Monday, October 11, 2010

ஈழம் என்ற கனவு..........!




ஈழம் என்பது ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் தனிப்பட்ட நாடு கேட்கும் பிரச்சினை மட்டுமல்ல. ஈழம் என்பது மனித உரிமை மீறல் நடந்த இடம். தமிழனின் உணர்வுகளும் வரலாற்று பெருமைகளும் பொசுக்கப்பட்ட இடம். உலகமே கூடி நின்று ஒரு வெறியாட்டத்தை நடத்திய களம். தமிழன் என்று பிறந்தவன் அதை மறக்க முடியாது....


வாழ்வின் எல்லா பக்கங்களும் கண்ணீரால் எழுதப்பட துரத்தப்பட்டன எம்மவரின் கால்கள். நொறுக்கப்பட்டன எம்மவரின் விலா எழும்புகள். எம் இன பெண்டிரின் கற்புகளை சூறையாடியது குள்ள நரி கூட்டம். எல்லாம் தாங்கிக் கொண்டு இருப்பதனால் மறப்பது என்பது சாத்தியமா...? சாத்தியமாய் இருந்தாலும் சாத்தியப்பட விடக்கூடாது ஒவ்வொரு தமிழனும்...

வஞ்சிக்கப்பட்டிருப்பது தமிழினம். இனம் சார்ந்த பார்வை குறுகியதுதான் என்றாலும் ஒரு தனிப்பட்ட மொழியை பேசியதாலேயே அடித்து நொறுக்கப்பட்டு இறுக்கிறது நமது இனம். ஆயுதம் ஏந்தினார்கள், சண்டையிட்டார்கள், வன்முறையின் பக்கம் போனார்கள் என்று குற்றம் சாட்டும் உலக நாடுகள் எல்லாம் அறவழியில் உண்ணா நோன்பு இருந்து திலீபன் மரித்த போது எங்கே போயிருந்தன... மரத்தடியில் கோலிக் குண்டு விளையாடவா?


ஏன் நொறூக்கப்பட்டோம்? ஏன் நொறுக்கப்பட்டோம் என்பதற்கு பின் அரசியல் காரணங்கள் ஓராயிரம் இருந்தாலும் சொந்தம் மண்ணில் குண்டுகளுக்கு பலியான சிறார்களுக்கும், வயிற்றிலேயே மரித்த சிசுக்களுக்கும்... பதில் சொல்ல..காலமும் சமுதாயமும், இந்த உலகமும் கடமைப்பட்டு இருக்கிறது.


இயற்கை எப்போதும் தனக்குத்தானே சமப்படுத்திக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. கடந்த தடவை சமன் செய்யும் போது.... அது தீயவர்களுக்க்கு சாதகமாய் போய்விட்டது... ஆனால் மீண்டும் சமப்படுத்த மனிதர்கள் முயல்கிறார்களோ இல்லையோ..... இயற்கை சர்வ நிச்சயமாய் செய்யும்....!


கழுகுப்பார்வையில் ஈழத்தை சேர்ந்த தோழி மயோ மனோவின் வலைப்பக்கம் கண்ணில் சிக்கியது... அதிலிருந்த தோழியின் இந்தக் கவிதையை மிகைப்பட்ட பேரிடம் கொண்டு சேர்ப்பதில் கழுகு பெருமிதம் கொள்கிறது.
அதற்கான சுட்டி இதோ: http://thurkamano.blogspot.com/2009/10/blog-post_13.html


(கழுகு இன்னும ....உயர பறக்கும்)


5 comments:

எஸ்.கே said...

கனவு நிறைவேறட்டும் இறைவா!

Unknown said...

# எல்லாம் தாங்கிக் கொண்டு இருப்பதனால் மறப்பது என்பது சாத்தியமா...? சாத்தியமாய் இருந்தாலும் சாத்தியப்பட விடக்கூடாது ஒவ்வொரு தமிழனும்...#

கோபத்தின் கொடூரம் இந்த வரிகளில் கொந்தளிக்கிறது

நினைப்பவை எல்லாம் நடந்து விடும் என்றால் முயற்சி என்றோ தோற்றிருக்க வேண்டும்
காலம் சொல்லலப்போகும் பதிலுக்காய் காத்திருப்போம் சில காலம்....

Chitra said...

அந்த படமே, மனதை உலுக்குகிறது.

விஷாலி said...

நண்பரே நம் தமிழரின் ஒற்றுமை அற்ற மனமே இப்பேரழிவுக்கு காரணம். இதோ வருகிறது தேர்தல் மீண்டும் பாதகர்களே ஜெயிக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்????????

Unknown said...

Vaalum pothu valavidaamal vaalvilantha piraku paalvarthu yenna payan nangal avarkalukkaga raththam vadikkirom,..

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes