Saturday, August 28, 2010

தன்னம்பிக்கையின் வேர்கள்...

எதிர்பாரத திருப்பங்களை கொண்ட வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லா நேரங்களிலும் நாம் நினைப்பது நடைபெறுவதில்லை. ஒரு வித புரிதலோடு வாழ்க்கையை நகர்த்த தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் எல்லோர் கையிலும் அவசியம் இருக்கவேண்டும்.

தன்னம்பிக்கை பற்றி எழுதிக் கொடுங்கள் என்று நமது தோழர் ஸ்டார்ஜனிடம் கூறினோம்...மகிழ்ச்சியின் மறுபெயரான.....தோழரின் சரவெடி...இதோ...!

மனிதனின் வாழ்க்கை பல விசித்திரங்களை கொண்டது. அவன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்கிறான். ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போது எதிர்பாராத புதிய சூழ்நிலையை சந்திப்பது அவசியமாகிறது. உதாரணத்துக்கு இப்போது நாம் ஊருக்கு செல்கிறோம்.

அந்த பயணத்தில் பாதைமாறி செல்லும்போது நாம் எதிர்பாராத திருப்பத்தை சூழ்நிலையை அனுபவிக்கிறோம். அது நமக்கு நல்ல அனுபவமாகவோ அல்லது கெட்ட அனுபவமாக இருக்கலாம். இந்த சமயத்தில் நமது மனம் அந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்குவப்படுகிறது.அது போல.. நாம் இதுவரை உபயோகப்படுத்தாத ஒரு பொருளை வாங்குகிறோம். அப்போது அதை எப்படி உபயோகிக்க வேன்டும் என்று தெரியாததால் நாம் கொஞ்சநேரம் திணறுகிறோம். நன்கு அறிந்தபின் அதை உபயோகப்படுத்துவது கைவந்த கலையாகிவிடுகிறது.

உதாரணத்துக்கு கம்பியூட்டர்.... கம்பியூட்டர் வந்தபுதிதில் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் ஒரு தயக்கம். ஆனால் இப்போது அப்படியா... சும்மா புகுந்துவிளையாடுகிறோம் என்பதுதானே உண்மை.நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது கணக்கு சார் சீனிவாசன் சார், ஒரு நாள் கணனி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போதுதான் கணனி பேசிக் மொழி அறிமுகமாகியிருந்தது. அது எங்களுக்கு புரியவில்லை. அப்போது அவர் சொன்னார். "எலேய் தம்பிகளா..

நாம் ஒரு எந்த ஒரு பொருளை முதலில் பயன்படுத்தும்போது அதை பற்றி தெரியாததால் முதலில் தயக்கம் இருக்கும். அது பற்றி தெரிந்தபின் அதை உபயோகப்படுத்துவது மிக எளிதாக இருக்கும். அது எந்த பொருளாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு கணனி" என்றார்.அறிவியல் வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது. முதலில் நமக்கு அறிமுகம் விசயத்தை/பொருள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யும்போது புதுவிதமான சிந்தனைகளும் உருவாகிறது. நமக்கு தேவைகளும் வளர்ச்சியும் தேவைபடுவதால் எண்ணற்ற புதுபுது கண்டுபிடிப்புகள்.. அதன் மூலம் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம். நாம் எதைபற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் யாருக்கு நஷ்டம்?..முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை..மனிதனின் மனம் ஒரு குரங்கைப்போன்றது. அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். நாம் விரும்பும் ஒவ்வொரு செயலும் நமது மனதை பொறுத்தே அமைகிறது.. அது எதுவாகவும் இருக்கலாம்.. பயணம், பேச்சு,திட்டம், பழக்கவழக்கங்கள், விருப்பம், பொறாமை, கோபம், வேலை, தொழில்.... இப்படி எண்ணற்ற செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.


மனதில், இன்று நாம் செல்லும் காரியம் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு நல்ல எண்ணத்தோடு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். போகும்போதே எதாவது தடங்கல் ஏற்பட்டுவிட்டால் உடனே நாம், "சே.. இன்று நேரமே சரியில்லை.. நாளைக்கு போகலாம்" என்று நமது பயணத்தை ஒத்திவைக்கிறோம்.. மனதில் வீணான குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு மேலும் குழம்பிவிடுகிறோம்..

இது ஒரு புது அனுபவம். இப்போது அந்த பயணத்தை தொடருகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.. அங்கு நல்ல சூழ்நிலை போன காரியம் வெற்றி என்னும்போது அதை அனுபவிக்கிறோமே அது ஒரு புது அனுபவம்..


இந்த பயணத்தில் பாதை மாறி சென்று வேறொரு சூழ்நிலையை சந்திக்கும்போது அது ஒரு புது அனுபவம். நாம் இன்று இந்தஇந்த காரியங்களை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்த நினைக்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலையால் செயல்படுத்த முடியாமல் போகும்போது வருத்தப்படுகிறோம்.


திரைப்படங்களிலும் பலவிதமான சூழ்நிலைகளை சொல்லியிருப்பார்கள். அவற்றில் நல்ல விசயங்களையும் கெட்ட விசயங்களையும் சொல்லி இப்படி இருந்தால் நல்லாருக்கலாம்.. இப்படி இருந்தால் நமக்குதான் பாதிப்பு என்று சொல்லியிருப்பார்கள். அந்த கதைகளில் நமது மனமொன்றி அதேபோல வாழ்க்கையிலும் கடைபிடிக்க எண்ணுவோம்..


தொழில் செய்யும்போதும் பல சூழ்நிலைகளை நாம் சந்திக்கிறோம். இப்படி நிறைய அனுபவங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களையும் சிந்தனைகளையும் கற்றுத் தருகிறது. அவற்றில் நல்லவை கெட்டவை உண்டு.

எப்போதும் நாம் கெட்ட விசயங்களை மனதில்போட்டு குழப்பிக்கொண்டு மனதை அலைபாய விடக்கூடாது. எந்தஒரு விசயத்தையும் எப்போதும் நல்லதாகவே நினைக்க வேண்டும். சில சமயங்கள் தோல்விகள் ஏற்படலாம்.. ஆனால் அதுதான் நிலையென எண்ணிக்கொள்ளுதல் கூடாது. அந்தமாதிரி எண்ணங்கள் நமது வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்துவிடும்மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்... அது உங்களுக்கு எப்போதும் நல்லவற்றை நாடிச் செல்லவைக்கும். உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் என்று நம்முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, உங்கள் மனம் எப்போதும் நல்லவற்றையே நாடிச் செல்லவேண்டும். அப்போதுதான் வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பீர்கள்.. என்றென்றும் வெற்றிகள் தொடரட்டும்..


கழுகிற்காக

ஸ்டார்ஜன்


(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)

12 comments:

ஜீவன்பென்னி said...

நல்லாவங்களா இருக்குறவங்க எல்லாரும் வெற்றியாளரா ஆகிட முடியாதே? என் அனுபவம். நல்லவனா மட்டும் இருந்த போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டுங்கறது என் எண்ணம்.

நல்ல கட்டுரை.

ப.செல்வக்குமார் said...

//மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்... அது உங்களுக்கு எப்போதும் நல்லவற்றை நாடிச் செல்லவைக்கும். உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் //
உண்மையான வரிகள் ..

ஜெய்லானி said...

//உங்கள் மனம் எப்போதும் நல்லவற்றையே நாடிச் செல்லவேண்டும். அப்போதுதான் வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பீர்கள்.. என்றென்றும் வெற்றிகள் தொடரட்டும்..//


ஸ்டார்னா அது ஸ்டார்ஜன் தான் :-))

Chitra said...

எப்போதும் நாம் கெட்ட விசயங்களை மனதில்போட்டு குழப்பிக்கொண்டு மனதை அலைபாய விடக்கூடாது. எந்தஒரு விசயத்தையும் எப்போதும் நல்லதாகவே நினைக்க வேண்டும். சில சமயங்கள் தோல்விகள் ஏற்படலாம்.. ஆனால் அதுதான் நிலையென எண்ணிக்கொள்ளுதல் கூடாது. அந்தமாதிரி எண்ணங்கள் நமது வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்துவிடும்


...... Really ......a very good advice. :-)

பதிவுலகில் பாபு said...

தன்னம்பிக்கையைப் பற்றிய நல்லதொரு பதிவு..

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல கருத்துக்கள் நிரம்பியிருக்கின்றன உங்கள் பதிவில்...நல்லதையே தொடர்ந்து நினைத்து வந்தால்....தாமதமாகவேனும் வெற்றி வந்தே தீரும் என்பதில் ஐயமில்லை...அவசியமான பதிவு நண்பரே...நன்றி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நன்றிகள் அனைவருக்கும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பதிவு,. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

சே.குமார் said...

தன்னம்பிக்கையைப் பற்றிய நல்லதொரு பதிவு..

Jey said...

very nice article.

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு தன்னம்பிக்கையூட்டும் பதிவு

Ananthi said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..

// எந்தஒரு விசயத்தையும் எப்போதும் நல்லதாகவே நினைக்க வேண்டும்//

ரொம்ப பிடித்த வரி.. நன்றி.. வாழ்த்துக்கள்..!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes