Thursday, August 19, 2010

இந்திய வல்லரசு கனவுகள்....சித்தூர் முருகேசன் சிறப்பு கட்டுரை...!
தம்பி தனிக்காட்டு ராஜா கோபி ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதில் நிர்வாண உண்மைகள் என்ற வலைப்பக்கத்துக்கு சொந்தக்காரரான சகோதரர் இந்தியா பணக்கார நாடக சில வழிமுறைகள் வைத்து இருப்பதாகவும் அதை கழுகில் வெளியிட முடியுமா? என்றும் கேட்டிருந்தார். கழுகு எப்போதும் விழிப்புணர்வூட்டும் செய்திகளிலும், மக்களை சிந்திக்க தூண்டும் செய்திகளும் வெளியிடுவதில் அதீத விருப்பம் கொண்டது எனபதை தம்பியிடம் விளக்கி.... நாங்கள் வெளியிடுகிறோம் என்று சொன்னதின் விளைவு...இதோ...சித்தூர் முருகேசனின்....இந்திய வல்லரசு கனவுகள்....உங்கள் பார்வைக்காக...


நம்ம எல்லாருக்குமே இந்த நாடு எப்படியெல்லாமோ இருந்திருக்கனும். இப்படி சீரழிய விட்டிருக்கக்க கூடாதுங்கற எண்ணம் இருக்கு. எங்கேதப்பு நடந்து போச்சு ,

யாரெல்லாம் தப்பு பண்ணினாங்கங்கற கேள்விக்கு தான் வேறு வேறு பதில்கள் இருக்கே தவிர, தப்பு நடந்து போச்சுங்கறதுல மட்டும் கருத்துவேற்றுமை கிடையாது.


நடந்து போன தப்பை திருத்த என்ன பண்றதுங்கற விஷயத்துல கருத்து வேற்றுமை இருக்கலாமே தவிர ஏதாச்சும் செய்தாகனும்பாங்கறஎண்ணம் மட்டும் நிச்சயம் இருக்கு. ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்? ஏன் இத்தனை கருத்து மோதல்கள்?


நாம எல்லாருமே ஒவ்வொரு பிரச்சினையையும் தனி தனி பிரச்சினையா பார்க்கிறோம். அதுக்கு தீர்வு என்னனு யோசிக்கறோம். அதனாலதான்இத்தனை கருத்து வேற்றுமை.


இன்னைக்கு நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் இருக்கு. பிறப்பு முதல் இறப்பு வரை லட்சக்கணக்கான பிரச்சினைகள். பிரசவம் நடக்கிற லேபர்ரூம்ல இருந்து சவ அடக்கம் நடக்கிற சுடுகாடு வரை பிரச்சினை பிரச்சினை தான். நாம ஆளுக்கொரு பிரச்சினையை எடுத்துக்கிட்டு அதன்தீர்வுக்காக போராடிக்கிட்டிருக்கோம்.


இத்தனை பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையோட பின் விளைவுகள் தான்னு நான் சொன்னா அடிக்கவே வருவிங்க. அது என்னன்னு சொன்னாவேட்டிய உருவிருவிங்க. அந்த மூல பிரச்சினை எது தெரியுமா? வறுமை.. அந்த வறுமைக்கு காரணம் என்ன தெரியுமா?


இந்த நாட்டு மெஜாரிட்டி மக்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகள்ள சமப்பங்கு கிடைக்கவே இல்லை.

அது என்ன உற்பத்தி நடவடிக்கை, அதுலசமப்பங்கு கிடைச்சா என்ன? கிடைக்கலன்னா என்னனு கேப்பிக. சொல்றேன்.

ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள். தனிமனித வருவாய்னா என்ன? தேசீய வருமானம் டிவைடட் பை மக்கள் தொகை. அதுசரி முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?

ஒரு நாட்டில் ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் (SERVICES) ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.

தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.)இந்த இழவை வச்சுத்தான் தலைவருமானம் அதிகரிச்சுருச்சு, வாங்கும் சக்தி சாஸ்தியாயிருச்சு, நாடு முன்னேறிருச்சுன்னு பிரதமர்லருந்து,நிதிமந்திரி வரை ஜல்லியடிக்கிறாய்ங்க.


அதே வாயால தான் பருப்பு விலை ஏறிப்போச்சு அதனாலதான் பணவீக்கம் சாஸ்தியாயிருச்சு. அரிசி விலை ஏறிப்போச்சு அதனாலதான் பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்கு போயிருச்சுனும் சொல்றாய்ங்க.ரஜினி வருமானத்தை பேப்பர்ல வேணம்னா சனத்துக்கு பங்கு போட்டுரலாம். நெஜமாலுமே இது நடக்குமா? மிஞ்சி மிஞ்சி போனா ராகவேந்திராகல்யாணமண்டபம் பக்கமா பொடி நடையா போனா ரஜினி சாரோட வருமானத்துலருந்து ஒரு க்ளாஸ் மோர் கிடைக்கும். தட்ஸால்.


அவருக்கு யந்திரன் சினிமாவோட உற்பத்தி நடவடிக்கைல பங்கு கிடைச்சது. பங்குக்கேத்த வருமானமும் கிடைச்சிருக்கும். நமக்கு எந்த உற்பத்திநடவடிக்கைல பங்கு கிடைக்குது? கிடைக்க போவுதுனு கேப்பிக. சொல்றேன்


மொதல்ல உற்பத்தி எப்படி நடக்குது.. அதுக்கு என்னென்ன தேவைனு பாருங்க

உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:

உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.


உற்பத்தியின் ப‌ல‌ன்:

நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.

வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் ப‌ங்கு கிடைக்கும்?


இதுக்கு என்னதான் தீர்வு? அடுத்த பாராக்கள் கொஞ்சம் போல தியரி வரும். மூளை டைரி பால்கோவா மாதிரி ஆயிரும். இருந்தாலும் உத்தாரா படிச்சு வைங்க.

உற்பத்தி காரணிகள் 4. இங்குள்ள வர்கங்கள் ரெண்டு. ஒன்னு உழைக்கும் வர்கம் .அடுத்தது ஆளும் வர்கம். உழைக்கும் வர்கம் எண்ணிக்கைலமெஜாரிட்டி. ஆளும் வர்கமோ மைனாரிட்டி. இந்த உற்பத்தி காரணிகள்ள நிலம், நிர்வாகம், முதலீடு மூணுமே நெம்பர்ல மைனாரிட்டியாஇருக்கிற ஆளும் வர்கத்தோட கையில இருக்கு.


நெம்பர்ல மெஜாரிட்டியாக உள்ள உழைக்கும் வர்கம் கிட்டே இருக்கிறது ஜஸ்ட் உழைப்புத்தான் . இந்த இன் ஈக்வாலிட்டிதான் எல்லாபிரச்சினைக்கும் மூலம்.

உற்பத்தி காரணிகளை வச்சுத்தான் உற்பத்தி - உற்பத்தில பங்கெடுக்கிறதுன்னா உங்க கிட்டே நிலமோ,முதலீடோ, நிர்வாகமோ,உழைப்போஇருக்கனும். உற்பத்தில நீங்க ஆற்றின பங்கை வச்சுத்தான் பலன். அதாவது தேசீய வருமானத்துல உண்மையான பங்கு. அதாவதுதலைவருமானம்.


ஆளும் வர்கம் கிட்டே உள்ள 1.நிலம் 2.நிர்வாகம் 3.முதலீடு ஆகிய 3 உற்பத்தி காரணிகள்ள ஏதேனும் ஒன்னு மெஜாரிட்டியா உள்ள உழைக்கும்வர்கத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகனும். அப்பத்தான் உற்பத்தி நடவடிக்கைகள்ள அதாவது தேசீய உற்பத்தில/அதாவது தேசீய வருமானத்துலஉண்மையான,சமமான பங்கு கிடைக்கும். உண்மையிலயே தனிமனித வருவாய் உயரும்.வறுமை ஒழியும்.வறுமையின் பின் விளைவாஏற்பட்ட வறுமை சுரண்டல் முதலான லட்சத்து தொன்னூறு பிரச்சினைகளும் ஒழியும்.


(இது மட்டும் சாத்தியப்பட்டா உற்பத்தியும் பலமடங்கு பெருகும். இத்தனை நாள் உற்பத்தி நடவடிக்கைகள்ள இருந்து விலகியிருந்த உழைக்கும்வர்கம் மெஜாரிட்டி வர்கம் உற்பத்தில நேரடியா பங்கேற்கறதால உற்பத்தி பிச்சிக்கும்)

எல்லாம் சரிங்கண்ணா உற்பத்தி காரணிகளை இருவர்கங்களுக்கிடையில சமமா பிரிச்சுட்டா மேட்டர் ஓவருங்கறிங்க. மேற்படி 3 காரணில எதைதூக்கி கொடுத்துர்ரது எப்படி கொடுக்கிறதுனு கேப்பிக. சொல்றேன்.

1.முதலீடு:

ஆடுவளர்ப்பு,மாடு வளர்ப்புன்னு சின்ன சின்னதா முதலீடு கொடுக்கப்பட்டுக்கிட்டே தான் இருக்கு. ஆனா என்ன அதிகாரிங்க விளையாடிர்ராய்ங்க.வங்கி அதிகாரிங்க விளையாடிர்ராய்ங்க.

2.நிர்வாகம்:

வியாபார நிர்வாகமென்ன அரசு நிர்வாகத்தையே சன நாயகம் கொடுத்து வச்சிருக்கு. ஆனால் என்ன லாபம்? பச்சை நோட்டு, மூக்குத்தினு சூகாட்டி கதைய முடிச்சுர்ராய்ங்க

3. நிலம்:

நில உச்சவரம்பு சட்டம், வினோபாவே பூதான் மூவ்மென்ட், நம்ம கலைஞரோட ஏக்கரா திட்டம் எல்லாத்துக்கும் டோக்கராதான். போறும்போறாததுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பேரால உள்ள நிலமெல்லாமும் உஷ் காக்கி.


அது சரி உற்பத்தி துறைகள்னா எத்தனையோ இருக்கில்லயா? எல்லா துறையோட உற்பத்திக்கும் மேற்படி நாலு உற்பத்தி காரணிகள்தேவைதான். ஆனால் இந்த குப்பன் சுப்பன் எல்லாம் மேற்படி துறைகள்ள என்னத்தை சாதிக்க முடியும்னு கேப்பிக. சொல்றேன்.


நம்ம நாட்டுல இன்னைக்கும் நூத்துக்கு 70% பேரு விவசாயத்துறைய நம்பித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. மத்த 30% பேரு மேற்படி 70%பேருக்கு தேவையான பொருட்களையும், சேவைகளையும் தந்தபடி வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. அதாவது இந்த 70% நல்லாருந்தா இவிகளைநம்பி வாழற உபரி 30% பேரும் நல்லாருப்பாய்ங்க.


மேலும் இந்த நாடு விவசாயத்துக்கு சூட்டபிள். இங்கே பூகம்பம்,பாலை வனம்,பனிப்பொழிவெல்லாம் கிடயாது. ஃபேஷன் மாறிடும்ங்கறபிரச்சினை கிடையாது. ஒசாமாவுக்கும் கோதுமை தேவை. ஒபாமாவுக்கும் கோதுமை தேவை. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள துறை.பொல்யூஷன் கிடையாது. இயற்கைக்கு நெருக்கமான துறை. .டி மாதிரி ஆட்குறைப்பு , ஆடை குறைப்பு,ஆடை குலைப்புக்குஅவசியமிருக்காது . ஆண்,பெண் குளுவான் ,குஞ்சுங்கற வித்யாசமே கிடையாது.எல்லாரும் உற்பத்தில நேரடியா பங்கு பெறலாம்.


அதனால நிலம்னா எல்லா நிலத்தையும் பறிக்கலைன்னாலும் விவசாய நிலம் வரையாச்சும் பறிச்சு உழைக்கும் வர்கத்துக்கு தந்தாகனும். இதுமுடியுமா? முடியவே முடியாது. ரத்த ஆறு ஓடும்.


என்னதான் தீர்வு?

நேரடியா பறிச்சு , கை மாத்தினாதானே ரத்த ஆறு. நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்கினால்? கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துத்தினால்? ரத்தம் ஐஸ் வாட்டர் மாதிரி ஆயிரும் தலைவா.விவசாயிகளின் கூட்டுறவு சங்கம் மத்திய மானில அரசாங்கங்களோட உதவி, மேற்பார்வைல விவசாயம் பண்ணுவாய்ங்க. லார்ஜ் ஸ்கேல்ல பண்றதால க்ராப் இன்ஷியூரன்ஸ், மார்க்கெட்டிங் எல்லாம் ஸோ ஈஸி.

ஆமா இருக்கிற நிலத்துக்கே பாசனத்துக்கு வழியில்லே.இதுல சங்கமாவது,பண்ணை விவசாயமாவதுனு முனகல் கேட்குது. இதுக்கு ஒரு தீர்வு இருக்கு


நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல். மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல். கையோட கையா விவசாய உற்பத்திகளை பாதுகாக்க தேவையான கிடங்குகளையும் நிர்மாணிக்கலாம்.


