
நீ உன் பெற்றோர்களை கொல்லாதவரை..நீ சுதந்திரமடைய முடியாது- புத்தர்
அதிர்ச்சியாக இருக்கிறதா? இருக்கத்தானே செய்யும்.. ஆனால், புத்தர் ஏன் அப்படி சொல்லி இருக்கிறார் என்று யோசித்தால் விஷயங்கள் புரிபடும். நீங்கள் இப்போது வருத்தப்பட்டுகொண்டிருக்கும் 99 சதவிகித விஷயங்கள் உங்களுக்கானதே அல்ல. அது எதோ ஒருவகையில், உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் சிறுவயதிலிருந்தே திணித்த எண்ணங்கள் தான். அதாவது, அவர்களின் எண்ணங்களை சரிவர நிறைவெற்ற முடியவில்லையே என்றுதான் நீங்கள் வருந்திகொண்டிருக்கிறீர்களே தவிர..அது உண்மையில் உங்களுடைய சொந்த எண்ணமாய் இருப்பதற்கு 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பிருக்கிறது.
இன்னும் ஆழமாய் போவோம்.. ஒரு குழந்தை பிறக்கும்போது, அது ஒரு வெறும் வெள்ளைத்தாளாய் தூயமனத்தோடு பிறக்கிறது. அதனால்தான் குழந்தைகளிடம் அவ்வளவு கவர்ச்சி. அப்படி தூயமனத்தோடு பிறக்கும்...