முன் பின் முரணுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒற்றை பயணத்தில் கழுகு எட்டிய உயரத்திலிருந்து சற்றே தலை திருப்பி தாம் கடந்து வந்த திசையினை பார்க்கிறது. கவர்ச்சி அரசியலும், வன்கூட்டுகளும், பிரபலங்கள் என்று சொல்லிக் கொள்பவர்களையும் கூறப்படுபவர்களையும் தாண்டி.........சுயதன்மை என்ற ஒரு முகம் கொண்டு வானில் சிறகடிக்க முடிவு செய்த நிமிடங்கள் எத்தகையவை............?
அரசியலும், மதங்களும், தற்பெருமை ஆர்வாலர்களும் நிரம்பிக் கிடக்கும் ஒரு தேசத்தின் குப்பைகளை கழுகு தனியாக அள்ளிவிடும், சமுதாய கோணல்களை சரிசெய்து தமிழ் திரையின் அதிரடி நாயகனைப் போல தன்னை வரித்துக் கொண்டும் நகரவில்லை மாறாக பேசும் சக்தி இருக்கும் எமது நா.......நல்லன பேசட்டுமே........, பார்க்கும் சக்தி கொண்ட எமது கண்கள் நேர்நோக்கில் விரிவாய் பார்க்கட்டுமே...சத்தியங்களை எதிர் கொள்ளட்டுமே......, வலிவு கொண்ட எமது கரங்கள் ஒர் குப்பையாவது எடுத்து களையட்டுமே................என்ற சிறுபொறி எண்ணமானதோ.....அல்லது எண்ணம் பொறியானதோ.........அந்த நொடியில் கழுகுக்கு சிறகாய் வந்தவர்கள்தான் தம்பி செளந்தரும், விஜயும்..........
மெல்ல மெல்ல சிறகு விரித்த எமக்கு எதார்த்த வானத்தில் ஆங்காங்கே சிராய்ப்புகளும், வலிகளும், மறுத்தல்களும் வந்து கொண்டுதான் இருந்தன.......எங்கேயோ படித்திருக்கிறோமே வாழ்க்கையின் தேவைகள் இலைகளில் வைத்து பரிமறப்படுவது இல்லை எப்போதும் ஆனால் தேடித்தான் போராடித்தான் பெறவேண்டும். மயில்கள் எப்போதும் இறகுகள் போட்டதாக சரித்திரம் இல்லை.........அதை பிடித்து அழுத்தி பிய்த்தால்தான் உண்டு.......
வழமையில் ஊறிய யாமும் மயிலின் இறகுகளுக்காக காத்திருந்து விட்டது தெள்ளத்தெளிவாக புலப்படும் இவ்வேளையில் இறகுகளை கொணரும் உத்தி பளிச்சென்று எமது புத்தியில் உரைக்கிறது. சமுதாய நலம் கொண்டவரெல்லாம் எம்மை சீராட்டுவர், பொதுநலம் கொண்ட மனங்கள் எல்லாம் எமக்கு தாயாய் பாலூட்டும், தீ போன்ற சிந்தனைகள் கொண்டவரெல்லாம்.....எமது அடுப்பின் நெருப்பாய் இருப்பர் என்ற எண்ணம் ஏற்பட்டது அது பொடிப்பொடியான போதுதான் தெரிந்தது........இங்கே நீதியும் நேர்மையும் கலர்காகித பூக்கள்...........கூட்டத்தில் யாம் எதார்த்த பூவை வைத்துக் கொண்டு கூவியதால் எம்மையும் சராசரி வரிசையில் நிற்க வைத்த இந்த சமுதாயம் அதே நேரத்தில்...
எம்மை மறுத்தது
எம்மை வெறுத்தது..................
இதன் நீட்சியில் யாம் கேலிப்பொருளாய்ப் போன அதே நேரத்தில் பதிவுலனின் மிக அற்புதமான படைப்பாளிகளின் ஆதரவுக்கரங்கள் எம்மை அரவணைத்ததும், கழுகின் நிகழ்வுகளுக்கு எமது நண்பர்கள் கூட்டம் பாசக்கரம் நீட்டியதும் மறுத்தல்களுக்குள் வராது.
பணிச்சுமைகள் எமது இலகினை அடையும் நேரத்தை வேண்டுமானால் குறைத்திருக்கலாம் ஆனால் தழலாய் எம்முள் எரியும் எமது இலக்கு எப்போதும் மாறது. அது எப்போதும் மனித நலம் பேணும்..........., யாம் வாய் திறந்து மூடினால் அதிலிருந்து வெளிப்படும் அக்னி எப்போதும் அறியாமையைப் பொசுக்கி எம்மக்களின் விழிப்புணர்வுக்கு வெளிச்சமாய் இருக்கும் என்பதை அறுதியிட்டு.....அதையே...வரும் வருடத்தின் எமது தீர்மானமாக்குகிறோம்.
வருடங்கள் எப்போதும் நம்மை உருட்டி வரலாறுகளை எழுதிச் சென்று கொண்டே இருக்கின்றன.........கற்கால மனிதனாய் வந்தான் மாண்டு போனான், மன்னர்கள் வந்தார்கள், வியாபாரிகள் வந்தார்கள், அறிஞர்களும் தத்துவ ஞானிகளும், ஆன்மீகவாதிகளும், சராசரி மனிதர்களூம் காலங்கள் தோறும் தோன்றி தோன்றி அழிந்து கொண்டே இருந்தார்கள்.................வருடங்கள் மனிதர்களை விழுங்கி வரலாறாய் செரித்து வெளியே போட்டது...........
நாமும் நகர்கிறோம்.........நாளைய தலைமுறை எடுத்து திருபிப் பார்க்கும்போது வரலாற்றின் பெரிய பக்கமாய் நாம் இல்லாவிட்டாலும் ஒரு தூசு அளவிலாவது இருக்க முயற்சி செய்வோம்..........!
கழுகு இன்னும் பொலிவோடு, இன்னும் தெளிவோடு....வித்தியாச விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தாங்கி........வரவிருக்கிறது......தங்கு தடையின்றி.........
மலரப்போகும் புத்தாண்டுக்காக எமது வாழ்த்துக்களைக் கூறி ஒப்பற்ற ஒரு சமுதாயத்தின் வேர்களாய் இருப்போம் எமது பயணத்தில் இணைந்து இருங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் என்ற வேண்டுகோளையும் வைக்கிறோம்...............!

(கழுகு இன்னும் உயர பறக்கும்)
22 comments:
எங்க என் தமிழ் ஆசிரியர். அவரிடம் சொல்லி இதை படித்துவிட்டு வருகிறேன்
நன்று...
கழுகு இன்னும் உயர பறக்கட்டும்..
வல்லூறைப் போல வானத்தில் இருந்தாலும் பார்வை கூர்மையாய் தன் இலக்கை நோக்கி செல்வதைப் போல கழுகின் பயணம் அமையட்டும்!
கழுகு இன்னும் உயரே பறக்கட்டும்!
வியாபர யுத்திகளற்று மெய்யை மெய்யாய் சொல்லும் விடயங்கள் கருத்தில் வந்தே தீரவேண்டும்..............!
தேவனின் தூதன் வருவான் எமது பிரச்சினைகளை தீர்ப்பான் என்ற எண்ணமும் தவறு...........எமது வாழ்க்கையில் கோளாறுகள் இல்லை யாம் சுகமாயிருக்கிறோம் என்று இழிவினையும், அக்கிரமங்களையும் கண்டு போவதும் தவறு.
தவறைத் தவறென்று சொல்லத்தெரியாமல் சொல்லத்திரணியற்று சாவதற்கு வெறும் காற்றைச் சுவாசித்து, உண்டு, களித்து வீழும் வீணரல்ல நாம்........
மாற்றங்களை விதைகளாக்கி விதைகளை எண்ணங்களாக்கி, எண்ணங்களை எழுத்துக்களாக்கி எல்லோர் நெஞ்சிலும் தப்பாமல் விதைத்து விதைகக முயன்று........
ஏதொ ஒரு நிம்மதியில் ஜீவனை பரிகொடுத்தாலும் .........மனிதர்களின் எண்ணங்கள் காலங்கள் தோறும் சொல்லும்........யாம்....வாழ்ந்தோமென்று....!
கழுகின் சிறகை வலு சேர்க்க என் ஆதரவு எப்போதும் உண்டு....
இன்னும் உயர பறக்கும், புது பலத்தோடு..
கழுகு இன்னும் மேல மேலே பறக்கும் .அதன் ரேக்கைகளுக்கு வலு சேர்க்க நானும் பங்கு கொள்வேன் ....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கூரிய பார்வையுடன் மென்மேலும் உயரே உயரே பறக்கட்டும் கழுகு.....!
நீண்ட தேடலின்
குறுகிய வாழ்க்கை பயணத்தின்
தொடர்வில் நானும்
அண்ணா
தங்களுக்கும் வாழ்த்துக்கள்
நல்ல அலசல் ...
இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...
புது வருட வாழ்த்துக்கள்...இன்னும் உயர பறக்கட்டும் :-)
புது வருட வாழ்த்துக்கள்...இன்னும் உயர பறக்கட்டும் :-)
புது வருட வாழ்த்துக்கள்......
கழுகு இன்னும் உயர பறக்கட்டும்..
புது வருட வாழ்த்துக்கள்.
இதையும் படிச்சி பாருங்க
இருட்டில் கட்டிய தாலி
wish you all a happy prosperous 2011
உயரப் பறக்கும் கழுகின் சிறகில் ஒரு இறகாவேன்..
உயரப்பறக்கும், வலுவும் சிறகும் நமக்குண்டு. நகங்களை இன்னும் கூராக்குங்கள் இன்றைய காலத்திற்கேற்ப...
நானும் உங்களுடன்.
புது வருடத்தில் பல புது மாற்றங்களை, புரட்சிகரமான பதிவுகளை கழுகில் எதிர்பார்கிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ........ தமிழ் மனத்தில் இணைக்கவில்லை ...
கழுகு இன்னும் உயர பறக்கட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//கழுகு இன்னும் உயர பறக்கும்//
தொடரட்டும்
உயரட்டும் .. என்றும்.
Post a Comment