ஆமா.. இப்போ நடைமுறைல உள்ள பாராளுமன்ற ஆட்சி முறைல,எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைல இந்த திட்டத்தையெல்லாம் எப்படி நடை முறைப்படுத்தறதாம்னு கேப்பிக. சொல்றேன்.


பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல். இதனால அரசாங்கத்துக்கு மட்டுமல்லாம கட்சிகள் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு குறையும். மும்முணை போட்டி ஏற்பட்டு மக்கள் தொகைல 52 சதவீதமா இருக்கிற பி.சி,எஸ்.சி, மைனாரிட்டி மக்கள்ள பாதி பேர் ஒரு பார்ட்டிக்கு ஓட்டு போட்டா கூட உண்மையான பி.சி,எஸ்.சி, மைனாரிட்டி மக்களின் நலம் விரும்பி பிரதமராக வாய்ப்பிருக்கு. ஸ்திரத்தன்மை இருக்கும். எம்.பிக்களோட தயவை நம்பி காலம் தள்ள வேண்டாம். மேலவைக்கு வாயிதா போன கிழவாடிகளை நியமிக்காம உண்மையான அறிவு ஜீவிகளை நியமிக்கலாம்.


இதுவரைக்கும் லாஜிக்கலா தான் இருக்கு. ஆனால் மூட்டை மூட்டையா கருப்பு பணம் வச்சிருக்கிறவன்லாம் தூங்குவானா? நல்லது நடக்க விடுவானானு கேப்பிக சொல்றேன்.


தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்


இப்போ ரத்தின சுருக்கமா பார்ப்போம்:

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.

2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.

3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். 4.கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.


5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

பி.கு:

இந்த மாதிரி ஒரு திட்டத்தை தீட்டி தலையணை கீழே வச்சு தூங்கினிங்களா முருகேசன்னு கேப்பிக. கழுகு வலைச்சரம் ஆசிரியர் குழு அனுமதிச்சா இந்த ஆப்பரேஷன் இந்தியா2000 அமலுக்கு என்னெல்லாம் செய்தேன். எந்த மாதிரி சந்தர்ப்பத்துல 14 நாள் உண்ணாவிரதம்லாம் இருக்க வேண்டி வந்ததுன்னு அப்பாறம் சொல்றேன் பாஸு.


கழுகிற்காக,
சித்தூர் முருகேசன்.


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

18 comments:

Jay said...

கட்டுரை மிகவும் அருமை. உங்கள் சிந்தனை நன்றாக இருக்கிறது. தொடரட்டும்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் பி கு வில் சொல்லி இருப்பது போல் உங்களின் எண்ணங்களை மறைக்காமல் வெளிப்படுத்துங்கள் . புதுமைகள் பிறக்கட்டும் . பதிவு எழுத்துக்களில் சிறந்த எண்ணங்கள் வாழ்த்துக்கள் .

முரசொலி மாறன்.V said...

அட பாவமே! கணவு கண்டா இந்தியா வல்லரசா மாறிடும்னு எல்லாரும் சொல்றாங்கோ. நீங்க வேற! வீணா சிந்தித்து 'சமூக விரோதி' யா மாறிடாதீஙக.

Jey said...

இருங்கப்பா உருப்படியான பதிவா தெரியுது...படிச்சிட்டு வரேன்.:)

விஜய் said...

மிக அருமையான பதிவுங்க, சிந்திக்க வேண்டிய விஷயம் தானுங்க, நாட்டில் இல்ல பிரச்சனைகள மட்டும் சொல்லி பொலம்பாம அழகா அதற்கான தீர்வையும் அருமையா செதுக்கி இருக்கீங்க, உண்மையில் இவைகள் சாத்தியமான ஒன்று தான் தோழரே, "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதாவாது " அப்டின்னு சொல்லிட்டு, மூன்று வேலையும் மூக்கு முட்ட தின்னுட்டு தூங்குரவங்களா துரத்திட்டு நம்பிக்க வைக்குற இளைன்ஞர்கள் ஒன்று சேர்த்தா போதும் எதுவும் சாதிக்கலாம் தோழரே ,

என்னை கவர்ந்த ஒரு சில பதிவுகளில் இதுவும் ஒன்று..அழகாய் அனைத்து நடைமுறை சாத்தியங்களையும் முன் வைத்து இருக்கிறீர்கள் ..மிக அருமை

அருண் பிரசாத் said...

இதை அவர் பிளாக்ல ஏற்கன்வே படிச்சி இருக்கேன்.

நல்ல சிந்தனைதான், சாத்தியமா என்பதுதான் கேள்விகுறி?

இளங்கோ said...

அய்யா ”ஜாதி” என்ற ஒரு அமைப்பு நீடிக்கும் வரை இந்தியாவில் எதுவுமே நிறைவேறாது.

என்னது நானு யாரா? said...

உழைக்கும் மக்களை ஒன்னு சேக்கனும். அவங்களுக்கு சிந்திக்கும் திறணை வளக்கனும். அதுக்கு போதை பொருட்களின் உபயோகத்தை தடுக்கனும்.

ஆளுக்கு ஒரு கோடு இழுத்தா பெரிய மாக்கோலமா போடலாம்! இளைஞர் சக்தி ஒன்று திரட்டபட வேண்டும்.

இத குறிக்கோளா வைச்சுத்தான் என் பதிவுல, நமக்கு நாமே மருத்துவ பண முதலைங்க கிட்ட இருந்து, நம் உடல்-மன ஆரோகியத்தை எப்படி காப்பத்திக்கிறதுன்னு எழுத ஆரம்பிச்சிருக்கேன். உங்களை படிக்க அழைக்கிறேன். கட்டாயம் வாங்க!

நாம எல்லாம் ஒன்னு சேர்ந்தா எழுச்சி கொண்ட புது பாரதத்தை படைக்கலாம்!

Chittoor.S.Murugesan said...

கழுகு மூலம் என் வல்லரசு கனவை படித்து மறுமொழி இட்ட சக‌பதிவர் , வாசகர்களுக்கு நன்றி நன்றி நன்றி ( யாராச்சும் துக்ளக் மாதிரி இருக்கு, சர்வாதிகாரம் வந்துரும் அதுஇதுனு கிழிப்பாய்ங்கனு நினைச்சா புஸ்ஸுனு ஆயிருச்சே.) கழுகு குழுவிற்கும் தனிக்காட்டு ராசாவுக்கும் மீண்டும் நன்றி

தனி காட்டு ராஜா said...

தல ,
ஒரு வாரமா நான் வலை யுலக பக்கம் வராமா "வல்லரசு" கனவு கண்டுகிட்டே துங்கிட்டேன்.....
அந்த கனவுல கூட விஜய காந்த் வந்தாரு ...........அவரு கூட "வல்லரசு" படம் எடுத்தவரு தானே ?
தல... நீங்க ஏன் இந்த விசயத்தை அப்படியே விஜய காந்துக்கு fax பண்ண கூடாது..........
இத நான் காமடியாம் சொல்லலை ........சீரிசாவும் சொல்லல .....எதோ தோனுச்சு ....சொல்லறேன் .........

மற்ற படி .....உங்கள் கனவு விளக்கம் அருமை .....

Chittoor.S.Murugesan said...

அல்லாருக்கும் வணக்கமுங்கண்ணா .. தமிழமுதம் கூகுல் கூகுல் குழுமத்துல நம்ம வல்லரசு கனவுகளை பத்தி சுவையான விவாதம் நடக்குது. அதுல பங்கெடுக்க கீழ் காணும் லின்கை க்ளிக் செய்யவும்
http://groups.google.com/group/tamizhamutham/browse_thread/thread/9eb081214d7edd0d/6b8ff76cf53a24c3?pli=1

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

அனைவருக்கும் நன்றி.

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...

சித்தூர் முருகேசனின் சின்னத்தனம்

தனி மனித தூஷணைக்கு போற சாதி நானில்லே. ஆனால் என்ன பண்றது சில சாக்கடைகள் வழிஞ்சுண்டே இருந்தா ஊரு நாறிப்போகாதோ? அதனாலதான் இந்த சாக்கடைல இறங்கியிருக்கேன். என்ன சேறு வாரி இரைப்போ. இரைக்கட்டும் .வராஹ மூர்த்தி மாதிரி இந்த மலக்கடல்ல முங்கியே தீர்ரதுன்னு நிர்ணயிச்சுண்டேன். இனி பகவான் விட்ட வழி.

பிராமணன்னா பூணூல்,பஞ்ச கச்சம்,வேதம்,பொறுமை மட்டுமில்லிங்காணும். சாணக்கியன் பிராமணந்தான். ஆனால் தன்னை அவமதிச்ச நந்தர்களை நடுத்தெருவுல நிறுத்தினானோன்னோ?

இன்னைக்கு நாட்டுல உள்ள பிராமணாள் ரத்தத்துல இந்த இன்ஸ்பிரேஷன் இல்லே. அதனாலத்தான் சித்தூராரோட கதை ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷாளை கடிச்ச கதையாகிப்போச்சு

உலகை உய்விக்க வந்த பெருமாள் மாதிரி தலையை சுத்தி பிரபையை காட்டிண்டு அபய ஹஸ்த முத்திரை கொடுத்த சித்தூர் முருகேசன் கடைசியில பெத்ததாயாரை கூட கேவலப்படுத்தற நிலைக்கு வந்தூட்டார். தன்னோடது பஸ்மாசுர ஹஸ்தம்னு ருசுப்படுத்திண்டார்.

தெலுங்கு வலையுலகத்துலயும் இந்த அச்சு பிச்சு இப்படித்தான் உளறி கொட்டித்து ஜோட்டால அடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டா. ஏனோ தெரியலை தமிழ்ல மட்டும் இந்த பிரகிருதியை தட்டி கேட்க தயங்கறா.

சைக்காலஜி,செக்ஸாலஜியெல்லாம் மெடிக்கல்ல சேர்த்தி. நம்ம கான்ஸ்டிட்யூஷன் பிரஜைகளுக்கு பேச்சுரிமை எழுத்துரிமையெல்லாம் வாரி வழங்கியிருந்தாலும் அதுக்கும் சில கட்டுப்பாடெல்லாம் இருக்கு. மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதுக்குரிய படிப்பை படிக்காதவா எழுதப்படாது,பிரசுரிக்கப்படாது.

ஆனால் பாருங்கோ முந்தா நேத்து கூகுல்ல போய் செக்ஸாலஜினு தேடறேன் இந்த அபிஷ்டுவோட வலைப்பூ தான் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாலே தெரியறது. மாத்ருபூதத்தோட விஷயம் கூட இதுக்கப்பாலதான் தெரியறது.

நமக்கென்ன நமக்கென்னானு இருந்தா சாக்கடை தேங்கி நம்ம வீட்டுக்குள்ளாறயும் பூந்துரும். அப்பால கிருஷ்ணான்னாலும் இல்லை கோவிந்தான்னாலும் இல்லே. படிக்கிறவா "தத் வெறும் உளறல்"னுட்டு போயிர்ரதால இந்த கெரகம் பிடிச்சது என்னென்னத்தையோ குப்பையை கொண்டு வந்து நம்ம தலைக்குள்ள கொட்டி வைக்கறது.

நானாச்சும் ஏதோ வயித்துப்பாட்டை பார்த்துண்டிருக்கிற ஹார்ட் வேர் காரன். இந்த வலையுலகத்துல எத்தனையோ அனுபவஸ்தருக, மேதாவி எல்லாம் இருக்கா. அவாள் எல்லாம் வாயை மூடிண்டு இருந்தா இந்த அல்பம் சொல்றதுதான் சத்தியமுன்னு ஆயிராதோ?

பசு வதையை ஆதரிக்கிறது, கீதை உட்டாலக்கடிங்கறதுல்லாம் பைத்தாரத்தனமோல்லியோ. ஒரு தாயார் ஒரு குழந்தைய பெத்து போட்டுட்டு பரமபதிச்சுட்டா ஒரு பசுவை வச்சு அந்த குழந்தைய வளர்த்துரலாம். அந்த பசுவையே கொல்றதை ஒரு ஜென்மா நியாயப்படுத்தறதுன்னா என்ன சொல்ல?

ஆதிசங்கராச்சாரியார்லருந்து பாலகங்காதர திலகர் வரை எத்தனையோ ஞானிகள் கீதைக்கு பாஷ்யம் எழுதினாளே அவாளுக்கெல்லாம் வராத சந்தேகம் இந்த அறிவுகொழுந்துக்கு வந்திருக்கு. கிருஷ்ணன் நிஜமாம். கீதை நிஜமாம் .ஆனா அதுல பிராமணாள் கலப்படம் பண்ணூட்டாளாம். அட இழவே ஒன்னை மாதிரி ரெண்டுங்கெட்டானை விட கடவுளே இல்லைன்னு சொன்ன ராமசாமி நாயக்கரே மேல்.

இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமா உளர்ர இந்த பன்னாடைக்கு பல்லு மேல நாலு போட்டு அடக்கறதை விட்டுட்டு வெறுமனே வேடிக்கை பார்த்துண்டிருந்தா எப்படி?

இதை இப்படியே விட்டு வச்சா இதெல்லாமமெங்கே போய் நிக்க போறதோ புரியலை. இந்த ஆலாலத்தை நாம மட்டும் படிச்சா பரவால்லே. குழந்தேள் படிக்கறா, சின்னவயசுக்காரா படிக்கிறா. பொம்மனாட்டிகளும் படிக்கிறா.

இந்த அபிஷ்டு உளர்ரதையெல்லாம் நெஜமுன்னு நம்பி வச்சதுங்கனா வேற வம்பே வேணாம். மண்டை கலங்கினாலும் சொஸ்தப்படுத்திரலாம். நாண்டுக்கிட்டு செத்தா யார் பொறுப்பு.

சத்தியம் செருப்பை போட்டுக்கறதுக்கு முந்தி பொய் ஊரெல்லாம் சுத்தீட்டு வந்துரும்ங்கற மாதிரில்ல இருக்கிறது கதை. அனுபவம் அனுபவம்னு பீத்தறது. எனக்கு இந்த விஷாயத்துலல்லாம் அனுபவம் கிடையாதுதான்.ஆனா அனுபவஸ்தாளெல்லாம் மவுனமா இருந்துரலாமோ?

ஒரு வேளை இந்த ஊத்தை வாய்க்கு பயப்படறாளோ? தாயார் பிள்ளையோட படுத்துண்டுரனும்னு உள்ளூர நினைக்கிறாளாம். அதுக்கு என்னைக்கோ ஒரு நா வாய்ப்பு ஏற்படும்னு காத்துண்டிருக்காளாம். மாட்டுபெண் வந்ததும் அந்த சான்ஸு போயிர்ரதேனு பதறிப்போறாளாம் . மாமியார் மருமா சண்டைக்கு இப்படி ஒரு வியாக்யாணத்தை என் வாழ் நாள்ள கேட்டதில்லை.

இந்த வரிகளையெல்லாம் அடிச்ச கைக்கு குஷ்டம் வராதோ? இந்த அட்டகாசத்தை தட்டிக்கேட்காதவா மட்டுமென்ன தண்டனையிலருந்து தப்பவா முடியும்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மா இருந்தென்ன லாபம்.

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...

ஒரு தத்தாரி கிளப்பின பீதியும் தமிழ் மணத்தின் பேதியும்

மறுபடி அந்த அச்சு பிச்சுவை பத்தியே அதான் சித்தூர் முருகேசனை பத்தித்தான் இந்த பதிவும். நான் ஏதோ ஒரு முருகேசனை பத்தி மட்டும் பேசறேன்னு நினைச்சுடாதிங்கோ. அந்த அபிஷ்டுவை போலவே அகாரணமா, ஒரு ஹேதுவே இல்லாம பிராமணாளை வறுத்து எடுக்கிற எல்லாத்தை பத்தியும் தான் பேசறேன்.

கருத்து சுதந்திரம்ங்கற பேர்ல கண்ட நாய்கள் கண்டதை குலைக்கலாம்.அதையெல்லாம் தமிழ் மணம் மணம் (?) பரப்பும். ஆனா அந்த அபிஷ்டுக்கள் வாசிக்கிற குற்ற பட்டியலுக்கு விளக்கம் கொடுக்க என்னை மாதிரி ஒரு பேக்கு வாயை திறந்தா குரள் வளையை நெறிக்குமா? மத்த திரட்டிகள்ளயும் இந்த வலைப்பூவை பதிஞ்சேன். ஒருத்தரும் நிராகரிக்கலை. தமிழ்மணம் காரா மட்டும் நிராகரிச்சுட்டா

இது என்னவித நியாயத்துல சேர்த்தினு புரியலை. தமிழ் மணத்துக்கு மட்டும் கொம்பா முளைச்சிருக்கு. நான் சொல்றேன். அந்த சித்தூர் முருகேசன் கிளப்பின பீதியால பேதியாகித்தான் என் வலைப்பூவை நிராகரிச்சுருக்கு.

அந்த சண்டாளப்பாவியோட பழம் பதிவுகளை புரட்டிக்கிட்டிருந்தப்ப தான் தமிழ்மணம் இந்த அரைவேக்காட்டோட பதிவையும் தடை பண்ணினதும், அதுக்கு இந்த தத்து பித்து கண்டதையும் உளறிவச்சிருக்கிறதும் தெரிய வந்தது.

கௌரவ சபையில திரவுதி வஸ்திராபரணம் நடந்தப்ப மவுனிகளா இருந்த பெரியமனுஷாளுக்கும் குருட்சேத்திரத்துல உரிய தண்டனை கிடைச்சதை எண்ணிப்பாருங்கோ .இப்பயாச்சும் வாய் திறவுங்கோ? ( அந்த திரவுபதியையே இந்த பிரகிருதி காமப்பேய்னு சொல்லி யிருக்கு. அதையும் இந்த வலையுலகமும், தமிழ் மணமும் சகிச்சிருக்கு. ஆனா என்னோட பதிவை பட்டியலிட கூட நிராகரிச்சிருக்கு )


தப்பு பண்றவாளைவிட அந்த தப்பை கண்டிக்காதவா தான் பெரிய தண்டனைக்குள்ளாவா.

முருகேசன் தான் பெட்டிப்படுக்கை கட்டிக்கிட்டு கிளம்பிட்டாரே .இன்னும் எதுக்கு அவரை விமர்சிக்கிறேன்னு இளகிய மனமுள்ளவா கேழ்க்கலாம். ஆள் இல்லேன்னா என்ன.. அந்த பிரம்மஹத்தி எழுதின விஷயமெல்லாம் அப்படியேத்தானே இருக்கு. அதுக்கு ஒரு பிராமணனா நான் பதில் சொல்லித்தான் தீருவேன்.

பிராமணாள் மேலே இந்த முருகேசன் தன் பதிவுகள்ள அள்ளி தெளிச்சிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு அப்பப்போ பதில் சொல்லனாம்னு நினைச்சிருக்கேன்.

1.அன்னியருக்கு தாய் நாட்டை காட்டிக்கொடுத்தா:
ஏனய்யா நான் தெரியாமத்தா கேழ்க்கிறேன். நாட்டை காப்பாத்த வேண்டியவா சத்ரியாள். யுத்தத்துக்கு நிதி வழங்க வேண்டியது வைசியாள். அவாளுக்கு சேவைபண்ண வேண்டியது சூத்திராள். நல்லது கெட்டது சொல்றதுதான் எங்களாவா வேலை. நீங்க ஒத்துமையா இல்லே. அரை பர்லாங்,ஒரு பர்லாங்குக்கு ஒரு ராஜ்ஜியம். அந்த புரத்துலே கண்டவளோட உருண்டுண்டிருந்தேள். இவன் பெஞ்சாதியை அவன் தூக்கிப்போவான், அவன் பெஞ்சாதியை இவன் தூக்கிண்டு போவான் .யுத்தம். இதுக்கு நாங்களா பொறுப்பு. முஸ்லீம் ராஜாக்கள் தண்டெடுத்து வந்தப்போ நின்னு மோதி பசுவை, பிராமணாளை,பெண்களை காப்பாத்த வேண்டியது சத்ரியாள் பொறுப்பு. காப்பாத்தினேளா? இல்லையே. அப்படி காப்பாத்துவேள்ங்கற நம்பிக்கையை கொடுத்தேளா? இல்லையே. அப்புறம் பிராமணன் தன்னை, தன் அகத்து பெண்களை, தன் வித்தையை ,சம்பிரதாயங்களை எப்படி காப்பாத்திக்க முடியும்?

பிராமணன் பொறுமை காக்கனும்னு தான் சொல்லியிருக்காளே தவிர சொரணை கெட்ட ஜென்மமா இருக்கனும்னு சொல்லி வைக்கலியே. வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசிட்டு எழுதிட்டு அதும்பாட்டுக்கு போயிடுத்து. அப்போ அந்த ஆசாமியோட பேச்சே நிஜமாயிராதோ? அதுக்கு ஒரு கவுண்டர் கொடுக்கவேணாமோ?

அதைத்தான் நான் செய்யறேன்.

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...

மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?


அந்த அச்சு பிச்சுவை அடிச்சு விரட்டுங்கோ

அந்த சித்தூர் முருகேசனைத்தான் சொல்றேன். வலையுலகத்தை பிடிச்ச சனி அது. தானா விலக விடாதீங்கோ. அது அவ்ள லேசுல விலகாது. அடிச்சு விரட்டுங்கோ. ஆகஸ்ட் 15க்கே விலகறேன்னுட்டு வக்கிர சஞ்சாரம் பண்ணின்டு இருக்கு.சதா ஸ்வயம் ப்ரதாபங்களை அள்ளி விட்டுண்டு, விதண்டா வாதம் பண்ணிண்டு பிராம்மண தூஷனை பண்ணிண்டு வலையுலகத்தையே நாறடிச்சுண்டு இருக்கு. அழகிரியோட நண்பர்கள்னு ஒரு பதிவை போட்டிருக்கு. அழகிரியெல்லாம் வர பிரசாதி. ஓகோனு வரப்போறாரு. அந்த பதிவுகள்ள இந்த அரைவேக்காடு குற்றப்பட்டியல் வாசிச்சுதே அவாள் எல்லாம் பெரிய மனுஷா. லக்ஷ்மீ புத்ராள்.. விஷ்ணு சமானம். இதுக்கேதோ போறாத காலம் வந்தூடுத்து. அதான் இப்படி தலைவிரிச்சு ஆடறது . ஊர்ல அடங்காததை உலகத்தார் தான் அடக்கனும்.


இத்தனை நாள் கில்மா, அஜால் குஜால்னுட்டு கதை பண்ணின்டு இருந்துட்டு இப்போ மாய்மாலம் பண்றது. ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குமாம். அது மாதிரி இந்த அபிஷ்டு 500 பேரு மெம்பர்ஸா சேர்ந்தாதான் புது பதிவு போடுவேன்னு ஏன் ஷரத்து போடனும். சூரிய சந்திராள் வேளை மாறி உதிச்சாலும் இது நடக்க போறதில்லை. ஆனாலும் இந்த மானங்கெட்டது மறுபடி வாரி முடிஞ்சுண்டு வந்துரும். அதுக்கு இடம் கொடுக்காதீங்கோனு கேட்டுக்கத்தான் இந்த பதிவை போடறேன்.


கீதையையே விமர்சனம் பண்ற அளவுக்கு வந்தபிறவு ஈவு இரக்கம் எல்லாம் காட்டப்படாதுங்கறேன். ஒரு சிலர் பரிதாபப்பட்டு மெம்பரா சேர்ந்தாப்ல இருக்கு. பாத்திரமறிந்து பிச்சையிடு,கோத்திரமறிந்து பெண்ணை எடுன்னு பெரியவா சொல்லி வச்சிருக்கா.

அவாள் எல்லாம் வாழ்ந்து பார்த்தவோ. அவாள் சொன்னதெல்லாம் இன்னைக்கும் பொருந்தறது. மாட்டுக்கறி திங்கறவாளை ஊருக்கு வெளிய வச்சது ஏன்? மாடு பெரிய ஜீவன். சேரியே ஒன்னு சேர்ந்து தின்னாலும் தீராது.வெட்டின மறு கணமே அது பிணம். அந்த பிணத்தை உப்பு கண்டம் போட்டு திம்பா. கழிவெல்லாம் கிடக்கும். பாக்டீரியா வரும். வேண்டாண்டா பசு தாய் மாதிரி கொல்லப்படாதுன்னு பத்து தரம் சொல்லியிருப்போ.கேட்கலை. தள்ளி வச்சுட்டா.

இன்னைக்கு படிச்சு பட்டம் வாங்கினவா சேரிலயா இருக்கா? இல்லையே ஊருக்குள்ள வந்துட்டாளே. யாராச்சும் தடுத்தாளா? மாமிசம் தின்னாலே தேகம் மாமிசத்துக்கு அலையும். மாட்டு மாமிசம் தின்னா தாயின்னு பார்க்குமா? தங்கைனு பார்க்குமா?

பிராமணன்னா குரு சமானன்.குருன்னா தகப்பன் மாதிரி. குரு பத்தினி தாய் மாதிரி. அவாளோட வாரிசுகளை சகோதர சகோதிரி மாதிரியாகத்தானே மதிக்கனும். இன்னைக்கு எத்தனை கலப்பு திருமணம் நடக்கறது. அதனாலதான் அப்படி கட்டினது ஏதும் உருப்படறதில்லை. அதுகளுக்கு பொறக்கறதும் உருப்படறதில்லை.மனுதர்மம், தர்ம சாஸ்திரங்கறதுல்லாம் ஆகாசத்துலருந்து குதிக்கலை. அனுபவத்துலருந்து வந்தது.

இந்த ஞான சூனியம் எல்லாத்தையும் உருட்டறேன் ,பிறட்டறேன்னு அலட்டிக்கறது. எடுத்தேன் கவிழ்த்தேன்னு எழுதறது . குதிரைல எத்தனை சாதி இருக்கு? அலாவுதீன் கில்ஜி காலத்துல குதிரைகளுக்கு சூடு போடற வழக்கத்தை வச்சிருந்தாளாம். எதுக்குன்னா .. சைன்யத்துல உள்ள உசந்த சாதி குதிரைய லவட்டிண்டு மட்ட குதிரையை வச்சு ஃப்ராடு செய்துராம இருக்கத்தான்.

குதிரைல ரேஸ் குதிரை இருக்கு, கல்யாண ஊர்வல குதிரை இருக்கு. பீச் குதிரை இருக்கு. எல்லாத்தையும் ஒரே கொட்டில்ல கட்ட முடியுமோ?

மனுஷா மூளையாலயும் உழைக்கலாம், உடலாலயும் உழைக்கலாம். மூளையால உழைக்கிறவாளுக்கு உடல் பலம் இருக்காது. உடலால உழைக்கிறவாளுக்கு மூளை பலம் இருக்காது. இதை அனுபவத்துல தெரிஞ்சுண்டுதான் மனுஷாள நாலு வர்ணமா பிரிச்சா.

இன்னைக்கு ஐக்யூ டெஸ்ட் எடுத்து க்ரூப் பிரிக்கிறாளோன்னோ அந்த மாதிரிதான். ஜீன்ஸு டீ ஷர்ட்டுன்னு இப்ப பேசறா. இதையெல்லாம் வாழையடி வாழையா புரிஞ்சுண்டுதான் ஒரு க்ரூப்பை இன்னொரு க்ரூப்போட சேர விடப்படாதுன்னு நிர்ணயம் பண்ணினா.

வெறுமனே எடுத்தேன் கவிழ்த்தேன்னு உளறிக்கொட்டின பாவத்துக்கு,பிராமண தூஷனை ,தெய்வ தூஷனை பண்ண பாவத்துக்கு பஸ்மாசுரன் கதையா தன் கைய தன் சிரசு மேலயே வச்சுண்டு ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுங்கோ. மறந்தும் மேற்படி பாடாவதி சைட்ல மெம்பராயிராதிங்கோ..

அந்த துஷ்டனோட பாவத்துல பங்கு வாங்கிண்டு அவதிப்படாதீங்கோ

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...

..ஆயிஷா மீரான்னு ஒரு பொண்ணு. ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டிருந்தது. இந்த கேஸ்ல ஒரு தலித்தை கைது பண்ணி கோர்ட்டுல நிறுத்தினா. உடனே நாட்ல உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் கச்சை கட்டிண்டு களமிறங்கினா.

நேத்திக்கு கோர்ட் தீர்ப்பு கொடுத்துருத்து. ஒரு ஆயுள் தண்டனை ,பத்து வருஷம் சிறை தண்டனை.

தலித்துன்னா அவன் அப்பாவியாத்தான் இருக்கனும்னு ரூலா என்ன? மனித உரிமைகள், தலித் அது இதுன்னு ஆனானப்பட்ட ஆகாத்தியம்லாம் பண்ணினா. டிவிகள்ள மணி கணக்குல சர்ச்சை.

அந்த பாவி வாக்கு மூலம் கொடுத்திருக்கான். போலீஸ் காராள் அதை வீடியோ எடுத்து கோர்ட்டுக்கு டிவிடியே சப்மிட் பண்ணா. அதுல கதை சொல்றாப்ல சொல்லியிருக்கான். ஒரே ஷாட்டுதான். மிக்சிங், மார்ஃபிங் எல்லாம் எதுவும் கிடையாது. அவனோட வாக்கு மூலத்தை பாருங்கோ..

"செகண்ட் ஷோ போனேன். திரும்பி வரப்ப மாடில யாரோ படிச்சுண்டிருந்தா. காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு உள்ள போனேன். இந்த பொண்ணு சன்னலை ஒட்டி படுத்திண்டிருந்தது. தொட்டா ஹாஸ்டலே விழிச்சுண்டுரும். என்ன பண்ணலாம்னு பார்த்தேன் பக்கத்துல உலக்கை இருந்தது. எடுத்து மண்டைல போட்டேன். கிர்கா மர்காங்கலே. அப்படியே இழுத்துண்டு பாத்ரூம் போனேன். அங்க வச்சு கெடுத்தேன்."

இந்த பாஷாண்டத்துக்கெல்லாம் வக்காலத்து வாங்கினவா முகத்தை கொண்டு வச்சுப்பா. ஹும்.. கலி முத்திப்போச்சு..

ஸ்ரீனிவாச ஐயங்கார் said...

பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே சாதியை சொன்னதுக்கு அடி உதையா? Can't you believe ?

நான் இன்னாரை பார்த்து நீ இன்ன சாதின்னு சொல்லியிருந்தா அது குத்தமாகலாம். நான் என் சாதியத்தான் சொன்னேன். அது தப்பா? என் தோப்பனார் ஒரு பிராமணர். என் தாய் ஒரு பிராமணப்பெண் அப்போ நான் பார்ப்பான் தானே. நான் பார்ப்பான் தான்னு சொன்னா யாருக்கு வலிக்குது? எங்கே வலிக்குது?

அம்ருதமும் , ஆலாலமும் ஒரே பாற்கடல்ல உருவான மாதிரி என்னாட்டம் சத்ப்ராமணாள் வசிக்கிற இதே சித்தூர்ல ஒரு தீய சக்தி உருவாகிட்டுது. இந்த அச்சு பிச்சு இது நாள் வரை பண்ணாத அழும்புல்லை, போடாத ஆட்டமில்லை. எல்லாமே ஊத்திக்கும். அதான் ஹிஸ்டரி.

இந்த அச்சு பிச்சு அங்கங்கே நின்னு தானேதோ சாக்ரடீஸுங்கற நெனப்புல டமில் ப்ளாக்ஸை பத்தி அளந்து விட்டுண்டிருக்கும். இது என் காதுக்கும் வந்துது. இந்த அபிஷ்டு எல்லாத்துலயும் அரைகுறையாச்சே, அரை வேக்காடாச்சே இதும் வாசாலாக்குக்கு எத்தனை பேரு பலியாயிண்டிருக்காளோ என்னமோ பார்க்கலாம்னு ஒரு நோட்டம் பார்த்தேன்.

பச்சை பச்சையா எழுதறதும் , அதையும் சில அபிஷ்டுக்கள் கொண்டாடறதையும் பார்த்தேன். ஏதோ வயித்து பொழப்பு தொலையட்டும்னு பார்த்தா சதா ப்ராம்மண தூஷணை.

பிராமணங்கறவன் குருதத்வம். த்ரிமூர்த்தாளோட பகைச்சுண்டு பிராமணனை சரண் புகுந்தா சரணடைஞ்சவனை காப்பாத்தற சக்தி படைச்சவன் பிராமணன். ஆனால் பிராமண தூஷனை பண்ணீட்டு த்ரிமூர்த்தாள் கிட்டே போனாலும் பப்பு வேகாது.

ஏண்டான்னா த்ரி மூர்த்தாளுக்கு தெரியும். அவா என்ன யோசிப்போ.. " என்னடா இது நம்மோட ரச்சை பண்ணின்டு போனாலும் காப்பாத்தற பிராமணனையே துவேஷிக்கிறவனோட ப்ரேமை சாஸ்வதமா இருக்குமா.. செத்தாலும் இருக்காது"

அதனால தான் சொல்றேன் தெய்வ தூஷணை பண்ணவா யாரும் நிம்மதியா வாழ்ந்ததில்லை. அப்படியே வாழ்ந்தாலும் நிம்மதியா செத்ததில்லே.( உதாரணம் அண்ணாதுரை, பெரியார் - மூத்திர பானையை தூக்கிண்டு அலைஞ்சாரோன்னோ?) தெய்வ தூஷணை பண்ணவா கூட ஒரு சத்பிராமணனை சரண் புகுந்து அவன் காலை புடிச்சுண்டா கரையேறிடலாம் ( கல்கில கலைஞருக்கும் பிராமணாளுக்கும் உள்ள பிணைப்பை பத்தி ஞானி எழுதியிருக்கார் படிங்கோ)

இதெல்லாம் எதுக்கு சொல்லிண்டிருக்கேன்னு பார்க்கறேளா?

இவ்ள தூரம் வந்த பிறவு ஒளிவென்ன மறைவென்ன இந்த டமில் ப்ளாக்ஸ்ல தானேதோ கொம்பு முளைச்சவன்னு அலட்டிக்கிற , ஜோதிட ஓஷோ, வலையுலக மாத்ரு பூதம்னு உங்கள்ள சில அச்சு பிச்சுகள் கொண்டாடற முருகேசன் என்னை ஆளை வச்சு கூட்டு வச்சுண்டு ப்ளாக் மெயில் பண்ணான்.

இத்தனைக்கும் நானேதும் அவனோட மெயிலையோ , ப்ளாகையோ ஹாக் பண்ணிரலை. அவன் ரெகுலரா போவற நெட் சென்டருக்கு பை மிஸ்டேக் நானும் போனேன் போல. திரட்டில என் பதிவை இணைக்கறச்ச அந்த குரங்கோட மெயில் ஐடி வந்திருக்கு . நான் குருட்டாம்போக்குல அதை க்ளிக் பண்ணிட்டன் போல. என்னோட பதிவு அந்த எச்சக்கலையோட மெயில் ஐடியோட பப்ளீஷ் ஆயிடுத்து.

இதென்ன பஞ்சமா பாதகமா? பிரம்ம ஹத்தியா? எவனோ கட்டைல போறவன் என்னவோ இழவெடுத்த மிரட்டல் மெயில் அனுப்பி தொலைச்சான்னு சித்தூர் நெட் சென்டர்லயெல்லாம் அட்ரஸ் ப்ரூஃப். வாங்கிண்டுதான் சிஸ்டத்தையே கண்ணுல காட்டறாளா.. நெட் சென்டர்ல தனக்கு முந்தி சிஸ்டத்தை உபயோகிச்சவ விலாசமெல்லாம் பீராய்ஞ்சு என் விலாசத்தை தேடிப்பிடிச்சு ஆளனுப்பினான்.

வந்ததுங்க ஒன்னத்துக்கும் மூஞ்சில மீசை கூட கிடையாது. கழுத்துல சவுக்கம் போடாத குறையா என்னை ஆட்டோல கூட்டிண்டு போனதுங்க. அங்கே முருகேசனார் கீதோபதேசம் கணக்கா அறிவுரை சொல்ல விதியில்லாம கேட்டுண்டு வந்துட்டன்.

இந்த வாலை தெரியாத்தனமா மிதிச்சதுக்கே கிட்னாப்பு மிரட்டல்னா இது எந்த தலையை பார்த்து ஆடுதோ அதனோட லட்சணத்தை சொன்னா பிராணஹத்தியே கூட நடந்துரலாம். ஏதோ ஹார்ட் வேர் சாஃப்ட் வேர் தெரிஞ்சுண்டு பொழப்ப ஓட்டிண்டிருக்கேன். தோப்பனார் போஸ்டல் டிப்பார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணி ரிட்டையராகி ஜப மாலையும் கையுமா இருக்கார். தங்கச்சி ஒருத்தி கல்யாணத்துக்கிருக்கா. தாயாருக்கு மூத்திரப்பைல கல்லுன்னு சட்டிப்பானை கூட வித்து வைத்தியம் பார்த்தேன். எனக்கு கல்யாணத்துக்கு பார்த்துண்டிருக்கா. இத்தனை நடந்திருக்கு , போலீஸ்ல ஒரு புகார் கொடுக்கலாமேன்னு நீங்க கேழ்க்கலாம்.

இந்த வாலுக்கு ஒரு தலையிருக்கு. இந்த வாலுக்கு பின்னாடி நிருபர்னு ஒரு வாலு இருக்கு. ஸ்டேஷன்லயும் இந்த துஷ்டாளோட ராஜ்ஜியம் தானே நடக்குது. அது சரி இந்த விவரத்தையெல்லாம் இங்கே பதிவா போடறேளே இதனால ஆபத்துவராதான்னு கேழ்க்கலாம்.

இந்த வலையுலகத்துல இந்த துஷ்டன் தானேதோ பெரிய உத்தமன்னு பீத்திண்டிருக்கானே. அந்த இமேஜ் கெட்டுப்போயிருமேன்னு விளக்கம் சொல்ல முன் வரலாம். இல்லை இங்கே கடைய கட்டிண்டுர்ர மாதிரி இருந்தா என் மேல கை வைக்கட்டும்.

இந்த மாதிரி பிராமண துவேஷிகள் எல்லாம் அன்ன வஸ்திரத்துக்கு இல்லாம அவதிப்படப்போறா. இது நான் பன்னெண்டு வருஷமா ஜெபிச்சுண்டு வர்ர காயத்ரி மேல சத்தியம்.

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

ஐயா ஸ்ரீனிவாச ஐயங்கார்!

என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள். நான் ஏற்கனவே தங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்பதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டக்கடமைப் பட்டுள்ளேன்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் இருக்கும். இதில் மறுப்புக்கு இடமில்லை.

ஆனால் நீங்கள் நான் மன்னிப்புக்கேட்ட பிறகும் என்னுடைய தவறுகளை இவ்வாறு பப்ளிக்காக சொல்வது நியாயமா?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes