Tuesday, August 17, 2010

தமிழன்னையின் சுயகுறிப்பு...
வந்தவளே நின்றவளே வென்றவளே....
வந்தவளே! நின்றவளே! வென்றவளே....
அன்னவளே! முன்னவளே! தென்னவளே..
என்னவளே! கள்ளமில்லா காதலுடை பெண்ணவளே..
ஆசி தர வேண்டுமடி என் தமிழே.!

ஒவ்வொரு வலைப்பூவிலும் வாசம் செய்யும் எம் தமிழ்தாயின் பொற்காலம் இது. எல்லா சிறப்புகளையும் பற்றி பேசும் நாம் தாய் தமிழின் அகண்ட வளமையும் செழுமையும் எவ்வளவு அறிந்திருப்போம் என்று தெரியவில்லை.

கழுகின் செழுமை மிகு விழிபுணர்வூட்டும் பயணத்தில் வளமையாய் எம்மை நிறைத்து கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக கொண்டு சேர்க்க நம் தாய் தமிழ் தானே உதவுகிறாள்...? " தமிழ் " உணர்வைச் சொல்லும் மொழி....! எண்திசை என்ற வலைப்பூவிற்கு சொந்தக்காரர் ஆன வழக்குரைஞர் திரு. சாமிதுரை அவர்கள் எழுதி கொடுத்த....தமிழன்னையின் சுயகுறிப்பு (பயோடேட்டா) இதோ உங்களின் பார்வைக்காக....!~பெயர் : தமிழ்

இயற்பெயர் : தாமிழி (ஆதாரம் :கே.கே.பிள்ளை )

முகவரி : அடமானத்தில் உள்ளது (அடிமைகளுக்கு சொந்த முகவரி

கிடையாது--"ஸ்மிருதி சந்திரிகை" சாஸ்திரம்)

பூர்வீகம் : லெமூரியா

வயது : கணக்கீடுகள் பிறக்காத காலம்

தகுதி : தனித்து இயங்கும் தன்மை பெற்ற ஒரே மொழி---கால்ட்வெல்

இதரதகுதிகள் : நாட்டியத்திற்கு பரதமும்

ஆரோக்கியத்திற்கு யோகமும்

மருத்துவத்திற்கு சித்தமும்

வாழ்வியலுக்கு வள்ளுவமும் தந்த தாய்.

நிலை : அழியும் வரிசையில் 16 வது மொழி --ஐ.நா ஆய்வறிக்கை

(பெயர் பலகை போலவே )

குணம் : கார்கிலிலும் குஜாரத்திலும் எல்லோரையும் விஞ்சிய தர்மங்கள்

- - வாடிய பயிரை கண்டபோதெலாம் வாடிய மனம்

பலம் : வேற்று மொழி தெரியாத தமிழர்கள்

பலவீனம் : ஈன்ற மொழிகளே இதன் குலம்கெடுத்த கோடரிகாம்பானது

தனி ஆபரணம் :" ழ "

தலைமகன் : திருவள்ளுவன்

பொற்காலம் : சங்ககாலம்

இருண்டகாலம் : களப்பிரார்...."கருணா"க்கள் காலம்

அச்சம் : அம்மாவை தகர்க்கும் மம்மிகள்

கொடை : சமீபத்தில் ஏழுமலையானின் திருப்பதி

சங்கடம் : தகுதியற்று இங்கு "ஜெ" போட யாரும் வரலாம்

சொத்து : கல்லுளி ,எழுத்தாணி, மைக்குழல்,எழுத்துருக்கள் எல்லாம் எழுதி குவித்தவை

சொந்ததத்துவம் : யாதும் ஊரே யாவரும் கேளிர்

பிள்ளைகள் : அனாதைகள்

ஈன்ற பொழுதினும்

பெரிதுவக்கியது : வளம் காத்த சோழ கரிகலானும்.,இனம் காத்த ஈழ கரிகாலனும்

மானம் காத்தது : கரிகாலனின் புலிக்கொடி

இழப்பு : ஆழி கொண்டதும் , ஆயுதம் கொன்றதும்.

துயரம் : மடியில் கருகிய இனம்

கண்ணீர் : இந்து மகா சமுத்திரம்

விருப்பு :"பக்தி" (உலகில் எல்லா மொழிகளை விட அதிகமாய் தமிழ் பாடிய -

பெரும்பொருள்-கர்நாடக முன்னாள் ஆளுநர் திருமதி .ரமாதேவி )

வெறுப்பு : பாரதி,வ.வே.சு போன்றவர்களை தந்த பூணூல் அல்ல.,

பிழைப்பு நடத்திய நாடகதாரிகள்

பகை : நெருப்பு., விட்டில்பூச்சி தேடி அலைவதில்லை

ஆசை : காணி நிலம் வேண்டும்

நிராசை : சாதிகள் இல்லையடி பாப்பா

நம்பிக்கை : காலச்சக்கரம் சுழலும்.கழுகிற்காக

சாமிதுரை

(கழுகு இன்னும் ....உயர பறக்கும்)
17 comments:

வால்பையன் said...

//பிள்ளைகள் : அனாதைகள்//

:(

விஜய் said...

என் தமிழ் மொழியின் வாசம் தனித்து இருக்கும், இன்னும் எத்தனை மொழிகள் ஜனித்தாலும்...

அருண் பிரசாத் said...

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

ப.செல்வக்குமார் said...

//நிலை : அழியும் வரிசையில் 16 வது மொழி --ஐ.நா ஆய்வறிக்கை
///
என்ன கொடுமை இது ...?

//அச்சம் : அம்மாவை தகர்க்கும் மம்மிகள்///
உண்மை ..
ரொம்ப அருமையா சொல்லிருக்கார் ..!

வெறும்பய said...

நிலை : அழியும் வரிசையில் 16 வது மொழி --ஐ.நா ஆய்வறிக்கை...

சே.குமார் said...

உண்மை...

ரொம்ப அருமை.

Chitra said...

துயரம் : மடியில் கருகிய இனம்

..... உண்மை.

விந்தைமனிதன் said...

தமிழுணர்வாளனின் திறமான எழுத்துக்கள்.... வாழ்த்துக்கள் என் இனிய தோழர் சாமித்துரைக்கும்.... வலையுலக நண்பர் சௌந்தருக்கும்...

ஆனால் முகத்திலறையும் சில உண்மைகள்....?

உலகமயச்சூழலில் தமிழன் தனித்தன்மை மெல்ல மெல்ல அரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் அச்சமுறச்செய்கிறது

கே.ஆர்.பி.செந்தில் said...

தம்பி சாமிதுரை அவர்களின் பார்வை.. சரியானது... படத்தில் பெயர்ப்பலகை உரிந்து தொங்குவது மாதிரி தமிழன்னை நிலைமை..

கழுகுக்கு பாராட்டுக்கள்...

Jey said...

//இருண்டகாலம் : களப்பிரார்...."கருணா"க்கள் காலம்//

மிகவும் ஈர்த்த வசகம்.

மொத்த சுயகுறிப்பும் இன்றய யதார்த்தம் + வேதனை.

ஜீவன்பென்னி said...

தமிழின் தமிழன் நிலையும் நிலையாமையா தான் இருக்கு.

...........enthisai.......... said...

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.,

உங்கள் பாராட்டு உங்கள் அன்பின் வெளிப்பாடு:
எனவே, உங்கள் அன்பாய் நெஞ்சில் தாங்குகிறேன்.

"ஒரு நாட்டை பிடிக்க ஆயுதமோ, படைப்பலமோ அவசியம் அல்ல; அதன் கலாச்சார வேர்களை தாங்கிபிடித்திருகிற மொழியை அழித்தால் போதும்" - ஜெர்மானிய தத்துவம்.

பிரிட்டிஷ் தன் சிந்தனையைஆட்சி புரிந்த நாடுகளில் எல்லாம் அதன் மொழிகலப்பால் செய்துவிட்டது.

ஜெர்மனியில் வேறுமொழி அறிந்திருந்தாலும் அவர்கள் தாய்மொழியில் மட்டுமே
பரிபாலனம் செய்கிறார்களாம்.

உலகெங்கும் சென்று பணமீட்ட, தன்னை தக்கவைக்க, பிழைப்பதற்கு அந்நியமொழி அவசியம்., ஆனால் நம் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை அறியாமொழியை தூக்கி பிடித்து அவர்களை இவ்வுலகில் அந்நியமாக்க சம்மதமில்லை.

அறிவியல் முன்னேற்றத்திற்கும் ஆங்கில மொழிக்கும் தொடர்பில்லை. ஜப்பான் தன் சொந்த மொழியில் மட்டுமே கற்று வென்று உள்ளது. நம் தாய்மொழியில் கற்கிறபோது நம் மனது விசயங்களை அறிகிறது., ஆராய்கிறது. அந்நிய மொழி நம்மால் சிறுவயதில் மனனம் செய்யப்பட்டு, தக்கைபோல் நமக்குள் மிதக்கிறது.

நம் காலம் ஆகட்டும், நம் மயில்சாமி அண்ணாதுரை ஆகட்டும் ஆரம்ப கல்வி தாய் மொழியில் வேண்டும் என்கிறார்கள்.

ஒரு மூக்குகண்ணாடி கடை வாசகம்:
" தாய்மொழி கண்போன்றது, பிறமொழி கண்ணாடி போன்றது."

எல்லா நதிகளிலும் பயணம் செய்வோம்;
நம் தீராநதியில் சங்கமிப்போம்.

உயரபறக்க தன்சிறகை வீசும் கழுகிற்கும்;

கழுகை அறிமுகம் செய்துவைத்த அண்ணன் செந்தில் அவர்களுக்கும் , நண்பர்கள் ராஜாராமன் மற்றும் தேவாவிற்கும் நன்றிகள்

என்றும் தோழமையுடன்.,

இரா.சாமித்துரை.

பிரிட்டிஷ் தன் சிந்தனையை ஆட்சி புரிந்த நாடுகளில் எல்லாம் அதன் மொழிகலப்பால் செய்துவிட்டது.

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes