Wednesday, October 20, 2010

உயிரும் மெய்யும் உள்ளடக்கி..!
கழுகு என்றால் கழுகுதானே என்றா நினைத்தாய் மானுடா....! அஷ்டமா சித்திகள் கற்று ரூபங்கள் மாற்றி அவதாரங்கள் எடுக்கத்தெரியாத ஐந்தறிவு பறவை என்று எண்ணி விட்டாயா? ஆறாம் அறிவில் ஆறவதின் பயன்பாடு தெரியாத உமக்கு.....! உயிரும் மெய்யும் உள்ளடக்கி.. மூச்சுக்காற்றில் உஷ்ணம் பரப்பி தமிழ்கற்று தன்மானமும் கற்று... மிடுக்காய் எம்மை சிம்மாவதாரம் எடுக்க வைக்கும் உமது பகீர முயற்சிக்குப் பின்னால் இருக்கும் அறியாமையை எண்ணி கழுகு உமக்காக பரிதாபப்படுகிறது.உமக்கு எதற்கு சிம்மாவதாரம்.. கழுகின் சிறகின் ஒரு பிசிறிலிருந்து வரும் வெம்மையை தாங்க உமது சக்தி இடம் தருமா என்பது எமக்கு சந்தேகமே...!


கட்டுரை இடுவதும், பேட்டிகள் எடுப்பதும் சமுதாய நன்னோக்கில் எமது பிரிய தோழா! உமக்கு சினம் இருக்குமெனில் அதை தீர்க்க ஏராளமான மதில் சுவர்கள் இருக்குமே வசிக்கும் ஊரில் .... அதிபோய் முட்டிக் கொள்வதில் எமக்கு எந்த முரண்பாடும் இல்லை ஆனால் வேங்கைகளை சொறி நாய் என்று கணித்த உமது பார்வையிலும் அப்படி சொல்ல தூண்டிய எண்ணத்தையும் பார்த்துக் கோண்டு போக பலிங்கி விளையாடும் சிறார்களல்ல நாம்...!


ஜாக்கி சேகரின் பேட்டியை வெளியிட்டது சர்வதேச குற்றமா? எமது பதிவுலக தோழர்களே மனம் திறந்து சொல்லுங்கள்? ஒரு ஒப்பற்ற ஜன நாயக நாட்டில், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரைமுறையற்று பரவிக்கிடக்குமொரு தேசத்தில்.. ஜாக்கியின் பேட்டி எடுக்க ஊரில் இருக்கும் பைரவர்களிடம் நாங்கள் அனுமதி பெற வேண்டுமா?


உமது தலை அறித்தால் அதை வாரிக்கொள்ள சீப்பு வேண்டும் என்று அறியாத சிறுவனாய் கழுகு என்னும் கொள்ளிக்கட்டையை எடுத்து தேய்த்துக் கொண்டது உமது அறியாமை என்று சொல்லமாட்டோம் நண்பா.. ! இது நீ பிரபலமாக செய்த ஒரு துணிகர வேடிக்கை. உமது எழுத்திலே ஈர்ப்பு இருந்தால் உம்மை தேடி சொல்லாமல் கொள்ளாமலேயெ கூட்டம் வரும்.. ஏனிந்த தனிமனித தாக்குதல்...? அதன் மூலம் உம்மை பிரபலமாக்க இப்படி ஒரு கோழை முயற்சி.


சாந்தாமாய் ஒரு மின்னஞ்சல் அனுப்பி.. உம்மிடம் தயைகூர்ந்து விண்ணப்பம் வைத்தால் அது ஏளனாமா சகோதரா? பணிதல் அன்பு செலுத்துதல், தீய சொற்கள் பேசாதிருத்தல் தாண்டி....கடுமையான ரெளத்ரத்தையும் நமது கலாச்சாரம் கற்றுக் கொடுத்துள்ள உண்மை உமக்கு தெரியாமலா இருக்கும். உன்னை எந்த வகையிலும் துன்புறுத்தாத மனிதர்களை....


" சொறி நாய் " என்று குறிப்பிட்டு கூறியிருக்கும் உமது வக்கிரத்தினை உலகம் அறியட்டும். எமக்கு எவரிடமும் இருந்து பெறும் எதையும் வைத்துக் கொள்ள எப்போதும் விருப்பமில்லை.. உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.


கழுகு விழிப்புணர்வு ஊட்டும் நோக்குடன் களத்தில் இருக்கிறது...உமக்கு சக்தி இருந்தால் .... மூளையின் செழுமையில் நம்பிக்கை இருந்தால்.... நீ கற்ற கல்வி உம்மை சரியாக வழி நடத்துகிறது என்றால்.....வானம் உமக்கு நிஜமாகவே ஒரு போதிமரமென்றால்....


"எல்லா மானுடர்க்கும் பயன் தரும் வகையில் ஒரு கட்டுரை எழுதி கழுகுக்கு கொடுங்கள்..." நாங்கள் பிரசுரிகிறோம்.....! நாங்கள் உலகின் முன்னனி இதழ்கள் என்று எப்போதும் சொல்லிக் கொள்ளவதும் இல்லை சொல்லிக் கொள்ள போவதும் இல்லை......ஆனால்....


" எல்லா முன்னனி பத்திரிக்கைகளுக்கும், தொலைக்கட்சிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், நடிகனுக்கும், ..........ஆரம்பம் என்ற ஒன்று இருக்கிறது...."

இது... எமது ஆரம்பம்......!


(கழுகு இன்னும் உயர பறகும்)


31 comments:

Anonymous said...

//" சொறி நாய் " என்று குறிப்பிட்டு கூறியிருக்கும் உமது வக்கிரத்தினை உலகம் அறியட்டும். எமக்கு எவரிடமும் இருந்து பெறும் எதையும் வைத்துக் கொள்ள எப்போதும் விருப்பமில்லை.. உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.//

who is that சொறி நாய் ?
have right to discus the post.not the induvidual.

sorry boss i have no blogg .my name kandasamy

இம்சைஅரசன் பாபு.. said...

இது தன ப்ளாக் பிரபலம் ஆகனும்னு எழுதறவங்க .............விடுங்க ..விடுங்க ....இது எல்லாம் சில்லி மேட்டர் .கழுகு உயரே பறந்துகிட்டே இருக்கும் எங்களோட ஆதரவும் உண்டு

எஸ்.கே said...

அந்த பதிவு மிக மோசமான முறையில் எழுதப்பட்டிருந்ததுதான். தனி நபர் தாக்குதல் தவறென என்றுதான் புரிந்துகொள்ள போகிறார்களோ! இதுபோன்றவைகளை கருத்தில் கொள்ளாமல் கழுகு இன்னும் உயரப் பறக்கட்டும்!

ப.செல்வக்குமார் said...

இந்த பிரச்சினை ஆரம்பித்த பிறகுதான் நான் முதல் முதலாக ஜாக்கி சேகர் அவர்களின் பதிவுகளில் சிலவற்றைப் படித்தேன். மேலும் அவர் அங்கேயே தான் ஒன்றும் பெரிய இலக்கியவாதி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் வந்து படிங்க என்றும் அவர் கூறவில்லை. படிப்போர் படிங்க ., புடிக்கலைனா படிக்காதீங்க.. இதுக்கு எதுக்கு தனிமனித தாக்குதல்கள் அப்படின்னுதான் தெரியலை . எது எப்படியோ எழுதரக்கு ஒண்ணும் தெரியலை அப்படின்னா அடுத்தவங்களப் பத்திதான் எழுதியாகணும். " அவுங்க ப்ளாக்ல அத எழுதிருக்காங்க ., கழுகுல பேட்டி எழுதிருக்காங்க " அப்படின்னு அடுத்தவங்களத்தான் பேசிட்டு இருக்கணும் ..!!

கழுகின் ஒரு இறகு.... said...

எங்க எந்த சொறிநாய் கத்தி இருக்கு?? லிங்க் பிலீஸ்... ஒரு வாசகன படிச்சிட்டு இருந்த என்ன உள்ள வர வச்ச உயர்ந்த உள்ளம் யாரு??? பொட்ட நாய் இல்லைன முன்னாடி வா சாமி!!!

(உங்கள் தளத்தில் அநாகரிக வார்த்தை உபயோக படுத்தியதற்க்கு கழுகு மன்னிக்க!!)

கழுகின் ஒரு இறகு.... said...

//கழுகின் சிறகின் ஒரு பிசிறிலிருந்து வரும் வெம்மையை தாங்க உமது சக்தி இடம் தருமா என்பது எமக்கு சந்தேகமே...!//

ஒரே ஒரு இறகு வந்து இருக்கேன் வாப்பா. இங்க வந்து கொரச்சி காட்டுபா... இப்படி கூப்பிட்ட புரியாதா?? சரி உன் மொழி.... வள் வள் வ்வ்வாவாஅவ்... உர்ர்ர்ர்...வவ்வவ்வவ்...

பதிவுலகில் பாபு said...

சாட்டையடி..

கழுகின் ஒரு இறகு.... said...

அய்யயோ கமெண்ட் வர டைம் ஆகுது... சென்சாரா?? அப்பொ டீசண்டா பேசுவோம்... சண்டை போட்ட சார் வெளியா வாங்க சார்... சொந்த வீட்டுல ஒளிஞ்சிட்டு கத்தாதிங்க... யார் மேல கோவமோ அங்க வந்து பேசுங்க.. நாகரிகமா பேசுங்க... அப்புறம் கமெண்ட் வரல அப்படினு குதிக்க கூடாது....

TERROR-PANDIYAN(VAS) said...

@கழுகின் ஒரு இறகு

இறகு சார் இறகு சார்!!! அவரு சொல்றாரு “ ஆனா இதைப் படிச்சிட்டு நாலு நாய் வந்து என்கிட்ட கத்தும். அப்ப நான் ஒன்னுதான் சொல்லுவேன்.. ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன்.. "பிச்சக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சக்காரனே.. பிளாக் பிரமாதம் " அப்படினு... அப்பொ நீங்க நாயா??

கழுகின் இறகு... said...

நானும் படித்தேன் அந்த மதிகெட்ட மானுடப்பிறவியின் மிக்கிப்போன எழுத்துக்களை... ஆவேசம் தான் வந்தது...

அகிம்சை முறையில் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் காந்திகளும் இல்லை... ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டும் மகான்களும் இல்லை... ஏ... மதி கேட்ட மானுடனே வா வந்து நில் எங்கள் முன்னால்... இப்போது காட்டு உன் வீரத்தை.. ஓடி ஒளிந்து கொள்ளாதே... நீ தமிழ் கற்றது இதற்க்கு தானா...

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்படினு... அப்பொ நீங்க நாயா?? //
இல்ல மக்கா இது சொறி நாய் மக்கா .....அதுவும் தன உடம்பை தானே புண்ணு ஆக்கிடும் நாயீ .............

கழுகின் ஒரு இறகு.... said...

@TERROR-PANDIYAN(VAS)

சார்!! அப்பொ யாராவது சத்தம் போட்ட அடங்கிடுவேன் சொல்றானா?? என்ன சொல்ல வருகிறார்? அப்பொ சும்மா பிரபலம் ஆக எழுதி இருக்கானா?? லிங்க் கொடுங்க சார் அங்க போய் வாந்தி எடுக்கறேன்.

ப.செல்வக்குமார் said...

// ஓடி ஒளிந்து கொள்ளாதே... நீ தமிழ் கற்றது இதற்க்கு தானா...
//

போங்க இறகு சார் ., காமெடி பண்ணிக்கிட்டு..?
அவரு தமிழ் கற்றது எதுக்குன்னு தெரியுமா ..?
யாராவது நான் ஒன்னங்கிலாஸ் படிச்சிருக்கேன் , நான் தப்புத்தப்பா எழுதுவேன் அப்படின்னு சொன்னா . " நீ எதுக்கு எழுதற ., நீ என்ன பாராதியார..? போ போய் வேற வேலை பாரு அப்படின்னு மிரட்டுவாரு .. அப்புறம் அடுத்தவங்க ப்ளாக் போய் படிச்சிட்டு அவுங்களைப் பத்தி தப்பு தப்பா எழுதுவாரு . இதுக்குத்தான் அவர் தமிழ் கற்றாரு ..!!

அருண் பிரசாத் said...

சூரியனை பார்த்து நாய் குலைச்சா அதுக்கு நாம டென்ஷன் ஆகலாமா?

கழுகின் ஒரு இறகு.... said...

இதே மற்றும் ஒரு இறகு.... இறகுகள் சேர்ந்து சிறகாகும்.. இரண்டு இறகுகளை சமாளிக்க முடியாத நீ எங்கே கழுகுகளின் நகங்களை சாமாளிக்க போகிறாய்.

Anonymous said...

யாரோ சின்ன பயவுள்ள தெரியாம பேசிடுச்சு விடுங்க சார்!

- சுரேஷ்

விஜய் said...

கழுகின் குறிக்கோள்கள் தெரியாத ஒரு மனிதன் இப்படி எழுதியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எமது ரெளத்ரத்தின் முழுமையும் தாங்க முடியாது தோழா....

வாழ்வின் எவ்வளவோ விசயங்கள் இருக்கு முன்னேற அதை பார்க்கிற வழிய பாருங்க...!

செம ஆணி.. பிளாக் பக்கமே வர முடியல... அதுக்காக சும்மா போயிடுவோமா என்ன!

ஜீவன்பென்னி said...

//விஜய் சொன்னது…
கழுகின் குறிக்கோள்கள் தெரியாத ஒரு மனிதன் இப்படி எழுதியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. எமது ரெளத்ரத்தின் முழுமையும் தாங்க முடியாது தோழா....

வாழ்வின் எவ்வளவோ விசயங்கள் இருக்கு முன்னேற அதை பார்க்கிற வழிய பாருங்க...!

செம ஆணி.. பிளாக் பக்கமே வர முடியல... அதுக்காக சும்மா போயிடுவோமா என்ன!//

அவரு போட்ட பதிவுல நடந்த ஒரு நல்ல விசயம் விஜய் இங்க கமெத்ந் போட்டதுதான். விஜய் வாங்க. வெயிட்டிங்க் பார் யூ.

Sriakila said...

என்னதான் நடக்குது இங்க...

கழுகின் ஒரு இறகு.... said...

இறகு வெகு நேரம் இங்கு பறந்தும் ஆர்பரித்த அந்த அற்ப்ப பதர் இங்கு வராததால் தாய் கழுகின் சிறகை நோக்கி பறக்கிறேன். ஒற்றை இறகாக இருந்தாலும் உன்னை போல் ஓராயிரம் ஓனாய்களின் உதிரத்தில் குளித்து முடித்து பதிவுலகில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் என்னை வார்த்தை வாள் எடுத்து வீச வைக்காதே. களத்தில் இல்லாவிட்டாலும் தினவெடுக்கும் தோள்களில் இன்னும் திமிர் குறையவில்லை...

(நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் கழுகாரே. சிறு சிறு மாற்றங்கள் செய்தால் கழுகு இன்னும் உயர பறக்கலாம்...)

ஜெயந்தி said...

இங்க என்ன நடக்குது? ஒன்னும் புரியல. கொஞ்சம் புரியற மாதிரி பதிவு போடுங்கப்பா.

Ananthi said...

உங்கள் எதிர்ப்பைக்கூட மரியாதையுடன் தெரிவித்த விதத்தில் உங்கள் திறமை, அறிவு, பண்பு அனைத்தும் தெரிகிறது.. இது உண்மையில் சிம்மாவதாரம் தான்... :-))

Kousalya said...

ஏதோ விவகாரம் என்று மட்டும் புரிகிறது....

சுய விளம்பரத்திற்காக தனி நபரை தரக்குறைவாக விமர்சரிப்பது என்பது அநாகரீகம் என்பது கூட தெரியாமல் எழுதுபவர்களை மாற்ற இயலாது.

இதை அருமையாக, கம்பீரமாக சுட்டி காட்டிய கழுகிற்கு என் வணக்கங்கள்...

//உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.//

:)))

LK said...

இந்த மாதிரி எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம். அந்த நபர் தேடுவது விளம்பரம். அதை நாமாக அவருக்குத் தரவேண்டாம். யாரும் அங்கு செல்லாமல் இருந்தாலே , அவனது நோக்கம் தோற்று விடும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க ஏன் சொறிநாயை கண்டுகிறீங்க. அது குலைச்சிட்டு போயிடும். விடுங்க

அன்பரசன் said...

//அருண் பிரசாத் சொன்னது…

சூரியனை பார்த்து நாய் குலைச்சா அதுக்கு நாம டென்ஷன் ஆகலாமா?//

நானும் அதையேதான் சொல்ல விரும்புறேன்..

ஜெய்லானி said...

//உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.//

நெத்தியடிங்க்கிரது இதானா ..!! :-))

saravanakumar sps said...

/உமது வார்த்தைகளை உமக்கே சகல மரியாதையுடன் திருப்பி அளிக்கிறோம்.

Anonymous said...

கழுகுக்கும் வானத்துக்கும்.. (ஜாக்கி பற்றி இறுதியாக கொஞ்சம் சீரியசாக)

http://ilavarasanr.blogspot.com/2010/10/blog-post_22.html

rk guru said...

சாட்டையடி.. அருமை பதிவு வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடந்தது என விளங்கவில்லை, கண்டுக்காம விடுங்க, அது கொலைச்சிட்டு ஓடிடும்...!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes