Monday, August 23, 2010

ஈரோடு கதிரின்....EXCLUSIVE பேட்டி...கழுகிற்காக!
அரிமா... அரிமா.. நானோ ஆயிரம் அரிமா...பாடலை முணு முணுத்த படி வந்த கழுகிடம்....என்ன? என்பது போல பார்த்தோம்... ? மீண்டும் ஒரு ஆட்டத்துடன் அருகில் வந்த கழுகு..... இந்த வார பதிவர் பேட்டி யார் தெரியுமா? என்று கேட்டது. அட... சொன்னாதானே தெரியும் என்று.... நாம் இழுக்க...சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த பேட்டிப் பேப்பரை காற்றில் ஆட்டிக் கொண்டு.... மீண்டும் பாட ஆரம்பித்தது
...பூம்...பூம்...ரோபோடா..ரோபோடா... கழுகின் ஆட்டத்தை கவனிக்காமல் பாய்ந்து கபளீகரம் செய்தோம் பேப்பரை....பேட்டி...அட நமது கண்கள் விரிய...கத்தினோம்...." கழுகிற்கு சூட ஒரு மசால பால் பார்சல்...."
கழுகை நைசாக கழட்டி விட்டு விட்டு...பேட்டிக்குள் மூழ்கினோம்.....

" ஈரோடு கதிர் "


எண்ணங்களை எழுத்தாக்கி எழுத்துக்களுக்குள் உயிர் பரவவிட்டு வாசிப்பாளனை எழுத்தின் தாளகதிக்கு ஏற்ப ஆட வைத்து பாட வைத்து....ஒரு கோப்பை தேனீர் எப்படி இதமாய் நமக்குள் பரவி சுகமான அனுபவமாக மாறுமோ,.. ஒரு மெல்லிய காற்று எப்படி நம்மை உராய்ந்து விட்டு செல்லும் போது அனுபவத்தைகொடுத்து விட்டுப் போகுமோ...அப்படி ஒரு சுகமாய் வலுவான கருத்துக்களை வாசகரின் மனசுக்குள் ஏற்றி வைக்கும் வித்தை தெரிந்த சூத்திரதாரி.

எழுத வரும் இளம் பதிவர்கள் எல்லாம் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளவேண்டியது முதலில் கதிர் என்னும் அற்புத மனிதரை அதற்கு பிறகுதான் அவருடைய எழுத்தை பழக வேண்டும்.
கிராமத்திலிருந்து நகரத்துக்கு பரவிய ஒரு அற்புதமான வேர், கோடியில் இருவரை எல்லோருக்கும் தெரியவைத்த " கோடியில் ஒருவர்....." எல்லாவற்றையும் புன்னகையோடு கடந்து செல்லும்...கதிர் எப்போதும் எல்லாவற்றையும் தலைக்கு எடுத்துக் கொள்ளாமல் எதார்த்தமாய் பெரிய பெரிய செயல்களையெல்லாம்...ஓரமாய் ஒதுக்கி விட்டு....." என்னங்க.. நீங்க.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்க.. " என்று ஒதுங்கிக்கொள்ளும் ஒரு ஆலமரம்.
கசியும் மெளனத்தின் மூலம் எல்லோருடைய இதயத்தையும் ஆக்கிரமித்து இருக்கும் "ஈரோடு கதிர்" என்ற சூரியனின் பேட்டி இதோ உங்களுக்காக....
வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியரான கதிருக்கு வாழ்த்துக்களை சொல்லி தொடருங்கள்1) வலைப்பூக்களின்
எழுதுவதற்கு முன் உங்களின் எழுத்தார்வம் எப்படிஇருந்தது?


முதன் முதலில் என்னுடைய பள்ளி நாட்களில் ஒரு பழைய நோட்டில் கவிதை போல் முயற்சித்ததாக நினைவு. கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் இடம்பெற்றதே பெருமையாக இருந்த ஒன்று. ஜேஸிஸ் / அரிமா சங்கங்களில் பங்கெடுக்க ஆரம்பித்த பின்னர் ஆங்காங்கே அப்படியும், இப்படியும் எதையாவது எழுதுவது வழக்கமாக இருந்தது. சட்டத்துக்குள் அடங்காமல் சிதறிக்கிடந்த ஆர்வத்தின் தொகுப்பே, இப்போது வலைப்பக்கம் எனும் அழகிய சட்டத்துக்குள் ஒரு வடிவாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.


2) கண்தானம் பற்றி நீங்கள் எழுதிய பதிவு மிகப் பிரசித்தி பெற்றதுபதிவுலகில்....கண் தானம்
செய்வதன்முக்கியத்துவம் பற்றி உங்களின்கருத்து மீண்டும் ஒருமுறை....வாசகர்களுக்காக
பார்வை கிடைக்கத் தகுதியிருந்தும், கருவிழி குறைபாட்டால் பல லட்சக்கணக்கான மனிதர்கள் நம் தேசத்தில் பார்வையிழந்து கிடக்கின்றனர். செயற்கையாய் ஒரு கருவிழியைத் தயாரிக்க சுமார் 4 கோடி ரூபாய் தேவைப்படும் என்ற தகவலும், இறந்து போனவர்களின் கண்களை குறிப்பிட்ட நேரத்தில் தானமாக எடுத்தால் அதன் மூலம் இரண்டு நபர்களுக்கு பார்வையளிக்க முடியும் என்ற எண்ணமும் கொடுத்த ஊக்கமே என்னை கண் தானத்தில் ஆர்வமாக ஈடுபடவைத்தது.


3)ஈரோடு வலைப்பதிவர் குழுமம்...தோற்றுவித்ததின் பின்னனி...என்ன?

ஒவ்வொரு கட்டத்திலும் அமைப்பு, சங்கம் என்று ஏதாவது ஒன்றின் மூலம் குழுவாய் இருந்தே பழக்கப்பட்டதால், சக பதிவர்களை இந்த நகரத்தில் சந்திக்கும் போது, ஒன்றாய் கை கோர்த்து ஏதாவது உருப்படியாய் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை சக பதிவர்களிடம் பகிர, அதைத் தொடர்ந்து ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து ஏற்படுத்தியது இந்த அழகிய குடும்பம்நீங்கள் பங்கு வர்த்தகத்தில் இருப்பதால்.....அது பற்றியும் சில கேள்விகள்கேட்கிறோம்

4) ntraday tips ஆலோசனை தருவது பற்றி ஒரு கேள்வி எப்படி ஒரு பங்கு ஏறும் இறங்கும் கணிக்க படுகிறது?

குறிப்பிட்ட துறை / நிறுவனம் குறித்த செய்திகளின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட பங்கு கவனிக்கப்படுகிறது. தினசரி வர்த்தகத்திற்கான TIPSகள் தடைகளை(Resistance) தாங்குநிலை (support) களை உடைப்பதை அடிப்படையாக வைத்து வாங்க / விற்க அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது

5)பதிவுலகம் எதிர்கால மீடியாவில் தவிர்க்க முடியாத சக்தியா மாறவாய்ப்புகள் இருக்கா?


மிக நிச்சயமாக. ஊடகங்கள் முழுக்க முழுக்க வியாபார மனோநிலைக்கு மாறிவிட்ட தருணத்தில், வியாபார நோக்கம் இல்லாமல் எழுதிவரும் பதிவர்களின் பங்கு சமூகத்தின் மிக முக்கிய அங்கமாக மாறும்.


6) பங்கு சந்தை 20 ஆயிரம் புள்ளிகள் இருந்த பொழுது உங்கள் அனுபவம்?

அப்போது பங்கு வர்த்தகம் குறித்து அதிகப்படியான அனுபவம் இல்லை. வெறும் வர்த்தரகாக மட்டுமே இருந்து வந்தேன்7) பிரபல பதிவர் கதிர், குடும்பத் தலைவர் கதிர் கொஞ்ச ஒப்பிடுங்களேன்?

பிரபல பதிவர் என்ற அடைப்புக்குள் வர விருப்பம் இல்லை. நானாக சிலரை இப்படி அடைப்புக்குறி போட்டு நினைத்து, அவர்களிடம் பழக தயங்கியதுண்டு. அந்த தயக்கம் என்பொருட்டு இன்னொருவருக்கு வந்தால் அது எனக்கான தோல்வியே.என்னுடைய தொழில் நிமித்தமாக குடும்பத்திற்கான நேரத்தை மிகச்சரியாக ஒதுக்க முடியாத சூழ்நிலையில் இல்லையென்றே குற்ற உணர்வோடு நினைக்கின்றேன்.8) மக்கள் டி.வி யின் பேட்டி அனுபவம் எப்படி..இருந்தது?பதிவுலகவாசகர்களுக்கு
அதை பகிருங்களேன்...


முற்றிலும் எதிர்பாராத ஒரு இனிய அனுபவம். மதிக்கத்தக்க தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சிக்கு முதலிடம் என்றே சொல்லலாம், அதில் வலைப்பூக்கள் பற்றியதொரு சிறப்பு பார்வை பதிவுல நண்பர்களின் செவ்வியோடு வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்றே.
ஊடகங்களால் வலைப்பூக்கள் ஆழமாக கவனிக்கப்படுகின்றன என்பது தெளிவாகப் புரிந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், அதே சமயம் இன்னும் கூடுதல் கவனமாய் இருக்க வேண்டும் என்ற உணர்வையும் கொடுத்தது.9) ஈரோடு வலைப்பதிவர் குழுமம் என்பது ஈரோடு பகுதியை சார்ந்தவர்களுக்குமட்டுமா?

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பதிவர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டு வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பதிவர்களுக்கானது10) பங்கு சந்தை ஆலோசனை சொல்வதற்கு ஒரு வலைபதிவு தொடங்கலாமே?

ஏற்கனவே அதற்காக ஒரு இணையதளமும், வலைப்பூவும் இருக்கின்றது. தவிர்க்க இயலாத காரணங்களால் அது குறித்து இங்கு குறிப்பிடமுடியவில்லை.

11) நிறைய கருத்தரங்குகளுக்கு சென்று இருக்கிறீர்கள்...மாணவர் உலகத்தில்வலைப்பதிவுகள்
பற்றி என்ன மாதிரி எண்ணஙகள் இருக்கிறது?

மிகப் பெரிய அதிர்ச்சிகரமான, எதிர்பாராத உண்மை, நான் சந்தித்த மாணவ, மாணவியர்கள் மத்தியில் வெறும் 1 சதவிகிதம் மாணவ, மாணவியர்களுக்குக் கூட வலைப்பூக்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.


12) உங்களின் பதிவுகளை எப்போது எழுதுவீர்கள்?

இதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவுமேயில்லை. எழுதிவைத்து சில நாட்கள் இழைத்து வெளியிடும் பொறுமையும், பக்குவமும் சுத்தமாக இல்லை. மனதிற்கு தோணும் நேரத்தில் சட்டென எழுதி, உடனே வெளியிடுவது என் இயல்பு. காலை, மதியம், மாலை, இரவு, பின்னிரவு என எல்லா நேரங்களிலும் வெளியிட்டிருக்கிறேன்13) கசியும் மெளனம்....கவித்துவமான பெயர் எப்படி கண்டீர்கள்...?

எத்தனைதான் மௌனத்தை அடைகாத்தாலும், ஓயாமல் உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் உரக்க ஓங்கி குரல் ஒலித்துக் கொண்டிருப்பது இயல்பு. வெளியில் இருக்கும் மௌனத்தையும் தாண்டி உள்ளுக்குள் வழியும் ஓசைதானே எழுத்து
ஆரம்பத்தில் முனகும் மௌனம் என்று வைத்திருந்தேன், சில நாட்களில் கசியும் மௌனம் என்று மாற்றினேன்
14) பதிவுலகம்...- உங்கள் பார்வையில்...?

மிக மிக ஆரோக்கியமாக இருக்கின்றது, சமூகம் சார்ந்த நல்ல இடுகைகளுக்கு தரமான ஆதரவு இருப்பது பெருமைக்குரிய ஒன்றே. தொடர்ச்சியாக சமரசம் இல்லாமல் எழுதுபவர்களுக்கான இடம் வளமாகவே உள்ளது. தவிர உணர்ச்சி வயப்படலிலும், வெறும் வறட்டு கௌரவத்திற்காகவும், சில சமயம் சண்டைகளைத் தொடர்ந்து வளர்ப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்15) காதல் கவிதைகள் எழுதிகிறீர்களே...வீட்டில் காண்பிப்பீர்களா?

நானாக காட்டுவதில்லை. அவர்களாக சில நேரங்களில் வாசிப்பதுண்டு

16) உங்கள் கவிதைகளுக்கு எதிர் போடும் போது உங்களின் மனோ நிலை எப்படிஇருக்கும்?

எதிர் கவிதையில் விழும் வார்த்தைகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்து போவேன்.

17)கிராமத்திலிருந்து நகரத்துக்கு பாய்ந்த வேர் நீங்கள்....ஒரு கிராமத்து மனோநிலையிலிருந்து நகரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

உலகப் பொதுச் சொத்தில் ஒன்றான தண்ணீரின் ஒவ்வொரு துளியும் விலை பொருளாகப் போனதைப் போன்று, வருத்தங்களோடு பகிர ஆயிரம் இருக்கின்றது. நகர வாழ்க்கை குறித்து மகிழ்ந்ததை விட வருந்திய தருணங்களே அதிகம்(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
22 comments:

இராமசாமி கண்ணண் said...

அருமையான கேள்விகள்.. அற்புதமான பதிலகள்.. பகிர்வுக்கு நன்றி :)

===
வேட்டி சட்டையிலே கதிர் அண்ணண பாக்கிரப்ப ஏனோ இந்த பாட்டு மனசில வருது
”எஜமான் காலடி மன்னெடுத்து “ :)

ஜெய்லானி said...

தேவையில்லாத ஆர்ப்பாட்டமில்லாத நேர்மையான பதில்கள் அருமை...!!!

Jey said...

பதில்களில் அனுபவம் மிளிர்கிறது...

வானம்பாடிகள் said...

கதிர் அண்ணன் கதிர் அண்ணந்தான். அருமையான பதில்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேட்டி நல்லா இருக்கு...

வெறும்பய said...

பதில்களில் அனுபவம்...

பேட்டி அருமை..

க.பாலாசி said...

கேள்விகளும் பதில்களும் வித்யாசமாக அமைந்துள்ளன.

//மிகப் பெரிய அதிர்ச்சிகரமான, எதிர்பாராத உண்மை, நான் சந்தித்த மாணவ, மாணவியர்கள் மத்தியில் வெறும் 1 சதவிகிதம் மாணவ, மாணவியர்களுக்குக் கூட வலைப்பூக்கள் பற்றி தெரிந்திருக்கவில்லை.//

இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன். 2 வருடத்திற்கு முன் இணையத்தை, கணிணியை அனுதினம் பயன்படுத்திய நமக்கு என்னதெரியும். பிறகுதானே உள்ளே வந்தோம். அதுபோல அவர்களும் வருவார்கள். மாணவர்களிடமும் இந்த மலர்ச்சி உருவாகும். நம்புவோம்...

அருண் பிரசாத் said...

சிம்பிள் மேன்

நாஞ்சில் பிரதாப் said...

//தேவையில்லாத ஆர்ப்பாட்டமில்லாத நேர்மையான பதில்கள் அருமை...!!!//

பெரிய ரீப்பீட்டே...

Chitra said...

எத்தனைதான் மௌனத்தை அடைகாத்தாலும், ஓயாமல் உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் உரக்க ஓங்கி குரல் ஒலித்துக் கொண்டிருப்பது இயல்பு. வெளியில் இருக்கும் மௌனத்தையும் தாண்டி உள்ளுக்குள் வழியும் ஓசைதானே எழுத்து


........நேர்த்தியான பதில்! பதில்கள் அத்தனையிலும், அவரது humility யும் மனப்பக்குவமும் நன்கு தெரிகின்றது..... அவர் மென்மேலும் வெற்றி சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்!

என்னது நானு யாரா? said...

கேள்விகளில், கூர்மையும், பதில்களில் நேர்மையும் இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி!

ஒரு ஆரோகியமான மக்களுக்கான மாற்று தளம் அமைக்க பாடுபட்டு கொண்டு இருக்கும் அன்பு நெஞ்சகளுக்கு என் நன்றிகள்!

asiya omar said...

exclusive பேட்டி -ஒரு நிஜ exclusive.பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பேட்டி.. யதார்த்தமான அலட்டிக்கொள்ளாத பதில்கள்.. கதிர் சாரின் பதில்கள் ரொம்ப நல்லாருக்கு.. சில தகவல்களும் அறிந்து கொண்டோம். நன்றி கழுகு..

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Kousalya said...

பதிவுலகம் பற்றிய வெளிப்படையான கருத்துகள். நன்றி .

தனி காட்டு ராஜா said...

//"ஈரோடு கதிர்" என்ற சூரியனின் பேட்டி //
அடப் பாவமே .....அதனால தான் ஈரோட்ல இவ்வளவு வெப்பமா ......

ஈரோடு கதிர் said...

வித்தியாசமானதொரு வாய்ப்பை அளித்த கழுகு குழுவிற்கும்...

அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றிகள்

ப.செல்வக்குமார் said...

கேள்விகளும் பதிலும் அருமை ..
மேலும் ஈரோடு வலை பதிவர்கள் குழுமத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ..

நிஜமா நல்லவன் said...

ஈரோட்டின் வருங்கால மேயருக்கு வாழ்த்துக்கள்!

சே.குமார் said...

அருமையான கேள்விகள்..!

அற்புதமான பதிலகள்..!!

சிவாஜி said...

கதிர் சாரின் பதில்கள் நீரோடை!

ஹேமா said...

கிராமத்து வேர் நகரத்தில் ஊன்ற நினைத்தாலும் தன் ஆணிவேரைக் கிராமத்திலேயே பக்குவப்படுத்துகிறது.

கதிர் பற்றிய மென்மையான என் மன உணர்வு அவர் பதில்களில் உண்மையாக்குகிறது.
நன்றி கதிருக்கும் கழுகுக்கும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes