Wednesday, July 20, 2011

டீக்கடை பெஞ்ச்....! சூடான அரசியல் இங்கு கிடைக்கும்... (20.7.2011)


காங்காத்தால ஆபிஸ்குள்ள போன ரெங்கு படபடவென வெளியில வந்தாரு. கேட்டா தலைவலியாம். அனாசின தேடிப் போன நம்ம ரெங்கு வழியில, நம்ம டீக்கடை அண்ணாச்சிய பாத்துபுட்டாரு. அனாசினா.!? அண்ணாச்சியா.!? நம்ம அண்ணாச்சி தான். கனகுக்கு ஒரு போனை போட்டு வரசொல்லிட்டு அப்படியே உக்காந்திடுறாரு.

ரெங்கு: என்னா வெயிலு எப்பா இந்த வெயிலுல நியூஸ் சேகரிச்சு சேகரிச்சு நானே நியூஸா வந்திடுவேன் போல கொஞ்சம் மழை வந்தா தான் என்னவாம்.  

"அண்ணாச்சி வடை என்ன சூடா இருக்கா...??"

டீக்கடை அண்ணாச்சி:அட வாங்க ரெங்கு.!! வடை தானே சூடாவே இருக்கு.. 


ரெங்கு: இந்த கனகு எங்க இன்னும் ஆள காணோம் சரி நாம ரெண்டு வடைய பிச்சு போடுவோம்..

கனகு : என்னயா ரெங்கு!? இதுதான் மனுசத் தனமா.!? இப்படி உட்டுபுட்டு கொட்டிகிறியே நாளபின்ன உனக்கெல்லாம்ம்ம்ம்...


ரெங்கு : யோ யோ! ஏன் இழுக்குற.? ஏதாவது குதர்க்கமா சொல்லிபுடாத..! உனக்காக தான்யா வெயிட்டிங்கு.. தலையில ஆம்புலன்ஸ் ஹாரன் அடிக்கிற சவுண்டு கேட்டுது.. அதான் ஒரு வடைய பிச்சு போட்டேன்.

கனகு: அய்யோ என்னயா ஆச்சு தலைக்கு.!? வீட்டம்மா வெளுத்துட்டாங்களா.!?

ரி. ரெங்கு: அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.. இந்த பங்காளிகள நினச்சா தான் கடுப்பா இருக்கு.!!


கனகு : ஏன் சொத்துல பங்கு கேக்குறானுங்களா.!?


ரி.ரெங்கு : ஆமாம்யா.. 60 வருசத்தையும் தாண்டி கேக்குறானுங்க.!! ஓவரா இம்சை பண்ணுறானுங்க..


கனகு : ஏன் யா.!? நீயும் கமல் மாதிரியே பேசுற!? எந்த பங்காளியா.!?


ரி.ரெங்கு : எலேய் நம்ம பங்காளி பாகிஸ்தான் காரங்க தாம்ல.. மும்பையில குண்ட வச்சுபுட்டு ஒவ்வொரு நிமிசமும் என்னய அழ வைக்கிறானுங்க யா..!!


கனகு : அம்புட்டு நல்லவனால நீ.!?

ரி.ரெங்கு : என்னப்பு அப்படி கேட்டுபுட்ட.!! இரக்கம் ஒவ்வொரு இந்தியனோட உணர்வுயா..!! நான் எல்லா விசயத்தையும் காமெடியா எடுத்துக்கலாம். அதெல்லாம் விசயம்.! இது.? பாகிஸ்தான் காரனுக்கு ஒரு தமிழனோட இருதயம் பொருத்தப்பட்டிருக்கு . இங்க பொதுமக்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல. இந்த அரசியல்வாதிங்க தான் அவுங்கள தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறானுங்க.

கனகு : இப்படியே பதவிய உட்ட கலைஞர போல எத்தன வருசத்துக்கு தான் பொலம்ப போறீங்க.!? ஒண்ணுமே செய்யாம..


ரி.ரெங்கு : யோ.! என் கையில எழுத்து இருக்குயா.!! அத வச்சு நான் என்ன வேணா பண்ணுவேன். நான் எழுதுறத தூரத்துல ஒரு ஆயிரம் பேர் படிச்சாலும் அது எனக்கு வொர்த் தாம்ல. ஆயிரம் பேர் படிப்பான், ஐந்நூறு பேர் உணருவான், 100 பேர் முயற்சி பண்ணுவான், ஒருத்தன் சக்சஸ் பண்ணுவான், அந்த ஒருத்தன் நான் உருவாக்குன விதைல..


கனகு : இப்படிலாம் விஜயகாந்த் மாதிரி பேசுனா நான் அழுதிடுவேன்.!! சரி நீ டென்ஷன் ஆகாத.. வேற மேட்டரு பாப்போம்.!!


(கொஞ்சம் யோசனைக்கு பிறகு)
யோ ரெங்கு சன் டிவி மேல பொய் கேஸா போடுறாங்களாமே! இந்த பழி வாங்கும் அரசியலை எப்போதான்யா இவனுங்க விடுவாங்க..?


ரி. ரெங்கு: அட ஆமாம்ல.. நான் கூட கவனிச்சேன். இந்த சக்ஸேனா நல்லா மாட்டிக்கிட்டாரு அவர இவனுங்க விடுறாமாதிரி இல்ல.. இன்னும் கொஞ்ச நாள்ல பாட்டி சுட்ட வடைய அவரு தான் திருடினேன்னு சொல்ல போறாரு..!!!


கனகு : ஏ ரெங்கு..! இது பாட்டி சுட்ட வடையா இல்ல தாத்தா சுட்ட வடையா.?

 ரி.ரெங்கு : என்னய ஏன் கோத்துவிட்டு வேடிக்க பாக்கலாம்னு பாக்குறியா.!? உனக்கு தெரியுமா.. எல்லா தயாரிப்பாளர்கிட்டயும் போய் புகார் கொடுக்க சொல்லி இவனுகளே சொல்லிட்டு திரியுறாங்க. இப்படி தான் பிரபல நடிகர் கிட்ட போய் புகார் கொடுக்க சொல்லி இருக்காங்க அதுக்கு அந்த நடிகர் அப்பா கிட்ட கேட்டு சொல்றேனு  நைசா கழண்டுக்கிட்டாராம்.

கனகு : அட ஆமாம்யா எனக்கு கூட அந்த நடிகரைத் தெரியும். அவங்க அப்பா அந்த கட்சிக்கு ஆதரவா பிரச்சாரம்லாம் பண்ணார். இப்போ அந்த அம்மாவை பார்க்க கூ ட பயப்படுறார்..எங்க நேரடியா இந்த விஷயத்தை கேட்டுட போறாங்கன்னு.!! இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்.!? 


ரி. ரெங்கு : அத நாம பேசி என்ன பண்றது.!? இனி நியூஸ் கலெக்ட் பண்ணபோகவே பயமா இருக்கு..


கனகு : யோவ் நீ கலெக்ட் பண்றதெல்லாம் ஒரு நியூஸ் ஆ.!? காமெடி பண்ணாத யா..

ரி.ரெங்கு : (ஏளனமான பார்வையோடு) கலாய்ச்சுட்டாராம்..!! யோவ்.. எங்க என்னய மிதக்க வச்சிடுவாங்களோ பயமா இருக்குய்யா... இந்த ஆளும் மிதக்க வைக்குறேன்னு சொல்றான் நம்ம ஜனங்களும் நம்பிப் போறானுங்க.! இந்த கொடுமைய எங்க சொல்லி அழுக.. 

கனகு : யோவ் ரெங்கு அவர் மிதக்க வைக்குறேன்னு சொன்னது உங்களை எல்லாம் இல்யா அவர் ஜூட் விடுறார்ல... அவங்கள மட்டும் தான் அப்படியே கனவுல மிதக்க வைப்பார்... விட்டா அவரு கண்டம் விட்டு கண்டம் தாண்டுறேன்னு கூட சொல்வாரு. போங்கய்யா போய் ஒழுங்கா சாமிய கும்பிடுங்க சாமியாரை கும்பிடாதீங்க.. கனகு : நம்மளும் சாமியாராவே போயிருக்கலாமோ.!? எனக்கு ரஞ்சி மாதிரியே ஏதாச்சும் கிடச்சிருக்கும்ல..!!!


ரி.ரெங்கு : டே..!! அடுத்தது நீ மாட்டிக்க போறடா.. பாத்து பாத்து..!! அந்த கர்மத விடு.. இன்னொரு கரும் தெரியுமா.!? ஒரு புள்ள போட்டோ எல்லாம் காட்டி பிரபல டைரக்டரோட லவர்ஸ் டே கொண்டாடினேன் சொல்லுது 

கனகு :  ஆமாய்யா அந்த விஷயம் அப்படியே அமுங்கி போச்சு ..??


ரி. ரெங்கு : அந்த பிரபல டைரெக்டரு சீமானு தான்யா. இந்த சீமான் அய்யா அவங்க வீட்டுக்கு போய் லவர்ஸ் டே கொண்டாடினதா அந்தப் புள்ள சொல்லுது, போட்டோ எல்லாம் கொடுத்து இருக்கு. சும்மா கேக்கு வெட்டி இருக்காங்க,  பாத்தா லவ்வர்ஸ் டேனு ஆதாரம் இருக்குறாப்புலயே தெரியலையே.!!
கனகு: தெரியலனா என்னயா.!? நம்ம வேலையே இது இதுதானே.! ஏதாச்சும் மேட்டர கிளப்பினா அதுல இருந்து ஏதாவது கிடைக்காதா என்ன.!?


ரி.ரெங்கு : கிடச்சிட்டாலும்..!! இந்த விஷயத்துல யாரையும் நம்பமுடியாது . இவர் எல்லாரையும் பொங்கல் கொண்டாடக் கூடாது, தீபாவளி கொண்டாடக்கூடாது சொன்னார், ஆனா இவர் மட்டும் காதலர் தினம் கொண்டாடி இருந்தாலும் இருப்பாரு. இவரு வூட்டு அட்ரஸ சிவசேனா கட்சி தலைவருக்கு அனுப்பணும்..!!! என்ன கொடுமை கனகு..!!!! 


(போன் அடிக்குது) - ''குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்''


என் எடிட்டர் போன் பண்றார் நான் கிளம்புறேன் ஒய்...

கனகு : யோய் ரெங்கு அதுக்கு ஏன்ய்யா என் கையில இருக்க வடைய புடுங்குற.!! திருட்டுப் பயலே... போ போ.!! அங்க வப்பாரு உனக்கு ஆப்பு.. ஆப்பு என்னன்னு பாக்காத..!! அங்க போனா தெரியும்.
(ஆப்பு அடுத்த வாரம்)


(கழுகு இன்னும் உயரப்பறக்கும்)

 

1 comments:

மாலதி said...

என்னமோ நாட்டில் நல்லது நடந்தால் சரி

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Premium Wordpress Themes