Thursday, June 23, 2011

பஞ்ச்' சாமிர்தம்.....நிஜமாவே இனிக்கும் (23.6.2011)



பஞ்ச் 1:
சுமார் 9 லட்சத்திற்கும் மேல் மாணவர்களுக்கு லேப் டாப் கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டம் விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படவுள்ளது. எல்லாம் சரியா தாங்கண்ணா போகுது, உலகத் தரத்தோட மடிக்கணிணியையும், தாலுகா தோறும் அதை சர்வீஸ் செய்ய சென்டர்ஸ்சும், கேரண்டி எல்லாம் 3 வருசத்துக்கு இருக்குன்னு சொல்லி அமர்க்களப்படுதிட்டீங்க...! 

இது கூடவே கணிணியின் பயன் பாட்டினைப் பற்றிய விழிப்புணர்வையும் ஒரு வேளை இணையத்துக்கு வந்தா அதை எப்படி சரியா நிர்வகிக்கிறது மற்றும் வேறு எங்கும் சிக்கி சின்னாபின்னம் ஆகாம இருக்கறதுன்ற பத்தி  ஆங்காங்கே ஒரு வகுப்பு போல நடத்துனா புண்ணியமா போகும் சாமியோவ்..!




பஞ்ச்: 2

சமீபத்தில் வெளியான குள்ள நரிக்கூட்டம் படத்தில் போலிஸ் வேலைக்கு சேர்வதற்காக வரும் ஹீரோ மைதானத்துக்கு வெளில கொசுக்கடியில் படுப்பது போல காட்சி அமைத்து இருப்பாங்க...அது படம்னு நினைச்சுட்டு சிரிச்சுட்டு போயிட்டோம்...

இங்க கோயம்பத்தூர்ல எல்லை பாதுகாப்பு பணித்தேர்வுக்காக நேரு விளையாட்டரங்கத்துக்கு வந்த இந்தியாவின் எதிர்காலங்கள் (அம்புட்டு பேருக்கும் என்ன அன்னா ஹாசரே வயசா? இல்லை நம்ம பாரதப் பிரதமர் வயசா? எல்லோரும் 21 டு 25 வயசுதான்) அந்த விளையட்டாரங்கத்து ஓரமா பிச்சைக்காரங்க போல படுத்து இருப்பதா தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கு.

ஏய்யா....தேர்வுக்கு வர்ற ஆளுக தங்கறதுக்கு ஒரு கீத்துக் கொட்டாயாச்சும் போட்டுக் கொடுக்கப்படாதா? எல்லைக்கு போயி நாட்ட காக்கணும்னு உயிர துச்சமா மதிச்சு நிக்கப் போறதுக்கும் பின்னால வறுமைன்னு ஒண்ணு இருக்கறத யாரும் மறுக்க முடியாதுல்ல..? வர்ற இளைஞர்கள் எல்லாம் என்ன  பைவ் ஸ்டார் ஓட்டல்லயா ரூம் போட்டு தங்குவாங்க?

மனித நேயத்தை மொத்தத்துல மக்களை மதிக்கிறதுல காட்டுங்க...? விரக்தியும், அவமானமும், தாழ்வு மனப்பான்மையும் திட்டமிட்டே என் தேசத்து இளைஞன் மீது புகுத்தப்படுகிறதான்னு ஒரு சந்தேகம் வேற வந்து தொலைக்கிது!!!!





பஞ்ச்:3

அரசு கேபிள் டி.வி வரப்போகுதுன்னு அம்மா சொன்னாங்க...இப்போ உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னால செய்யவும் போறாங்க...
அய்யா டி.வி கொடுத்தாரு..அம்மா கேபிள் கொடுக்குது..அதோட அதிகாரப் பூர்வ சானலா ஜெயா டிவிய கொண்டு வருவாய்ங்க...! சுத்தி சுத்தி அதே பூவை நம்ம காதுல வெவ்வேற டிசைன்ல சுத்தி ஏமாத்துறாய்ங்க...

எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல...! டிவி சிரியல பாத்துகிட்டு வீட்டு மோட்டு வளையத்த பாத்துகிட்டு குந்திகினே இருப்போம்....வைகுண்டம் போயிடலாம்.!



பஞ்ச் 4:
விசயகாந்த் சார்....அடிச்சி புடிச்சி, அம்மா கூட கூட்டணி வச்சி செயிச்சுப் புட்டீக..! ...ஹலோ...எங்கே இருக்கீக இப்போ....???? எதுனாச்சும் சினிமா சூட்டிங்ல போலிஸ் ட்ரஸ் போட்டுகிட்டு பறந்து பறந்து பல்டி அடிச்சிகிட்டு இருக்கீயளோ....!!!!
சுத்தி சுத்தி தமிழ் நாடு முழுதும் வந்து ஓட்டு கேட்டீகளே...தே.மு.தி.க என்ன...ரெஸ்ட் எடுக்குதா இப்போ...? இல்லை நீங்க செயிச்ச உடனே...எல்லா பிரச்சினையும் முடிஞ்சு போச்சுதா...?

மக்கள் பிரச்சினைகளுக்கு  போராடணும் சார்...! அரசுப் பள்ளிக்கொடத்துக்கு எல்லாம் அடிப்படை வசதியே இல்லையாம் தமிழ் நாட்ல...எதிர்கட்சி ராஜா நீங்க.. விசிட் அடிங்க...ஊரு முழுக்க... அப்புறம் சட்டசபையில போராடுங்க....மக்களின் உரிமைக்கு..எல்லாம்...!

இல்லை சவுண்டையே காணமே.....ஹி ஹி ஹி அதான் டவுட்டு...!



பஞ்ச் : 5
சித்ரவதைக்குட்படுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு தினமாக ஐ.நா அறிவித்திருக்கும் சூன் 26 அன்றைக்கு ஈழப்படுகொலைகளை நினைவு கூறும் விதமாகவும், ஈழக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.

நமது சக பதிவரான திருவாளர். கும்மி அவர்களின் பெரு முயற்சியாலும், தனது தன்னம்பிக்கை கொண்ட உத்வேகத்தாலும், இந்த ஒரு அபரிதமான செயல் நிகழ்ந்தேற இருக்கும் இவ்வேளையில் கழுகு இருகரம் கூப்பி அவரது செயலுக்கு மரியாதை செய்கிறது. 

பதிவுலகில் பக்கம், பக்கமாய் கடந்து போன நிகழ்வுகளை எழுதி வரும் நாம் அனைவரும் ஒன்றாய் கூடி இந்த ஒளியேற்றும் நிகழ்வினைப் பற்றி ஒரு அரைப்பக்கமாவது எழுதி பகிர்ந்து, தெரிந்தவர்களிடம் கூறி இது பற்றிய அறிவிப்பினை வெளியிடுவோம்.

சமூக சிந்தனையோடு இதை நிகழ்த்தப் போகும், பங்கேற்கப் போகும் அத்தனை தோழர்களையும் கழுகு வணங்குகிறது.






(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)


9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய அரசியல் பதிவு...

அம்மாவின் திட்டங்கள் மக்களுக்கு நன்மையில் முடிந்தால் சரி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்டிப்பாக மெரீனால் கூடுவோம்...
நான் என் நண்பர்கள் குழுவும் அன்று ஆஜர்...

இராஜராஜேஸ்வரி said...

விரக்தியும், அவமானமும், தாழ்வு மனப்பான்மையும் திட்டமிட்டே என் தேசத்து இளைஞன் மீது புகுத்தப்படுகிறதான்னு ஒரு சந்தேகம் வேற வந்து தொலைக்கிது!!!!

உண்மைதான். ஆதங்கமாக இருக்கிறது.

Jackiesekar said...

வாவ்... அருமையான பஞ்சாமிர்தம்.. முக்கியமாக விஜயகாந்தை பற்றி எழுதிய விதம் ரசிக்க தக்கதை விட மிக நியாயமாக இருந்தது...கணணி மாணவர்கள் மத்தியில் நிச்சயம் விழிப்புனர்வு தேவை என்பதை வரவேற்கின்றேன். கழுகு உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகள்...

cheena (சீனா) said...

அன்பின் கழுகு - அருமை அருமை - அத்தனையும் அருமையான திட்டங்கள் தான் - ஆலோசனைகள் தான் - இருப்பினும் நிறைவேற்றப் போவது அரசு தானே ! ம்ம்ம் - நல்ல படியாக நடக்க வாழ்த்துவோம் - நட்புடன் சீனா

sathishsangkavi.blogspot.com said...

பஞ்சாமிர்தம்.... பஞ்ச்... அமிர்தம்....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பஞ்சாமிர்தம் சூப்பர்......

கோவை நேரம் said...

அனைத்து பஞ்ச் களும் அதகளம்...நன்று ..

ஷர்புதீன் said...

"panch"

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes