
முன் பின் முரணுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒற்றை பயணத்தில் கழுகு எட்டிய உயரத்திலிருந்து சற்றே தலை திருப்பி தாம் கடந்து வந்த திசையினை பார்க்கிறது. கவர்ச்சி அரசியலும், வன்கூட்டுகளும், பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் கூறப்படுபவர்களையும் தாண்டி.........சுயதன்மை என்ற ஒரு முகம் கொண்டு வானில் சிறகடிக்க முடிவு செய்த நிமிடங்கள் எத்தகையவை............?
அரசியலும், மதங்களும், தற்பெருமை ஆர்வாலர்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு தேசத்தின் குப்பைகளை கழுகு தனியாக அள்ளிவிடும், சமுதாய கோணல்களை சரிசெய்து தமிழ் திரையின் அதிரடி நாயகனைப் போல தன்னை வரித்துக் கொண்டும் நகரவில்லை மாறாக பேசும் சக்தி இருக்கும் எமது நா.......நல்லன பேசட்டுமே........, பார்க்கும் சக்தி கொண்ட எமது கண்கள் நேர்நோக்கில் விரிவாய் பார்க்கட்டுமே...சத்தியங்களை எதிர் கொள்ளட்டுமே......, வலிவு கொண்ட...