Saturday, April 09, 2011

ஊழலுக்காக ஒரு அமைதி போர்....


ஊழலுக்கு எதிரான ஒரு உக்கிரப் போரை தேசத்தின் உயிர் காக்கும் மருந்தாக கருதி திருவாளார் அன்னா ஹாசாரே தொடங்கி இப்போது கிட்டதட்ட முடியும் நிலையில் இருக்கும் உண்ணாவிரத போரட்டம் தேசத்தின் முதுகில் கொடுத்த ஒரு விழிப்புணர்வு சூடாக பரிணமித்துள்ளது.

தொடர் விழிப்புணர்வு போராட்டத்தில் இருக்கும் கழுகு பெரியவர் அன்னா ஹாசரேயின் போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான தொடர் கட்டுரைகளையும் வரும் காலங்களில் வாசகர்களுக்கு படைக்கும் என்று கூறி அருண் பிரசாத் எழுதிய இந்த கட்டுரையை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.



கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இருக்கும் ஊழல்கலை எல்லாம் பட்டியல் இட்டால் 100 பக்கங்களுக்கு மிகாமல் செல்லும். ஆனால், இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுதாதது ஆச்சரியமே. 

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 வயது அண்ணா ஹசாரே தில்லியில் இன்று 3 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.
யார் இந்த அண்ணா ஹசாரே?
மகாராஷ்டிரத்தில் ஜூன் 15, 1938ல் பிறந்த கிசான் பாபு அசாரே (எ) அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர். இவர் சமூக சேவையை பாராட்டி இந்தியா பத்மபூசன் விருதை 1992 ல் இவருக்கு வழங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டவரைவினை விட வலுவானதாக உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றகோரி இவருடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். நாடு முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.



ஊழலுக்கெதிரான இந்தியா:
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.

இந்த சட்ட வரையறை மூலம்,
1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
3. ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
4. இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
5. சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
6. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

ஒரு தனி மனிதனாக இருந்து மாபெரும் சமூக போராட்டத்தை தூண்டியிருக்கும் அண்ணா ஹசாரேவிற்கு தோள் கொடுப்போம். நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் புற்றுநோயை களைய சரியான சமயம் இதை விட்டால் வேறு கிடைக்காது.

உலககோப்பை வெற்றிக்காக தெருவிற்கு வந்து கொண்டாடும் நாம், ஏன் இது போன்ற நல்லவிஷயத்துக்காக வீதியில் இறங்ககூடாது.

குறைந்தபட்சம் பதிவுகள் மூலமாகவாவது நம் ஆதரவை தெரிவிக்கலாமே.....

facebook மூலம் ஆதரவு தர இங்கே சொடுக்குங்கள்

ஹசாரே வேண்டுவது மக்கள் ஆதரவை மட்டுமே. அரசியல்வாதிகளின் ஆதரவை அல்ல. இதிலும் அரசியல் லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவருக்கு  நல்லவர்கள் போல ஆதரவு அளிக்க வந்த உமாபாரதியை திருப்பிஅனுப்பிவிட்டார். ஹசாரேவை பற்றியும் அவர்களில் ஆதரவாளர்களை பற்றியும் சொல்ல இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும்.


ஊழலை களைய என்னால் என்ன செய்ய முடியும் என விழித்த நமக்கு ஒரு சரியான பாதையை காட்டி இருக்கிறார். திரியை பற்ற வைத்து விட்டார், இனி நாம்தான் வெடிக்க வேண்டும்....


இனி என் மகள் இந்த நாட்டில் ஒரு சாதாரண மனிதனாக இருக்க மாட்டாள் மாறாக் சந்தோஷ மனிதனாக வாழ்வாள்.


ஜெய்ஹிந்த்.




கழுகிற்காக

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


8 comments:

Unknown said...

இன்னும் யாரும் கருத்துரையிடவில்லை என்பது வருத்தம், கருத்துரையிடாத கரணம் ஒருவேளை நமது நாட்டு நலம் விரும்பி நண்பர்கள் களத்தில் உள்ளனரோ என்னவோ. நல்லது...
இரத்த ஓட்டம் நின்றாலும் நாட்டு நலனை நினைப்பது நிற்காது என்ற அன்னாரது எண்ணம் நிறைவேற பாடுபடுவோம் . என் உயிரினும் மேலான தோழர்களே. வாருங்கள்...

மகேஷ்............................. நாடும் நாட்டு மக்களும் நலம் பெற .. சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹசாரேயை ஆதரிப்போம்....

dheva said...

சாதரண மனிதராய் இருந்த போதிலும் தேசத்தினை திரும்பிப் பார்க்க வைத்த திருவாலர் அன்னா ஹாசரே போன்றவர்களை சீக்கிரமே மக்கள் மறந்து விடுவார்கள்...

கவர்ச்சி அரசியலும், தன்னை முன்னிலைப்படுத்தும் செயல்களுமே மனித சமுதாயத்தின் தீர வியாதியாயிருக்கிறது.

நன்றிகள் மகேஷ் உங்கள் ஆதங்கதில் பங்கெடுத்துக் கொள்கிறேன். !!!!!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லதொரு முன்னெடுப்ப்தான் . இருப்பினும் ஊடகத்தின் அதிக வெளிச்சம் ஏன் எனவும் யோசிக்கணும் நாம்..

என் பதிவு இங்கே அவரைப்பற்றியும் , நாம் என்ன செய்யணும் எனவும்..


http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_09.html

//அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?//

Anonymous said...

சாதரண மனிதராய் இருந்த போதிலும் தேசத்தினை திரும்பிப் பார்க்க வைத்த திருவாலர் அன்னா ஹாசரே போன்றவர்களை சீக்கிரமே மக்கள் மறந்து விடுவார்கள்...//

மனிதனின் நியதி .. மாற்றுவது கடினம் அண்ணா

Anonymous said...

ஹசாரேயை ஆதரிப்போம்..//

இம்முதுமைக்கு துணையாய் கை கோர்த்து இளரத்தங்கள் துடிக்கலாமே

Unknown said...

வாழ்த்துக்களும் நன்றிகளும்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அழுத்தமான பதிவு..
அண்ணா ஹசாரே-யை ஆதரிப்போம்.

வாழ்த்துக்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes