்தியர்கள் என்று கூறிக் கொண்டு இறையாண்மையையும், தேசப்பற்றினையும் வலுக்கட்டாயமாக நமது தோளிலே சுமந்து கொண்டிருக்கிறோம். இந்தியா என்ற ஒரு தேசத்தின் ஸ்திரத்தன்மை எப்போதும் வலுவான பிராந்திய உணர்வுகளுக்கு எதிரானது. இந்தியாவில் இந்தியனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை மட்டுமே இந்த தேசம் தங்கு தடையின்றி எப்போதும் வழங்கி வந்திருக்கிறது. மாறாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் இன குழுக்கள் ஒரு போதும் தங்களை இனத்தின் அடிப்படையில் வரையறுத்துக் கொண்டு ஒரு போதும் தனித்து இயங்க முடியவே முடியாது.
இனத்தின் அடிப்படையில் கோசங்கள் எழுப்பியவர்களை எல்லாம் பொற்கோவில்களுக்குள் காலணிகளோடு சென்று இயந்திரத் துப்பாக்கிகள் சுட்டுக் கொன்றிருக்கின்றன என்பதுதான் வரலாறு. இந்தியா என்னும் தேசத்தின் ஒற்றுமைக்கு ஏதோ ஒரு வகையில் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு விசயத்தையும் இந்திய தேசம் ஆதரிக்காது என்பது சிறு பிள்ளைகளுக்குக் கூட தெரியும். இப்படியான ஒரு மனோநிலையோடும் மிகப்பெரிய அச்சத்தோடும்தான் தனித் தமிழ் ஈழம் என்ற ஒரு விடயத்தை இந்தியப் பேரரசு பார்த்து வருகிறது.
தனித் தமிழ் ஈழம் ஒரு வேளை அமைந்து விட்டால் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களும் தாங்கள் தனியாய்ப் பிரிந்து சென்று ஈழத்தையும் உள்ளடக்கிய தமிழர் குடியரசு ஒன்றை உருவாக்கி விடுவார்களோ என்ற பேரச்சம் எப்போதும் இந்திய உள்துறை அமைச்சகத்தை நிம்மதியாக இருக்கவிட்டது கிடையாது. இந்தியாவில் தமிழர்களுக்கான ஒரு நிலப்பரப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை இந்தியாவே தனித் தமிழ் ஈழத்தை தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுத்தும் இருக்கலாம் என்பதும் நிதர்சனமே...!
காங்கிரஸ் என்னும் பெரும் கட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஒரு கட்சியாகவே தொடர்ந்து பாமரர்களிடம் இன்று வரை தன்னை அடையாளப்படுத்தி வருவதோடு இந்தியா என்னும் ஒருங்கிணைந்த பல்வேறு தேசிய இனங்களை ஒருங்கிணைக்கவும் எப்போதும் வலுவாய் பயன்பட்டது என்னவோ உண்மைதான்.... என்றாலும் வெவ்வேறு மத, மன, இன உணர்வுகளைக் கொண்ட பல்வேறு பட்ட மக்களை பேதமில்லாமல் இணைக்க இந்தியாவை பெரும்பான்மையான நாட்கள் ஆண்ட, ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியால் முடியவில்லை. அடிப்படையில் காங்கிரஸ் கட்சி என்பது முதலாளிகளின், மேல்தட்டு வர்க்க மக்களின் அதுவும் குறிப்பாய் வட இந்தியர்களின் ஆளுமையைக் கொண்ட ஒரு கட்சி. தன்னை இந்தியாவின் பொது அடையாளமாய்க் காட்டிக் கொண்டாலும் வடநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பிரதமர் நாற்காலி படியளக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் அறிவோமாக;
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பதவியும் அரசியலும் வேண்டாம் என்று ஒதுங்கிய மகாத்மா காந்தியின் நிலைபாட்டினை நேரு தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதை இன்று வரை நேருவின் குடும்பத்தினராய் அடையாளம் காணப்படும் சோனியா அம்மையாரின் குடும்பம் விட்டு விடாமல் உடும்புப் பிடியாய் பிடித்து தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இந்தியாவில் யாதொரு கிளர்ச்சிகளும் வெடித்து விடாமல் கவனமாய் பார்த்துக் கொள்வதின் மூலம் நேருவின் குடும்பம் பாரம்பரியமாய் இந்த தேசத்தின் தோள்களில் ஏறி நின்று சவாரி செய்ய முடியும் என்ற உண்மையை ராகுல் காந்தி வரை சரியாய் புரிந்து வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
இந்தியா ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற நினைப்பே தங்களின் சுயநலத்தில் இருந்து விளைந்த ஒரு போலியான உணர்வு என்பதை இன்று வரை நேருவின் குடும்பத்தினர் கவனமாய் பாதுகாத்தும் வருகின்றனர். நியாயங்களை நியாங்களாய் பார்க்கும் போக்கு இந்த சுயநலத்தால் அடிப்பட்டுப் போனது வேதனை என்று சொல்லும் அதே நேரத்தில்....
இந்த சுயநலம் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மீது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் தனது கோரப்பற்களை பதிக்கவும் செய்தது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதல்களையும், வன்முறைகளையும் தாங்க முடியாமல் தங்களின் சொந்த மண்ணை மீட்டெடுக்க அங்கே தமிழர்கள் போராடிக் கொண்டிருக்க, இந்திய அரசு இலங்கையோடு இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. தமிழர் பிரச்சினையில் தலையிட்ட இந்திய அரசு தமிழர்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதற்கு சிங்கள பேரினவாத அரசு இடம் கொடுக்கவில்லை. தமிழர் சம உரிமை என்பதற்கான சாத்தியக் கூறினை சிங்கள அரசு கொடுக்காமல் முரண்டு பிடிக்க, தனித்தமிழ் ஈழம் என்ற விசயத்தை இந்திய அரசு ஆதரிக்க முடியாமல் விலகிக் கொள்ள.....நடுவில் ஈழத்தமிழர்கள் யாரை நம்புவது யாரை எதிர்ப்பது என்ற குழப்பத்தில் தங்களுக்கான போராட்டத்தை தாங்களே வலுவாக முன்னெடுக்கத் துணிந்தார்கள்...
இந்திய அரசு தங்களுக்கு உதவும் என்று நம்பிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம், தங்களின் எண்ணத்திற்கு மாறாக இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களைக் கொன்றழித்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. சற்றேறக்குறைய சுமார் 70,000 தமிழர்கள் இந்திய அமைதிப்படையால் சின்னாபின்னமாக்கபட்ட துயரத்தில் வேறு வழியின்றி இந்திய படையினரை எதிர்த்து தாக்கி சற்றும் சளைக்காமல் கதிகலங்கச் செய்தனர்....
இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய படையினர் சென்னை வந்த போது அப்போதைய தமிழக முதல்வராய் இருந்த ஐயா கருணாநிதி அவர்கள் வரவேற்க செல்லாமல் இந்திய அரசுக்கு மெளனமாய் தனது கண்டனத்தை வலுவாய் தெரிவித்தார். கருணாநிதி என்றாலே ஈழப் போருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உதவும் ஒருவன் என்ற ரீதியில்தான் வடநாட்டு தலைவர்கள் 1983களிருந்து தொடர்ச்சியா 1989 வரை உறுதியாய் நம்பினார்கள் என்றாலும் கருணாநிதியும் தமிழ் ஈழ விசயத்தில் தனது முழு ஆதரவையும் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்தவராகவே இருந்து வந்தார்.

இந்திய அமைதிப்படை தமிழர்களைத் தாக்கியழித்ததை விடுதலைப் புலிகள் சர்வசாதாரணமாய் ஏற்றுக் கொள்ளவில்லையாதலால் மீண்டும் ராஜிவ் 1991 தேர்தலில் வெற்றி பெற்று இந்திய பிரதமரானல் தங்களின் தமிழ் ஈழ போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பார் என்று கருதி 1991 மே 21ல் ராஜிவை மனித வெடி குண்டு தாக்குதல் மூலம் கொன்றனர். இந்திய அரசியல் சுழலை விடுதலைப் புலிகள் சரியாய் திட்டமிட்டு ஆராயமல் செய்த இந்த நடவடிக்கையால் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு தமிழகத்தில் சுத்தமாய் செத்துப் போனது. போபர்ஸ் பீரங்கி ஊழலின் அதிர்வுகள் நாடு முழுதும் அலையலையாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது, அதன் விளைவாய் ராஜிவ் மீண்டும் பிரதமராவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்பதையும், தமிழகத்தில் 1989ல் விடுதலைப்புலிகளால் ஆட்சியை இழந்த கருணாநிதிக்கு வெற்றி வாய்ப்புக்கள் இருந்ததையும் புலிகள் கணிக்கத் தவறியது....வரலாற்றில் பெரும் பிழையாய் பொறிக்கப்பட்டு விட்டது.
கால சுழற்சியில் ராஜிவ் கொலை என்னும் விடயத்தால் தமிழகத்தின் ஆதரவுக் குரல்கள் முடங்கிக் கொள்ள, புலிகள் எதிர்ப்பு முழக்கம் தமிழகத்தில் ஜெயலலிதா போன்ற தலைவர்களாலேயே கடுமையாக ஆதரிக்கப்பட்டு புலிகளின் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தாய்த் தமிழகத்திலிருந்து கிடைத்த பெரும் ஆதரவு இதன் மூலம் முடக்கப்பட புலிகளின் இயக்கம் தனித்து விடப்பட்டு முடக்கப்பட்டது. இப்படியாய் புலிகள் நிர்கதியாய்ப் போனதற்கு ராஜிவ் கொலையும், புலிகளை ஆரம்பத்திலிருந்தே வெறுத்த தமிழக பாசிச தலைவர்களுமே காரணமாய்ப் போனார்கள்...

ஒட்டு மொத்த தமிழகமும் புலிகளைப் பற்றியும் ஈழ விடுதலைப் பற்றியும் பேச முடியாத ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுப் போனது. காலத்தின் ஓட்டத்தில் காங்கிரஸ் தலைமை ராஜிவ் கொலைக்கு பலிக்கு பலி வாங்கும் ஒரு சூழலை எதிர்ப்பார்த்து காத்திருந்ததும், தமிழகத்தில் அதற்கு சரியான கூட்டணியாய் திமுகழகம் அமைந்ததும், திமுகவை கிடுக்கிப் பிடி போட்டு கழுத்தில் கத்தி வைத்து காய் நகர்த்துவது போல காய் நகர்த்தி ஈழத்தில் தமிழர்க்ள் மீது தாக்குதலை பாரிய அளவில் சிங்கள அரசு நடத்திய போது தாய் தமிழகத்திலிருந்து ஆதரவு குரல்களை தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் செய்யாவண்ணம் பல விதமான சூழல்களை இங்கே சூட்சுமமாய் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு புகுத்தியிருந்தது.கூட்டணி என்ற போர்வையில் திமுகவை பிணைக்கைதியாய் பிடித்து வைத்துக் கொண்ட காங்கிரஸ், அதிமுகவிலிருந்து ஈழப்போர் நடக்கும் போது பெரிய எதிர்ப்பு வராது என்பதையும் அறிந்தே வைத்திருந்தது. இதனால்தான் ஈழத்தில் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுமே மிகப்பெரிய தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் போரட்டங்களை நடத்த முடியாமல் போனது.
தமிழர் தலைவராய் அடையாளம் காணப்பட்ட திமுகவின் தலைவரிடம் உலக தமிழ்ச் சமுதாயம் எதிர் பார்த்ததிற்கு காரணமாய் திமுகவின் கடந்தகால வரலாறும், கலைஞரின் தீவிரமான ஈழ ஆதரவுப் போக்கும் இருந்தன. மூன்றாம் ஈழப் போர் நடந்த போது கொடை நாட்டில் உய்யலாலா பாடிக் கொண்டிருந்த ஜெயலலிதாவிடம் மக்கள் தமிழர் ஆதரவு குரலை எதிர்ப்பார்க்கவில்லை என்பதே நிதர்சனம். 2011 தேர்தலின் போது கலைஞரின் சூழலையும் தமிழக மக்களின் மனோநிலையையும் சரியாய் அவதானித்த ஜெயலலிதா....யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு குபீர் ஈழத்தாய் வேடத்தைப் போட்டு அதை தேர்தலில் ஓட்டாகவும் மாற்றிக் காட்டினார். புலிகளுக்கு ஆதரவாய் பேசியதாலேயே வைகோவை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையிலடைத்த ஜெயலலிதா ஈழம் ஒன்றே தீர்வு என்று பேசியதை சீமான் போன்றவர்கள் நம்பி ஜெயலலிதாவின் காலடியில் தஞ்சம் அடைந்து ஈழம் மலர அவர் உதவுவார் என்றும் இன்று நம்பிக் கொண்டு அவரின் சூட்சும அரசியலை மறந்து போயிமிருக்கின்றனர்.
ஆட்சி இழந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட கலைஞர் வேறு வழியின்றி தமிழர் ஆதரவு அரசியல் ஒன்றே மீண்டும் தம்மையும் தமது கட்சியையும் மக்கள் அங்கீகரிக்க ஒரே வழி என்று தீர்மானித்து மீண்டும் டெசோவை கையிலெடுத்து தமிழ் ஈழம் அமைவதே தனது ஆசை, அதுவே தமது இலக்கு என்பது போல எல்லாம் பேட்டிக் கொடுத்து விட்டு....மத்திய அரசின் தனித்தமிழ் ஈழம் எதிர்நிலைப்பாட்டினை எதிர்த்தால் தனக்கும் தனது கட்சிக்கும் இன்னும் பெரும் இக்கட்டான சூழலை ஆளும் காங்கிரஸ் கட்சி உருவாக்கும் என்ற காரணத்தினால் ஈழ ஆதரவுக் குரலை சற்றே தாழ்த்தி, இலங்கையில் தமிழர் மறுவாழ்வு, புணரமைப்பு, மருத்துவ உதவி என்று ஏதேதோ பேசும் ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஆழ்ந்த அரசியல் அனுபவம் கொண்ட கலைஞருக்கு ஈழ ஆதரவுக் குரல் கொடுத்தால் மத்திய அரசு எந்த மாதிரியான இக்கட்டான சூழல்களை கொடுக்கும் என்பது தெரியாதது அல்ல....அதே நேரம் ஈழம் வென்றெடுக்க டெசோ அமைப்பு சாதகமான சூழல்களை அகில உலக அளவில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் அறியாதவர் அல்ல....
சாதாரண மனிதர்கள் கொடுக்கும் குரலை விட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொடுக்கும் குரல் வலிமையானதாக, இந்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக, உலக தலைவர்களை கூர்ந்து நோக்கச் செய்வதாக, சிங்கள பேரினவாத அரசை அச்சம் கொள்ளச் செய்வதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....
போரின் போது தொடங்கப்படாத டெசோ இயக்கம் இப்போது ஏன் தொடங்கப்படவேண்டும் என்பன போன்ற விதண்டாவாதங்களை எல்லாம் விலக்கி விட்டு, உண்மையான ஈழ விடுதலை வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் கலைஞரோடு தனித்தனியாய் சந்திப்பு நடத்தி, அவருக்கு அழுத்தங்கள் கொடுத்து சர்வ தேச சமுதாயத்திற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்குமாறு பணித்து ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதின் மூலம்......
தனித் தமிழ் ஈழம் மலர்வதற்கான எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும்.... தாய்த்தமிழ் மண் ஏற்படுத்திக் கொடுக்கும்....என்பது மட்டும்...உண்மை....!
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
3 comments:
சாதாரண மனிதர்கள் கொடுக்கும் குரலை விட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கொடுக்கும் குரல் வலிமையானதாக, இந்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக, உலக தலைவர்களை கூர்ந்து நோக்கச் செய்வதாக, சிங்கள பேரினவாத அரசை அச்சம் கொள்ளச் செய்வதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....///
உண்மைதான்... ஆனால் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது கையையே கொடுக்காத ஒருவர் மூழ்கிய பின் குரல் மட்டும் கொடுத்து என்ன பயன்?
போரின் போது தொடங்கப்படாத டெசோ இயக்கம் இப்போது ஏன் தொடங்கப்படவேண்டும் என்பன போன்ற விதண்டாவாதங்களை எல்லாம் விலக்கி விட்டு, உண்மையான ஈழ விடுதலை வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் கலைஞரோடு தனித்தனியாய் சந்திப்பு நடத்தி, அவருக்கு அழுத்தங்கள் கொடுத்து சர்வ தேச சமுதாயத்திற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்குமாறு பணித்து ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வதின் மூலம்......////
நீங்கள் சொல்வது போல் விதண்டாவாதங்களை தவிர்த்து முழுமனதாக ஆதரிக்க வேண்டுமானால் முதலில் தோளில் தாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரசை உதறிவிட சொல்லுங்கள்! காங்கிரசை வைத்துக்கொண்டு அவர்கள் அரசில் மந்திரிசபையில் இருந்துகொண்டு கருணாநிதி எதை செய்தாலும் அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்காது! ஏனென்றால் ஒரே இரவில் தனி ஈழம் தீர்மானமே இல்லைஎன்றவரை எப்படி நம்புவது?
தனித் தமிழ் ஈழம் மலர்வதற்கான எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும்.... தாய்த்தமிழ் மண் ஏற்படுத்திக் கொடுக்கும்....என்பது மட்டும்...உண்மை....!////
ஒன்று தீர்மானமாக ஏற்படுத்திகொடுக்க போராடுங்கள், அல்லது அவர்களை அங்கு நிம்மதியாகவாது இருக்கவிடுங்கள்! உங்கள் அரசியலுக்காக அவர்கள் சவப்பெட்டியில் ஆணி ஆணி அடிக்க வேண்டாம்!
வணக்கம்,
ஈழத் தமிழர்கள் அழிக்கப் பட்ட காலத்தில் இந்த உலகில் கலைஞர் ஒருவரால் தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற சூழல் இருந்தது. அப்பொழுதெல்லாம் வாயை மூடி "மழை விட்டது ஆனால் தூறல் விடவில்லை என்ற கலைஞரிடம் நீங்கள் ஈழத்தை காப்பாற்றும் யுத்தியை கேட்க வேண்டியதில்லை. கலைஞர் ஆட்சியில் இருந்து காங்கிரசை ஆட்டுவித்த காலத்தில் ஒரு .............. செய்யாத இவர் ஈழத்தை காப்பற்றப் போகிறாராம். இவருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டுமாம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆவது வெற்றி கொள்ள வேண்டும் என்கிற நினைப்பில் மறுபடி இந்தப் புலி, பசு அவதாரம் எடுத்து வருகிறது.
Post a Comment