Tuesday, May 31, 2011

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......VI


ஊடகங்களின் வளர்ச்சி பற்றிய சென்ற பகுதியில் இந்தியாவில் வானொலியின் வரவு பற்றிச் சிறிது பார்த்தோம். இன்றும் அதான் தொடர்ச்சியைப் பற்றிக் காணலாம்!



இந்திய அரசு உதவ இயலாத நிலையினைத் தெரிவித்திருந்த போது அரசு சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடெங்கிலும் வேண்டுகோள்கள் பிறந்தன. அப்போது வானொலிப்பெட்டிகள்  தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த நிறுனவங்கள் தாம் முதலீடு செய்திருந்த லட்சக்கணக்கான ரூபாய்கள் முடக்கப்பட்டுவிடுமே என்றும் அரசிடம் முறையிட்டனர். ஆப்போதைய அரசு ஒளிபரப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்தது. அவ்வண்ணம் 1930 ஏப்ரல் மாதம் முதல் நாளிலிருந்து இந்திய அரசின் தொழில் மற்றும் தொழில்சார் துறையின் கீழ் ( Industries and Labour Department ) " தி இந்தியன் ப்ராட்கேஸ்டிங் சர்வீஸ் ( The Indian Broadcasting Service ) " என்ற அமைப்பை உருவாக்கிற்று.


பொருட்செலவு மிகுதியானதும் 1931 அக்டோபர் 9 இல் அரசு அச்சேவை அமைப்பை மூடிவிடுவது என்று முடிவுசெய்தது. மறுபடியும் நாடெங்கிலும் கூக்குரல்கள் எழுந்தன. பின்னர் 1931 நவம்பர் 23 இல் தற்காலிகமான ஒலிபரப்புத் துறையை ஏற்று நடத்துவது என்று அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து 1932 மே 5 இல் அரசு சார்பில் உறுதியாய் ஏற்ப்பது என்றும் முடிவு செய்தது. 1934 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பின் ஆர்வம் வளர்ந்தது. அரசு இரண்டரை லட்சம் ரூபாயை ISBS என்ற அமைப்பிற்கு உதவித் தொகையாக வழங்கிற்று!


அதே ஆண்டில் மதராஸ் அரசு BBC நிறுவனத்திலிருந்து (Burlo) என்ற ஒளிபரப்பு வித்தகரை அழைத்து ஓர் திட்டத்தை நல்கக்கொரியது. 40 லட்சம் ரூபாய் செலவிட அது காத்திருந்தது. அன்றுமுதல் இந்திய ஒலிபரப்பு வேகமாக வளர்ந்தது. 1935 ஜனவரியில் இந்திய அரசு மார்கோனி நிறுவனத்திடமிருந்து டெல்லி நிறுவனத்திற்காக ஒலிபரப்புக் கருவியை வாங்கத் தொடங்கியது.அது மறு ஆண்டே நிறைவேறிற்று. 1935 மார்ச்சில் 20 
லட்சம் ரூபாய் ஒலிபரப்புக்காக தனி நிதியாக வழங்கப்பட்டது. 1935 ஆகஸ்டில் முதல் ஒலிபரப்புக் கட்டுப்பாட்டாளராக ( Controller of Broadcasting )லயனல் பீல்டன் ( Lionel Fielden) இந்தியா  வந்து சேர்ந்தார்.


1936 ஜனவரியில் பி.பி.சி.யின் ஆராய்ச்சித் துறைத் தலைவராக H.L.Kirke பி.பி.சி நிறுவனம் அனுப்ப ஒப்புக்கொண்டு அவரும் 1936 ஆம் ஆண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.
இதற்கிடையே இந்திய ஒலிபரப்பின் வளர்ச்சிக்காக அரசு 40 லட்சம் ரூபாயை ஒதுக்கி வைத்தது. கிர்கே அவர்கள் ஏற்கெனவே இருந்த மத்திய அலைவரிசை நிலையங்களைத் தவிர 7 புதிய மத்திய அலைவரிசை நிலையங்களைத் தொடங்கப் பரிந்துரை செய்தார். செய்தி அறிக்கைகள் ஒலிபரப்பாக வேண்டி டெல்லியில் ஒரு சிற்றலை ஒலிபரப்பியையும் அமைக்க அவர் பரிந்துரைத்தார். 1936 ஆகஸ்டில் B.B.C யிலிருந்து வந்த G.W.GOYDER என்பவர் தலைமைப் பொறியாளராக நியமனம் பெற்றார். 1933 ஆம் ஆண்டு இந்திய கம்பியில்லாத் தந்திச்சட்டம் ( The Indian Wireless Telegraph Act - 1933 ) 1934 ஜனவரி முதல் அமலுக்கு வந்தது.

  1935 செப்டம்பர் 10 ல் மைசூரின் ஆகாசவாணி நிலையம் தொடங்கிற்று. 1936 ஜனவரி 1 ல் டெல்லி நிலையம் ஒலிபரப்பை இயக்கிற்று. 
  
  1936 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் நாளில் மதராஸ் நிலையம் அன்றைய ஆளுநர் எர்ஸ்கின் பிரபுவால் (Lord Erskine) தொடங்கி வைக்கப்பெற்றது. தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் ஆளுநர் எர்ஸ்கின் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தைத் தொடங்கிவைத்தார்.

 ஒலிபரப்புத்துறை வளர்ச்சிக்கென சிறு சிறு திட்டங்கள் அவ்வப்போது வரையப்பட்டபோதும்  1951 வரை முக்கியமான முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை!





கழுகிற்காக

 
(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)
  

7 comments:

Kousalya Raj said...

படிப்படியாக ரேடியோ ஒலிபரப்பு ஏற்பாடு நடைபெற்றதை படிக்க ஆர்வமாக இருக்கிறது.

பிற துறைகளை போல இதிலும் ஆங்கிலேயர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்று தான்.

@ செல்வா மிக தெளிவான பகிர்வுக்கு நன்றிகள்.

ஷர்மிளா said...

நல்லாருக்குங்க

TERROR-PANDIYAN(VAS) said...

பல புதிய தகவல்கள். தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி! (தம்பிக்கு எல்லாம் நன்றி சொல்லனுமா என்ன?). வாழ்த்துகள்!

MANO நாஞ்சில் மனோ said...

செல்வா அசத்துறே மக்கா..!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாச்சு...

ஷர்புதீன் said...

good information !

vinthaimanithan said...

ஒலிபரப்பு, ஒளிபரப்பு... என்னய்யா குழப்புறீரு? சரி பண்ணுங்க!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes