Thursday, July 28, 2011

பஞ்ச்' சாமிர்தம் நிஜமாவே இனிக்கும் (28.7.2011)
பஞ்ச் 1:
சமசீரு மேல அப்டி என்னங்கம்மிணி கோவம் ஒங்களுக்கு? கலிஞர் சார் கொண்டு வந்துட்டார்ன்ற கோவத்துல அவர எதுக்குறதா நினைச்சுகிட்டு மொத்த புள்ளைங்க படிப்பையும் க்ளோஸ் பண்ணிப்போட்டு போயிடுவீங்க போல இருக்கே சிஎம்ங்க...! 

உயர் நீதிமன்றத்த மிதிச்சு உச்ச நீதி மன்றத்துக்குப் போனா அவிங்களும் பின்னால எட்டி உதச்சு அடிச்சு வெரட்டி உடனே அமல்படுத்து தாயின்னு ஒரு தீர்ப்ப சொல்லிப் போட்டாங்க..! அல்லாத்துக்கும் பொறவும் சட்ட திருத்த மசோதா அது இதுன்னு காமெடி பண்ணிக்கிட்டே இருக்காம கொஞ்சம் ஈகோவ விட்டுக் கொடுத்துடுங்கம்ணி. புள்ளக் குட்டிய எல்லாம் இன்னமும் ஒரு வெவரமும் தெரியாம முழிச்சுகிட்டு நிக்கிறத  பாத்தா பாவமா தெரியலீங்களா?

ஒரு வெவரம் கேள்விப் பட்டோமுங்க நெசந்தானுங்களா....? நம்மளுக்கு வாதாடுன வக்கீலே நீங்க வெவரமில்லாமத்தான் ஆலோசனை எல்லாம் கேட்டு தெர்ஞ்சுக்காம வழக்கு போட்டீங்க அப்பால திருத்தம் கொண்டு வந்தீங்கன்னு சொன்னாராமே.. ! மனிசன் கொஞ்ச ரோசிச்சுப் பாத்துருப்பாரு போலிங்க அம்மணி....... ஆனா நீங்க மட்டும் ரோசிக்காம ஏனுங்கம்ணி இம்புட்டு புடிவாதம்?பஞ்ச் 2:

ராம்தாஸ் அப்போ அப்போ சோக்கு அடிச்சிகிட்டு இருக்கிறத தமிழ்நாட்ல இருக்க சனங்க கண்டுக்கோணும் சாமியோவ்! சாரு ஐயா கலிஞரு வந்துடுவாருன்னு ஒரு தெனாவெட்ல கூட்ணி வச்டாங்கண்ண, இப்ப ஆப்ப அசைச்ச கொரங்கு கனக்க என்ன பண்றதுன்னு தெர்யாமா முழிக்கிறாங்க...! அம்மாகிட்ட போனாக்க எட்டி  மூஞ்சி மேல மிதிச்சு வெளில தொரத்தி விட்ரும்னு பயந்துகிட்டு இனிமே வர்ற எலிக்சன்ல எல்லாம் கூட்டணி ஆர் கூடயும் வைக்க மாட்டாறுங்கலாமா?

ராம்தாஸ் மாமா ...ராம்தாஸ் மாமா... சும்மாகாச்சுக்கும் தான மாமா சொன்னிங்க..! அடுத்த தேர்தலுக்கு நல்ல தூரம் இருக்கு இப்ப என்னமாச்சும் சொல்லி வைப்போம்னு தானே சொன்னீங்க மாமா...! ஒன்ற கட்சிய காப்பத்த எப்டியெல்லாம் பேச வேண்டியிருக்குனு நெனச்சு  பாக்கையில் வெட்கமாதனுங்க மாமா இருக்கு..!

2016 பாமக ஆட்சி வந்துருங்களா மாமா

பஞ்ச் 3:
அது என்னங்கனா எவனோ ஒருத்தன் ராசபக்சேக்கு எதிரா கையெழுத்து வாங்குறது, நாங்களும் அரசியல்வாதிகளாக்கும், வருங்கால சிஎம் ஆக்கும் ...பொசுக்கு பொசுக்குனு வந்து கேட்டா எப்டீங்கண்ணா கையெழுத்து போட முடியும்னு நினைச்சிடீங்களானு சொல்லுறாரு இளைய தளபதிங்கண்ணா....

மேடேல ஏறிலாம் வீராப்பா பேசினீங்க.. சினிமாவுல எல்லாம் பாட்டு பாடி செம்ம கலக்சன் பாத்தீங்க...ஏனுங்கண்ணா ஒத்த கையெழுத்துதானுங்களே போட்டு விட்டு மறுக்கா வேற வேலைய பாப்பீங்களா...மாட்டேன் கீட்டேனு சொல்லிக்கிட்டு.. ! சொத்த எழுதி கேட்டாக் கூட கொடுப்பீங்கன்னு உங்க ரசிகப்புள்ளைங்க எல்லாம் நெனைக்கிற அளவுக்கு பில்டப்கொடுத்துட்டு

ச்ச்சீ போங்க்ண்ணா நீங்க இன்னமும் சின்னப்புள்ளையாட்டமா இருக்கீங்க...! ஒரு வெசயங்கண்ணோவ்.....இனி எலங்க பெரச்சனை பத்தி பேசீடாதிங்க...பொறவு ஒருத்தன் ரெண்டு பேரு ஒங்க படம் பாக்க வரதும் கெட்டுப் போயிரும் ஆமா...!


பஞ்ச் 4: 

ஊரு ஒலகமே இலங்கை மேல பொருளாதார தடை விதிக்க ரெடியாயிடுச்சுங்களாமா...ஆனா இந்தியா அப்டீன்ற அமைதிப் பூங்கா சமாதானத்தின் தூதுவரு, ஜனநாயக பெரும்புள்ளி, மதச்சார்பில்லா மாமேதை மட்டும் கம்முனு இருப்பாங்களாமா...? என்ன நாயமுங்க இது

நடு நிலை நாடு, நடு நிலை நாடுன்னு நாட்டாமை நாயத்த பேசுற இந்தியாவ மண்ண தோண்டி பொதச்சுப்புடுச்சுங்க இந்த காங்கிரசு கட்சி!  ஐரோப்பிய நாடு எல்லாம் எலங்கையில் இருந்து வர்ற பொருள்களுக்கு கொடுக்குற வரிய ரத்து பண்ணிடுச்சி, அமெரிக்கா கூட பொருளாதர உதவிகளை நிறுத்த போறதா சொல்லிடுச்சுங்க...

ஆனா நம்ப அண்ணாரு இந்தியா மட்டும் கம்முனு கைய கட்டிகிட்டு கண்ணாடிய போட்டுகிட்டு டர்பன கட்டிக்கிட்டு இட்டாலிக்காரம்மா இடுப்புல உக்காந்துகிட்டு வேடிக்க பாத்துகிட்டு இருக்கறது என்ன நாயமுங்கண்ணா?

8 கோடி தமிழங்க வாழுற ஒரு நாடு ...இப்படி நடந்துகிறதுலயே தெரியலயா நம்மள எல்லாம் புண்ணாக்கு மடையன்னு அவிங்க (அதாங்க இந்தியாக்காரங்க) நினைக்கிறாங்கன்னு?

 பஞ்ச் 5: 

முக்கியமான வெசயமுங்க....கழுகுல அதிரடியான கட்டுரைகளும் வித்தியாசமான் தொடர்களும் தொடர்ந்து வர்றதுக்கு நீங்க அல்லாரும்தானுங்கண்ணா காரணம். கழுகு  வலைப்பூவோட வருகை அதிமாயிருக்குனு ஏதேதோ ரேட்டிங் எல்லாம் சொல்லுதுங்கண்ணா..அதயெல்லாம் மனசுல வச்சிகிட்டு நாம போகலிங்கண்ணா இருந்தாலும் எல்லா வேலைய செய்யிறதுக்கும் நமக்கு உற்சாகம் வேணும்தானுங்களே...

உங்க உற்சாகத்துனால கழுகு இன்னும் வேகமா சீறிப்பாயுதுங்கண்ணா...! மனசு நெறய சந்தோத்தோட உங்க எல்லாருக்கும் நன்றியோ நன்றிங்கண்ணா...! ஏதாச்சும் குத்தம் குறை இருந்துச்சுண்ணா ரோசிக்காம நமக்கு எழுதிப்போட்டுடுங்க மக்கள்ஸ்!!!!


கழுகிற்காக
 தேவா (கழுகு இன்னும் உயரப்பறக்கும்)2 comments:

கலாநேசன் said...

சூப்பருங்கண்ணோவ்....

ட்ராக்டர் தமிழன் said...

//ஏனுங்கண்ணா ஒத்த கையெழுத்துதானுங்களே போட்டு விட்டு மறுக்கா வேற வேலைய பாப்பீங்களா...மாட்டேன் கீட்டேனு சொல்லிக்கிட்டு.. !//

அந்த ஒத்த கருத்தாலே அவருடைய வருமானம் எல்லாம் போயிடுமே, அப்புறம் என்ன பண்ணுவார்?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes