Wednesday, June 29, 2011

யார் இந்த சுவாமி நிகமனானந்தா? ஒரு பளீச் ரிப்போர்ட்....!

ஒரு தேசம், இங்கே சுற்றி விரவியுள்ள பொது புத்திகள், பொறாமைகளை தன்னகத்தே கொண்ட மனிதர்கள், சுயநல அரசியல்வாதிகள், தத்தம் தகுதியறியா தலையற்ற முண்டங்கள் என்று சீரழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் சத்தியம் பேசுகிறவர்களின் நாக்குகளை அறுக்க வருகிறவனின் தலைகளை கொய்வோம் என்று போர்ப்பரணி பாடுவதில் என்ன தவறு....?

வன்முறை தேவையில்லை என்ற கூற்றினை மறுக்கும் மனிதர்களை எல்லாம் உலுப்பி எழச்செய்து கீதையையும், ரசூல் அல்லாவின் (சல்) போர்களையும் வாசிக்கச் சொல்லத்தான் வேண்டும். சத்தியம் சத்தியத்தால் வெல்லப்படலாம் ஆனால் அநீதிகளை எரித்துப் போட பிரமாண்ட வன்முறை தேவைப்படுகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு தேசத்து எல்லைகளிலும் ஆயுதமேந்திய மனிதர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

ஒரு நன்மை செய்ய பத்து தீமைகளை எரித்துப் போடுவது வரலாற்றின் காட்சிகளில்நாம் கண்டது. இப்படிப்பட்ட ஒரு அநீதியாக நாம் சமீபகாலத்தில் கேட்டும் படித்தும் அதை காற்றில் பறக்க விட்டு விட்டு ஊடகங்கள் காட்சிப்படுத்தும் செய்திகளை நமது நெற்றியிலும், நெஞ்சிலும் பச்சை குத்திக் கொண்டுதிரிகிறோம்.

அன்னா ஹாசரேயையும், சாமியார் பாபா ராம் தேவ் போன்றவர்களின் உண்ணாவிரதங்களை பிராமாண்டப்படுத்திய நம்மில் எத்தனை பேருக்கு சுவாமி நிகமனானந்தா பற்றி தெரியும் அல்லது அதைப் பற்றி எத்தனை பேரிடம் பேசியிருப்போம். அவர் சார்ந்திருந்த மதம், சாமியார் என்ற பதம் எல்லாம் விட்டு விடுங்கள் ..அவர் ஏன் உண்ணா விரதம் இருந்தார்...? என்று நம்மில் எத்தனை ஆழமாய் யோசித்து இருப்போம்...

நதிகளை தாயாக பார்க்கச் சொல்லி நமது தேசம் பயிற்றுவித்ததின் பின்னணியில் ஆயிரம் ஆன்மிகக் காரணங்கள் இருந்து விட்டுப் போகட்டும் அதை விடுங்கள். நீரின்றி அமையாது என்று வள்ளுவன் உரைத்ததைக் கூட ஏற்க மனமில்லையெனில் விட்டு விடுங்கள்...ஆனால் இந்த கருத்துக்கள் எதுவுமற்று நமெக்கல்லாம் தெரியும் நீரின் பயன்பாடு என்னவென்று...

நாம் சிறுவர்களாய் இருந்த போது பார்த்து ரசித்த பல ஆறுகள் ஒன்று.. இன்று இருந்த இடம் இல்லாமல் இன்று அழிந்து விட்டன அல்லது மாசுகளோடு மாசாய் அவை இன்று சாக்கடைகளாய் மாறிப் போய்விட்டன....

நாம் கண்டு வாழ்ந்து அனுபவித்த ஏராளமான விசயங்கள் நமது சந்ததியினருக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் சாமியார் நிகமனானந்தா கங்கை நீர் மாசு படுவதைக் கண்டித்து ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆன்மீக புனித விளக்கங்கள் தாண்டி கங்கைக்கு அறிவியல் ரீதியாகவும் பல சிறப்புகள் உள்ளது தெளிந்தோர் அறிந்த விடயம். கங்கையில் இருக்கும் ஆக்ஸிஜனின் அடர்த்தி மிக அதிகம். இமயத்திலிருந்து புறப்படும் கங்கை பாயும் தூரம் சுமார் 2500 கிலோ மீட்டர்கள்...பல மரங்கள், மூலிகைகளை கடந்து அது மனிதர்களிடம் சேரும் போது பல்வேறு வியாதிகளை குணமாக்கும் மூலிகை நீராய் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது யுகங்களாய்....

ஆனால்....

அப்படிப்பட்ட கங்கை உலகின் ஐந்தாவது மாசுபட்ட நதி என்றும் நாம் அறிந்து கொள்வோம். உலகில் மிகைப்பட்ட மனிதர்கள் புனிதமாய் நினைக்கும் ஒரு நதிதான்..மாசுகள் கலந்து சீரழிந்து, சீக்கிரமே நமது சந்ததியினருக்கு அதை ஒரு சாக்கடையாய் அடையாளம் காட்ட வேண்டிய சூழல் வந்து விடக்கூடாது என்றநோக்கில்...

கரையோரங்களில் நிகழ்த்தப்பெறும்  மாசுகள் சுற்றுப் புறச் சூழலை பாதிக்கிறது என்று வலியுறுத்தியும் சுவாமி நிகாமனானந்தா உண்ணாவிரதம் மேற்கொண்டார். சுமார் 125 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகள் கங்கையில்கலக்கின்றன....! புண்ணிய நதி புண்ணிய நதி என்று கூறிக் கூறி பெரும் தீங்கு செய்யும் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து கேட்பாரற்று இருந்த
சாமியார்.... நான்கு மாதங்கள் கழித்து  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்தார்.

தவறான ஒரு மருத்துவத்தினால் அவர் இறந்து விட்டார் என்று கூறுவதை கூட
புறம் தள்ளி விட்டு அவர் உண்ணாவிரதம் இருந்ததன் நோக்கத்தை நாமெல்லாம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்....!


பரபரப்பு அரசியலையும், பகட்டு விளம்பரங்களின் தாக்கத்தையும் பார்வையாக
கொண்டிருக்கும் நமது தேசத்தின் பிரச்சினைகளின் ஆழங்கள் எல்லாம் உணர்ச்சியின் அரக்கனால் தீர்மானிக்கப்பட்டு அதன் பின்னாலேயே ஆட்டு மந்தைகளைப் போல மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...

அறிவின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகும் போக்கு எம்மக்களுக்கு எப்போது ஏற்படும் என்பது பெரும் கேள்விக்குறியாய் இருக்கிறது என்று எண்ணும் அதே நேரத்தில் சாமியார் நிகமனானந்தா போன்றவர்களின் நோக்கங்கள் பற்றி மிகைப்பட்ட பேர்கள் எழுதவும் பேசவும் செய்ய வேண்டும்... என்றும் இக்கட்டுரை விரும்புகிறது.

நதிகளையும், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளையும் மாசுபடுத்துவதை தடுப்போம். மேலும் கிராமங்கள் தோறும்..ஏன் இன்னும் சொல்லப்போனால் நகரங்களின் மையங்களிலும்  ஆங்காங்கேயும் இயன்ற அளவு குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை உருவாக்குவோம்....

ஆரோக்கியமான சுற்றுப் புறம் கொண்ட அழகிய ஒரு உலகத்தினை நமது சந்ததியினருக்கு வழங்குவோம். சுவாமி நிகாமனானந்தா போன்றவர்களின் தியாகச் செயலை எப்போதும் போற்றுவோம்.


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

20 comments:

சேலம் தேவா said...

நிச்சயம் வணங்க வேண்டியவர்தான்..!!

வெங்கட் said...

// நதிகளையும், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளையும்
மாசுபடுத்துவதை தடுப்போம். மேலும் கிராமங்கள்
தோறும்..ஏன் இன்னும் சொல்லப்போனால் நகரங்களின்
மையங்களிலும் ஆங்காங்கேயும் இயன்ற அளவு குளம்,
ஏரி போன்ற நீர் நிலைகளை உருவாக்குவோம்... //

ஓ.கே.. நாம் எல்லோரும் ஆபீஸில் இருந்து கொண்டு
ஆளுக்கொரு பதிவு போடுவோம்.. மக்கள் தன்னால்
திருந்தி விடுவார்கள்..!

இம்சைஅரசன் பாபு.. said...

@வெங்கட்.,

// ஓ.கே.. நாம் எல்லோரும் ஆபீஸில் இருந்து கொண்டு
ஆளுக்கொரு பதிவு போடுவோம்.. மக்கள் தன்னால்
திருந்தி விடுவார்கள்..! //

அப்படியும் மக்கள் திருந்தலைன்னா..?

வெங்கட் said...

@ பாபு.,

// அப்படியும் மக்கள் திருந்தலைன்னா..? //

விட்டுடுவோமா.. மீள்பதிவு போடுவோம்..

பின்ன இதுக்கு போயி உண்ணாவிரதம்
இருப்போம்னு நினைச்சீங்களா..?
அஸ்க்கு.. புஸ்க்கு.. அதுக்கு வேற ஆள
பாருங்க..!

மாணவன் said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
@வெங்கட்.,

// ஓ.கே.. நாம் எல்லோரும் ஆபீஸில் இருந்து கொண்டு
ஆளுக்கொரு பதிவு போடுவோம்.. மக்கள் தன்னால்
திருந்தி விடுவார்கள்..! //

அப்படியும் மக்கள் திருந்தலைன்னா..?///

இறங்கி களப்பணி ஆற்ற வேண்டியதுதான்.... :)

கழுகு said...

கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத கருத்துரைகள் நீக்கப்படும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்...!!!!!!

மேலும் கமெண்ட் மாடுரேசன் நீக்கப்பட்டிருப்பது பயனீட்டாளர்கள் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று கருதுவதால்...

கண்ணியமில்லையெனில் காவல் பலப்படுத்தப்படும் என்பதை உறுதிபட தெரிவிக்கிறோம்.

வெங்கட் said...

@ கழுகு.,

// கண்ணியமில்லையெனில் காவல் பலப்படுத்தப்படும்
என்பதை உறுதிபட தெரிவிக்கிறோம். //

இது என்னை நோக்கி தான் என்று
எனக்கு தெரியும்.. ஆனால் நான் கண்ணியக்
குறைவாக என்ன கமெண்ட் போட்டேன்
என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..?

விவாதம் பண்ண கழுகு தயங்குகிறதா..?

அப்ப " ஜால்ரா கமெண்ட்ஸ் " மட்டுமே
இங்கே அனுமதிக்கப்படும் என்று
போடவும்..

இம்சைஅரசன் பாபு.. said...

@வெங்கட்.

// பின்ன இதுக்கு போயி உண்ணாவிரதம்
இருப்போம்னு நினைச்சீங்களா..?
அஸ்க்கு.. புஸ்க்கு.. அதுக்கு வேற ஆள
பாருங்க..! //

அப்ப இந்த பிரச்னையை எப்படி
சரி பண்றது..? முடிவு என்ன..?

வெங்கட் said...

@ பாபு.,

// அப்ப இந்த பிரச்னையை எப்படி
சரி பண்றது..? முடிவு என்ன..? //

என்னாது சரி பண்றதா..?

அதை பத்தியெல்லாம் நாம ஏங்க
கவலைப்படணும்..? வாங்க நாம
அடுத்த புது பிரச்னையை பத்தி
பேசலாம்..!

கழுகு said...

வெங்கட்..@ கட்டுரையிலிருந்து ஏதேனும் கேள்விகள் இருந்தல் பதில் சொல்கிறோம்.....!!!!

நன்றி நண்பரே...! எமது கருத்துரை பொதிவிலானது. தங்களுக்குரியது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்!

கட்டுரையிலிருந்து ஏதாவது....கேள்விகள்....

சௌந்தர் said...

@பாபு வெங்கட்

ஒரு உயிர் பிரிந்த ஆதாங்கதிற்காக பதிவு போட்டு இருக்கும் இடத்தில் நக்கலும் நையாண்டியும் தேவையற்றது....

நக்கல் நையாண்டிக்கு வேறு இடம் இருக்கிறது....

ஓர் போராட்டத்தால் உயிர் பிரிந்த ஒருவரை பற்றி வெளி உலகிற்கு தெரிவிக்கவே இந்த கட்டுரை..!!

வெங்கட் said...

@ கழுகு.,

// கட்டுரையிலிருந்து ஏதாவது....
கேள்விகள்.... //

இதுக்கு முன்னும் எத்தனையோ
விழிப்புணர்வு பதிவு எழுதி விட்டீர்கள்..
அதுக்கு எல்லாம் Follow Up என்ன..?

உங்கள் கட்டுரையில் சொல்வதை
எல்லாம் சரிபண்ண கழுகு சிறு துரும்பாவது
கிள்ளி போடுகிறதா..?

எழுதி விடுவதால் மட்டுமே
எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்
என்று கழுகு நினைக்கிறதா..?

எனக்கு அது தான் புரியவில்லை..!

வெங்கட் said...

@ சௌந்தர்.,

//ஒரு உயிர் பிரிந்த ஆதாங்கதிற்காக பதிவு
போட்டு இருக்கும் இடத்தில் நக்கலும்
நையாண்டியும் தேவையற்றது.... //

கமெண்ட்டை திசை திருப்ப
வேண்டாம்..

நாங்கள் அவர் போராட்டத்தையோ..
உயிர் இழப்பையோ நக்கல் பண்ணவில்லை..

கழுகின் வாய் சவடாலை தான்
கேள்வி கேக்கிறோம்..!

இம்சைஅரசன் பாபு.. said...

@சௌந்தர்

நக்கல் நையாண்டி என்று ஏன் இழிவு சொல்களை பயன் படுத்துகிறீர்கள் ..நான் வெங்கட் கிட்ட தானே கேட்டேன் இதுக்கு பதில் சொல்லுங்கன்னு ..நீங்க யார் என்னை கேள்விகேட்க்க ..எல்லோருக்கும் நீங்கள் தான் பதில் தருகிறீர்களா ..?மற்றவர்ககளுக்கு கழுகு பதில் சொல்லு கிறது ..வேறு தளம் என்றால் எந்த தளம் ..அதையும் இங்கே குறிப்பிடவும் ..
வார்த்தை கடந்து பேச கூடாது ..வந்து ஆமாம் ,ஆகா சூப்பர் ..இப்படி தான் கமெண்ட்ஸ் ஓட வேண்டுமா எனன ..அப்படி என்றால் இது விவாதம் பண்ணும இடம் இல்லை என்று ..தெரிய படுத்தவும் ..

கழுகு said...

வெங்கட் கட்டுரைக்கான கேள்வியாக இது படவில்லை. இது கழுகிற்கான கொள்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டமையால் விளைந்த கேள்வியாகப்படுகிறது. இதற்கான பதிலாக கீழ்க்கண்டவற்றை உங்களுக்குத் தருகிறோம்.

1) கழுகின் கட்டுரைகளை (குறிப்பாக கொள்கை விளக்க கட்டுரைகளை) நன்றாக பொறுமையாக வாசியுங்கள். தேவைப்பட்டால் எமது குழுமத் தோழமை கெளசல்யா ஒரு பதிவுட்டுள்ளார்கள் அதை வாசியுங்கள்.

2) கழுகிற்கு நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் மாற்ற விரும்பும் செய்திகளையும் தொகுத்து உங்கள் அறிவுரையை கோர்வையாக மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் குழுமத்தில் இருக்கும் மூத்த அனுபவஸ்தர்களோடு சேர்ந்து விவாதித்து கண்டிபாய் உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்குமெனில் சரி செய்கிறோம்.

3) எழுதி விடுவதால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்ற கேள்வியை ஒரு நியாயமான கேள்வியாய் எடுத்துக் கொண்டு கழுகின் வாய்ச் சவடால், அதன் வெளித் தொடர்புகள் இவையெல்லாம்....என்ன வெல்லாம் செய்யும் என்று விளக்கி ஒரு கட்டுரை தருகிறோம்.

தெளிவான மனங்களை உருவாக்க இணைய பயன்பாட்டில் உள்ளவர்களிடம் தெளிவுகளை உண்டாக்க கட்டுரை செய்யும் எமது நோக்கம் புரிபடவில்லையெனில் பொறுமையாய் உமக்கு கற்றுக் கொடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆனால் வார்த்தை பயன்பாடுகள் எமது மூளைகளை வேறு விதமாய் சிந்திக்கவிடாமல் பார்த்துக் கொள்வது மட்டும் உங்கள் பொறுப்பு....!

வாழ்த்துக்கள் தோழமை...!

வெங்கட் said...

@ கழுகு.,

உங்களோடு சண்டை போட நான்
வரவில்லை... ஆனால் உங்கள்
செயல்பாடுகளில் எனக்கு குறை
தெரியும் போது சுட்டி காட்டுகிறேன்..

அதை முழுமையாக ஏற்று விவாதம்
பண்ண நீங்கள் தயார் இல்லை..

தினமும் ஒரு பிரச்னையை பற்றி
பதிவு போடுகிறீர்கள்.. அப்ப நேத்து
பிரச்னை., முந்தா நாள் பிரச்னை
எல்லாம் என்ன ஆயிற்று..?

அதுக்கு தான் எனக்கு பதில் தேவை..

நிகழ்காலத்தில்... said...

நல் ஆசிரியனிடத்தில் படித்தவர் ஜனாதிபதி ஆகக்கூட பதவி ஏற்பார். ஆனால் ஆசிரியன் அதே வழிகாட்டும் உள்ளத்தோடுதான் இருப்பார்.

இதே உள்ளத்துடன் கழுகு இருப்பதாக உணர்கிறேன். உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு விதை.,

காலமும் சூழ்நிலையும் ஒத்துவரும்போது யார் மனநிலத்திலாவது செடியாய் விளைந்து, விருட்சமாகும்.,

பணி தொடர்க..

வாழ்த்துகள்

கழுகு said...

வெங்கட் @

ஆரோக்கியமான பார்வைகளின் பக்கம் எப்போதும் நாம் நிற்போம். கழுகின் அடிப்படை நாதம் விழிப்புணர்வு....

அதாவது நம்மைச் சுற்றி என்ன நிகழுகிறது என்ற செய்தியை சரியான கோணத்தில் மக்களிடம் பகிர்வது.

தெருவில் நின்று கோஷமிடுவதும் பிரச்சினைகளுக்காக கொடி பிடிப்பதும் காலம் காலமாக நடக்கும் ஒரு விடயம். தனிமனித பார்வைகளை தூண்டிவிட்டு செம்மைகளை புத்திகளை விதைத்தோமானால்...ஒவ்வொரு தனிமனிதனும் சரியாக செயல்பட வாய்ப்பு இருக்கிறதுதானே...?

இந்த வாய்பினை கழுகு எடுத்து கொண்டிருக்கிறது. காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு போராட்ட முறையினை பின்பற்றி உங்கள் கேள்வி பிறந்திருப்பதை எம்மால் அறிய முடிகிறது.

மனிதர்களுக்கு அதுவும் நாம் பயன்படுத்தும் இந்த இணையம் எனும் இடத்தில் முதற்கண் விழிப்புணர்வு கருத்துக்களைப் பரப்பி வலுவான தெளிந்த மானுடரை ஒன்று சேர்ப்பது எமது முதல் பணியாயிருக்கிறது.

இப்போது நீங்கள் கேட்டும் கேள்வி பின்னாளில் எமது போராட்டங்களின் மூலம் அழிந்து போகலாம் ஆனால் அப்போது கூட எமது போராட்ட வடிவமும் யுத்தியும் யாரும் கற்பனை செய்து பார்க்க இயலாத் அளவிற்கு இருக்கும்.

மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது வெங்கட் உங்களின் ஆதங்கம்.....நீங்கள் ஏன் கழுகு விவாதக் குழுவில் இணைந்து உங்களது பார்வைகளை பதியக்கூடாது...! கண்டிப்பாய் அது நிறைய பேருக்கு உதவுவதோடு தெளிவான சமுதாயம் சமைக்க உதவும்...!

வரவேற்கிறோம்....ப்ரியங்களுடன் தோழமை..!

வெங்கட் said...

@ கழுகு.,

// .நீங்கள் ஏன் கழுகு விவாதக் குழுவில் இணைந்து
உங்களது பார்வைகளை பதியக்கூடாது...! கண்டிப்பாய்
அது நிறைய பேருக்கு உதவுவதோடு தெளிவான
சமுதாயம் சமைக்க உதவும்...! //

உங்கள் அழைப்பிற்க்கு நன்றி..
ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமில்லை
மன்னிக்கவும்..

என் மனநிலைக்கும், கழுகின் கொள்கைக்கும்
சில முரண்பாடுகள் இருப்பதாக எனக்கு
படுகிறது.. அது எப்போது சரி ஆகிவிட்டது
என்று எனக்கு படுகிறதோ.. அப்போது வந்து
இணைந்து கொள்கிறேன்..

இப்போதைக்கு உங்கள் அன்பிற்கு நன்றி..

கழுகு said...

நன்றிகள் வெங்கட்!!!!

எப்போதும் உங்களின் ஆழமான பார்வைகளையும், விமர்சனங்களையும் வரவேற்பதோடு அது திடமாய் எம்மை செம்மைப் படுத்தும் என்றும் நம்புகிறோம்.

வாழ்த்துக்கள்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes